Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல் 174 : நியூஸிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள்

01 MAR, 2024 | 04:18 PM
image

(நெவில் அன்தனி)

வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் கெமரன் க்றீன் தனித்து ஆட்டம் இழக்காமல் 174 ஓட்டங்களைக் குவிக்க, நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 116 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த இணைப்பாட்டமானது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக 2004ஆம் ஆண்டு க்ளென் மெக்ராவும் ஜேசன் கிலெஸ்பியும் 10ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 114 ஓட்டங்களே முன்னைய சாதனையாக இருந்தது.

மேலும் கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் பகிர்ந்த இணைப்பாட்டமே அவுஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

போட்டியின் முதாலாம் நாளான வியாழக்கிழமை (29) மொத்த எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர்.

கடைசி விக்கெட் இணைப்பாட்டத்தில் ஹேஸ்ல்வூடின் பங்களிப்பு 22 ஓட்டங்களாகும்.

கெமரன் க்றீன் 6 மணித்தியாலங்கள, 36 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 275 பந்தகளை எதிர்கொண்டு 174 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 41 உதிரிகள் அமைந்தது.

மிச்செல் மாஷ் 40 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கொட் குகெலின் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில்லியம் ஓ'றூக் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டொம் லெதம் (5), கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்த்ரா (0), டெரில் மிச்செல் (11), வில் யங் (9) ஆகிய 5 முன்வரிசை வீரர்களும் ஆஸி.யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். (29 - 5 விக்.)

எனினும் டொம் ப்ளெண்டலும் க்ளென் பிலிப்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

டொம் ப்ளெண்டல் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஸ்கொட் குகேலின் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (113 - 7 விக்.)

இந் நிலையில் க்ளென் பிலிப்ஸ், மெட் ஹென்றி ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர்.

எனினும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது  க்ளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கடைசியாக ஆட்டம் இழந்த மெட் ஹென்றி 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நேதன் லயன் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க 217 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

0103_cameren_green_aus_vs_nz.png

0103_matt_henry_nz_vs_aus.png

0103_josh_hazlewood_aus_vs_nz.png

https://www.virakesari.lk/article/177689

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் அணிக்கு என்ன‌ ஆச்சு............நிலைத்து நின்று விளையாட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள் நேற்று மைதான‌த்துக்கு வ‌ருவ‌தும் உட‌ன் வெளியில் போவ‌தும்...........65ஓவ‌ர் கூட‌ நிலைத்து நின்று விளையாட‌ வில்லை😮.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதன் லயனில் சுழற்சியில் நியூஸிலாந்து சரிந்தது, ஆஸி. 172 ஓட்டங்களால் வெற்றி

Published By: VISHNU   04 MAR, 2024 | 12:24 AM

image

(நெவில் அன்தனி)

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் குவியலை நெதன் லயன் பூர்த்தி செய்ததன் பலனாக 172 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றிபெற்றது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03)காலை வெற்றிக்கு மேலும் 258 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இப் போட்டியில் நியூஸிலாந்து சாதிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், நெதன் லயன் காலையிலேயே விக்கெட்களை வீழ்த்தி 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததால் நியூஸிலாந்தின் வாய்ப்பு நழுவிப்போனது.

நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரச்சின் ரவிந்த்ரா, டொம் ப்ளண்டல், க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் விக்கெட்களை நெதன் லயன் வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வெற்றிப்பாதையில் இட்டார்.

நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவிந்த்ரா 59 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 38 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

அவர்கள் இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 67 ஓட்டங்களே நியூஸிலாந்தின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

இது இவ்வாறிருக்க இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததன் மூலம் சாதனை ஒன்றை நெதன் லெதன் சமப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9 அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த முரளிதரன், ஷேன் வோன் ஆகிய இருவரது சாதனைகளை நெதன் லயன் சமப்படுத்தினார்.

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராகவே அந்த நாடுகளின் சொந்த மண்ணில் நெதன் லயன் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார்.

நெதன் லயன் முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும்  கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் 1ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்ற 383 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது.

