Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

"புதிய வரலாறு எழுதும் புலிவீரர் 
புகழை உலகெங்கும் கூவு - அவர்

உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி
உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!"

                                                                                                      --> நெய்தல் இறுவட்டிலிருந்து

 

பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. 

இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். 

இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன.

இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. 

தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்தவற்றைக் கொண்ட, புலிகளின் காலத்திய, மொத்தம் 221 இறுவட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன்.

இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் ஆயுதவழி ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காணவும் உதவும் என்று நம்புகிறேன்.

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்


*****

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 211 இயக்கப்பாட்டு இறுவெட்டுகளின் தொகுப்பு | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 211 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • Replies 233
  • Views 20.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 





இறுவட்டு


இசை

பாடலாசிரியர்

பாடகர்

வெளியீடு

வெ. திகதி

  1. அக்கினிச் சுடர்கள்

'இசைவாணர்' கண்ணன், எஸ்.பி. ஈஸ்வரநாதன், இசைப்பிரியன்.

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா.

ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், தவமலர்.


பின்னணிப் பாடகர்கள்: மணிமொழி கிருபாகரன், கப்டன் இசையரசன்

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

  1. அடிக்கற்கள்

உதயா

கோ.கோணேஸ்

எஸ்.பி. பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்க விநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. அண்ணைத்தமிழ்

கவி

பாவலர் அறிவுமதி

மாணிக்க விநாயகம், ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்ரீராம், டொனல்ட், நித்யஸ்ரீ, ஹரிணி, நிவேதா, மகதி, நிர்மலா, மாலதி, சின்ன பொண்ணு, கரிசல் கருணாநிதி, கிரேசு, கவி, லாவண்யா

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

  1. அணையாத தீபம்

???

???

???

???

  1. அந்நியர் வந்து புகலென்ன நீதி

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா

இன்குலாப், ‘உணர்ச்சிக்  கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. அலாஸ்காவில் ஓடங்கள்

???

???

???

???

  1. அலை பாடும் பரணி

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாவலர் அறிவுமதி, கவிஞர் வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், யுவராஜ், சந்திரமோகன், கப்டன் இசையரசன், சீலன், மேரி, சாகித்தியா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.



உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

07/10/2004

  1. அலையின் கரங்கள்

நிர்மலன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை, சு.பா. வீரபாண்டியன், மைகேல், வசந்தன், சுபாஷ், பரா.

கஜன், ஜீவன், வதனன், செல்வலிங்கம், ஆஷா, கண்ணன், நிர்மலன்.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரான்ஸ்.

~07/2000

  1. அலையின் வரிகள்

தமிழீழ இசைக்குழு

???

???

மகளிர் பிரிவு, கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழம்


விளைவிப்பு: மல்லாவி போர் எழுச்சிக் குழு

03/05/2000

  1. அழியாத சுவடுகள்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

  1. அனுராதபுரத்து அதிரடி

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, அம்புலி, செந்தோழன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அன்ரனி, இராணிமைந்தன்

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், வசீகரன், திருமாறன், சந்திரமோகன், கானகி, கப்டன் இசையரசன், மான்பூ, அபிராமி, யுவராஜ் மற்றும் இசைப்பிரியன்


பின்னணிப் பாடகர்கள்: சர்மிலன், ரெஜிஸ், கலையரசன், மணிமொழி, தனேந்திரன், சுரேன்

திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம் .

05/07/2008

  1. அனுராதபுரம் தேடி

முகிலரசன் மற்றும் ???

கு. வீரா மற்றும் ???

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன் மற்றும் ????

???

  1. ஆதிக்க அலை

???

???

???

???

  1. ஆழிப்பேரலை

???

‘பாவலர்’ அறிவுமதி

???

???

  1. ஆனையிறவு

இசைவாணர் கண்ணன்.


பின்னணி இசை: முரளி.

கவிஞர் புதுவை இரத்தினதுரை.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், செங்கதிர், மணிமொழி, தவமலர்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

02/07/2000

  1. இசைபாடும் திரிகோணம்

‘இசைவாணர்’ கண்ணன்

???

???

உருவாக்கம்:

நிதர்சனம் மற்றும் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்


வெளியீடு: தவிபு, திருமலை

06/02/1995

  1. இசையருவி

???

???

???



அறிமுக உரை: யோ. யோகி

கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

03/11/1991 

  1. இது நெருப்பின் குரல்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.


பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, திருமதி சாந்தி நாகராஜன், செல்வி கெளரி ராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

~05/1997

  1. இது பிரபாகரன் காலம்

இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, கோவை கமலா

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

  1. இது புலிகளின் காலம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா

நிதர்சனம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. இந்த மண் எங்களின் சொந்தமண்

'இசைவாணர்' கண்ணன்

புதுவை இரத்தினதுரை, கந்தராசா, செ. இராஜநாயகம்

பொன். சுந்தரலிங்கம், எஸ். ஜி. சாந்தன் மற்றும் அவரது குழுவினர், பெளசியன், மிதிலா, சியாமளா

???

23/10/1990>

  1. இராட்சத அலை

???

???

???

நோர்வே கலை பண்பாட்டுக் கழகம்.

  1. இருப்பாய் தமிழா நெருப்பாய்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா குழு

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா

22/04/1995

  1. இலட்சிய நெருப்பு

சிறீகுகன், அதியமான், எஸ்.கண்ணன், இசைப்பிரியன், ரி.எல்.மகாராஜன், மதுராங்கன் சிவநாதன், ஆர்.கண்ணன், வர்ண இராமேஸ்வரன், முல்லை சாந்தன், சாரங்கன், சிறீபாஸ்கரன்.

புதுவை இரத்தினதுரை, கவி அன்பன், கவிஞர் கு.வீரா, செ. ராணிமைந்தன், தா.சிவநாதன், கலைஞர் கருணாநிதி, வர்ண இராமேஸ்வரன், சதா பிரணவன், முல்லை ஜெயராஜா, முல்லை சாந்தன், ஈலபித்தன்

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன், ரி.எல்.மகாராஜன், எஸ்.கண்ணன், வர்ண இராமேஸ்வரன், ஜெய்கிசன், பாபு சிவநாதன், தா.சிவநாதன், முல்லை சாந்தன், பிரபா, கெளசி, கல்பனா.

வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம்.

  1. ஈட்டி முனைகள்

ரி.எல்.மகாராஜன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, அம்புலி, வேலணையூர் சுரேஷ், அன்ரனி.

மனோ, வாணி ஜெயராம், கிருஷ்ணராஜ், கார்த்திக், கல்பனா, ரி.எல்.மகாராஜன், சுரேந்தர், மாணிக்க விநாயகம், கல்யாணி.

இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

  1. ஈர நினைவுகள்

???

ஜேம்ஸ் ராஜ்

???

கலை பண்பாட்டுக் கழகம் - நோர்வே

19/11/2005

  1. ஈரமில்லாப்பேரலை 

இசைப்பிரியன்

வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, துளசிச்செல்வன், செந்தோழன்

குமாரசாமி, பொன் சுந்தரலிங்கம், வசீகரன், யுவராஜ், கப்டன் இசையரசன், சந்திரமோகன், அனுராதா சிறீராம், சாகித்தியா


பின்னணிப் பாடகர்: சிவலிங்கம், ராஜா, இசைமதி, மணிமொழி, கானகி, பாடகி

தர்மேந்திரா கலையகம், தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

28/01/2006 - 26/12/2005

  1. ஈழ வேட்கை

???

???

???

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒட்டாவா, கனடா.

  1. ஈழத்தமிழனின் இதயத்திலே

???

???

???

???

  1. ஈழத்துக்காதல்

மனோகர்

சுதா

சத்தியன், ஜான்நம்பி, பிரசன்னா, கார்த்திகேயன், ஹரிச்சரன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், மாட்டின், சாரதீன், மனோகர், அனுராதா சிறீராம், மாலதி லக்ஸ்மன், சுஸ்மிதா.

வெளியீட்டு பிரிவு, அனைத்துலகத்   தொடர்பகம்.

  1. ஈழம் மலர்கின்ற நேரம்

ம.தயந்தன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், சிவானந்தம், பத்மநாதன், புதிய பாரதி, வைரமுத்து.

பொன் சுந்தரலிங்கம்.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ்.

  1. ஈழம் மீட்பது உறுதி

‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா.

பாபுராஜ், பிரகாஷ் அன்டனி, ஆனந்.

‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. ஈழராகங்கள்

???

???

எஸ்.ஜி.சாந்தன் மற்றும் பிற பாடகர்கள்

???

2009<

  1. உதயம்

அமரர் யாழ் ரமணன்

முருகையன், வீரமணி ஐயர், ஆதிலட்சுமி சிவகுமார் மற்றும்... ???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

13/10/1991

  1. உம் நினைவில்

???

???

???

புலத்தில் வாழும் தாயகக் கலைஞர்களின் படைப்பு.

  1. உரிமைக்குரல்

வர்ண இராமேஸ்வரன், கனி, செல்வன், அரிமா அழகன், மதுராந்தன், வசந்தன் செல்லத்துரை, வானம்பாடிகள்.

