Jump to content

பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாடே - அருட்தந்தை மா.சக்திவேல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    01 DEC, 2023 | 04:54 PM

image

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேலினால் வெள்ளிக்கிழமை (01.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாவீரர் வாரமும் மாவீரர் நாளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய நிகழ்வாகும். அதனை வடக்கிலும், கிழக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும் வேதனைக்கு மத்தியிலும் அந்நாட்களில் எழுச்சியுடன் ஒன்று கூடி உயிர் கொடையாளர்களுக்கு சுடர் ஏற்றி நினைவஞ்சலி செய்வதோடு நின்று விடாது தமிழர்களின் தேசத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க திடசங்கட்பம் கொள்ளும் நாளும் இதுவாகும். 

இதனை பாரிய இனப்படுகொலைகளோடு அழிக்க நினைத்தவர்களுக்கு அது தோல்வியே என தற்போது உணர்வதால் இந்நிகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வடிவங்களில் கூட்டாக அழிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்த எதிர் சக்திகள் திட்டமிட்டுள்ளன என்பதை இவ்வருட சம்பவங்கள் உணர்த்துகின்றன. 

இதற்கு வடகிழக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டாக தமது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். தற்போது நாம் முகம் கொடுக்கும் சிக்கல்களை சிவப்பு சமிக்ஞையாக ஏற்காவிடின் பாரிய விலை கொடுக்கும் நிலை உருவாகும்.

தமிழர் தேசத்திற்கும், தேசியத்திற்கும் எதிரான சக்திகளிடம் சோரம் போன தமிழர் முகமூடி தரித்த சிலர் மேதகு தலைவரின் மக்களென ஒரு போலியை மேடையேற்றி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. "தலைவர் இருக்கிறார்". "அவர் வருவார்"..."வருவார்..." என கூறி இன்னும் ஒரு தலைமைத்துவம் உருவாகக்கூடாது என நினைத்தவர்கள் தமது முயற்சியின் அடுத்த கட்டமா போலி முகத்தை மேடையேற்றி அவமானப்பட்டுள்ளனர்.இத்தோடு அவர்கள் நின்றுவிடப் போவதில்லை.

இன்னும் ஒரு பக்கம் சேனையின் பெயரால் தாயகத்தில் இயங்கும் அமைப்பு ஒன்று மாவீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை அவமானப்படுத்தும் வண்ணம் முகநூலில் பதிவிட்டுள்ளது. அதன் மூலம் புதிய தலைமுறையினரின் மூளையை சலவை செய்து அரசியலில் இருந்து தூரமாக்க முயற்சிக்கின்றனர். உயிர் தியாக வரலாற்றை எம் காலத்திலேயே குழி தோண்டி புதைக்கவும் வழி செய்கின்றனர்.

அடுத்ததாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதுமான 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க கூட்டமாக காவடி தூக்கி கொடி பிடிக்க இன்னும் ஒரு கூட்டம் பகிரங்கமாகவே எழுந்து நிற்கின்றது. இதனையும் சதியாகவே கொள்ளல் வேண்டும். இவர்கள் தமிழ் மக்கள் பேரவை இயங்கிய காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என ஆவணம் தயாரித்து பௌத்த மகா சங்கத்திடம் தூக்கி சென்றதை மறந்துவிட்டனர் போலும். இவர்களே தமிழ் மக்கள் பேரவைக்கு வீழ்ச்சிக்கும் காரணமானவர்கள் என்பது இப்போது புலனாகின்றது.

இது இவ்வாறு இருக்க இலங்கை அரசு மீண்டும் புலி உருவாக்கம் என்பதை கையில் எடுத்து இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வோடு பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றது. மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மேலும் பலருக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இளைஞர் மத்தியில் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பயத்தை உருவாக்கும் செயலாகும். நினைவேந்தல் போன்ற நிகழ்வில் இருந்து சுயமாகவே விலகச் செய்வதற்கான வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.

2009ல் விடுதலை இயக்கத்தை அழிப்பதாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த இலங்கை அரசு தமிழர்களை அரசியல் ரீதியாக படுகொலை செய்வதற்கு பல்வேறு சதிகளை கூட்டு சேர்ந்து தீவிரபடுத்தி உள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம். இதற்கு எம்மவர்களும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சூழ்ச்சி செய்வதும் பயணிப்பதும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது. 

இத்தகையவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதுடன் எமது அடுத்த சந்ததியினரை இச் சூழ்ச்சி வலை நின்று பாதுகாத்து அரசியல் அறம் பிறழாது வாழ்வு போராட்டங்களை பாதுகாப்போடு முன்னெடுக்க வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு விழிப்புடன் செயல்படும் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

சுயநல அரசியலையும், சுகபோக அரசியலையும், காவடி தூக்கும் அரசியலையும் புறந்தள்ளி அரசியல் தலைமைத்துவங்கள் கூட்டாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும்.

அன்று உயிருக்கு பயந்து ஒரு தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம் என போலி முகத்தோடு உறுதி பூண்ட அரசியல் தலைமைத்துவங்கள் தடம் புரண்டுள்ள இன்றைய நிலையில் தியாகத்தோடு தமிழர்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த அறம் சார்ந்த அரசியல் செயற்பாட்டை ராஜதந்திரத்தோடு முன்னெடுக்க அரசியல் தலைமைகளுக்கு சமூக அமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170728

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.       
    • என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு    இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால்  தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால்  தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்   இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ??  நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??    இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  
    • உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
    • தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..! ஜாலியா போகுது திரி..😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.