Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/291414

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில். உண்மையாகவே ஏழை மக்கள் வைத்தியசாலைகளில் வந்து அழுவதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த விடயத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பெருமளவு ஊதிய உயர்வு கொடுத்து அரசு தவிறிழைத்தது என்பது உண்மை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பு

Published By: DIGITAL DESK 3   13 FEB, 2024 | 11:16 AM

image

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை (12)  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே, இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள் என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர் கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. 

இதேவேளை தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

https://www.virakesari.lk/article/176254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையில் கடமையில் முப்படையினர்

Published By: DIGITAL DESK 3   13 FEB, 2024 | 04:36 PM

image
 

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை முதல் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக சுமார் 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 48 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக 900க்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், 200க்கும் மேற்பட்ட வான்படை மற்றும் கடற்படை சிப்பாய்களும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேவைக்கு ஏற்றவாறு மேலதிக படையினரை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/176282

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதாரத் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நாளையும் தொடருமாம்!

13 FEB, 2024 | 05:28 PM
image

இன்றையதினம் 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை புதன்கிழமையும் (12)  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12)  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176297

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மருத்துவமனைகளில் ராணுவம் என்ன செய்கிறது?

இலங்கை

பட மூலாதாரம்,SRILANKAN ARMY MEDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், மருத்துவமனையின் நடவடிக்கைகளை தடையின்றி வழங்க 1000திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவையுடன் இணைந்ததான சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாது இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏன் இந்த பணிப் புறக்கணிப்பு?

சுகாதார சேவையிலுள்ள 72 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப் புறக்கணிப்பை நேற்றைய தினம் (13.2.24) ஆரம்பித்தன.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட டெட் என அழைக்கப்படும் கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

இந்த விசேட கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கடந்த காலங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து வந்தன.

இந்த கோரிக்கை தொடர்பில் கடந்த 12ம் தேதி நிதி அமைச்சுடன், சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

''நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். சுகாதார துறையின் உண்மையாக விடயங்களை மறைத்து, அந்த உண்மையான பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, தமது அரசியல் நிகழ்ச்சி திட்டலுக்கு அமைய தமது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை பார்க்கின்றது." என அவர் கூறினார்.

இலங்கை
படக்குறிப்பு,

''பணிப் புறக்கணிப்பு காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கின்றோம்."

நிர்க்கதி நிலையில் நோயாளர்கள்

சுகாதார ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சிப்பாய்கள் சுகாதார சேவைக்கு அமர்த்தியுள்ள போதிலும், முக்கிய சேவைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மாவனெல்ல பகுதியில் மரமொன்றின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கான முதலுதவிகளை ராணுவம் வழங்கிய போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிய வருகின்றது.

இவ்வாறு நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

''பணிப் புறக்கணிப்பு காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கின்றோம்." என கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகைத் தந்த நோயாளர் ஒருவர் தெரிவித்தார்.

''நாங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம். மயக்கமும் வந்தது. அதிகாலை 6.30 மணிக்கு வருகைத் தந்தேன்." என மற்றுமொரு நோயாளர் குறிப்பிடுகின்றார்.

''அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து நன்றாக உணவு உட்கொள்கின்றார்கள். அப்பாவி பொதுமக்கள் இங்கு துன்பப்படுகின்றார்கள். இவர்கள் மீது தான் தாக்குதல் நடத்த வேண்டும். மருந்து இல்லை. மருந்து இல்லை என கூறுகின்றார்கள்." என மருத்துவமனைக்கு வருகைத் தந்த பெண் நோயாளர் ஒருவர் கூறுகின்றார்.

