Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
'என் தங்கை'
 
 
நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள்.
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, ...... "
[அகநானூறு 12]
 
எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இளைய மகளே!, நின் சிறிய அடி சிவப்புற என் செயச் செல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது. ஆனால் இப்ப வீட்டில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்து விட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. அப்படித்தான் என் பெற்றோர்களும் இருந்தார்கள்.
 
மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக் கூடியதாக உள்ளது. அது என் பெற்றோருக்கும் பொருந்தும். கர்ப்பம் தரித்து 12 கிழமைக்கு பின் , கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்று இன்றைய நவீன பரிசோதனை மூலம் அறியலாம். எனவே என் அம்மா அந்த பரிசோதனைக்காக அப்பாவுடன் வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியரின் அறைக்கு சென்றார். என்னை அங்கு உள்ளுக்குள் போக விடவில்லை. நான் வெளியே அம்மம்மாவுடன் வாங்கில் அமர்ந்து இருந்தேன்.
 
கொஞ்ச நேரத்தின் பின் செவிலியர் ஒருவர் என் கையை பிடித்து, அம்மம்மாவுடன் அம்மா இருந்த அறைக்குள் கூட்டி சென்றனர்.
'வாழ்த்துக்கள்! இப்ப நீங்கள் இருவரும் ஒரு அழகான பெண் பிள்ளையின் பெற்றோர்கள்' என வாழ்த்துவது என் காதில் கேட்டது. என்னை கண்ட அந்த வைத்தியர், உனக்கு ஒரு தங்க தங்கச்சி வரப்போகிறார் என மகிழ்வாக கூறினார். நானும் உண்மையில் மகிழ்ச்சியாக சிரித்தேன். அப்பொழுது தான் என் பெற்றோரை பார்த்தேன். அவர்கள் இருவரின் முகத்திலும் எந்த மகிழ்வையும் சிரிப்பையும் காண முடியவில்லை.
 
தமிழர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய / நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள் என்கிறது வரலாறு. உலகளவில், எல்லா சமுதாயத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு ஓரளவு முன்னுரிமை காணப்படுகிறது, என்றாலும் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இந்த முன்னுரிமை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற பகுதிகளில் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முதலில் இருந்தே பெண் சிசுக்கொலை நடைபெற்று வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகிறது. மேலும் இதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், முக்கிய காரணம், பெண்பிள்ளைக்கு சீதனம் கொடுப்பது என வாதிடப்படுகிறது. இதற்கு முதல் காரணம் குடும்ப பெயரை காவிக்கொண்டு முன் செல்பவர்கள் ஆணாக இருப்பதும் ஒரு காரணம். அதே போல திருமண சந்தையில் இன்னும் ஆணுக்கு கூடிய வாய்ப்பு இருப்பதும் மற்றும் ஆண்கள் பொதுவாக எல்லா விதமான வேலைகளுக்கும் வேலை நேரங்களுக்கும் இலகுவாக சரி செய்யக்கூடியதாக இருப்பதும், ஆகவே வருமானத்தை பொறுத்த வரையில் முன்னணியில் இன்னும் இருப்பதும் மற்றும் ஒரு காரணமாகும்.
 
இன்னும் ஒரு காரணத்தையும் சொல்லியே ஆக வேண்டும், அதாவது ஆண் ஒரு வீட்டிற்கு காவலாக இன்னும் கருதப் படுவதுடன், எங்கும் எந்த நேரமும் போய்வரக்கூடியதாக இருப்பதும் ஆணின் முன்னுரிமையை அதிகரிக்கிறது எனலாம். பெண்ணில்லாமல் ஒரு சமுதாயம் வளரவும் பெருகவும் முடியாது. இன்பம் ஆணும் பெண்ணும் கூட்டிலேயே பொதுவாக உள்ளது. ஏன் என் அம்மா கூட ஒரு பெண் தானே?
 
ஆனால் எனக்கு அந்த வயதில் இவைகளை பற்றி ஒன்றும் தெரியாது. எனக்கு தம்பியை விட என் அம்மா போல், என் அம்மம்மா போல் ஒரு தங்கை வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி இருந்தது. வைத்தியர் கொடுத்த ஊடு கதிர்களால் [ஸ்கேன்] எடுக்கப் பட்ட புகைப்படத்தை பார்த்து கற்பனையில் மூழ்கிவிட்டேன். என்றாலும் ஏன் என் பெற்றோர்கள் கவலையாக இருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எதோ வேண்டா வெறுப்பாக கதைப்பது மட்டும் எனக்கு புரிந்தது.
 
