Jump to content

இலங்கை மாணவர்கள் 321 பேருக்கு அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
01 DEC, 2023 | 03:00 PM
image

இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் 2023' நிகழ்வினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. 

இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவஞானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பாலின் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. 

இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019இல் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

அத்துடன், இலங்கையின் திறமையான 357 மாணவர்கள் ஏற்கனவே இப்புலமைப்பரிசிலின் ஊடாக இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி மட்டத்தில் தமது உயர் கல்வியினை பாகிஸ்தானில் பயின்று வருகின்றனர். 

மேலும், அடுத்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2024 பெப்ரவரியில் கோரப்படும்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி உரையாற்றும்போது, பாகிஸ்தான்,-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு காணப்படுவதாகவும், பாகிஸ்தானில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானியர்களின் விசேட விருந்தினர்கள்  என்றும், இம்மாணவர்கள் சிறப்பான முறையில் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். 

இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியினை வெற்றிகரமாக முடித்து, இலங்கைக்கு திரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் பாகிஸ்தானின் தூதுவர்களாக பாகிஸ்தான் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கும் நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றுகையில், பல்வேறு துறைகளில் அல்லாமா இக்பால் புலமைப்பரிசினை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், இதுபோன்ற பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை வளர்க்க எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் தலைமைப் பணிப்பாளர் ஆயிஷா இக்ராம் தனது உரையில், இப்புலமைப்பரிசிலின் குறிக்கோளானது எவ்வாறு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் உதவியுடன் இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விக் கண்காட்சி நிகழ்ச்சி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கூறுகையில், பாகிஸ்தானானது எப்போதும் இலங்கைக்கு தொடர்ந்து உதவும், இரு நட்பு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் தலைவர், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பெளத்த பிக்குகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

405404761_917783736449223_41812458234223

403745234_688446063474352_84641332197942

 

405154672_3469504903323488_4490168409387

384564212_1761960830932662_9192560428020

https://www.virakesari.lk/article/170726

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.       
    • என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு    இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால்  தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால்  தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்   இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ??  நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??    இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  
    • உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
    • தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..! ஜாலியா போகுது திரி..😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.