Jump to content

ரணகஜ உள்ளடங்கிய வழங்கல் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின்  தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின்  மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல்.

யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக்கொண்டிருந்தனர். 

கடற்படையின் இக்கடல்வழி வநியோகம் மீது தாக்குதல் நடாத்துமாறு தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குப் பணித்திருந்தார். அதற்கமைவாக கடற்படையின் கடல்நடவடிக்கைகள் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரின் தலைமையிலான அணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் கடற்சண்டைப் படகுகள் வடமராட்சியில் நிலைகொண்டிருந்தன. அச்சண்டைப்படகுகள் கடல்வழிமூலம் முள்ளிவாயக்கால் வந்து காத்திருந்தது. 

பிருந்தன் மாஸ்ரரின் தகவல்களின் பிரகாரம் கடற்படையின் விநியோகத் தொடரணி முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணி வரையான பகுதிகளில் கரையிலிருந்து குறிப்பிட்டளவு உயரத்தாலும் அதன்பின் கரையிலிருந்து கூடுதலான உயரத்தாலும் செல்வது வழமையாகும். முல்லைத்தீவுப் பகுதியில் தான் தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதலில் ஒரு புதிய உத்தியும் செய்யவிருந்தனர். அதாவது கடற்படையின் கப்பலை சண்டைப் படகால் தாக்கி நிப்பாட்ட கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம்  நீரடிநீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் நீருக்கடியால் சென்று கப்பலின் அடிப்பகுதியில் வெடிகுண்டுகளை பொருத்தி கப்பலை மூழ்கடிப்பார்கள். இதுவே திட்டமாக இருந்தது. 

இத்திட்டத்தின் அடிப்படையில் 02.10.1995 அன்று லெப்.கேணல் தன்ராஐ், லெப் கேணல் இளநிலா மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் ஆகியோர் தலைமையிலான சண்டைப் படகுகளும் கடற்கரும்புலிகளான மேஐர் அருமை, கப்டன் தணிகை ஆகியோரை உள்ளடக்கிய கரும்புலிப்படகுமாக திருகோணமலையிலிருந்து வந்து கொண்டிருந்த கடற்படையின் விநியோகத் தொடரணியை இலக்கு வைத்தபோது அவைகளுக்குப் பாதுகாப்பாக வந்த டோறாப்படகுகள் மீது லெப் கேணல் இளநிலா தலைமையிலான படகுகள் தாக்குதலை மேற்கொள்ள மற்றப் படகுகள் ரணகஐ தரையிறங்கு கலம் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

லெப் கேணல் தன்ராஐ் மற்றும் பிருந்தன் மாஸ்ரரின் படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலி மேஐர் அருமை கப்டன் தணிகை ஆகியோர் ரணகஐ தரையிறங்குக்கலம் மீது அதன் பின்பகுதியில் தங்களது கரும்புலிப்படகால் மோதி வெடித்தனர். ஆனாலும் கப்பல் தப்பியது. 

இந் நிலையில் திடீரென கடலில் ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் நீரடி நீச்சல்பிரிவுப் போராளிகளையும் அனுப்பமுடியாமல் போனது. இருந்தாலும் கடற்சண்டை தொடர்ந்தது. 

ஆறு மணித்தியாலயம் நடந்த இக்கடற்சமரில் 18 படையினர் கொல்லப்பட்டனர். ஐம்பத்திநான்கு பேர் காயமடைந்தனர்.

இவ்வெற்றிகர கடற்சமரை கடற்புலிகளின் முதலாவது துணைத்தளபதியும் கடற்புலிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் கடலிலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவரே இத்தாக்குதலுக்கான தகவல்களையும் புதிய யுக்திகளையும் தலைவர்  அவர்கள் மற்றும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடனும் கலந்தாலோசித்து செய்திருந்தார். 

இவ்வெற்றிகர கடற்சமரில் இரண்டு கடற்கரும்புலிகள் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

http://irruppu.com/2021/10/02/விநியோகத்-தொடரணி-மீதான-க/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to ரணகஜ உள்ளடங்கிய வழங்கல் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக இருந்தது. https://thinakkural.lk/article/311843
    • மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள்  இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
    • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;   https://thinakkural.lk/article/311839
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.