Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணே..! கண்மணியே..!

Featured Replies

image10hw4.jpg

இன்றைய விடியல் என் வாழ்வு

என்று நான் அறியவில்லை!

மனம் என்னை விட்டு போகுமென

கணப்பொழுதும் நினைக்கவில்லை!

கண்ணில் விழுந்த தூசு போல் என்

கண்மணியினுள் விழுந்தாள்!

விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால்

எடுக்க நான் விரும்பவில்லை!!

கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா

என் கரும்விழிகளை நீ கேட்கையில்

என் கண்மணிபட்ட பாட்டை

கண்ணே உன் விழிகள் அறியுமா!

இருவரின் கண்கள் பேசுகையில்

உதடுகள் பேச மறுத்தன

உதடுகள் பேச எத்தணித்த போது

கண்களிள் ஒரு ஏக்கம்!

கண்களின் ஏக்கம் காதலின் தாகம்!

கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம்

விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம்

கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்!

கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன

இமைகள் மூட எத்தணிக்க கண்மணி விடவில்லை!

கண்மணி மூட முயன்றால்

என் பொண்மணி விடுவதில்லை!

கண்களால் பரிமாறிய நம் காதல்விதை

இதயத்தில் விழுந்து விருட்சமானது!

கண்களால் காதல் மொழி கற்பித்தாள்

அம்மொழிகளை என் விழிகள் அறிந்தன!

அன்றிலிருந்து ,

என் பொண்மணியிடம்

என் கண்மணி தினமும்

கற்றது காதல் மொழி

வென்றது புனிதக் காதலில்!

ஆகா....!!!

என் விழிகள் அவளிடம் காதல் மொழி கற்க

ஓயாமல் துடித்த என் விழிகள் கூட

அவளை நேசிக்கிறது என அறிந்தேன்

வெட்கத்தில் முகம் சிவந்தேன்!

பல இரவுகள் மூடாத என் விழிகள்

இன்று அமைதியாக நிம்மதியாக

என் காதலியின் கண்களுக்குள்

உறங்குகிறது சந்தோசமாக!!

Edited by Jamuna

ஹாஹா காதலில் விழுந்த்துட்டியளோ. சீ கண்களுக்குள் விழுந்துட்டுதோ காதல்? ஓ சில்மிசங்கள் இன்றி அமைதியாக சந்தோசமாக உறங்குறியளோ?

எங்களுக்கும் சொல்லுங்கோ ஜம்முபேபி யார் உங்கள் கண்மணி?

உன்னைப் பார்த்து

கண்ணால் பேசும்

என் கண்களை உற்றுநோக்கு

உன் இதயம் துடித்திடும்

என் கண்களுக்குள்

உனை உறங்க வைக்க

கண்மணி எனும் பாய்விரித்து

கண்ணிமை என்னும் சாமரம் வீசி

கண்மடல் எனும் போர்வையால்

கண்ணே உனை போர்த்துவேன்

கண்ணயரு கண்ணா நீ

என் கண்களூக்குள் கண்ணயர்

  • தொடங்கியவர்

நிலா அக்கா பேபி கவிதை தான் எழுதி பார்தது!!பேபிக்கு வயசு இருக்கு அதற்கு!!ஆமாம் பேபி அமைதியாக உறங்குகிறது!!பேபியின் கண்மணியா அது பேபியின் கண்களுகுள்!! :P

நிலா அக்கா உங்க கவிதை சூப்பர் :o பேபி கண்களுக்கு கண்ணயர இடம் காணுமோ!! :rolleyes:

நிலா அக்கா பேபி கவிதை தான் எழுதி பார்தது!!பேபிக்கு வயசு இருக்கு அதற்கு!!ஆமாம் பேபி அமைதியாக உறங்குகிறது!!பேபியின் கண்மணியா அது பேபியின் கண்களுகுள்!! :P

நிலா அக்கா உங்க கவிதை சூப்பர் :) பேபி கண்களுக்கு கண்ணயர இடம் காணுமோ!! :rolleyes:

:o நீங்கள் உங்கள் பொண்மணியின் கண்களுக்குள் கண்ணுறங்கும் போது என் கவியில் வந்த கண்ணா என் கண்ணுக்குள் உறங்க இடம் காணாதோ? :D

  • தொடங்கியவர்

:rolleyes: நீங்கள் உங்கள் பொண்மணியின் கண்களுக்குள் கண்ணுறங்கும் போது என் கவியில் வந்த கண்ணா என் கண்ணுக்குள் உறங்க இடம் காணாதோ? :o

நான் பேபி ஆனபடியா பொண்மணியின் கண்ணுகுள் உறங்கலாம் ஆனா உங்கள் கண்ணா பெரிய ஆள்படுக்க ஏலாது நிலா அக்கா!! :P

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக்குற்றமில்லை...