அன்று இரவு முழுவதும் என் தங்கையின் ஞாபகமே , மனதில் பல பல கற்பனைகள், பெயர் கூட தெரிவு செய்து விட்டேன். எப்படி அழகாக இருப்பாள் என்று வேறு கற்பனை. எப்படி இருவரும் விளையாடுவது, அம்மாவுக்கு செல்லக் குழப்படி செய்வது இப்படி நீண்டு கொண்டே போனது. என் தங்கை என்ற எண்ணம் சுற்றி சுற்றி என்னை வந்து கொண்டே இருந்தது. என்றாலும் அம்மா, அப்பாவின் முகத்தில் உள்ள மாற்றம் புரியவே இல்லை.
 
அன்று இரவு என் அம்மாவும் அப்பாவும் கதைப்பது, நான் தங்கையை பற்றிய கற்பனையில் முழித்து இருந்ததால், தற்செயலாக கேட்கக் கூடியதாக இருந்தது. நான் அதிர்ந்தே விட்டேன். அவர்கள் இருவருக்கும் என் சின்ன தங்கை வேண்டாம் என்பது தெரிய வந்தது. என் கண்களில் இருந்து ஒரே கண்ணீர். நான் என் தங்கையின் படத்தை தடவி தடவி கொஞ்சிய படி அயர்ந்து தூங்கி விட்டேன்.
 
விடிய நேரத்துடன் எழும்பினேன். அம்மம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். அம்மா அப்பா வெளியே போய்விட்டார்கள் , கொஞ்ச நேரத்தால் வருவார்கள் என்று மட்டும் சொன்னார். ஏன் அம்மாவும் அப்பாவும் என் தங்கையை விரும்பவில்லை, அவர் என்ன தவறு செய்தார்? இன்னும் என் மனதை துளைத்துக்கொண்டே இருந்தது.
 
அம்மா அன்று மாலை வீடு திரும்பும் பொழுது அவரின் முகத்திலும் வயிற்றிலும் மாற்றம் இருந்தது. அவர் முன்பு போல கலகலப்பாக இருந்தார். வந்ததும் வராததுமாக என்னை கட்டி பிடித்து கொஞ்சினார். எனக்கு உண்மையில் அருவருப்பாக இருந்தது. எனக்கு என் தங்கையின் முத்தமே வேண்டும். ஒ .. என்று சத்தம் போட்டு அழ தொடங்கிவிட்டேன்.
 
அம்மா அப்பா இருவரும் என்னை கொஞ்சி கொண்டு, அவருக்கு வருத்தம் வந்துவிட்டது. அதுதான் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார், உனக்கு அடுத்த ஆண்டு தம்பி பாப்பா வாங்கி வருவோம் என்றனர். நான் சத்தம் போட்டு எனக்கு தங்கை வேண்டும். இந்த என் தங்கைதான் வேண்டும் என்று அவர்களை உதறி தள்ளிவிட்டு ஒரு ஓரமாக வெறுத்து பார்த்துக்கொண்டு நின்றேன்! அவர்கள் மாறவே இல்லை, எரிச்சலாக எனக்கு வந்தது.
 
அம்மம்மா அது எல்லாம் கொஞ்ச நாளைக்கு , பிறகு மறந்திடுவான், நீங்க போய் உங்க வேலையை பாருங்க என்று கூறி . என்னை தூக்கி சென்றார்
நான் இப்ப திருமணம் செய்துவிட்டேன் . என் ஒரே ஆசை . இந்த உலகத்தை எட்டி பார்க்காமல் சாக்கடிக்கப் பட்ட என் தங்கை என் மகளாக பிறக்கவேண்டும். என் பெற்றோர்கள் இவள் என் பேத்தி என்று தலையில் வைத்து கூத்தாட வேண்டும்! கட்டாயம் நடக்கும். உங்கள் எல்லோருக்கும் இனிப்பு பண்டங்கள் அவள் கையால் தருவேன் !!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.