Jump to content

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-yapa-abeywardane-700x375.jpg

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373909

Link to comment
Share on other sites

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!

 

 
 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=185353

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்கள் விவாதித்தால் என்ன, மூன்று நாட்கள் விவாதித்தால் என்ன, முடிவில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இரண்டு நாட்கள் விவாதித்து முடித்து விட்டு, பிரேரணை தோற்று விட்டது என்று அறிவித்து விட்டு, மூன்றாம் நாள் உருப்படியான ஏதாவது ஒரு வேலை, அப்படி ஒன்று இருந்தால், செய்யலாம். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரோபோவுக்கு பணிசுமையாவது மண்ணாங்கட்டியாவது, புரோகிராம் செய்தவருக்கு காதல் தோல்வியாய் இருந்திருக்கும்.......!  😁
    • நானும் கண்டேன், நம்பினேன். ஆனால் அது எவ்வளவு காலம் ?.  ஆறு ஆண்டுகளின் பின் போர்க்குழுக்கள் என ஒன்று ஒன்றாக முளைத்தன. அவைக்குள் தாக்களுக்கு தாங்களே போராடி அல்லது சாக்கடித்து மடிந்த இளைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள்  எத்தனை ?    என்றாலும் பின் ஒரு குழு ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அரசியல் தலைமை 2009 வரை , உண்மையில் அவர்களின், கட்டுப்பாட்டால் நீடித்தது உண்மையே. அதற்கு வாக்கு போட்டவனில்  நானும் ஒருவன். ஆனால் அந்த கூட்டின் உண்மையான முகம், 2009 மே திகளின் பின் ஒன்று ஒன்றாக சிதைந்து , வெளிவரத் தொடங்கியதும் உண்மையே!!   அது மட்டும் அல்ல, ஒன்று படா போராளிகளின் பிரிவால், ஒன்றாக அன்பால், விட்டுக்கொடுப்பால் புரிந்துணர்வால்  இணைந்து இயங்கா தலைமைகளால், இருந்ததையும் இழந்ததே உண்மை !!  காட்டிக்கொடுப்புகளும் வஞ்சகங்களும் அங்கு கூத்தாடியதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அப்படி என்றால், அந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது, எப்படி அழிந்தது என்பதை புரிந்து, ஒரு உண்மையான ஒற்றுமை ஒரு கொள்கை என்ற குடையின் கீழ், தலைவர் யாராக இருந்தாலும், அந்த கொள்கைக்காக, நோக்கத்துக்காக ஏற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து 
    • இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது  என்பது உங்களுக்கு தெரியாத???   தந்தை செல்வா.  இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான்   தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை  2009 இல். நாங்கள் அறிந்த விடயம்  ஆயுதப்போராட்டம் மூலமும்   ஒன்றும் பெற முடியாது   என்பது   சர்வதேசம் தான்  போராட்டம் தோல்விக்கு காரணம்   ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி  பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார்  பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது   ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை   இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான்   சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம் 
    • Published By: DIGITAL DESK 7   03 JUL, 2024 | 12:09 PM   வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர். அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.  இவரும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (01) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187562
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.