Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
 
மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது.
 
ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ?
 
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம்.
 
"தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை"
 
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது.
 
ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.
 
அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?
 
ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்?
 
நான் என்ன நினைக்கிறேன் என்றால் ....
 
துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ?
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. 
 
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது.

இந்தக் கேள்விகள் என் மனதிலும் வருவதுண்டு. நீங்கள் எழுத்திலே கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி அண்ணை.

29 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அற்புதமான சிந்தனை வெளிப்பாடு. என் மனதிற்கு ஆறுதலான எழுத்தாக உணர்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

அன்புடன் வரவேற்கிறேன் 
  

 

  • கருத்துக்கள உறவுகள்

மனுதர்ம சாஸ்திரத்தை மொழிப்பெயர்த்த பாரதியின் சிஷ்யன் - ஏன்? - ரவி சுப்பிரமணியம்

https://www.facebook.com/FullyNewsy/videos/மனுதர்ம-சாஸ்திரத்தை-மொழிப்பெயர்த்த-பாரதியின்-சிஷ்யன்-ஏன்/1475185023400388/?mibextid=xfxF2i&rdid=V2LVdpydMFzzNfzB

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி 

உங்க கருத்துக்களுக்கும் 
அதனால் எனக்குத் தரும் ஊக்கத்துக்கும் 

நான் ஓய்வின் பின் ஒரு பொழுதுபோக்காக 
என் மனதில் படுபவையை கட்டுரையாக
எழுதத் தொடங்கினேன் 

பின் ஒரு காலம் கவிதைக்குள் அடிவைத்தேன் 
இப்ப இரண்டு ஆண்டுகளாக சிறுகதை யிலும் 
ஒரு முயற்சி 

உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி    

  • கருத்துக்கள உறவுகள்

வாஸ்தவத்தில் நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கின்றது.......!   😁

பலப்பல தத்துவ ஞானங்கள் உங்களிடம் கைவசம் இருக்குது போல......அவைகளை இங்கே இறக்கி வைக்கலாம் ........தொடருங்கள் தில்லை ........!  

Edited by suvy
எ .பிழை திருத்தம்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.