Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு விரயமாக்கும் செலவுகளை நாட்டின் கல்விக்கு ஒதுக்குங்கள் - சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 JAN, 2024 | 04:55 PM
image

பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக, மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சமூக சேவை நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படும் நாட்டில், கண்ணீர்ப்புகை, தோட்டாக்கள் மற்றும் நீர்த்தாரைகளுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பணம் செலவிடப்பட வேண்டுமா, இல்லை என்றால் ஆசிரியர் பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் தீர்த்து கல்வித்துறையைக் கட்டியெழுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அரச பயங்கரவாதம், அரச மிலேச்சத்தனம், அரச வன்முறை, அரச கெடுபிடிகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது.

220 இலட்சம் மக்களுக்காக வேண்டி, அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் வீதியில் பேராட்டம் நடத்தினாலும், சட்டவிரோத அரசாங்கத்தின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

மக்களால் தெரிவு செய்யப்படாத, மக்கள் ஆணை இல்லாத, சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத அரசாங்கமே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையில்லாமலயே ஆட்சியை நடத்தி வருகிறது.

கண்ணீர் புகை, குண்டாந்தடிகள், பொலிஸ் மிரட்டல், அரச பயங்கரவாதம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டிலுள்ள 10126  பாடசாலைகளில் கற்கும் 41 இலட்சம் மாணவ மாணவிகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்துங்கள்.

குறைபாடுகள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கனம் செலுத்துங்கள். நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி, உரத்து குரல் எழுப்பிய மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனம். இந்த அரசாங்கம், வருடத்தின் 365 நாட்களும் அரச வன்முறை, அரச பயங்கரவாதம், அரச மிருகத்தனத்தை பிரயோகித்து மக்களின் வாயை மூடச் செய்யும் விடயத்திலயே கெட்டித்தனம் காட்டி வருகிறது.

தெளிவாக, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், கல்விச் சுதந்திரம் உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டு, எந்த சவாலையும் எதிர்கொண்டு, உலகிற்கு ஏற்ற உயர்தர கல்வி முறையை ஸ்தாபித்து, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175257

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இல்லாத பணம் அடக்குமுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது - சஜித் பிரேமதாச

Published By: VISHNU   01 FEB, 2024 | 03:40 PM

image

நாட்டில் கல்வி,சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் கூட வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் அடக்குமுறைக்குட்படுத்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பாடசாலை மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போக்கு வரத்து வீதி ஒழுங்குத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் இவ்வாறு செய்யும் போது, 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும் அதன் பிறகும் ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை,காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக 17 பாடசாலைகளுக்கு 17 ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குகின்றது.

பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உண்மையான இலவச கல்வியின் அர்த்தப்பாட்டை நனவாக்குவதே இதன் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 74 ஆவது கட்டமாக, மாத்தறை, கொம்பத்தன விஜயபா கனிஷ்ட வித்தியலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில்  புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

88 மற்றும் 89 இல் ஏற்பட்ட பாரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அப்போதைய ஜனாதிபதி இளைஞர் ஆணைக்குழுவை நியமித்தார்.

அமைச்சர் ஜி.எல். பீரிஸும் அதன் அங்கத்தவர்களில் ஒருவராவார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், நகரத்துக்கு ஒரு கவனிப்பும், கிராமத்துக்கு வேறு ஒரு கவனிப்புமே இளைஞர்களின் அமைதியின்மைக்குக் காரணம் என அடையாளப்படுத்தின.

இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து, கிராமப்புறங்களில் கல்வி அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது.

என்றாலும் இது 1993 வரை மட்டுமே முன்னெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று 220 இலட்சம் மக்களும் நாட்டில் நிலவும் பொருளாதார,சமூக,அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.இவ்வாறான தீர்வுகளை வழங்கக்கூடிய குழு யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் நாடகங்களுக்கு ஏமாற வேண்டாம், நாட்டுக்கு தீர்வுகளும் பதில்களுமே தேவை. அதிகாரம் இல்லாமல் முழு நாட்டிற்கும் சேவை செய்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என்றும்,முன்னைய எதிர்க்கட்சிகளோ அல்லது தற்போதைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளோ இவ்வாறான சேவையை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் 9 மாகாண சபைகளை மையமாகக் கொண்டு 9 புதிய தாதியர் கல்லூரிகளை ஆரம்பித்து,இதை அரச தனியார் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்துவோம். இதனூடாக உயர்தர தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறந்த வாழ்க்கை தரத்தை உருவாக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே,நாட்டை புதிய தொழில்நுட்ப புரட்சிக்கும்,புதிய கல்வி முறையின் மூலம் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் யுகத்திற்கும் இட்டுச்செல்லும் பாரிய அபிவிருத்தி பயணத்தின் முன்னோடிகளாக மாறுவதற்கு அனைவரையும் தயாராகுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0006.png

1115.png

0005.png

Sajith.png

4.png

WhatsApp-Image-2024-02-01-at-14.png

WhatsApp-Image-2024-02-01-at-14.377.png

WhatsApp-Image-2024-02-01-at-14.37.png

https://www.virakesari.lk/article/175325

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.