Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தத்துப் பிள்ளை"

இலங்கையின் கிழக்கே; வடதிசையில் வெருகலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தினையும் மற்றும் மேற்கே பொலன்னறுவை மாவட்டத்தினையும் எல்லைகளாகக் கொண்டமைந்த, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பூர்வீகம் கொண்ட, கிழக்கிலங்கையின் நடு நாயகமாகத் திகழ்கின்ற மீன்பாடும் தேனாடு என வர்ணிககப்படும் மாவட்டம் தான் மட்டக்களப்பாகும். 


"பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங்
கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து
கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும்
நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்"


என அனைத்தும் பெருக்கெடுக்கும் மீன்பாடும் தேனாடு பற்றி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பெருமையுடன் பாடிய, அமைதியான கடற்கரை நகரமான மட்டக்களப்பில், பனை, தென்னை மரங்களின் மெல்லிய சலசலப்புக்கும், கடல் அலைகளின் அமைதியான அமைதிக்கும் மத்தியில், ராஜன் மற்றும் கலா என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நிஷா, பிரியா, ராணி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். இலங்கையின் பாரம்பரிய அலங்காரத்தின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் காலாவின் காரமான கறிகளின் நறுமணத்துடன் அவர்களது வீடு காட்சி அளித்தது.


ராஜனும் கலாவும் எப்போதும் தங்கள் குடும்பப் பாரம்பரியத்தைத் தொடர ஒரு மகன் வேண்டும் என்று என்றும் விரும்பினர். ஒரு நாள் மாலை, வேலையால் வீடு திரும்பிய ராஜன், தனது கை.கால்களை அலம்பிவிட்டு வந்து ஹாலில் சோபாவில் அமர, கலா அடுக்களையில் இருந்து காபி டம்ளருடன் வந்து கணவனுக்கு காப்பியை கொடுத்து விட்டுத் தானும் ஒரு காபி டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.


இருவரும் காபி குடித்தனர். “கலா அடுக்களையில் போய் கொஞ்சம் சீனி எடுத்துட்டு வாயேன்". என்ற ராஜன், மறுகணமே "வேணாம் வேணாம் என்னோட ஆவணப் பையை [briefcase] எடுத்துக் கொண்டு வா" என்றான்.


கலா எழுந்து சென்று அலுவலக பையை கொண்டு வந்து ராஜனிடம் கொடுக்க, ராஜன் அதை திறந்து அதில் இருந்த பால் ரொபியையும்  கேசரியையும் மற்றும் சிவத்த ரோசாப் பூவையும் வெளியே எடுத்து ரோசாப் பூவை கலாவின் முடியில் சூடிவிட்டு, கேசரியை தன் கையால் எடுத்து கலாவின் வாயில் கொஞ்சம் ஊட்டினான்.


கலா, “ம்.. ம்…ம்..” என்று சொல்லிவிட்டு அவளும் ஒரு துண்டு கேசரியை தன் கையால் கணவரின் வாயில் கொஞ்சம் ஊட்டினாள்.

ராஜன் “போதும் போதும்” என்றான்.


இருவரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.ராஜன் கலா இருவருக்கும் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் காப்பியை குடித்து விட்டு கலாவின் கையை பிடித்து இழுத்து தன் அருகே உட்கார வைத்தான்.


“சரி உன் மனசு வருத்தப்படுவது எனக்கு தெரியுது. இதுல நம்ம கையில என்ன இருக்கு. எதையும் நினைத்து மனசு வருத்தப்படாத."


"நமக்கும் ஒரு ஆண் குழந்தை கண்டிப்பாக பிறக்கும். நம்பிக்கை வை."  என்று சொல்லி விட்டு, எனினும் "எமக்கும் வயது ஏறிக் கொண்டு போகிறது, காலம் கடத்தாமல், ஒரு தத்துப் பிள்ளை எடுத்தால் என்ன?" என்று கேட்டான். அவளும் சம்மதிக்க, அர்ஜுன் என்ற சிறுவனை தத்தெடுக்க முடிவு செய்தனர். அர்ஜுன் அவர்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த தருணத்திலிருந்து, அவனை இரு கரங்களுடன் மகிழ்வாக வரவேற்றனர். அவனது சிரிப்பு, மூத்த மூன்று   சகோதரிகளின் மகிழ்ச்சியான உரையாடலுடன் தடையின்றி கலந்தது.


