Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" 
[பாடல் - 1 / First poem of  my own eulogy / உயிர்  எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]


"அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக    
அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக   
அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில்   
அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" 


"ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே
ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே 
ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே 
ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"


"இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் 
இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே 
இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே 
இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"


"ஈடணம் விரும்பா சாதாரண மகனே   
ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே    
ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் 
ஈமத்தாடி குடி கொண்ட  சுடலையில்?" 


"உலகத்தில் பரந்து வாழும் பலரின் 
உண்மை இல்லா பற்றில் பாசத்தில் 
உடன்பாட்டிற்கு வர முடியாமல் 
உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"


"ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல்    
ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே 
ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே 
ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"


"எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து   
எழுதுகோல் எடுத்து உலகை காட்டி  
எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் 
என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?" 


"ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல்  
ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே 
ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே  
ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?" 


"ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி 
ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து 
ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே 
ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"


"ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து     
ஒழிக்காமல் வெளிப்படையாக  நடவடிக்கை எடுத்து 
ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற   
ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!" 


"ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு 
ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே 
ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை 
ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"


"ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே
ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே 
ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே
ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஈடணம் - புகழ்
ஈடிகை - எழுதுகோல்
ஈமத்தாடி - சிவன்
உணக்கம் - உலர்ந்ததன்மை
ஊறு - இடையூறு
ஊனம் - உடல் குறை, இயலாமை
எய்யாமை - அறியாமை
ஏகாகாரம் - சீரான முறை
ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு 
ஏகாந்தம் - தனிமை
ஐங்கணைக்கிழவன் - மன்மதன்.
ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, 
காமவெறியின்மை, பொய்யாமை,  கள்ளுண்ணாமை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன்
ஓகை - உவகை, மகிழ்ச்சி
ஔவியம் - பொறாமை, அழுக்காறு
ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் 
உற்பத்தியாயிற்றென்று கூறுவோன்
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்

Edited by kandiah Thillaivinayagalingam
  • Haha 1
  • kandiah Thillaivinayagalingam changed the title to "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"  [பாடல் - 1]
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயிரெழுத்துக்களிலேயே கவிதை எழுதி அசத்திவிட்டீர்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.