Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதி போட்டிகளில் ஜப்பான், ஈரான்

02 FEB, 2024 | 11:20 AM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன.

japan_vs_bahrain_1.png

கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின.

ஜப்பானுக்கு இலகுவான வெற்றி

அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை பஹ்ரெய்னை விஞ்சும் வகையில் விளையாடிய ஜப்பான் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

japan_vs_bahrain_2.png

நான்கு தடவைகள் ஆசிய சம்பியனான ஜப்பான் சார்பாக போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரிட்சு டோஆன் முதலாவது கோலை போட்டார்.

சுமார் 35 யார் தூரத்திலிருந்து செய்யா மல்குமா ஓங்கி உதைத்த பந்து பஹ்ரெய்னின் வலது கோல் கம்பத்தில் பட்டு திரும்பிவந்தபோது வேகமாக செயற்பட்ட டோஆன் இடதுகாலால் பந்தை உதைத்து அலாதியாக கோலை போட்டார்.

இடைவேளையின் போது ஜப்பான் 1 - 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஜப்பான் 49ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது.

பஹ்ரெய்ன் வீரர் ஹஸா அலி தவறாக பரிமாறிய பந்தை தனதாக்கிக்கொண்ட டக்கேஃபுசா குபோ மிக இலாவகமாக பந்தை நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தினார்.

japan_vs_bahrain_3.png

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பஹ்ரெய்ன் வீரர் அயாசே உவேடா 30 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் உதைத்த பந்தை சய்யத் பாக்வெர் கோலை நோக்கி தலையால் முட்டினார். ஜப்பான் கோல் காப்பாளர் இஸட். சுசிக்கி பந்தைத் தடுக்க முயன்றபோது குறுக்கே பாய்ந்த ஆயாசே உவேடா பந்தை சொந்த கோலினுள் புகுத்தி பஹ்ரெய்னுக்கு இனாம் கோல் ஒன்றைக் கொடுத்தார்.

எவ்வாறாயினும் 3 நிமிடங்கள் கழித்து செய்யா மைக்குமா பரிமாறிய பந்தை ஆயாசே உவேடா கோலாக்கி தனது முன்னைய தவறை நிவர்த்திசெய்தார். இறுதியில் ஜப்பான் 3 - 1 என வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

பெனல்டி முறையில் ஈரான் வெற்றி

ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையில் தோஹா, அப்துல்லா பின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரான் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

iran_vs_syriya_1.png

இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று சளைக்காமல் விளையாடி அரங்கிலிருந்த பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றன.

போட்டியின் முதலாவது பகுதியின் 34ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்மதி தரேமியை சிரியா வீரர் ஆய்ஹாம் ஒளசூ தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து வீழ்த்தியதால் ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை மெஹ்தி தரேமி கோலாக்கி ஈரானை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

iran_vs_syriya_2.png

இடைவேளையின் பின்னர் 64ஆவது நிமிடத்தில் சிரியா வீரர் பப்லோ சபாக்கை ஈரான் வீரர் அலிரீஸா பெய்ரான்வாந்த் வீழ்த்தியதால் சிரியாவுக்கு பெனல்டி கிடைத்தது.

இந்த பெனல்டியை ஓமர் க்ர்பின் இலக்கு தவறாமல் உதைத்து கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடத் தவறியதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.

இரான் சார்பாக கரிம் அன்சாரிபார்ட், ரமின் ரீஸாயான், ஓமித் இப்ராஹிம், மெஹ்தி தோராபி, ஈஷான் ஹாஜிசபி ஆகிய ஐவரும் தங்களது பெனல்டிகளை இலக்கு தவறாமல் உதைத்தனர்.

iran_vs_syriya_3.png

சிரியா சார்பாக பெப்லோ சபாக், ஆய்ஹாம் ஒளசூ, அலா அல் தலி ஆகியோர் பெனல்டிகளை கோலாக்கினர்.

