Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature"
 
 
"ஆடை நெகிழ உடல் மிளிர
சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள்
காலை அகட்டி காமம் தெளித்து
தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!"
 
"பெண்மை வனப்பு சுண்டி இழுக்க
ஆண்மை ஆசை அவளில் போக்க
கருத்த என்கிடு மிரண்டு வந்தான்
பருத்த உடலை காட்டி வந்தான்!"
 
"அருகில் வந்து முகர்ந்து ரசித்தான்
உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான்
எடுத்த எடுப்பில் அவளை தழுவினான்
அடுத்து தன் உடையை நழுவினான்!"
 
"ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள்
நடுங்கும் அவன் தொடையை பற்றினாள்
மலை சாரலில் மந்தை மேய
மாலை மயக்கத்தில் இருவரும் கொஞ்சினர்!"
 
"சோலை நடுவில் தம்மை மறந்து
ஓலை மெத்தையில் இரண்டு ஒன்றானது
இதய தடாகத்தின் இன்ப அலையில்
இதமான இரவின் இலக்கியம் போதித்தாள்!"
 
"மஞ்சள் நிலாவில் கவர்ச்சி காட்டி
வஞ்சை இதழால் முத்தங்கள் கொடுத்தாள்
ஏழு நாட்களாய் போதையில் மயங்க
எழுந்த ஆசைகள் மடியில் கழிந்தன!"
 
"மடியில் கண்ட சுகம் ஒழிய 
வீட்டு ஞாபகம் நெஞ்சில் மலர
நெஞ்சை விஞ்சும் காமங்கள் மறைந்து
கொஞ்சம் தனியாய் இருவரும் பிரிந்தனர்!"
 
[கில்கமெஷ் 78]
 
[மொழி பெயர்ப்பு:
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
மெசொப்பொத்தேமியாவில் உள்ள புகழ் பெற்ற நகரமான உருக்கில் தான் "கில்கமெஷ்" காப்பியம் [“Gilgamesh Epic”/கி மு 2100] உருவாகின. இந்த கில்கமெஷ்" காவியத்தில் என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசிகும் சமாட் [Shamhat] என்ற தேவ தாசிக்கும் இடையில் ஏற்படும் உறவு சில சிற்றின்பப் பாடல்கள் மூலம் வர்ணிக்கப்படுகிறது. சமாட் என்கிடுவை தனது காதல் லீலையால் அவனது முரட்டு மிருக குணத்தை சாந்தப் படுத்தினாள். அவள் தனது ஆடையை நெகிழ விட்டு காமத்தை மூட்டக் கூடியவாறு காட்டின் நிலத்தில் ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதுடன் அந்த காட்சி தொடங்குகிறது. என்கிடு மிக எச்சரிக்கையுடன் அவளை நெருங்கினான். ஒரு வேளை அவன் மிரண்டோ அல்லது அவள் அங்கு தைரியமாக பெருமித அழகு வாய்ந்த சிலை போல தன் பெண்மையின் வனப்பை காட்டிக் கொண்டு இருக்கும் அந்த காட்சி கொடுத்த அச்சுறுத்தலாலும் இருக்கலாம். இப்ப இந்த பாடல் எப்படி சமாட் , அவனின் இந்த வருகைக்கு முகம் கொடுத்தாள் என வர்ணிக்கிறது.
 
Uruk was on of the oldest Sumerian City state, where “Gilgamesh Epic” originated. Here we see the love between Enkidu, the wild man & Shamhat, a temple prostitute. For instance, in one erotic scene, Shamhat tames Enkidu through her love-arts. The scene opens with Shamhat positioning herself on the forest floor and Enkidu warily drawing near, perhaps afraid or even intimidated by her bold stature. The narrative then describes how Shamhat boldly initiates the encounter:
 
"She stripped off her robe and lay there naked,
with her legs apart, touching herself.
Enkidu saw her and warily approached.
He sniffed the air. He gazed at her body.
He drew close, Shamhat touched him on the thigh,
touched his manhood and put him inside her.
She used her love-arts, she took his breath
with her kisses, held nothing back, and showed him
what a woman is. For seven days
he stayed erect and made love with her,
until he had had enough"
 
(Gilgamesh 78)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.