காதல் செய்த பாவம் இது...

காதலி செய்த துரோகம் இது..

காதலி செய்த துரோகம் இது..... :rolleyes:

ஜம்மு பேபி...

இனிமே நீ பேபியில்லை...

தேவதாஸ்... :o

கவி.. காதலில் விழுந்த எல்லோரும் தேவதாஸ் ஆகிடுவார்களா?

நல்ல கேள்வி...

ஏன் எல்லோரும் சொல்லும்போது இப்படி சொல்லுறாங்க.....

1. காதலில் விழுந்தவர்கள்.......

ஆமா பிறகு எப்பயுமே எழும்பேலாது...

2. காதல் கடலில் குதித்தனர்..

ஆயிரத்தில் ஒண்ணு கரையேறும்...

3. காதல் பூத்தது...

எப்படியும் வேகமா வாடிடும்

காதல் என்ற வார்த்தையே.. இளமையோட வசதிக்காக உருவாக்கப்பட்டதுதானே...

காதலிச்சு கல்யாணம் பண்ணுறது.. ஒரு வருடத்தில விவாகரத்து பெறுறது..

காதலிச்சவங்க கல்யாணம் பண்ணும்போது.. ஆகா வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றோம் அவங்களே... விவாகரத்து பண்ணும்போது.. காதல் தோத்துபோச்சு எண்டு சொன்னா பாவம் அவங்க இல்லை இடையில அநியாமா மாட்டிய காதல்..

எல்லோரும் கல்யாணத்திற்கு பிறகு காதலிங்க...

காதல் வாழும்

காதலை இதிகாசத்திலயும்.. புராணத்திலயும்.. புத்தகத்திலயும்.. திரைப்படத்திலயும்.. பார்த்து மகிழுற.. மரியாதை கொடுக்கிற நாங்கள்..

எங்க இதயத்தில அது சுத்தமாக இருக்கவேண்டும் எண்டு நினைக்கிறதில்லை..

நாங்கள் எங்கள் இதயத்தை குப்பையா வைச்சிண்டு குப்பையான கற்பனைகளை நிறைச்சுவைச்சிட்டு..

தனிமனித ஒழுக்கம் இல்லாம வாழ்ந்திட்டு..

காதல் வெல்லும் தோற்கும் எண்டு கதைக்க கூடாது..

அதுக்கு எங்களுக்கு அருகதை இல்லை...

பேபி நல்லவன்தான்..

எங்க இருக்காகங்க நல்ல காதல்ல உறுதியா இருக்கிறவங்க..

இல்லை காதலை ஏற்று சேர்த்து வைக்கிறவங்க..

கண்டிப்பா நம்மாளு தேவதாஸ்தான்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம யம்முவின் கவிதை நல்லாயிருக்கு .

கண்களின் ஏக்கம் காதலின் தாகம்!

கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம்

விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம்

கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்!

அழகான வரிகள் யம்மு .

கண்களின் ஏக்கம் காதலின் தாகம்!

கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம்

விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம்

கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்!

கண்களால் பரிமாறிய நம் காதல்விதை

இதயத்தில் விழுந்து விருட்சமானது!

கண்களால் காதல் மொழி கற்பித்தாள்

அம்மொழிகளை என் விழிகள் அறிந்தன!

பேபி கவிதை நன்றாக உள்ளது,

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக்குற்றமில்லை...

காதல் செய்த பாவம் இது...

காதலி செய்த துரோகம் இது..

காதலி செய்த துரோகம் இது.....

ஜம்மு பேபி...

இனிமே நீ பேபியில்லை...

தேவதாஸ்...

