Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீர்ப் புகைக் குண்டு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது பஞ்சாப் - ஹரியானா ஷாம்பு எல்லை அருகே பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 12 பிப்ரவரி 2024
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் டெல்லி எல்லைக்குள் வர முடியாதபடி காவல்துறையினர் பல்வேறு வகையான தடுப்புகளை வைத்திருக்கின்றனர்.

ஹரியாணா - பஞ்சாப் எல்லையில் பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற முழக்கத்தில் உறுதியாக உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

 
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்

பட மூலாதாரம்,SAMEER SEHGAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது

இந்தச் சட்டங்களின்படி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் விதியை அரசாங்கம் ரத்து செய்யும் என்றும், அது விவசாயம் கார்ப்பரேட்மயமாவதை ஊக்குவிக்கும் என்றும் விவசாயிகள் அஞ்சினார்கள். அப்படி நடந்தால், அவர்கள் பெருநிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்று கூறினர்.

இந்த விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.

அப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதாக அரசு உறுதியளித்தது. அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

தற்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பிப்ரவரி 13-ஆம் தேதி 'தில்லி சலோ' என்ற முழக்கத்துடன் கூடிய போராட்டம் அதன் ஒரு பகுதியாகும்.

 
விவசாயிகள் போராட ஆயத்தம்

பட மூலாதாரம்,ANI

விவசாயிகளின் கோரிக்கை என்ன?

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற 'தில்லி சலோ' கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், "அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,” என்றார்.

2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் எஸ்.யூ.வி. வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

 
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்
படக்குறிப்பு,

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்

2 ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராட ஆயத்தம் ஏன்?

முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக முடிவெடுத்திருக்கின்றனர்.

விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.

தலேவால் கூறுகையில், "அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

 
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

விவசாயிகள் நடைபயணத்தை நிறுத்த அரசு தயாராகி வருகிறது

அரசாங்கத்தின் எச்சரிக்கை

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். வீடுவீடாகச் சென்று பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

பிப்ரவரி 12-ஆம் தேதி அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், பிப்ரவரி 13-ஆம் தேதி அவர்கள் தில்லியை நோக்கிப் பேரணியாகச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

மறுபுறம், விவசாயிகள் பேரணியை நிறுத்த அரசு தயாராகி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கிடையேயான ஷம்பு எல்லை சிமெண்ட் தடுப்புகள் மற்றும் கம்பிகளால் அடைக்கப்படுவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

ஹரியாணாவில் காகர் ஆற்றின் மீதுள்ள பாலத்தையும் அங்குள்ள நிர்வாகம் மூடியுள்ளது. ஆறு வறண்டிருக்கும் இடம் வழியே விவசாயிகள் டிராக்டர் மூலம் ஹரியாணாவில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லாமல் இருக்க, ஜே.சி.பி மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

கடந்த முறை விவசாயிகள் போரட்டத்தின் போது, பாலம் மூடப்பட்ட போது, விவசாயிகள் அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் தில்லி எல்லைக்குச் சென்றனர்.

 
விவசாயிகள் போராட ஆயத்தம்

பட மூலாதாரம்,PRABHU DAYAL/BBC

விவசாயிகள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தலேவல் மற்றும் பூனியா இருவரும் தெரிவித்தனர். காவல்துறை வாகனங்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களை எச்சரிப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிபிசி அத்தகைய வீடியோக்களின் உண்மைத்தன்மையை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.

தலேவால் பிபிசியிடம், "ஹரியாணாவில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கக் கூடாது என்று போலீஸ் வாகனங்கள் அறிவிக்கின்றன. வீடுகளில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மக்களிடம் வங்கிக் கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த பதிவுகள் கேட்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் டிராக்டர்களுடன் வெளியே சென்றால் பறிமுதல் செய்யப்படும், அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும், என்று எச்சரிக்கப்படுகிறது,” என்றார்.

மேலும், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோதி கூறுகிறார், மறுபுறம் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நாங்கள் புதிய கோரிக்கைகளுடன் வரவில்லை. பழைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்,” என்றார் அவர்.