மற்றைய 3 இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாகவே பெறப்பட்டது.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 383 (கெமரன் க்றீன் 174 ஆ.இ., மிச்செல் மார்ஷ் 40, உஸ்மான் கவாஜா 33, ஸ்டீவன் ஸ்மித் 31, மெட் ஹென்றி 70 - 5 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 179 (க்ளென் பிலிப்ஸ் 71, மெட் ஹென்றி 42, டொம் ப்ளண்டல் 33, நெதன் லயன் 43 - 4 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (நெதன் லயன் 41, கெமரன் க்றீன் 34, க்ளென் பிலிப்ஸ் 45 - 5 விக்., மெட் ஹென்றி 36 - 3 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (ரச்சின் ரவிந்த்ரா 59, டெரில் மிச்செல் 38, நெதன் லயன் 65 - 6 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 20 - 2 விக்.)

ஆட்டநாயகன்: கெமரன் க்றீன்.

https://www.virakesari.lk/article/177831

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த‌ ம‌ண்ணில் இர‌ண்டாவ‌து ரெஸ்ரிலும் தோக்க‌ போகின‌ம் நியுசிலாந் அணி..............20ஓவ‌ர் போட்டிக‌ளில் விளையாடும் வீர‌ர்க‌ளை ஜ‌ந்து நாள் போட்டியில் விளையாட்டில் விளையாட‌ விட்டால் இது ந‌ட‌க்கும்..............இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு நிலைத்து நின்று ஆடும் வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தெரிவு செய்ய‌னும்..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான 4ஆம் நாளில்  அவுஸ்திரேலியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கேரி-மாஷ் ஜோடி

Published By: VISHNU    12 MAR, 2024 | 01:37 AM

image

(நெவில் அன்தனி)

கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் மூன்றரை நாட்களில் நிறைவுக்கு வந்த, ஆனால் பரபரப்பை ஏற்படுத்திய  அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது.

1103_aus_beat_nz_by_3_wkt_2nd_test.jpg

போட்டியில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாம் நாள் பிற்பகல் ஆரம்பித்த அவுஸ்திரேலியா அன்றைய தினம் 4 முக்கிய விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது.

1103_icc_test_championship_points_table.

இதன் காரணமாக எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை நான்காம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை நான்காம் நாளான திங்கட்கிழமை (09) காலை  தொடர்ந்த அவுஸ்திரேலியா, ட்ரவிஸ் ஹெட்டின் விக்கெட்டை 2ஆவது ஓவரில் இழந்து மேலும் சிக்லை எதிர்கொண்டது.

1103_matt_henry_nz_vs_aus.jpg

ஆனால், மிச்செல் மாஷ், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

மிச்செல்  மாஷ்   10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். (220 - 6 விக்.)

அதே மொத்த எண்ணிக்கையில் மிச்செல் ஸ்டாக் களம் விட்டகன்றார்.

எனினும் அலெக்ஸ் கேரியும் அணித் தலைவர் பெட் கமின்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஒட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அலெக்ஸ் கேரி 15 பவுண்டறிகள் உட்பட 98 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 4 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 372 ஓட்டங்களே அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்த அலெக்ஸ் கேரி, விக்கெட் காப்பாளராக 10 பிடிகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்தின் மெட் ஹென்றி 101 ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் ஆனார்.

இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷப் அணிகள் நிலையில இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 162 (டொம் லெதம் 38, மெட் ஹென்றி 29, டிம் சௌதீ 26, ஜொஷ் ஹேஹ்ல்வூட் 31 - 5 விக்., மிச்செல் ஸ்டாக் 59  - 3 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 256 (மானுஸ் லபுஷேன் 90, மிச்செல் ஸ்டாக் 28, கெமரன் க்றீன் 25, மெட் ஹென்றி 67 - 7 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 372 (ரச்சின் ரவிந்த்ரா 82, டொம் லெதம் 73, டெரில் மிச்செல் 58, கேன் வில்லியம்சன் 51, ஸ்கொட் குகெலீன் 44, பெட் கமின்ஸ் 62 - 4 விக்., நேதன் லயன் 49 - 3 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்) 281 - 7 விக். (அலெக்ஸ் கேரி 98 ஆ.இ., மிச்செல் மாஷ் 80, பெட் கமின்ஸ் 32 ஆஷ.இ., பென் சியஸ் 90 - 4 விக்., மெட் ஹென்றி 94 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/178479

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் தொட‌ர்ந்து அவுஸ்ரேலியாவிட‌ன் தோல்வி அடைவ‌து தொட‌ர் க‌தையா போய் கிட்டு இருக்கு😏...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.