Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
(குறுங்கதை)
 
குரு தட்சணை
-----------------------
அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார்.
 
சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூலி. ஒரு ஏழு வயதுப் பையனிடம் ஏது காசு? ஆனாலும் ஏதோ ஒரு வழியில் அவன் அந்தக் காசை அடிக்கடி சேர்த்து விடுவான். இங்கு வேறு எவரும் அவனின் அம்மாச்சிக்கு சுருட்டோ அல்லது பணிஸோ வாங்கிக் கொடுப்பது இல்லை. அம்மாச்சியின் கதைகளை வேறு எவரும் கேட்பதும் இல்லை. ஆனால் சுடு சோறும், சிவப்பு மீன் குழம்புக்கும் அடுத்த படியாக அம்மாச்சி சொல்லும் கதைகளே அவனுக்கு இந்த உலகத்தின் உன்னதங்களாக இருந்தன. அவனின் அம்மாவும், அம்மாச்சியும் அவ்வளவாக கதைப்பது இல்லை.
 
வெளியில் கொட்டும் மழையின் நடுவில், அம்மாச்சியின் அனுமார் இலங்கையை எரித்துக் கொண்டிருந்தார். அசோகவனம் தவிர்ந்து இலங்காபுரி முழுவதும் அனுமாரின் வால் நீண்டு, அது நீண்டு தொடும் இடம் எல்லாம் பற்றி எரிந்தது. இலங்காபுரியில் பச்சை வாழைகள் எங்களூர் சிவன் கோவிலில் வருடம் ஒரு தடவை எரிக்கப்படும் சொக்கப்பனை போல் கொழுந்து விட்டு எரிந்தன. பெரும் தீயிலிருந்து பறக்கும் சாம்பல்கள் வானத்தை மூடியது, கடல் நிறம் மாறியது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டே போனார். அவன் பயத்தில் அம்மாச்சியுடன் ஒட்டி, மெதுவாக அவரின் சேலைத் தொங்கலுக்குள் போய்க் கொண்டிருந்தான்.
 
அம்மாச்சிக்கு ஆயிரம் கதைகள் தெரியும். சில கதைகளை உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சொல்வார். பருத்தித்துறை சந்தையில் தான் வியாபாரம் செய்ததாக அம்மாச்சி சொல்லியிருக்கின்றார். பல நாட்களில் அவரின் வியாபாரம் முடிய இருட்டி விடும். சிலர் ஒன்றாகச் சேர்ந்து பருத்தித்துறையிலிருந்து எங்களூரிற்கு அந்த இருட்டில் நடந்தே வருவார்களாம். வழியில் சில சுடலைகளை தாண்டியே அவர்கள் வரவேண்டும். ஒரு தடவை, முழு அமாவாசை, அம்மாச்சியும் மற்றவர்களும் நடந்து ஊர் எல்லை வரை வந்து விட்டனர். அம்மாச்சி எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று, 'சுந்தரி, சுருட்டுக்கு நெருப்பு இருக்குதா?' என்று அவரின் பின்னால் இருந்து ஒரு குரல். அம்மாச்சி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே ஒரு உருவம். அதன் ஒரு கை நீண்டிருக்கின்றது. நீண்டிருக்கும் கை முழுவதும் நெருப்பு சுவாலைகளாக எரிகின்றது. அதன் முகம் முழுவதும் எரிகின்றது. அம்மாச்சி அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
 
பின்னர் பல ஆங்கிலப் படங்கள், தமிழ்ப் படங்களில் இப்படியான காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். ஆனால், இவர்களுக்கு எத்தனையோ வருடங்களிற்கு முன்னேயே அவனின் அம்மாச்சி இந்தக் காட்சியை, ஒரு அழுக்கு சேலையையே எப்போதும் கட்டிக் கொண்டு, தன்னந்தனி ஆளாக, உருவாக்கி இருந்தார். அம்மாச்சி என்ன படித்தார் என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அம்மாச்சி படிக்கவேயில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் போனதில்லை என்று அவனின் மாமா சொல்லுவார். அம்மாச்சிக்கு பல பிள்ளைகள் பிறந்தாலும், உயிர் தப்பி இருப்பவர்கள் அம்மாவும், அம்மாவின் தம்பியான மாமாவும் மட்டுமே. அம்மாச்சி எதையும் வாசித்தும் அவன் பார்த்ததில்லை. ஆனால், அம்மாச்சி தான் பள்ளிக்கூடம் போனதாகவும், முதலாம் வகுப்பு முடித்ததாகவும் சொல்வார்.
 