மாமோய் ஏன் காதலி மேல இவ்வளவு கோபம் !!எல்லா காதலியும் துரோகம் செய்வாங்களா மாமா :lol: !!இல்லை மாமோய் பேபி என்றைக்கும் பேபி தான் :lol: தேவதாஸ் என்றா நாய் வைத்து கொண்டு இருப்பார் அவர் தானே!!பேபி நாயை தேடாம ஒன்று போனா வேறொன்றை தேடும் மாமா!!

நல்ல கேள்வி...

ஏன் எல்லோரும் சொல்லும்போது இப்படி சொல்லுறாங்க.....

1. காதலில் விழுந்தவர்கள்.......

ஆமா பிறகு எப்பயுமே எழும்பேலாது...

2. காதல் கடலில் குதித்தனர்..

ஆயிரத்தில் ஒண்ணு கரையேறும்...

3. காதல் பூத்தது...

எப்படியும் வேகமா வாடிடும்

காதல் என்ற வார்த்தையே.. இளமையோட வசதிக்காக உருவாக்கப்பட்டதுதானே...

காதலிச்சு கல்யாணம் பண்ணுறது.. ஒரு வருடத்தில விவாகரத்து பெறுறது..

காதலிச்சவங்க கல்யாணம் பண்ணும்போது.. ஆகா வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றோம் அவங்களே... விவாகரத்து பண்ணும்போது.. காதல் தோத்துபோச்சு எண்டு சொன்னா பாவம் அவங்க இல்லை இடையில அநியாமா மாட்டிய காதல்..

எல்லோரும் கல்யாணத்திற்கு பிறகு காதலிங்க...

காதல் வாழும்

காதலை இதிகாசத்திலயும்.. புராணத்திலயும்.. புத்தகத்திலயும்.. திரைப்படத்திலயும்.. பார்த்து மகிழுற.. மரியாதை கொடுக்கிற நாங்கள்..

எங்க இதயத்தில அது சுத்தமாக இருக்கவேண்டும் எண்டு நினைக்கிறதில்லை..

நாங்கள் எங்கள் இதயத்தை குப்பையா வைச்சிண்டு குப்பையான கற்பனைகளை நிறைச்சுவைச்சிட்டு..

தனிமனித ஒழுக்கம் இல்லாம வாழ்ந்திட்டு..

காதல் வெல்லும் தோற்கும் எண்டு கதைக்க கூடாது..

அதுக்கு எங்களுக்கு அருகதை இல்லை...

பேபி நல்லவன்தான்..

எங்க இருக்காகங்க நல்ல காதல்ல உறுதியா இருக்கிறவங்க..

இல்லை காதலை ஏற்று சேர்த்து வைக்கிறவங்க..

கண்டிப்பா நம்மாளு தேவதாஸ்தான்..

மாமா பேபியை நல்லவன் என்று சொல்லிட்டீங்க பேபிக்கு அழுகை!!அழுகையா வருது மாமோய் :) !!கல்யாணதிற்கு பிறகு காதலித்தா காதல் வாழும் என்று சொல்லுறீங்க மாமா ஏன் கல்யாணதிற்கு முன் காதலித்து கல்யாணதிற்கு பின் சந்தோசமாக எத்தனையோ பேர் இருக்கீனம் தானே :) ,சில காதல்கள் தோற்பதால் எல்லா காதலையும் பிழை என்றும் சொல்ல முடியாது எல்லா காதலிகளும் ஒரே போல என்ற போர்வைகுள் எடுத்து கொள்ளமுடியாது :) !!எத்தனை காதலர்கள் காதலியை ஏமாற்றுகிறார்கள் ஆனா காதலி ஏமாற்றுவதை மட்டும் பெரிதாக பார்கிறோம் மாமா!!

