Jump to content

திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும்  திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாகும்.இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள்  பாடியுள்ளார்.

இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில்  இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
 
நேற்றைய தினம் சிவராத்திரி நிகழ்வில் தமிநாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்,103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ  சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய  சுவாமிகள்  விசேட அழைப்பாளராக  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.
 
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
 
1709709035466-300x200.jpg 1709709035476-300x200.jpg 1709709035487-300x200.jpg1709709035456-1-300x200.jpg 1709709035496-1-300x200.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்ற போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற  சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம்  திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் விசேட அழைப்பாளராக  கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் போரூர் ஆதினம்  திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் அவர்களின் தெய்வீக சொற்பொழிவும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தெய்வீக  கானங்களும் இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.
 
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, எதிர்வரும்  08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
1709798999335-300x200.jpg1709798999355-300x200.jpg
 
1709798999393-300x200.jpg 1709798999373-300x200.jpg1709798999412-300x200.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பக்திமயமாக வைத்திருங்கோ ..

இல்லை என்றால் அவையள் விலைவாசி ஏற்றம் ,அது இது என போராட்டம் நடத்த தொடங்கி விடுவினம்....

ஏன் எங்கன்ட பிக்குமாரை அழைக்க வில்லை...

.

மத்திய அரசின் பணமோ ?அல்லது இந்தியாவின் பணமோ?

Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வுகள்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.