Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?

Physicist Peter Higgs Passes Away: 'கடவுளின் துகள்' என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். 

  • அவருக்கு வயது 94
  • இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 
  • இவர் 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கினார்.

 

spacer.png

Physicist  Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய துகளின் (Mass-giving Particle) கண்டுபிடிப்புக்காக இவர் உலகப் புகழ் பெற்றவர். அதாவது, பிரபஞ்ச உருவாக்கத்தில் இந்த துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகள் என்று அழைக்கின்றனர். 

இதனை கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்தின் இயற்பியலாளரும், எடின்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான பீட்டர் ஹிக்ஸ் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து வென்றார். கடவுளின் துகள் குறித்து 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்துள்ளார் என்பத இங்கு குறிப்பிடத்தக்கது. 

1964ஆம் ஆண்டின் கோட்பாடு

இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகளுக்கு அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்டு சோதனையில் உறுதியானது. கோட்பாடு பரிசோதனை ரீதியாக உறுதியான பின்னரே இவர் 1964ஆம் ஆண்டு நிறுவிய கோட்பாட்டிற்காக நோபல் பரிசை வென்றார். இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பின் மூலம் பீட்டர் ஹிக்ஸ் உலக புகழ்பெற்றார். அந்த துகளுக்கு அவரின் பெயரை சேர்த்து 'ஹிக்ஸ் போஸான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் முன்வைக்கப்பட்ட சூழலில் பீட்டர் ஹிக்ஸின் இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியதாக அறிவியலாளர்கள் கூறுவார்கள். மனித வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்தவர் என பீட்டர்  ஹிக்ஸை கூறலாம். இவரின் கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பெரிய திறப்பு ஏற்படலாம். 

மிக முக்கியமானவர்...

அதாவது, பிரபஞ்சத்தின் நிறை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குவதற்கு பீட்டர் ஹிக்ஸின் கோட்பாடு பயன்படும். இதனால் இயற்பியலில் மிகப்பெரிய புதிர்களில் ஒன்றைத் தீர்க்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் மேக்ஸ் பிளாங்க் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளின் வரிசையில் பீட்டர் ஹிக்ஸ் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடல்நலக்குறைவால் காலமானார்

இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று உயிரிழந்தார் என அவர் பணியாற்றிய எடின்பர்க் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் வயது 94. இதுகுறித்து எடின்பெர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் உடல்நலக்குறைவால் கடந்த திங்கட்கிழமை (ஏப். 😎 அன்று உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழகம் இரங்கல்

மேலும், அந்த அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். இளம் தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஓர் ஊக்குமளிப்பவராகவும் திகழ்ந்தார்" என புகழப்பட்டுள்ளது. மேலும் இந்த துக்கமான நேரத்தில் அவரின் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஊடகங்களுக்கு பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பீட்டர் ஹிக்ஸ் எடின்பர்க் பல்கலைக்கழக்கத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவர் ஆவார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பீட்டர் மேதிசன் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு தனித்துவமான மனிதர். அவர் ஒரு திறமையான விஞ்ஞானி, அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் கற்பனை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நம் அறிவையே வளப்படுத்தியுள்ளது. அவரது முன்னோடியான பணி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியுள்ளது எனலாம். மேலும் அவரது பணி இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் எனலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

https://zeenews.india.com/tamil/world/noble-prize-winning-physicist-peter-higgs-passes-away-gods-particle-higgs-boson-why-is-he-most-important-in-human-history-498382

 

  • கருத்துக்கள உறவுகள்

பீட்டர் ஹிக்ஸூக்கு இரங்கல்கள்.