காதல் என்ற வார்த்தை இளமைக்கு வசதியாக வந்தது என்ற கருத்தை ஏற்கமுடியாது மாமா அது எல்லா பருவத்தினருகுள்ளையும் இருக்கும் மொட்டு எப்போது விரிவடையும் என்பது தான் கேள்விகுறி :lol: !!ஆனால் பள்ளி படிக்கும் போது வரும் காதல் எல்லாம் வெறும் போலி என்று சொல்லலாம்!!ஒரு நிலைக்கு பின் வாற காதல் தான் வாழ்கையில் இனிக்கும் :) !!பள்ளி பருவத்தில் காதல் செய்து எல்லாவற்றையும் இழந்து நிற்போர் பலர் ஆனால் குறிபிட்ட நிலைக்கு பின் காதலித்தவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்திருகிறார்கள் ஒரு சிலரை தவிர மாமா!! :lol:

எங்கள் இதயம் சுத்தமாக இருந்தா நிஜமாக காதல் வெற்றி பெறுமா மாமா அப்படி என்றா பேபியின் இதயம் சுத்தமாக்கும் !!காதலில் உறுதியாக எத்தனையோ பேர் இருகிறார்கள் மாமா வெறும் அழகில் காதலித்தவர்கள் உறுதியாக நிற்கமாட்டார்கள்,ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்தவர்கள் கடைசிவரை உறுதியாக நிற்பார்கள் மாமா!!

மாமோய் நீங்களும் தேவதாஸா!!நாங்கள் ஏன் தேவதாஸ் ஆகவேண்டும் அதுவும் நம் கையில் அல்லவா இருகிறது மாமா!! :)

ஜம்மு பேபி பஞ்-

காதலிக்கும் போது காதலியின் அழகை பார்க்காம அவள் மனத்தை பாருங்கோ!!அதில் தான் அழகு உள்ளது காதலின் ஆழம் உள்ளது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

அட நம்ம யம்முவின் கவிதை நல்லாயிருக்கு .

கண்களின் ஏக்கம் காதலின் தாகம்!

கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம்

விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம்

கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்!

அழகான வரிகள் யம்மு .

கறுப்பி அக்காவே நல்லா இருக்குது என்று சொல்லிட்டா பேபிக்கு சரியான சந்தோசம் நன்றி கறுப்பி அக்கா!! :lol:

பேபி கவிதை நன்றாக உள்ளது,

வாழ்த்துக்கள்

நன்றி இனி வாழ்த்துகளிற்கு :lol: !!கவிதைக்கு தானே சொன்னீங்க!! :lol:

காதல் என்ற வார்த்தை இளமைக்கு வசதியாக வந்தது என்ற கருத்தை ஏற்கமுடியாது மாமா அது எல்லா பருவத்தினருகுள்ளையும் இருக்கும் மொட்டு எப்போது விரிவடையும் என்பது தான் கேள்விகுறி :lol: !!ஆனால் பள்ளி படிக்கும் போது வரும் காதல் எல்லாம் வெறும் போலி என்று சொல்லலாம்!!ஒரு நிலைக்கு பின் வாற காதல் தான் வாழ்கையில் இனிக்கும் :) !!பள்ளி பருவத்தில் காதல் செய்து எல்லாவற்றையும் இழந்து நிற்போர் பலர் ஆனால் குறிபிட்ட நிலைக்கு பின் காதலித்தவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்திருகிறார்கள் ஒரு சிலரை தவிர மாமா!! :lol:

ஜம்மு பேபி காதலைப்பற்றி நல்லாக சொல்லுறியள். இனிமேல் மட்டும் வெள்ளிமாலை பேட்டிக்குள் காதலைப் பற்றி எல்லோரும் என்னமோ கதைக்கிறார்கள்(ஜம்முபேபியை தவிர) இப்படி வரணும் அப்புறம் இருக்கு ஆமா. :lol:

ஜம்மு உங்களுக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் வந்திச்சுதா ஜம்மு? :lol:

image10hw4.jpg

ஆகா....!!!

என் விழிகள் அவளிடம் காதல் மொழி கற்க

ஓயாமல் துடித்த என் விழிகள் கூட

அவளை நேசிக்கிறது என அறிந்தேன்

வெட்கத்தில் முகம் சிவந்தேன்!

பல இரவுகள் மூடாத என் விழிகள்

இன்று அமைதியாக நிம்மதியாக

என் காதலியின் கண்களுக்குள்

உறங்குகிறது சந்தோசமாக!!

