Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   16 JAN, 2024 | 02:38 PM

image

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (16) முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் காலை 6.30 மணி மணியிலிருந்து நாளை புதன்கிழமை (17) காலை 6.30 மணி வரை வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

வவுனியா

வவுனியா வைத்தியசாலை சுகாதார ஊழியர்களும் பணிபகிஸ்கரிப்பில்  ஈடுபட்டுவருகின்றனர். 

இவ் பணிபகிஸ்கரிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலை பல ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240116_090728.jpg

IMG_20240116_090303.jpg

IMG_20240116_090219.jpg

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

IMG_20240116_11120585.jpg

IMG_20240116_11130077.jpg

IMG_20240116_11125083.jpg

புத்தளம் 

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துனை மருத்துவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று காலை முதல் பணிபகிஷகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் கிளினிக் நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன. 

இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

Screenshot_20240116_105626_MX_Player.jpg

Screenshot_20240116_105538_MX_Player.jpg

Screenshot_20240116_105601_MX_Player.jpg

மன்னார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையை தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரை மன்னார் மாவட்ட வைத்தியசாலை   முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0094.JPG

DSC_0105.JPG

DSC_0068.JPG

DSC_0041.JPG

நுவரெலியா

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நுழைவாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை (16) மதியம் அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன பாதிக்கப்பட்டன. வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

அதேவேளை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றன.

 

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dhbfb.gif

 

vn.gif

cbcvnbvn.gif

https://www.virakesari.lk/article/174055

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.