சிரியா வீரர் பாஹ்த யூசெவ் உதைத்த இரண்டாவது பெனல்டியை ஈரான் கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

இதன் பிரகாரம், ஈரான் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

https://www.virakesari.lk/article/175366

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியாவை வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கிண்ண இறுதிக்கு முன்னேறியது ஜோர்தான்

07 FEB, 2024 | 10:10 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக தென் கொரியாவை வெற்றி கொண்ட ஜோர்தான், ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாட தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.

0702_jordan_bt_south_korea_the_two_goal_

கத்தார், அல் ரய்யான், அஹ்மத் பில் அலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அஸான் அல் நய்மாத்துக்கு ஆரம்ப கோலை போடுவதற்கு வழிசமைத்த மூசா அல் தமாரி 2ஆவது கோலைப் போட, ஜோர்தான் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய ஜோர்தான் மிக வேகமாகவும் மன உறுதியுடனும் விளையாடிய தென் கொரியாவை திணறச் செய்தது.

ஜோர்தானிடம் அடைந்த தோல்வியினால் 60 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஆசிய சம்பியனாகும் தென் கொரியாவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

0702_mouza_al_tamari_jordan_vs_south_kor

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் தென் கொரியாவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஜோர்தான் இரண்டு தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகளை தென் கொரிய கோல் காப்பாளர் ஜோ ஹியொன் வூ தடுத்து நிறுத்தினார்.

ஆசியாவின் அதிசிறந்த வீரர் விருதை 9 தடவைகள் வென்ற சொன் ஹியங் மின் 19ஆவது நிமிடத்தில் தென் கொரியா சார்பாக போட்ட கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதால் அதனை மத்தியஸ்தர் நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மாறிமாறி கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது தென்  கொரியா வீரர் சோல் யங் வூ தலையால் முட்டிய பந்து கொலின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் தென் கொரிய பின்கள வீரர் ஜுங் சியங் ஹியுன்டோ பந்தை தனது கோல் காப்பாளருக்கு பின்னோக்கி நகர்த்தியபோது வேகமாக செயற்பட்ட மூசா அல் தமாரி அதனைக் கட்டுப்படுத்தி அல் நய்த்துக்கு முதலாவது கோலைப் போட வழிசமைத்தார்.

0702_yazan_al_naimat_jordan_vs_south_kor

அந்த சந்தர்ப்பத்தில் பந்தைத் தடுப்பதற்கு முன்னால் நகர்ந்த தென் கொரிய கோல் காப்பாளருக்கு மேலாக பந்தை செலுத்தி யஸான் அல் நய்மத் முதல் கோலைப் போட்டார். (ஜோர்தான் 1 - 0)

கடந்த 6 போட்டிகளில் ஐந்தாவது தடவையாக ஒரு கோலால் பின்னிலை அடைந்த தென் கொரியா, மாற்று வீரர்களை களம் இறக்கி எதிர்த்தாடலை பலப்படுத்தியது. ஆனால், மாற்று வீரர்களில் ஒருவரான சொ கே சுங் 60ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்த எடுத்த முயற்சி நூலிழையில் தவறியது.

அது தென் கோரியாவுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுக்க, ஆறு நிமிடங்கள் கழித்து அற்புதமாக பந்தை நகர்த்திச் சென்ற மூசா அல் தமாரி தனது அணியின் 2ஆவது கோலை புகுத்தினார்.

0702_mouza_al_tamari_jordan.png

அதன் பின்னர் தென் கொரியா கோல் போடுவதற்கு எடுத்த கடும் முயற்சிகளை ஜொர்தான் தடுத்து இறுதியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

0702_jordan_celebrate.jpg

0702_winning_team_jordan.png

https://www.virakesari.lk/article/175765

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் கத்தார்

09 FEB, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் AFC 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான கத்தார் தகுதிபெற்றுள்ளது.

அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மொத்தமாக 5 கோல்கள் போடப்பட்ட 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசை வெற்றிகொண்ட கத்தார் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜப்பானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு கத்தார் ஆசிய சம்பியனாகி இருந்தது.

2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர் விருதை வென்றவரும் அதிக கோல்களைப் போட்டவருமான அல்மோயிஸ் அலி, இரண்டவாது அரை   இறுதிப்   போட்டியின் 82ஆவது நிமிடத்தில் வெற்றிகோலை போட்டார்.