ஜம்மு உங்க கவிதை வரிகள் ரொம்பவே நன்றாக இருக்கின்றது.அது சரி

என்ன ஜம்மு உங்க நாட்ல யாருமே தூங்கிறதே இல்லையா.ஆளாழுக்கு தூக்கம்

இல்லைன்னு பாடிக்கொண்டிகுக்குறீங்க.சுண

மாமோய் ஏன் காதலி மேல இவ்வளவு கோபம் !!எல்லா காதலியும் துரோகம் செய்வாங்களா மாமா !!இல்லை மாமோய் பேபி என்றைக்கும் பேபி தான் தேவதாஸ் என்றா நாய் வைத்து கொண்டு இருப்பார் அவர் தானே!!பேபி நாயை தேடாம ஒன்று போனா வேறொன்றை தேடும் மாமா!!

மாமா இதத்தான் சொன்னவர் ஜம்மு....

உங்களோட இந்தக் கொள்கையிலேயே தெரியுதா...

காதலோட தார்ப்பரியம்...

முரண்டுபிடிச்ச கழட்டிவிடறது...

விட்டுட்டுபோன சகஜம்னு வேற தேடறது எல்லாம் காதல் இல்லைப்பா..

வியாபாரம்.. சுயநலம்..

காதல் என்பது.. சுயநலமில்லாத ..தடைகள் போட முடியாத...ஊடகம் தேவையில்லாத .. இதய பரிபாசை.

இது 2007 இல நடைமுறையில இல்லை.. :lol:

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி காதலைப்பற்றி நல்லாக சொல்லுறியள். இனிமேல் மட்டும் வெள்ளிமாலை பேட்டிக்குள் காதலைப் பற்றி எல்லோரும் என்னமோ கதைக்கிறார்கள்(ஜம்முபேபியை தவிர) இப்படி வரணும் அப்புறம் இருக்கு ஆமா. :lol:

ஜம்மு உங்களுக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் வந்திச்சுதா ஜம்மு? :lol:

ஓ நல்லா சொல்லுதா பேபி எல்லாம் யாழ்கள அக்காமார்கள்,அண்ணாமார்கள் கதைகிறதை கேட்டு பேபியும் சொல்லி பார்த்தது நிலா அக்கா :lol: !!வெள்ளி பேட்டியிலே அப்படி தான் பேபி கேட்கும் பேபிக்கு காதல் என்றா என்னவென்றே தெரியாது!!அது சரி காதல் என்றா என்ன நிலா அக்கா :lol: !!ஒரு ஜஸ்கீரிம்மை இரண்டு பேர் சாப்பிடுவீனம் அது தானே காதல் நிலா அக்கா!!ஏன் அக்கா இரண்டு ஜஸ்கீரிம் எல்லாம் குடிக்கமாட்டினமா!!பேபியின்ட ஜஸ்கிரிம்மை யார் கேட்டாலும் கொடுகாது நிலா அக்கா!! :)

பள்ளி பருவத்தில ஜம்மு பேபிக்கு காதல் வரவில்லை ஆனா பேபி மேலே ஒருவாவிற்கு காதல் வந்துட்டு பேபி கூட கிடைத்த லெட்டரை மம்மியிட்ட தான் கொடுத்தது என்றா பாருங்கோ! :lol: !இப்ப அவா எங்கையோ யாருக்கு தெரியும்!!ஆனா பேபிக்கு காதல் எல்லாம் வரவில்லை பள்ளி நாட்களிளே!!அக்சுவலா பேபி இப்ப நினைத்து பார்த்தது ஒரு வேளை அவாவை லவ் பண்ணி இருந்தா வாழ்கை எப்படி இருந்திருக்கும் லவ் பண்ணாதபடியா வாழ்க்கை எப்படி இருக்குது என்று :) !!ஆனா எனக்கு பேபிக்கு அப்ப லவ் வரவில்லை இனி வரலாம்!!வந்திருக்கலாம் எல்லாம் அவன் செயல் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலிற்கு உருவம் இல்லை ஆனால் அதை உணர்ந்தால் அதற்கு உருவம் கொடுக்கலாம்"

  • தொடங்கியவர்

ஜம்மு உங்க கவிதை வரிகள் ரொம்பவே நன்றாக இருக்கின்றது.அது சரி

என்ன ஜம்மு உங்க நாட்ல யாருமே தூங்கிறதே இல்லையா.ஆளாழுக்கு தூக்கம்

இல்லைன்னு பாடிக்கொண்டிகுக்குறீங்க.சுண?டல் அண்ணா ஒரு பக்கம்,நீங்க ஒரு பக்கம்

இது நல்லா இல்லை.

