Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
புளுகுப் போட்டி
--------------------------
மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது.
 
மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏதும் இல்லாமல், தோன்றுவது என்பது மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. ஆரம்ப நாட்களில் ஆட்களைத் தேடி வந்த போலீஸ்காரர்கள் ஒழுங்கைகளில் கால்களை வைக்காமல், வீடுகளின் சுவர்களில் நடந்து திரிந்தனர். அவர்கள் ஒழுங்கை ஒன்றில் இறங்கினால், அவர்களையும் காணாமல் போனோர் கணக்கில் சேர்க்க வேண்டி வந்தாலும் வந்திருக்கும். அந்தளவு ஒழுங்கைகளும், பின்னல்களும் நிறைந்தது ஊர்.  
 
ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு சிறிய விளையாட்டுக் கழகம் இருந்தது. பெரிய விளையாட்டு கழகங்கள் அல்லது தாய் விளையாட்டு கழகங்கள் என்றும் இருந்தன. மொத்தத்தில் ஏராளமான கழகங்கள். சிறிய கழகமோ, பெரிய கழகமோ அவர்களின் விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடக்கும். கழக அங்கத்தவர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பொது விளையாட்டுகள் என்று இரண்டு வகையான போட்டிகள் நடைபெறும். பொது விளையாட்டுகள் என்ற வகையில் புளுகுப் போட்டி வரும். யாரும் பங்கு பற்றலாம்.
 
மேடையில் ஏறி புளுகித் தள்ளவேண்டும். ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக விடயம் இருக்கவேண்டும். கூட்டம் கைதட்டும். நடுவர்கள் புள்ளிகள் போடுவார்கள். இறுதியில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று அறிவித்து பரிசுகள் வழங்கப்படும்.
 
வயதுக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, என் வயதை ஒத்த, அன்று சிறுவன், மேடையில் ஏறி, ஒரு சமயம் தன்னை யாரோ எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தான். தான் மெதுவாக ஒரு யன்னல் கம்பியை உடைக்க ஆரம்பித்தால், அது லட்டால் செய்யப்பட்டிருந்தது என்று தொடர்ந்தான். தான் அதை சாப்பிட்டு விட்டு, உடைப்பதை தொடர்ந்தால், வீடு முழுவதுமே லட்டால் கட்டப்பட்டிருந்தது என்றான். முழு வீட்டையுமே தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னான்.       
 
அன்றிலிருந்து அவனின் பெயரே மாறிவிட்டது.
 
இதையே தொடர்ந்திருந்தால் சிலரின் இயல்பான திறமைகள் வெளியே வந்து, நன்றாக வளர்ந்தும் இருப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்தக் கலையில் ஒரு அடிப்படைத் திறமை, அறிவு கிடைத்திருக்கும். தொடர்ச்சியாக அடித்து விடுவது என்பது அரசியலிலும், சில சேவை வியாபாரங்களிலும் இருப்பவர்களுக்கு மிகத் தேவையான ஒரு திறமை.
 
ஆந்திரா, தெலுங்கு, கன்னட, மலையாள நண்பர்களிடம் மிக மெதுவாகக் கேட்டுப் பார்த்ததில், திராவிட நாட்டில் இது வேறு எங்குமே காணப்படவில்லை என்றும் தெரிகின்றது. மலையாளிகளிடம் வேறு வேறு விதங்கள் இருக்கின்றன. ஒரு கட்ட சாயா, தட்டையுடன் (பிளேன் டீ, தட்டை வடை) அவர்கள் நாலு மணித்தியாலங்கள் உலக அரசியல் பேசி, இறுதியில் அமெரிக்காவை அரை உயிருடன் அடுத்த நாளுக்காக விட்டு வைப்பார்கள். மலையாளிகளுக்கு உலக அரசியலில் தான் ஆர்வம் அதிகம். மற்றும் அவர்கள் பொதுவாக சிவப்புச் சட்டை, சால்வைக்காரர்கள்.
 
இயல்பாக வந்த ஒரு திறமையை மறைப்பதென்பது கடினம். அது தும்மல் போன்று, விக்கல் போன்று எப்பவும், எங்கேயும் கொஞ்சம் அமுங்கியாவது வெளிப்படும். சமூக ஊடகங்களில் இன்று இந்தக் கலை வடிவம் நன்றாகவே வெளிப்படுகின்றது. ஆனால் எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், சாமியார்களும் இன்று தூள் கிளப்புகின்றனர். பத்து பன்னிரண்டு வயதில் விட்டுப் போன புளுகுப் போட்டியை இன்று மீண்டும் அரசியல் மேடைகளில் எங்கும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகள் புளுகுப் போட்டியில் நிகர் இல்லாமல் அசத்துகின்றார்கள், முதலாம் இடம் அவர்களுக்கே.
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலும் ஒவ்வொரு நண்பர்கள் குழாமிலும் ஒரு புளுகன் கண்டிப்பா இருப்பார்........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, ரசோதரன் said:

இன்றைய அரசியல்வாதிகள் புளுகுப் போட்டியில் நிகர் இல்லாமல் அசத்துகின்றார்கள், முதலாம் இடம் அவர்களுக்கே.

அன்று அவர்கள் யன்னல் கம்பிகளை கழட்டும் போது ‘குளோப்ஜாம்’ வந்திருக்கும். அதனால்தான் இன்று வீட்டையே சாப்பிடுகிறார்கள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.   (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
    • ChessMood  ·  Suivre 17 h  ·  The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!   💐
    • இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)   https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.