 
இலங்கை

பட மூலாதாரம்,SRILANKAN ARMY MEDIA

கடமைகளில் ஈடுபட்டுள்ள ராணுவம்

இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1,100 ராணுவ சிப்பாய்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்லும் நோக்குடன் தாம் இந்த நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், கொழும்பு, கண்டி தேசிய மருத்துவமனைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 64 மருத்துவமனைகளில் ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

 
இலங்கை

பட மூலாதாரம்,RAVI KUMUDESH

படக்குறிப்பு,

சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ்

சுகாதார தொழிற்சங்கத்தின் பதில்

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்றை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

''3,000 ரூபாவே வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கூறுகின்றார். சேவைக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார். எமக்கு 3,000 ரூபா பிரச்னை இல்லை. எம்மை சமமாக கருதாத பிரச்னையே எமக்குள்ளது. 35,000 ரூபாவிற்கும், 3,000 ரூபாவிற்குமான கொடுப்பனவு நியாயமான கொடுப்பனவு என்பதை எம்மால் நினைக்க முடியாது. எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்" என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் குறிப்பிடுகின்றார்.

இலங்கைவாழ் நோயாளர்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 
இலங்கை

பட மூலாதாரம்,RAMESH PATHIRANA FACEBOOK

படக்குறிப்பு,

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண

சுகாதார அமைச்சரின் பதில்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை விட்டு சுமார் 1,300 மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே, அவர்களுக்கு 35,000 ரூபா கொடுப்பனவொன்று வழங்க முன்வந்ததாக சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

''நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுமார் 1,300 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெட் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமல்படுத்தப்பட்ட வரி திட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைக்கு மத்தியில், அரச ஊழியர்களின் சிரமத்தை கருத்திற் கொண்டு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக இலங்கை மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து, மீண்டும் தொழிலுக்கு வருகைத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்." என சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

 
இலங்கை

பட மூலாதாரம்,BANDULA GUNAWARDANA FACEBOOK

படக்குறிப்பு,

அமைச்சர் பந்துல குணவர்தன

அரசாங்கத்தின் பதில்

சுகாதார ஊழியர்கள் விடுக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் இயலுமை அரசாங்கத்திடம் தற்போது கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

'' அனைத்து கோரிக்கைகளையும் வழங்க முடியும் என்றால், ஜனாதிபதி, நிதி அமைச்சர் மிக விரைவாக அதனை பெற்றுக்கொடுப்பார். இந்த கோரிக்கைகளை வழங்க வேண்டும் என்றால், மேலும் வாட் வரி அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான இயலுமை அரசாங்கத்திடம் கிடையாது. இ

ந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்காக முடியுமானளவு வேலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்ற நிலையில், தொடர்ச்சியாக பணிப் புறக்கணிப்புக்களை மேற்கொண்டால், அது தொடர்பில் பொதுமக்களே சிந்தித்து பார்க்கவேண்டும்." என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cy0mgxd733ko

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தும் இல்ல மருத்துவமும் இல்ல எனது தந்தையார் இதய நோயாளி மருந்துகள் இல்லை பாமசியில் எடுத்து விழுங்க அந்த குழுசைகள் ஒத்துவராமல்  தலைக்குத்தாவே இருக்கிறது என்றார் அதன் பிறகு அந்த குழுசை பாவிப்பதில்லை  தற்போது குழுசைகள் குறைவு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மருந்தும் இல்ல மருத்துவமும் இல்ல எனது தந்தையார் இதய நோயாளி மருந்துகள் இல்லை பாமசியில் எடுத்து விழுங்க அந்த குழுசைகள் ஒத்துவராமல்  தலைக்குத்தாவே இருக்கிறது என்றார் அதன் பிறகு அந்த குழுசை பாவிப்பதில்லை  தற்போது குழுசைகள் குறைவு

இன்றிலிருந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளார்கள். எனவே தந்தையாரை சரியாக பரிசோதித்து சரியான மாத்திரையை பெற்று கொள்ளுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவுக்கு வந்தது இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

Published By: DIGITAL DESK 3   15 FEB, 2024 | 10:33 AM

image
 

கடந்த இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று வியாழக்கிழமை (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவான DAT ஐ தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல்  தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தன.

இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலை சேவைகளை தடங்கலின்றி முன்னெடுக்க 1,400க்கும் அதிகமான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் சுகாதாரத்துடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176417

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு : அறிக்கை நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு!

ministry-of-health-300x200.jpg

சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இன்று (01) அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று காலை 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான யோசனை அறிக்கையானது, நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சரினால் தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/293960

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.