நல்லா இருகிறதா பேபி எழுதி பார்த்தது சுபிதா அக்கா நல்லா இருக்கு என்று சொல்லிட்டா நன்றி சுபிதா அக்கா :) !!சுண்டல் அண்ணா நித்திரை கொள்ளாம பாவம் யாருக்கோ வெயிட் பண்ணுறார் போல அவா எப்ப வருவா அப்ப தான் நித்தா கொள்ளுவாராம் :lol: ............நீங்கள் எப்படி சுபிதா அக்கா!!

என் காதலியின் கண்களுக்குள்

உறங்குகிறது சந்தோசமாக!!

சுபிதா அக்கா கடைசி இந்த வரிகளை பார்த்தனீங்க தானே!!அது தான் காதலியின் கண்களுகுள் உறங்குகிறது சந்தோசமாக என்று கடைசி வரியில வருது ஆகவே இப்ப நித்தா எல்லாம் ஒகே :lol: (அட பேபி சும்மா சொன்னது பிறகு உண்மையா நினைத்து போடாதையுங்கோ நான் பேபி ஆக்கும் :lol: ) சுண்டல் அண்ணா எப்ப தான் நித்தா கொள்ள போறாறோ!! :lol:

  • தொடங்கியவர்

மாமா இதத்தான் சொன்னவர் ஜம்மு....

உங்களோட இந்தக் கொள்கையிலேயே தெரியுதா...

காதலோட தார்ப்பரியம்...

முரண்டுபிடிச்ச கழட்டிவிடறது...

விட்டுட்டுபோன சகஜம்னு வேற தேடறது எல்லாம் காதல் இல்லைப்பா..

வியாபாரம்.. சுயநலம்..

காதல் என்பது.. சுயநலமில்லாத ..தடைகள் போட முடியாத...ஊடகம் தேவையில்லாத .. இதய பரிபாசை.

இது 2007 இல நடைமுறையில இல்லை.. :)

மாமா சப்போஸ் தேவதாஸ் மாதிரி வந்தா என்ன செய்வென் என்பதை தான் சொன்னேன் மாமோய் :) !!விட்டுவிட்டு போறது சுயநலம்,வியாபாரம் என்று சொல்லுறீங்க ஒரு படத்தில சொல்லுறாங்க ஒருவரை ஒருவர் புரிந்து வாழ முடியாட்டி பிரிந்து போய் இருவரும் சந்தோசமாக இருந்தாலும் அது காதல் என்று மாமா இதை பற்றி என்ன சொல்லுறீங்க :lol: !!

ஒருவருகொருவர் புரிந்து விட்டு கொடுத்து காதலை இருவரும் நேசித்தாலே அந்த காதல் வியாபாரம் இல்லை மாமா 2007 யிலும் அப்படியான காதலும் இருக்கு!!காதல் 1950 ஒரே மாதிரி தான் 2007 யிலும் அதை போலவே இருக்கு சிலர் மாறிவிட்டார்கள் அதற்காக எல்லாரையும் பிழை சொல்ல முடியாது மாமா!! :lol:

உடலை பார்த்து பொருளை பார்த்து படிப்பை பார்த்து வருவதெல்லாம் காதல் இல்லை அது தான் அநேகம் நடக்கிறது பிழையான முடிவுகளையும் சந்திகிறது அதை காதல் என்ற கட்டகரிகுள் அளவிடமுடியாது!!இரு மனங்கள் புரிந்து இதயத்தில் சங்கமிக்கும் ஆயின் அது தான் காதல்!!காதல் வற்புறுத்தி வரமுடியாது தானாகவே வரவேண்டும்!! :lol:

மாமோய் காதலிற்காக உயிரை கொடுபேன் என்று சொல்வது எல்லாம் வெறும் நடிப்பு காதலித்த பின் உயிரை கொடுப்பவர்கள் எல்லாம் காதலிக்க கூடாது,காதலை இறுதிவரை போராடி வெல்பவனிற்கு தான் "காதல்" என்ற மலராத மொட்டு இதழ்களை விரித்து பூத்து வாசணை பரவும்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஓட்ட போட்டி என்று வந்திட்டா கடைசிவரை ஓட வேண்டும் அது போல தான் காதலும்" :lol:

