Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 

10 APR, 2024 | 05:09 PM
image
 

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது :   

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.

புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்துக்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.  

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். 

தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும்  ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.  

புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுகூருவதோடு அனைவருக்கும் புத்தாண்டு பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/180920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக புதுவருடம் அமைய வேண்டும் - வட மாகாண ஆளுநர்

10 APR, 2024 | 07:03 PM
image

பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும் என வட மாகாண ஆளுநர் தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் அதில் மேலும் கூறியதாவது :

தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கமைய சித்திரை 14ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும் சமாதானமும் மேலோங்கி, வறுமை நீங்கி, எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

இதே தினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய பண்டிகையாக சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வருடமாக மலரும் புதுவருடம் அமைய வேண்டும். 

வருடப்பிறப்பின்போது பின்பற்றப்படுகின்ற சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகள் எம்மவர்களின் மரபுகளை தொடர்ச்சியாக பேணுகின்ற ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில், மருத்துநீர் வைத்துக் குளித்தல், புத்தாடை அணிதல், நறுமணங்களை பூசிக்கொள்ளுதல், மத வழிபாடுகளில் ஈடுபடுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், கைவிசேடம் வழங்கல் ஆகிய செயற்பாடுகளினூடாக மரபுகள் பேணப்படுகின்றன. அத்துடன் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், கலை நிகழ்வுகளூடாக நல்லிணக்க செயற்பாடுகளும், சமரசமாக வாழும் தன்மையும் ஏற்படுகிறது. 

“இனி என்னை புதிய உயிராக்கி, எனக்கேதும் கவலையரச்செய்து, மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கமைய, புது வருடத்தில் புதிய சிந்தனைகளை எம்மில் தோற்றுவித்து, மகிழ்ச்சி பொங்கும் வளமான வாழ்வை பெற இறையாசி வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/180932

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் சமுதாயம் மேலோங்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர்

13 APR, 2024 | 07:28 AM
image
 

தமிழோடு உறவாடுவோம் என தமிழ் புத்தாண்டு சித்திரை தினத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு நம் சமுதாயத்தின் சிந்தனைகள் உயர்வு பெற வேண்டும் எனவும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் சமுதாயம் மேலோங்க வேண்டுமென தெரிவித்தார். 

உலக மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் உள்ள தமிழர்கள் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நம் தமிழ் சமுதாயம் மனித வளம் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும்.

அதேபோல் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் அரசாங்கங்கள் மூலம் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரசாங்க சலுகைகள் போன்றவற்றை அனைத்து தமிழர்களுக்கும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

அதேபோல் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாட்டின் இறையாண்மைக்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் ராஜாங்க உறவை பலப்படுத்தி அதன்மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

மேலும் தமிழர்கள் இந்திய மக்கள் தொகையில், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் சேர்த்து 8 சதவீதத்துக்கு மேல் வசிக்கிறார்கள். அயல்நாடுகளில் மூன்று கோடியே அறுவது லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இவை அனைத்தையும் சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் அரசியல் சார்பற்ற ஒரு நபரை நியமன எம்பியாக நியமித்து அதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

எனவே,  இந்தியாவில் அடுத்து அமையப்போகும் மத்திய அரசு அரசியல் சார்பற்ற ஒருவரை நியமன எம்.பி.யாக அமர்த்த வேண்டும் என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181046

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுவதைப் போன்று ஒவ்வொரு விடயமும் அமைய வேண்டும் - புத்தாண்டு வாழ்த்தில் இந்துக் குருமார் அமைப்பு 

12 APR, 2024 | 07:42 AM
image
 

நாம், தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அமைதியும் புரிந்துணர்வும் நல்வாழ்வும் அமையட்டும்,

தமிழ் வருடங்களில் 38 ஆவது வருடமான சுப மங்களகர குரோதி என்னும் நாமத்துடன் பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டானது சிறப்பான ஒரு வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் கடந்த தசாப்த காலமாகப் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். அதில் குறிப்பாக எமது நாட்டு மக்கள் இன்னோரன்ன துயரங்களைத் தாங்கி சகித்து வாழ்ந்து வருகின்றனர்.

அனைத்து சமயங்களும் வாழ்வியலை வழிகாட்டி சுட்டி நிற்கின்ற அதேவேளையில் எமது சமயமானது அன்பு, கருணை, கொல்லாமை, பிறருக்குத் தீங்கு செய்யாமை, புரிந்துணர்வு போன்ற நற்செயல்களை சுட்டி நிற்கின்றது இவைபோன்ற விடயங்கள் தொலைத்துவிட்டோம் என்கின்ற காலப்பகுதியிலேயே நாம் அனைவரும் இருக்கின்றோம். 

நாம் எமது குடும்ப உறவுகளிடம் அன்பு செலுத்துவது போல் ஏனைய இனத்தார் சமூகத்தினர் சமயத்தாருடன் அன்பு செலுத்துதல் வேண்டும். மேலும் ஒவ்வொருவருடைய தனித்துவ பண்பாட்டினை மதித்துப் போற்றுதல் வேண்டியது சிறப்பானதும் பிரதானமான ஒன்றாக காணப்படுகின்றது.

அதனோடு தமிழ் மக்களாகிய நாம் எமது தேசத்தில் தொடர்ந்தும் வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேற் கூறிய அனைத்து நற்குணங்கள், விடயங்களை எம் தேசத்து அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும்.

நாம் தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம். அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும்.

புதுவருடத்தில் நாம் அனைவருக்கும் இறை பிரார்த்தனையுடன் கூடிய இன்பகரமான வாழ்வு அமைய வேண்டும் என பரம்பொருளை வேண்டி இறை பிரார்த்தனையில் ஈடுபடுவோம். இச்சமயத்திலே இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் வழிகாட்டுதலையும் நிறைந்த இறை பிரார்த்தனையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181014

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமைமிகு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சஜித்

11 APR, 2024 | 04:25 PM
image
 

ஒவ்வோர் இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும் பண்டிகை எனவும் குறிப்பிடலாம். 

இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும்  இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகிறது.

இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து, தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால், கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன். 

வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன், தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகிறது. 

இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.

மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு,  மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்ட பெருமை மிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை முன்னைய வாழ்க்கைத்தரத்துக்கு கொண்டு செல்வது எமக்கு பாரிய சவாலாக உள்ளது. அந்தச் சவாலை 220 லட்சம் பேரும் ஒன்றாக செயற்பட்டால் சமாளிக்க முடியும். ஒவ்வொரு இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/180991

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நீங்கள் எல்லோரும்,  வருடத்தில் ஒருநாள் விழுந்தடித்துக்கொண்டு  வாழ்த்துவீர்கள், மிகுதி நாட்களெல்லாம் அதை எப்படி சீர்குலைப்பது என்று திட்டமிட்டு செயற்படுவீர்கள். அதனாலேயே நாட்டில் உறவும் ஒற்றுமையும் அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துவோரின் மனம், செயல் உண்மையாயின் அவர்கள் கொடுக்கும் வாழ்த்தும் நிகழும். அழிவையும் வீழ்ச்சியையும்  சிந்தித்துக்கொண்டு வாழ்த்தும் சம்பிரதாய வாழ்த்து ஒரு வாழ்த்தா? அது வாழ்த்துவோரின் இதயத்திலிருந்து வரவேண்டும் அது நிலைக்கும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.