விவசாயிகள் போராட ஆயத்தம்

பட மூலாதாரம்,PRABHU DAYAL/BBC

 

பேச்சுவார்த்தைகள் தோல்வி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழுவை அரசு அமைத்திருக்கிறது.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

பிப்ரவரி 8-ஆம் தேதி, இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தின் சார்பில் விவசாயிகளுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தலேவால் கூறினார்.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன் விவசாயிகளிடையே அமைதியான சூழலை உருவாக்க விவசாயிகளுக்கு எதிரான இந்தக் கடுமையான சூழலை உருவாக்குவதை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்த போது, நுகர்வோர் விவகாரங்கள் குழுவின் தலைவராகவும் இருந்தார். 2011-12-ஆம் ஆண்டு இதே கமிட்டியின் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் இப்போது அமல்படுத்தப்படவில்லை. அமைச்சர்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி, முதல் முறையாக விவசாயிகளுடன் பேசியபோது, அரசாங்கம் தங்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினார்கள். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் குறித்து அரசாங்க அமைச்சர்களே கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையானது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cp3e48m7k84o

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்; கண்ணீர்ப் புகை, முள்வேலி, பொலிஸ் தடுப்பு - ஹரியானா எல்லையில் பதற்றம்

13 FEB, 2024 | 03:51 PM
image

புதுடில்லியை  நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி தடுத்துள்ளனர்.

delhi_far_3.jpg

சம்யுக்தா கிசான் மோர்ச்சா கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பெப்ரவரி 13-ம் திகதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. 

அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (13) காலையில் தொடங்கினர்.

இப்பேரணி பஞ்சாப் - ஹரியானா ஹரியானா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள் முள்படுக்கை முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. 

விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியானா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.

.delhi_farmer6.jpg

இதனிடையே ஆம் ஆத்மி அரசு விவசாயிகளுடன் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. டெல்லி பவானா மைதானத்தை விவசாயிகளை கைது செய்து அடைப்பதற்கான தற்காலிக சிறையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் "விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயிகள் நமது நாட்டு மக்களின் பசியாற்றுவோர். அவர்களை கைது செய்யும் நடைமுறை வெந்தப் புண்ணில் உப்பைத் தடவுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176286

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - பஞ்சாப், ஹரியாணா எல்லையில் என்ன நடக்கிறது?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 பிப்ரவரி 2024, 07:16 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.

இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு,

கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை விவசாயிகள் வைத்திருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு

கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர்.

கடந்த முறை தொடர் போராட்டத்தின் காரணமாக, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

 

விவசாய சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

விவசாயி ராகேஷ் டிகாய்ட்

கிஷான் ஐக்கிய முன்னணியை சேர்ந்த விவசாயியான ராகேஷ் திகாயத், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகள் அரசுடன் பேச தயராக உள்ளார்கள். எந்த இடம், நேரம் என்பதை அரசுதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “ விவசாயிகளை அரசு துன்புறுத்தக்கூடாது. அவர்கள் டெல்லிக்கு போவார்களே தவிர, திரும்பி பஞ்சாப் செல்ல மாட்டார்கள். ஏதாவது நடந்தால், விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளோ அல்லது டெல்லியோ வெகுதொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “பிப்ரவரி 16 வரைதான் அரசுக்கு கால அவகாசம். அன்று எங்களது கூட்டமைப்பின் ஒரு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் அரசு பேசவில்லையென்றால் எங்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவை பின்பற்றுவோம். படிப்படியாக இந்த இயக்கம் வளரும். அதற்காக அனைவரும் டெல்லிக்குதான் போக வேண்டும் என்பதில்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் அவரவர் இருக்கும் இடத்திலேயே போராட்டங்கள் தொடங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் கற்களை எறியவில்லை. வெளியிலிருந்து வந்த யாரவது அதை செய்திருக்கலாம். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்தையின் மூலமே இந்த பிரச்னைக்கு ஒரு வழி கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.”

இந்த இயக்கத்தின் தலைமை குறித்து பேசிய அவர், “கிசான் ஐக்கிய முன்னணி இன்னும் இந்த போராட்டத்தில் பங்குபெறவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை வழிநடத்தி வரும் தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். அரசு எங்களை உடைக்க முயற்சிக்க கூடாது. அதற்கு பதிலாக எங்களது பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாளை மாலை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

ஜக்ஜித் சிங் தலேவால்

விவசாய அமைப்பின் முன்னாள் தலைவரான ஜக்ஜித் சிங் தலேவால், இதுகுறித்து தான் பாட்டியாலா நிர்வாக அதிகாரிகளோடு சந்திப்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமையின் படி, “புகை குண்டுகளை போடுவதை நிறுத்தினால் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம் என்று அரசு அதிகாரிகளிடம் தான் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்”