நல்லா இருகிறதா பேபி எழுதி பார்த்தது சுபிதா அக்கா நல்லா இருக்கு என்று சொல்லிட்டா நன்றி சுபிதா அக்கா :lol: !!சுண்டல் அண்ணா நித்திரை கொள்ளாம பாவம் யாருக்கோ வெயிட் பண்ணுறார் போல அவா எப்ப வருவா அப்ப தான் நித்தா கொள்ளுவாராம் :lol: ............நீங்கள் எப்படி சுபிதா அக்கா!![/co

நான் இங்கே நல்லாதான் தூங்கிறேன்.எனக்கு என்ன குறை. ந்

  • தொடங்கியவர்

நான் இங்கே நல்லாதான் தூங்கிறேன்.எனக்கு என்ன குறை. ந்

ஓ சுபிதா அக்கா நல்லா தூங்கிறீங்களா அப்ப சரி :lol: !!சுபிதா அக்கா நீங்க யாரையும் காதலிக்கவில்லையா!!இல்லை சுண்டல் அண்ணா காதலித்தபடியா தான் நித்தா வராம இருகிறார் நீங்க நல்லா நித்தா கொள்ளுறீங்க அது தான் கேட்டேன்!! :lol:

ஓ சுபிதா அக்கா நல்லா தூங்கிறீங்களா அப்ப சரி :lol: !!சுபிதா அக்கா நீங்க யாரையும் காதலிக்கவில்லையா!!இல்லை சுண்டல் அண்ணா காதலித்தபடியா தான் நித்தா வராம இருகிறார் நீங்க நல்லா நித்தா கொள்ளுறீங்க அது தான் கேட்டேன்!! :lol:

சுண்டல் அண்ணா தூங்காததுக்கும் நான் தூங்கிறதுக்கும் என்ன இருக்கு ஒன்னுமே இல்லயே. :lol:

ஓ நல்லா சொல்லுதா பேபி எல்லாம் யாழ்கள அக்காமார்கள்,அண்ணாமார்கள் கதைகிறதை கேட்டு பேபியும் சொல்லி பார்த்தது நிலா அக்கா :) !!வெள்ளி பேட்டியிலே அப்படி தான் பேபி கேட்கும் பேபிக்கு காதல் என்றா என்னவென்றே தெரியாது!!அது சரி காதல் என்றா என்ன நிலா அக்கா :lol: !!ஒரு ஜஸ்கீரிம்மை இரண்டு பேர் சாப்பிடுவீனம் அது தானே காதல் நிலா அக்கா!!ஏன் அக்கா இரண்டு ஜஸ்கீரிம் எல்லாம் குடிக்கமாட்டினமா!!பேபியின்ட ஜஸ்கிரிம்மை யார் கேட்டாலும் கொடுகாது நிலா அக்கா!! :lol:

:) என்னையே காதல் என்றால் என்ன என்று கேட்கிறியளோ? இருவரும் தானே பரணியண்ணாவின் காதல் பள்ளிக்கூடம் போனனாங்கள். என்னை கேட்டாலெனக்கென்ன தெரியும்?

:lol: நிலாக்கா கேட்டாலும் உங்கட ஐஸ்கிறீம் தரமாட்டியளா ஜம்மு? :lol:

பள்ளி பருவத்தில ஜம்மு பேபிக்கு காதல் வரவில்லை ஆனா பேபி மேலே ஒருவாவிற்கு காதல் வந்துட்டு பேபி கூட கிடைத்த லெட்டரை மம்மியிட்ட தான் கொடுத்தது என்றா பாருங்கோ! :) !இப்ப அவா எங்கையோ யாருக்கு தெரியும்!!ஆனா பேபிக்கு காதல் எல்லாம் வரவில்லை பள்ளி நாட்களிளே!!அக்சுவலா பேபி இப்ப நினைத்து பார்த்தது ஒரு வேளை அவாவை லவ் பண்ணி இருந்தா வாழ்கை எப்படி இருந்திருக்கும் லவ் பண்ணாதபடியா வாழ்க்கை எப்படி இருக்குது என்று :) !!ஆனா எனக்கு பேபிக்கு அப்ப லவ் வரவில்லை இனி வரலாம்!!வந்திருக்கலாம் எல்லாம் அவன் செயல் நிலா அக்கா!! :)