"என இவர் தமக்கு மைந்தற் பேறு இன்றி இரங்கும் நாளில் 
தனபதி மருமகன் தன்னைத் தகவுசால் மகவாக்கொண்டு 
மன மகிழ் சிறப்பால் நல்க மனைவியும் தொழுது வாங்கிப் 
புனைவன புனைந்து போற்றிப் பொலிவு உற வளர்த்துக் கொண்டாள்"


மனைவியுனதும், மூன்று மகள்மாரின் மகிழ்வையும்   புன்னகையையும் பார்க்கும் பொழுது ராஜனுக்கு திருவிளையாடற் புராணம் / மாமனாக வந்து வழக்கு உரைத்த படலத்தின் இந்த பாட்டுத்  தான் ஞாபகம் வந்தது. ஏன், இயேசு, தச்சனாகிய யோசேப்புக்கு பிறந்த மகனல்ல, என்றாலும் அவரை தனது சொந்த மகனாக யோசேப்பு ஏற்றுக்கொண்டான். (மத்தேயு 1:24, 25). அதே போலத்தான் ராஜனும் கலாவும் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்பமாக நகர்த்தினார்கள்.       


எனினும் , ராஜன் மற்றும் கலாவுக்கும் இன்னும் உயிரியல் மகன் ஆசை இருந்து கொண்டு தான் இருந்தது. இறுதியாக, கலாவுக்கு சஞ்சய் என்ற ஆண் குழந்தை பிறந்ததும் அவர்களின் பிரார்த்தனைகள் பலித்தன. மகிழ்ச்சியில் மூழ்கிய அவர்கள், சஞ்சய் மீது பாசத்தையும் கவனத்தையும் அதிகளவு பொழிந்தனர், அதனால் அர்ஜுனை மெல்ல மெல்ல தெரிந்தும் தெரியாமலும் தற்செயலாக ஓரங்கட்டினார்கள்.


ஒரு நாள் மாலை, சாப்பாட்டு மேசையைச் சுற்றி குடும்பத்துடன் கூடியிருந்தபோது, அர்ஜுன் தயங்கித் தயங்கிப் பேசினான், "அம்மா, அப்பா, நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சஞ்சய்யுடன் ஒப்பிடும் போது நான் கண்ணுக்கு தெரியாதவன் போல் இருக்கிறது." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகவே கூறினான். 


ராஜனும் கலாவும் தங்கள் செயல்களில் தற்செயலாகப் புறக்கணிக்கப்பட்டதை உணர்ந்து கவலைப் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், அவர்களின் மனதில் தங்கள் உயிரியல் மகன் மேல் இருக்கும் கூடுதலான பாசத்தையோ, அக்கறையையோ மறைக்க முடியவில்லை. கண்ணீருடன் கலா அர்ஜுனை இறுகத் தழுவிக் கொண்டாலும், அது ஒரு சம்பிரதாயம் என்பதை இலகுவாக யாரும் கண்டு பிடிக்கலாம். "ஓ, மை டியர் அர்ஜுன், நாங்கள் உன்னை அப்படி உணரவைத்திருந்தால் நான் மிகவும் வருந்துகிறேன். சஞ்சய்யைப் போலவே நீயும் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவன்." என்ற அவளின் வார்த்தையின் உண்மைத்தன்மை கேள்விக் குறியாகவே இருந்தது. 


பரிகாரம் செய்வதில் உறுதியாக இருந்த ராஜனும் கலாவும் அர்ஜுனை குடும்பச் செயல்பாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் சேர்த்துக் கொள்ள முற்பட்டாலும், அங்கு வேற்றுமைகள் இல்லாமல் இருக்கவில்லை. இதனால்,  அர்ஜுனின் இதயம் அவர்களின் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவதில் கனமாகவே இருந்தது.


எனவே, அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறும் கடினமான முடிவை எடுத்தான். அவன் தனது வளர்ப்பு பெற்றோரிடமும் மூத்த சகோதரிகளிடமும் கண்ணீருடன் விடைபெறும் போது, அவன் தனக்குள் கிசுகிசுத்தான், "நான் உங்களை ஒரு நாள் பெருமைப்படுத்துவேன், நான் சத்தியம் செய்கிறேன்."


தன் இதயத்தில் உறுதியுடன், அர்ஜுன் தன்னை, தன் படிப்பை தொடருவதற்காக அங்கும் இங்கும் கிடைக்கும் வேலைகளை எடுத்துக்கொண்டு, பல இடர்களுக்கூடாக தனிமையில் வேறு ஒரு தொலை தூர நகரத்தில் வாழ்வைத் தொடர்ந்தான். எதிர்கொண்ட கஷ்டங்கள் எதுவாகினும் எல்லாவற்றையும் சமாளித்து, கல்வி மற்றும் சிறந்து விளங்குவதில் அவன் உறுதியாக இருந்தான்.