ஹிக்ஸ் போசான் என்பது துகள் அல்ல  அலை - புலக் கூறு..  எங்கிறார்கள் விஞ்ஞானிகள்.. ஏனெனில்.. இதற்கு இருப்பது புறக்கணிக்கத்தக்க திணிவு. மேலும் ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. மிகக் குறுகிய காலமே அவதானிக்கப்பட்டுள்ளன... அவை உருவாகிய மாத்திரத்திலேயே..  தாமாகவே பிரிந்து வேறு கூறுகளாகி விடுகின்றனவாம். அதனால்.. ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்..  திணிவாகத்திற்கான.. கடவுளின் கூறு என்பதற்கான வாதம் பொய்த்துப் போய்விட்டது. ஆனால் ஹிக்ஸ் அலை-புலக்கூறுகள்.. வேறு போசான்கள்.. மற்றும் லப்ரன்களுடன் இடைதாக்கம் செய்து.. திணிவை உருவாக்கு உதவுவாதகச் சொல்லப்படுகிறது. 

இப்போ.. பேய்க் கூறுகளை (ghost particles)  தேட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஏனெனில்.. ஹிக்ஸ் உருவாகி பிரிந்து வேறு ஏதோ கூறுகளாகிச் செல்கிறது. அதென்ன கூறுகள் என்பது அடுத்த வினா..???!

நாம் உருவாக்கியுள்ள சென்சர்களால் கண்டறியப்படக் கூடிய கூறுகள் அல்லாதவையாகக் கூட இருக்காலம். எதுஎப்படியோ.. ஹிக்ஸ் 1960களில்.. தன் சிந்தனையில் கண்டதை.. சுவிஸ் ஜெனிவா.. சேர்ன் ஆய்வுகூடம் நிஜயத்தில் அவதானித்ததாகச் சொல்லப்படுகிறது. 

In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons.

In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles. The Higgs boson is a wave in that field. Its discovery confirms the existence of the Higgs field.

https://home.cern/science/physics/higgs-boson

 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய இரு  திருமந்திரப் பாடல்


"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே"


இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்" நாட்டு வைத்தியர் தனது உதவியாளருக்கு “அணு அளவு பாதரசம்” சேர் என் கட்டளை இடுவார். இதன் கருத்து மிக மிக சிறிய பகுதி என்பது. [நுண்மை, பொடி, சிறு துகள்கள், இம்மி, ஆன்மா எனவும் பொருள் படும்]


"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றாமே"


இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை (மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, அந்த ஆயிரத்தில் ஒன்றினை நூறாயிரம் கூறுபோடச் சொல்லுகிறார்.  
சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

NB: The term micron and the symbol µ, representing the micrometre, A micrometre (or micrometer) is 1×10−6 of a metre (SI Standard prefix "micro" = 10−6) or one-thousandth of a millimetre, 0.001 mm, or about 0.000039 inches


இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நூறாயிரத்தால்  வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/100000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர் (MM).


இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா?... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருப்பது . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் "Higgs boson" சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு (பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் "God particle" "கடவுள் துகள்" அல்லது "கடவுள் அலை" என்னும் போசோன் கண்டுபிடிப்பு. [In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons. In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles.] அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை. ஒரு காலத்தில் "கடவுள் துகள்" இன் அளவு அறியும் போது அதுதான் திருமூலர் குறிப்பிட்ட சிவனுடைய வடிவமோ என அறிய நேரிடும்?  [ஹிக்ஸ் போஸான் என்பது, விண்வெளியில் இருக்கும் அடிப்படைத் துகள்களில் ஒன்று. விண்வெளியெங்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடர்த்தியாகப் பரவியிருக்கின்றன. அப்படி அவை பரவியிருப்பதை ‘ஹிக்ஸ் வெளி’ (ஹிக்ஸ் ஃபீல்டு) என்கிறார்கள். மிகமிகச் சிறியதான அடிப்படைத் துகள்கள், இந்த ஹிக்ஸ் வெளியினூடாக நகர்ந்து செல்லும்போது, அந்தத் துகள்களின் தன்மையைப் பொறுத்து, அவற்றுடன் ஹிக்ஸ் போஸான்கள் சேர்ந்துகொள்கின்றன. அப்படி அவை சேர்வதால், அந்தப் பொருளுக்கு எடை கிடைக்கிறது.]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Particle Physics இன் அடிப்படையை புரியவேண்டுமென்றால் இந்தக் காணொளியை சில தடவை திரும்பத் திரும்பப் பாருங்கள். ஓரளவு புரிந்தாலே போதும்.

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.