Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"வாழும் வரைப் போராடு"
 
நான் அன்று சாதாரண வகுப்பு ஏழை மாணவி. என் அப்பா அம்மா கூலி வேலை செய்கிறவர்கள். அவர்களின் உழைப்பில் நானும் தம்பியும் எதோ சமாளித்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராம பாடசாலையில் கல்வி கற்றோம். நடந்து தான் பாடசாலை போவது. பாடசாலை நேரத்தின் பின் தனியார் கல்வி, விளையாட்டு அப்படி இப்படி என்றும் ஒன்றும் எமக்கு இல்லை.
 
என் வகுப்பு வாத்தியார் மிக அன்பாக என்னுடன் பழகுவார், நானும் ஒருவேளை என் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அப்படி பழகுகிறார் என்று அந்த அறியாத பருவத்தில் எடுத்துக்கொண்டேன். அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர் இளம் கல்யாணம் ஆகாத ஆசிரியர். இது அவரின் முதல் நியமனம். அவர் பாடசாலைக்கு அருகில் வாடகை வீடு ஒன்றில் சக ஆசிரியர்களுடன் தற்காலிகமாக இருந்தார்.
 
சாதாரண வகுப்பு பரீடசை நெருங்கிவரும் நேரம் அது. நான் அவரிடம் சில விளங்காத பாடங்களை கேட்க தொடங்கினேன். அவரும் அதற்கு இணங்கினாலும் பாடசாலை நேரம் கஷடம் என்றும் பாடசாலையின் பின் வீட்டில் வந்து படிப்பிப்பதாக கூறினார். என் பெற்றோரும் சம்மதிக்க அவரும் வரத் தொடங்கினார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு போவதால், அதிகமாக நானும் தம்பியும் மட்டுமே அவ்வேளை வீட்டில் இருப்போம். வீடு ஒரு குடிசை என்பதால், பாடம் படிப்பிக்கும் பொழுது தம்பியும் வெளியே விளையாட போய்விடுவார், எம் குடிசையில் வசதி குறைவு என்பதால், மிக அருகில் தான் படிப்பிக்கும் பொழுது இருப்போம். கை கால்கள் மெல்ல தொட தொடங்கி, அது வயது வித்தியாசமும் பார்க்காமல், அவரின் உறுதியையும் நம்பி, அவரின் விருப்பத்துக்கு இணங்கி மிக நெருக்கமாக நானும் பழகினேன். இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி, இதுவரை நான் படிக்காத பாடம் எல்லாம் படிப்பித்தார்.
 
"இலக்கியம் சொல்லா ஆண்மை அழகில்
இதயம் பறிகொடுத்து உறுதி வாங்கி
இளமையும் வனப்பும் பொங்கும் உடலை
இரண்டு கையாளும் தானம் செய்தேன்!"
 
"இருசொல் இணைதல் புணர்ச்சி என்று
இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி
இங்கிதமாய் படிப்பித்து அருகில் வந்து
இதலை வருடி இடையை பற்றினான்!"
 
"இமைகள் மூடி இலக்கிய நாயகியாக
இசைந்து அவனுக்கு தலை ஆட்ட
இன்று படிப்பித்தது காணும் என்று
இதமாக கூறி என்னை இழுத்தான்!"
 
"இச்சை எம்மை மயக்கி வாட்ட
இறுக்கி தழுவி கட்டி அணைத்து
இதழ்கள் பதித்து எதோ உளறி
இரண்டு ஒன்றாய் இன்பம் சுவைத்தது!"
 
அவரும் மாற்றம் பெற்று எனக்கு உறுதி வழங்கி போக, என் வயிறும் ஊத தொடங்கியது. அன்று இருந்த போர் சூழலில் அவரின் தொடர்பும் அற்று போக, நானும் ஒரு மகனுக்கு தாயானேன். அவரை விசாரிக்க சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை, என்ன நடந்தது என்று இது வரை தெரியாது? தம்பியும் குண்டு பட்டு இறந்து விட்டார்.
 
தனிமை வரத்தான் எனக்கும் துணிவு வந்தது. எப்படியும் அவரை கண்டு பிடிக்கவேண்டும். ஊரறிய இவள் என் மனைவி, இவன் என் மகன் என கூற வைக்கவேண்டும். அது தான் என் நோக்கம், அதற்கு என்ன விலையும் கொடுக்க நான் தயாரானேன். என் அழகும் அதற்கு உதவியது.
அவர் திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டதாக அறிந்து நானும் தரகர் மூலம் மகனுடன் வெளிநாடு போனேன். துரதிர்ஷ்டவசமாக அவர் வாழும் நாட்டிற்கு பக்கத்து நாட்டிலேயே அடைக்கலம் கிடைத்தது.
 
அவர் வாழும் நாட்டில் சில நண்பர்களை பெற்று, அவரின் விபரம் அறிந்தேன். எப்படி என்று கேட்க வேண்டாம். ஆனால், C N அண்ணாதுரை ஒரு முறை "நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை, அவள் கற்பில் சிறந்த கண்ணகியும் இல்லை" என்று சொன்ன வாக்கியத்தை நினைவூட்டுகிறேன்!
 
அவருடன் இன்று. கதைத்தேன். தான் யுத்த சூழ்நிலையால், சந்திக்க முடியாமல் போனதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து வெளிநாடு வந்ததாகவும் கூறியதுடன், தான் என்னையும் மகனையும் ஏற்பதாக உறுதி கூறினார். தன் பிழைக்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் இது இன்னும் ஒரு நாடகமா எனக்கு தெரியாது. ஆனால் கட்டாயம் நான் இனி ஏமாற மாட்டேன். என் போராட்டம் தொடரும் !
 
'ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை' என்று யாரோ சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது !!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.