பல வருடங்களின் பின்னர், அர்ஜுன் ஒரு புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணராக முன்னேறினான். அவனுடைய பெயர் இலங்கை  முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கில் போற்றப்பட்டது. அவனது பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் ஒவ்வொரு வெற்றியிலும், அவன் தனது தாழ்மையான தொடக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அவனுக்குள் சுமந்து சென்றான்!, அதை என்றும் அவன் மறக்கவில்லை. 


இதற்கிடையில், ராஜனும் கலாவும் எதிர்பாராத சோதனைகளை எதிர்கொண்டனர். சஞ்சய், ஒரு ஊதாரி மகனாக, பெற்றோர், சகோதரிகளை கவனிக்காதது மட்டும் இன்றி, அவர்களுக்கு தொல்லையும் கொடுத்தான். அவனுக்கு கடன்கள் கொடுத்தவர்கள் இப்ப ராஜன் கலாவிற்கும் பல பிரச்சனை கொடுக்க தொடங்கினார்கள். ஆனால், சஞ்சய் எந்த கவலையும் இன்றி, வேலைக்கும் ஒழுங்காக போகாமல் இருந்தான்.  


"ஒரு தந்தை ஒரு தாய் இரு மகன் 
ஒன்று தத்து மகன் மற்றது உயிரியல் மகன்  
தத்துப் பிள்ளை அவர்களிலே மணியான முத்து
உயிரியல் பையன் ஊதாரி தேறாத நெத்து"


மேலும் காலம் செல்ல செல்ல, சஞ்சய் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாக தான் நினைத்த இடங்கள் எல்லாம் சுற்றித் திரிந்தான். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார். ஆனால் அவனோ வெளி மாகாணம்  சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். 


ஒரு நாள், ராஜனும் கலாவும் தங்கள் வீட்டில் அமைதியான தனிமையில் கவலையுடன் அமர்ந்திருந்த போது, கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர்களுக்கு ஆச்சரியமாக, அர்ஜுன் அவர்கள் முன் நின்று கொண்டிருந்தான், அவனுடைய  கண்கள் இரக்கத்தாலும் மன்னிப்பாலும் நிறைந்திருந்தது.


"அம்மா, அப்பா, நான் உங்களை  மிஸ் பண்ணிட்டேன்" என்று அர்ஜுன் மெதுவாக கூற, அவன் குரல் உணர்ச்சியில் நடுங்கியது.


ராஜன் மற்றும் கலா அர்ஜுனை ஒரு அன்பான அரவணைப்பில் சூழ்ந்தனர், மகிழ்ச்சியின் கண்ணீர் அவர்களின் கன்னங்களில் வழிந்தோடியது. “உன்னையும் மிஸ் பண்ணிட்டோம் கண்ணு, இப்ப அதை நாம் உண்மையில் உணர்கிறோம்” என்று ராஜன் குரலில் உணர்ச்சிகள் ஸ்தம்பித்தன. "எங்களை நீ தான் மன்னிக்க வேண்டும். உயிரியல் மகன், உயரிய மகன் என்று நாம் அவனுக்கு கூட செல்லம் அன்பு கொடுத்து கெடுத்துவிட்டோம். அவனின் மேல் ஏற்பட்ட அதீத பாசத்தால், உன்னைக் கூட கொஞ்சம் புறக்கணித்துவிட்டோம்" என்கிறார்.    


அர்ஜுன் தனது தன்னலமற்ற கருணை மற்றும் தாராள மனப்பான்மையின் மூலம் அவர்களின் குடும்பத்தைப் பிரிந்த இடைவெளியைக் இயன்றவரை விரைவாக குறைத்தான். கடந்த காலத்தின் காயம் இருந்த போதிலும், அவன் சஞ்சய்க்கு அன்பையும் ஆதரவையும், புத்திமதியையும், அதே நேரம் தன் மருத்துவ நிலையத்தில் ஒரு வேலையையும் வழங்கினான். அத்துடன் அவனின் எல்லா கடன்களையும் தானே பொறுப்பேற்று அதைத்  தீர்த்து வைத்தான்.


மெதுவாக ஆனால் நிச்சயமாக, சஞ்சயின் இதயம் மென்மையாக்கப் பட்டது, மேலும் அவன் தனது குடும்பத்தின் அன்பான அரவணைப்பிற்கு திரும்பினான். மீண்டும் ஒருமுறை ஐக்கியப்பட்டு, ராஜன் மற்றும் கலா குடும்பத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்தனர், ஒவ்வொரு தருணத்தையும் நன்றியுடனும் அன்புடனும் ஒன்றாகப் போற்றினர். அவர்களது வீட்டில் நிறைந்திருந்த சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அவர்களை ஒன்றாக இணைத்த பிரிக்க முடியாத பிணைப்புகளில் அவர்கள் ஆறுதல் கண்டனர்.


நன்றி 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.