:lol: வரவில்லை வரலாம் வந்திருக்கலாம் என்று முக்காலத்திலும் சொல்லி குழப்புறியள் போங்க. கொஞ்ச நாளாக உங்களில் பல மாற்றங்கள் ஜம்மு. என்னமோ நடகக்ட்டும் வாழ்த்துக்கள் ஜம்மு

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

சுண்டல் அண்ணா தூங்காததுக்கும் நான் தூங்கிறதுக்கும் என்ன இருக்கு ஒன்னுமே இல்லயே. :(

சா நீங்க தூங்காதிற்கும் சுண்டல் அண்ணா தூங்காதிற்கும் சம்மந்தமே இல்லை ஆனா சுண்டல் அண்ணா தூங்காதபடியா பேபியும் தூங்கிறதில்லை :wub: !!அது தான் நீங்களும் எப்படி என்று கேட்டனான் சுபிதா அக்கா :icon_mrgreen: !!..........சரி சுபிதா அக்கா நீங்க யாரையும் காதலிக்கவில்லையா!! :(

ஜம்மு பேபி பஞ் -

"காதலிக்கிற நேரம் தெரிந்திட்டா தூங்கிற நேரம் குறைந்திடும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

என்னையே காதல் என்றால் என்ன என்று கேட்கிறியளோ? இருவரும் தானே பரணியண்ணாவின் காதல் பள்ளிக்கூடம் போனனாங்கள். என்னை கேட்டாலெனக்கென்ன தெரியும்?

நிலாக்கா கேட்டாலும் உங்கட ஐஸ்கிறீம் தரமாட்டியளா ஜம்மு?

வரவில்லை வரலாம் வந்திருக்கலாம் என்று முக்காலத்திலும் சொல்லி குழப்புறியள் போங்க. கொஞ்ச நாளாக உங்களில் பல மாற்றங்கள் ஜம்மு. என்னமோ நடகக்ட்டும் வாழ்த்துக்கள் ஜம்மு

ஆமாம் காதல் என்றா என்னவென்று பேபிக்கு தெரியாது ஓ பரணி மாஸ்டரின் பள்ளிகூடதிற்கு ஒன்றா தான் போறனாங்க அங்கே போய் பேபி நித்தாவா போயிடும் ஆனபடியா கொஞ்சமும் தெரியாது அக்கா :lol: ...........நீங்க சொல்லி தாங்கோ!! :icon_mrgreen:

ஜஸ்கீரிம் அக்கா கேட்டா தருமே பேபி :( ..........!!ஆனா அதற்கு பதிலா இரண்டு ஜஸ்கீர்ம் அக்கா வாங்கி தரவேண்டும் சொல்லிட்டேன்............ :wub: .!

முக்காலத்திலையும் பேபி சும்மா சொல்லி பார்த்தது நிலா அக்கா பேபியில் மாற்றமா பேபி அப்படி தான் இருக்கு நிலா அக்கா :( ............!!வாழ்த்துகளோ நான் இன்னும் பேபி அக்காவா பார்த்து நல்லதா ஒன்றை பார்த்து தாங்கோ நிலா அக்கா!! :wub:

ஜம்மு பேபி பஞ்-

காதலும், தும்மலும் எப்ப வருமென்று யாருக்கும் தெரியா வந்தா கட்டுபடுத்த ஏலாது!! :wub:

அப்ப நான் வரட்டா!!

காதலும், தும்மலும் எப்ப வருமென்று யாருக்கும் தெரியா வந்தா கட்டுபடுத்த ஏலாது!!

துடிக்கிற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்? என பாடுறியள் போல இருக்குதே ஜம்மு

எப்ப வந்திச்சோ யார் மேல வந்திச்சோ சரி சரி வாழ்த்துக்கள்.

என்னது நான் தான் உங்களுக்கு பார்த்து தரணுமா? ஹீஹீ ஜம்மு எனக்கு சிரிப்பு வருது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.