அதன் பின்னர் இந்தப் போட்டி உபாதையீடு நேரம் உட்பட 23 நிமிடங்கள் தொடர்ந்தபோதிலும் ஈரானினால் கோல் நிலையை சமப்படுத்த முடியாமல் போக கத்தார் இறுதியில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் ஆன நிலையில் ஈரான் முதலாவது கோலை போட்டது. த்ரோ இன் பந்தை சர்தார் அஸ்மூன் கரணம் அடித்து உதைத்து கோல் போட்டு ஈரானை முன்னிலையில் இட்டார்.

கத்தார் நீண்ட நேரம் பின்னிலையில் இருக்கவில்லை.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அக்ரம் அபிவ் பரிமாறிய பந்தை ஜசெம் கபிர் ஓங்கி உதைக்க, அது செய்யத் ஈஸாட்டோஹாலி மீது பட்டு கோலினுள் புகுந்தது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது 43ஆவது நிமிடத்தில் அக்ரம் அஃபிவ் 2ஆவது கோலைப் போட்டு கத்தாரை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 53ஆவது நிமிடத்தில் கத்தார் பின்கள வீரர் அஹ்மத் பாதியின் கையில் பந்து பட்டமை வீடியோ உதவி மத்தியஸ்தர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை ஏ. ஜஹான்பக்ஷ் கோலினுள் புகுத்தி கோல நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போட கடுமையாக பிரயத்தனம் எடுத்தன.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அப்துல்அஸிஸ் ஹாதெம் பரிமாறிய பந்தை அல்மோயிஸ் அலி கோலாக்கி கத்தாரை 3 - 2 என முன்னிலையில் இட்டார்.

அந்த கோலே இறுதியில் கத்தாரை இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்லும் வெற்றி கோலாக அமைந்தது.

கத்தாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது. 

முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. 

qatar_va_iran.png

qatar_vs_iran....jpg

https://www.virakesari.lk/article/175948

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைக்க கத்தார், ஜோர்தான் முயற்சி; நாளை இறுதிப் போட்டி

Published By: VISHNU   09 FEB, 2024 | 10:57 PM

image

(நெவில் அன்தனி)

தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ணம் கத்தார் 2023 இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கவுள்ள கத்தாரும் ஜோர்தானும் சம்பியன் பட்டத்தை சூடி வரலாறு படைக்க முயற்சிக்கவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், கிண்ணத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது.

மறுபுறத்தில் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வென்ற வரலாறு படைக்க எண்ணியுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்றும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது.

1_qatar_players_to_watch.png

கத்தார் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர்கள் இடமிருந்து வலமாக: அல்மோயிஸ் அலி, அக்ரம் அலி, ஹசன் அல் ஹைதோஸ்

ஏனெனில் ஆசிய கண்டத்தில் முதலாவது மகுடத்தை ஜோர்தானுக்கு பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஹீசெய்ன் அம்மூடா எதிர்பார்த்துள்ளார்.

அதேவேளை, கத்தார் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதன் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் திகழ்கிறார்.

அத்துடன் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைய கத்தார் முயற்சிக்கவுள்ளது.

2_qatar_team.....png

கத்தார் அணியினர்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) - 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும்  கத்தார் வெற்றிகொண்டிருந்தது.

முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது.

3_jordan_players_to_watch.png

ஜோர்தான் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர் இடமிருந்து வலமாக யஸான் அல் நய்மாத், மூசா அல் தமாரி, யஸான் அல் அராப்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கத்தாருடன் விளையாடிய சிநேகபூர் போட்டியில் ஜோர்தன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்தார்.

4_jordan_team_...png

ஜோர்தான் அணியினர்

இதேவேளை, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள கத்தார், சிறந்த நிலையில் இருக்கிறது.

இம் முறை இறுதிப் போட்டியில் தனது அணி அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கத்தார் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/176006

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

afc.jpg

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது கத்தார்.

af.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.