இதுகுறித்து பேசியுள்ள தலேவால், “ பாட்டியாலா துணை ஆணையர், டிரோன்கள் குறித்து அம்பாலா துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "பிப்ரவரி 15ம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை வரை ஒத்துழைக்குமாறு எங்கள் தலைவர்கள், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "இன்று நாங்கள் தொடர்ந்து ஒரு சரியான சூழலை உருவாக்க வேண்டும் அனைவரிடமும் பேசி முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தோம், ட்ரோன் வந்து, எங்கள் மீது ஷெல் குண்டுகளை வீசியது."

"மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். நீங்கள் பேசுங்கள். நாங்கள் மோதலை விரும்பவில்லை. டெல்லிக்கும் சென்றே தீர வேண்டும் என்றும் விரும்பவில்லை."

அரசு உடனான சந்திப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலேவால் தெரிவித்தார்.

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி

அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற பேரணியை தொடங்கினர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற 'தில்லி சலோ' கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், "அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,”என்றார்.

 
விவசாயிகள் போராட்டம்

2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் ஆதார விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

 
விவசாயிகள் போராட்டம்

இரண்டு ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராடுவது ஏன்?

முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்.

விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.

தலேவால் கூறுகையில், "அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cjk62586r28o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல” - இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்குவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் ஆதரவு

14 FEB, 2024 | 02:20 PM
image

டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்  கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா ஸ்வாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

“பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும் அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். எனது தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கவுரவிக்க எண்ணினால் எதிர்காலத்துக்காக நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உத்திகளிலும் விவசாயிகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/176362

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் புகை குண்டு ட்ரோன்களுக்கு ‘பதிலடி’யாக பட்டம் பறக்கவிட்ட பஞ்சாப் விவசாயிகள்!

15 FEB, 2024 | 11:01 AM
image

புதுடெல்லி:  இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள அதேவேளையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு விவசாயிகள் செயலிழக்கச் செய்தனர்.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி போவதில் பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்காக  டெல்லி நோக்கி பேரணி தொடங்கினர். அவர்களின் பேரணியை பஞ்சாப் - ஹரியாணா எல்லையின் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். இதற்காக சிமென்ட் தடுப்புகள், முள் வேலிகள், அமைத்து, போலீஸார், துணை ராணுவத்தினரை நிலை நிறுத்தியிருந்தனர்.

தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்த விவசாயிகள் தடைகளை மீறி முன்னேற முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும், தடியடியும் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆம்லாவின் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவியது.  இரவு இடைநிறுத்தம் செய்யப்பட்ட போராட்டம்  காலையில் மீண்டும் தொடங்கியது. விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியாணா போலீஸார் மீண்டும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கூட்டத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்தினர்.

இந்த நிலையில், தங்கள் மீது அரசு ஏவி விடும் ட்ரோன்களை எதிர்கொள்ள விவசாயிகள் ஒரு நூதன யுக்தியைக் கையாண்டனர். ட்ரோன்களுக்கு எதிராக பட்டங்களை பறக்க விட்டு அவற்றை செயலிழக்கச் செய்தனர். ட்ரோன்களின் காத்தாடிகளில், பட்டங்களின் மாஞ்சா நூலைச் சிக்க வைத்து அவற்றை செயலிழக்கச் செய்வதுதான் இந்த புத்திசாலித்தனான நடவடிக்கைகளின் செயல் திட்டம்.

இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு விவசாயிகள் நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சங்கங்களுடன் நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களின் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், தற்போது பேசப்பட்டு வரும் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இன்றைய இரண்டாவது நாளில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், "விவசாயிகளின் போராட்டம், அரசியல் சாராமல், அமைதியான முறையில் நடந்து வரும் நிலையில், அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது. முதன் முறையாக விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை. நாங்கள் நேற்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம். இன்றும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

தங்கள் முயற்சியில் மனம் தளராத இளம் விவசாயிகள் டிராக்டரின் உதவியுடன் தடைகளை உடைக்க முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பாட்டில் ஈர உடைகள், கண்ணீர் புகை குண்டின் தாக்கத்தை குறைக்கும் உபகரணங்களுடன் களத்தில் நின்றனர்.

https://www.virakesari.lk/article/176416

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.