Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   12 FEB, 2024 | 04:31 PM

image
 

ரஃபாவில்இஸ்ரேல்மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

 

rafa_attacj444.jpg

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால்  அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யப்னா முகாமில் இரண்டு மசூதிகள்  தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/176202

  • கருத்துக்கள உறவுகள்

2  பணய கைதிகளை இஸ்ரேல் காப்பாற்றியதாக செய்திகள் கூறுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கையால் பேரழிவு ஏற்படும் - அவுஸ்திரேலியா எச்சரிக்கை

Published By: RAJEEBAN  12 FEB, 2024 | 12:19 PM

image

ரஃபாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டால் அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களிற்கு  பேரழிவு ஏற்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் காசாவில் உடனடியுத்த மனிதாபிமான யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை  குறித்து இஸ்ரேலின் நண்பர்கள் உட்பட பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன இது குறித்து சர்வதேச அளவில் கருத்துடன்பாடு அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் சர்வதேச சமூகத்தை செவிமடுக்கவேண்டும் எனவும் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர் காசாவின் வடபகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மக்கள் தென்பகுதிக்கு நகர்ந்துள்ளனர். இஸ்ரேல் இந்த மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் அந்த மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தாவிட்டால் அந்த மக்களிற்கு பேரழிவு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176176

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் ரபா பகுதியில் இருந்து இரண்டு பிணைக்கைதிகளை மீட்டது இஸ்ரேல் இராணுவம்

6-4.jpg

இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கும் மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.

நேற்று தெற்கு காசா எல்லையில் அமைந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

வான் வழியாக சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 7 பேர் இறந்து விட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

ரபா நகரில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய சோதனையில் அங்குள்ள ஒரு வீட்டில் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 2 பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதில் ஒருவரது பெயர் பெர்ணாண்டோ சைமன் (வயது 60) மற்றொருவர் பெயர் லூயிஸ்ஹர்க் (70). தற்போது 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

https://thinakkural.lk/article/291409

  • கருத்துக்கள உறவுகள்

சி ஐ ஏ யின் டிரக்டர் ( William Burns)பணய கைதிகள் விவகாரமாகவும் போர் நிறுத்தம் சம்பந்தமாகவும் பேச எகிப்த்துக்கு வந்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘படுகொலை”க்கு வழிவகுக்கும் இஸ்ரேல் - ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி எச்சரிக்கை

wo.jpg

காசாவின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினால் அது ‘படுகொலை”க்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) எச்சரித்துள்ளார்.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஃபா மீதான படையெடுப்பின் விளைவுகள் ‘பேரழிவாக” அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நகரில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் ஹமாஸ் ஆயுததாரிகளை தோற்கடிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக வலுவான வார்த்தைகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ‘ரஃபாவில் நெரிசலில் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்” அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/291656

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவில் மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மை மிக்க திட்டம் எதுவும் சர்வதேச சமூகத்திடம் இல்லை - அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN   15 FEB, 2024 | 01:59 PM

image

ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்பதற்கான நம்பகதன்மை மிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் எதனையும் சர்வதேச சமூகம்  இதுவரை முன்வைக்கவில்லை என அவுஸ்திரேலிய  வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையே  அவுஸ்திரேலியா வெளியிடுவதாக தெரிவித்துள்ள பெனிவொங் அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நாடுகளின் கரிசனைகளை நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார்.

எனது கருத்துக்கள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஃபா பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுக்ககூடிய பாரிய நடவடிக்கை குறித்த எங்கள்ஆழ்ந்த கரிசனைகளை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு தஞ்சமடைந்துள்ள மில்லியன் கணக்காண மக்களிற்கு பேரழிவு  ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நெரிசலாக  வாழும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கை என்பது ஆபத்தானது பொதுமக்களிற்கு இழப்புகள் ஏற்படலாம் எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.

இது நியாயப்படுத்த முடியாதது என அவுஸ்திரேலியா கருதுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176436

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.