Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   12 JAN, 2024 | 11:28 AM

image

புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்" அவருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேபாள பொலிஸாரின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காத்மண்டுவின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த 34 வயதான  குறித்த மதத்தலைவரை கண்காணித்து வந்த நிலையில், அவர் தப்பியோட முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் 200,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேபாளி மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர். அவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார். 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார்.

இதையடுத்து தான் அவருக்கான பக்தர்கள் என்பது அதிகரிக்க ஆரம்பித்தது. போம்ஜானின் "புத்த பையன்" என்ற பெயர் அவரது புகழுக்கு மேலும் உதவியது, அவர் காட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க நாடு முழுவதும் இருந்தும் அண்டை நாடான இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர்.

போம்ஜன் தனது முதல் பிரசங்கத்தின் போது சுமார் 3,000 பேரைக் கவர்ந்ததன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் என அவரது இணையதளம் தெரிவிக்கிறது. 

பல்வேறு காலக்கட்டத்தில் போம்ஜானின் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/173748

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்கெல்லாம் விதை போட்ட பெருமை, ஸ்ரீலங்கா புத்த பிக்குகளையே சேரும். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/1/2024 at 21:42, தமிழ் சிறி said:

இதுக்கெல்லாம் விதை போட்ட பெருமை, ஸ்ரீலங்கா புத்த பிக்குகளையே சேரும். 😂

அவர்களை குற்றம்  சொல்லாதீர்கள். பாலமறவா பச்சைக்குழந்தைகளையே நன்மை தீமையறியாத பிள்ளைகளை கொண்டு போய் விடுகிறார்களே பெற்றோர். அவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

ஒருவன் விரும்பி போய் சேர்வதிலும் , இப்படி குழந்தைகளை கொண்டு போய் விடுவதிலும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர் அறிவதில்லை.

சிறு பிள்ளைகளை அங்குள்ள பெரிசுகள் கெடுத்து விடும். பிறகு அது தொடர் கதைதான். பாவம் புத்தர். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.