அம்மாச்சியின் மகாபாரதத்தில்,  'அம்மா, கனி ஒன்று கொண்டு வந்திருக்கின்றோம்...' என்று பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியிடம் சொல்கின்றனர். 'ஐவரும் அதை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்..' என்று குந்திதேவி உள்ளிருந்து பதிலுரைக்கின்றார். தாயின் சொல்லை மீற முடியாததால், அவ்வாறே பாஞ்சாலி ஐவரினதும் மனைவி ஆகின்றார் என்று அம்மாச்சி தன் காவியத்தில் ஒரு நியாயம் சொன்னார்.
 
பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், கூனன் கதைகள் என்று  அம்மாச்சியின் உலகம் பெரியது. அம்மாச்சி சொன்ன சில கதைகளை பின்னர் அவன் எங்கும் பார்த்ததே இல்லை. அம்மாச்சிக்கு அவரின் அம்மாச்சி சொல்லியிருப்பார் போல. அம்மா ஒரு கதையும் சொல்லவில்லை, அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை.
 
சில காலத்தின் பின், அம்மாச்சி அவனின் மாமா வீட்டிற்கு போய் விட்டார். இனிமேல் மாமாவுடனேயே அம்மாச்சி இருக்கப் போகின்றார் என்று அவனின் அம்மா சொன்னார். மாமா பக்கத்து ஊரில் இருந்தார். மாமா எப்போதாவது அவனின் வீட்டிற்கு வருவார். அவன் மாமாவின் வீட்டிற்கு போவது மிக அரிது. மாமாவிற்கும் பல பிள்ளைகள்.
 
ஒரு வருடம் ஓடினது. அம்மாச்சிக்கு உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. ஒரு நாள் அம்மா அம்மாச்சியை பார்க்க அவனின் மாமா வீட்டிற்கு போனார். ஒருவாறு இவனும் அம்மாவுடன் சேர்ந்து மாமா வீட்டிற்கு போனான். அம்மாச்சி படுத்திருந்தார். கண் மூடி இருந்தது. மெல்லிய அணுங்கல்கள் அம்மாச்சியிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.
 
'அம்மாச்சி, நான் வந்திருக்கின்றேன்' என்றான். அம்மாச்சி கண்ணைத் திறந்து, மெதுவாக எழும்ப முயன்றார். இவன் பின்பக்கமாக கைகளில் மறைத்து வைத்திருந்த சுருட்டையும், பணிஸையும் அம்மாச்சியின் முன் நீட்டினான். அப்படியே எழும்பின அவனின் அம்மாச்சி அதை கையில் வாங்கிக் கொண்டே, இங்கு எவரும் அவரிடம் கதை கேட்பதில்லை என்றார். சுருட்டும், பணிஸும் கூட ஒருவரும் வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொன்னார்.
 
'இரு, நான் உனக்கு ஒரு கதை சொல்கின்றேன்.'
 
'இல்லை அம்மாச்சி, கதை ஒன்றும் வேண்டாம்' என்றான் அவன்.
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........!  😴

நன்றி ரசோதரன்........!   

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

இரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........!  😴

நன்றி ரசோதரன்........!   

🙏...

பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, சில இரவுகளில் அவர்களின் கதைப் புத்தகங்களை அவர்களுக்கு வாசிக்கச் சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் அதுவும் நின்று விட்டது. அப்பிள் நிறுவனம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது......😀

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.