Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தெழுதல்

-------------------------
நாங்கள் அறியாமலேயே ஒவ்வொரு திங்கள் காலையும் உயிர்த்தெழுதல் நடந்து கொண்டேயிருக்கின்றது. பல விடயங்கள் சனி, ஞாயிறுகளில் சுத்தமாக மறந்து போய், திங்கள் பொழுது புலரப்புலர லௌகீக வாழ்விற்கான கடமைகள் மீண்டும் மெதுமெதுவாக நினைவுக்குள் வருகின்றன. மழை முடிந்த பின் இலைகளிலிருந்து சொட்டும் துளிகள் போல மனதிற்குள் துளித்துளியாக வார நாட்களுக்கான உலகம் விழுந்து பரவுகின்றது.
 
திங்கள் அதிகாலையிலேயே அதிக மாரடைப்புகள் ஏற்படுகின்றன என்ற புள்ளிவிபரம் ஒன்றும் உள்ளது.   . 
 
அவர் உயிர்த்து மேலே போனார் என்கின்றனர். இன்னொரு மகரிஷி மீண்டும் உயிர்த்து வந்தார் என்றும் சொல்கின்றனர். எண்ணூறு கோடி மக்களும் ஒரு வாழ்க்கையை முடித்து இன்னொரு வாழ்க்கைக்குள் வாரா வாரம் போய் வந்து கொண்டிருப்பதை கொண்டாடுவோர் எவருமில்லை.
 
'கற்பில் சிறந்தவர் யார்?'
 
'கண்ணகி.'
 
'அப்புறம்?'
 
'சீதாப்பிராட்டி.'
 
'அப்புறம்?'
 
' '
 
பொதுவாக எல்லோரும் முழித்து நிற்கும் தருணம் இது. தாய், மனைவி, மகள்கள், சகோதரிகள், நண்பிகளின் பெயர்கள் சட்டென்று பதிலாக வருவதில்லை. கொற்றவை தெய்வத்தின் பெயரைச் சொல்ல முன், பெற்ற அன்னையின் பெயரைச் சொல்வோரும் இல்லை. எவரிலும் சந்தேகம் என்று இல்லை, அருகிலேயே இருப்போரின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை, அவ்வளவுதான். இப்படித்தான் நாங்கள் திங்கள்களில் உயிர்த்தெழுவதும் கண்டும் காணாமல் விடப்படுகின்றது.
 
உயிர்த்தெழுதலின் குறியீடு முயல் என்று போன ஞாயிறு தான் தெரிந்தது. ஆமையிடம் தோற்ற முயல், சிங்கத்தை கிணற்றுக்குள் தள்ளி விட்ட முயல், பிளேபாய் புத்தகத்தில் இருக்கும் முயல் என்று முயலின் வரலாறும் தொடர்பும் நெடியது. மேல் வட கோளத்து தெய்வங்களின் கைகளில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முயல் இருந்து வந்துள்ளது. மத்திய கோட்டைச் சுற்றி இருந்தவர்களுக்கு, எங்களுக்கு தான், முயலின் அருமை பெருமைகள் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. எப்பொழுது பார்த்தாலும் சிங்கமும் புலியும் தான் எங்கள் தெய்வங்களின் மிருகங்கள்.
 
உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே.
 
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ வருகின்றது. இலங்கை பொதுஜன பெரமுன, ராஜபக்சாக்களின் கட்சி, அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரமளவில் தேர்ந்தெடுக்க இருக்கின்றார்கள். பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் இலங்கைக்கு ஜனாதிபதியாக மிகவும் பொருத்தமானவர் என்று இந்தக் கட்சியினர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
 
யார் யார் உயிர்த்தெழுந்து மீண்டும் வந்தாலும், இவர்கள் இருக்கும் வரை போன இலங்கை போனதுதான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நாங்கள் அறியாமலேயே ஒவ்வொரு திங்கள் காலையும் உயிர்த்தெழுதல் நடந்து கொண்டேயிருக்கின்றது.

அப்ப வெள்ளிக்கிழமை பற்றி எழுதவே இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே......!

 

உங்களின் இந்தப் பதிவில் இதுதான் உச்சம்....... சரி .....ஒரு சந்தேகம்..... ....சசிகலா அம்மையார்  சமாதியில்  சடார் சடார் என்று சாத்தினதும் இந்த நம்பிக்கையில்தானே ..........!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே......!

 

உங்களின் இந்தப் பதிவில் இதுதான் உச்சம்....... சரி .....ஒரு சந்தேகம்..... ....சசிகலா அம்மையார்  சமாதியில்  சடார் சடார் என்று சாத்தினதும் இந்த நம்பிக்கையில்தானே ..........!  😁

🤣......

அதுவே தான். சசிகலா சில நாட்கள் ஜெயலலிதா போன்ற ஒப்பனையுடனும் உலா வந்தார்.......🫣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.