புதுவை இரத்தினதுரை, வர்ண இராமேஸ்வரன், வேந்தன், சதா பிரவணன், சிவநாதன், விவேகானந்தன், துரை.

வர்ண இராமேஸ்வரன், ஜெய்கிஷன், சதா பிரவணன், வதனன், விமல், சிவநாதன், வசந்தன் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை, ரஞ்சன் குழு.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. ஊர் ஓசை

ஜீட் ஜெயராஜ்.

கலைப்பருதி, தமிழ்மாறன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், சதா பிரணவன், புலவர் சிவநாதன்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், கஜன், செல்வலிங்கம், ஸ்ரீபதி, சாகித்தியா.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

  1. ஊர் போகும் மேகங்கள்

‘இசைவாணர்’ கண்ணன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், விஞர் புதுவை இரத்தினதுரை, புலவர் சிவநாதன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், திவாகர், குமரன், கஜன், எஸ்.கண்ணன் (யேர்மனி), முல்லைக் கணேஷ், வியஜலட்சுமி, கெளசி, கரோலின், மேரி, தேனுகா.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம் : தமிழீழம்.

06/02/2004

  1. ஊர்க்குயில்

முரளி

கவிஞர் புதுவை இரத்தினதுரை

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.நிரோஜன், திருமலைச் சந்திரன், செங்கதிர், சீலன், இரத்தினம், குமாரதாஸ், வசீகரன், தனுராஜ், தியாகராசா, மணிமொழி, சிவரதி, பிறின்சி, பாடகி, புவனா இரத்தினசிங்கம்

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

04/1999 - 07/2000

  1. எங்களின் கடல்

தெய்வேந்திரம்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புலவர் புலமைப்பித்தன், புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு. வீரா, புரட்சி, செந்தோழன்

எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரி.எல்.மகாராஜன், மனோ, திப்பு, மாணிக்க விநாயகம், சத்தியன், எஸ்.எம்.சுரேந்திரன், ஹாரிஸ் ராகவேந்திரா,கார்த்திக், சுஜாதா, கல்பனா.

வெளியீடு: திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, தமிழீழம்.



உருவாக்கம்: விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

01/06/2008

  1. எங்கள் தேசம்

‘இசைவாணர்’ கண்ணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

  1. எங்கள் விழி

பெ.விமல்ராஜ், சதீஸ், செ.இளங்கோ.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்ரமணியம், மறத்தமிழ் வேந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, பிரபாகர், இந்திரா, சோபியா, முகேஷ், ஹேமா அம்பிகா, சைலஜா.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

  1. எந்நாளும் மாவீரர் நினைவாக

தமிழீழக் கவிஞர்கள்

தமிழீழ பாடகர்கள்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

  1. எம் வானம் விடியும்

???

???

???

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனடா

~ 07/2000

  1. எல்லாளன் பெயர் சொல்லி

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, செந்தோழன்,புரட்சி, கவிஞர் கு.வீரா, அம்புலி

எஸ். பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, முகேஷ், தீபன் சக்கரவர்த்தி, சத்தியன், கிருஷ்ணராஜ், தினேஷ், தியானந்திரு, மாண்பு, மஞ்சு, கல்யாணி.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2008 

  1. எழு எழு தமிழா

இளங்கோ செல்லப்பா

வன்னி மைந்தன் (லண்டன்).

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலக தொடர்பகம்

  1. எழுக தமிழ்

எஸ்.கண்ணன், சந்தோஸ், மதுராந்தன்.

தா.சிவநாதன், சுஜித், அமுதநதிசுதர்சன்.

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், சுஜித், ஜெகதா, ரஜீவ், சந்தோஸ்.

ஜேர்மன் கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. எழுவோம்

சிலம்பம் 

இது இவர்களின் மூன்றாவது வெளியீடாகும்

  1. ஐயா குமார் ஐயா

தமிழக கலைஞர்கள்

தமிழீழ & தமிழகக் கவிஞர்களின் வரிகளில்..

தமிழக பாடகர்கள்

கலை பண்பாட்டுக் கழகம் – தமிழீழம்.

  1. ஒரு தலைவனின் வரவு

இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. ஒளிமுகம் தோறும் புலிமுகம்

தினா, கவி.

பாவலர் அறிவுமதி

டி.எல்.மகாராஜன், அனுராதா ரமணன், ஹரிணி, நித்யஸ்ரீ, உன்னிமேனன், பிரபாகர், உன்னி கிருஷ்ணன், கிருஸ்ணராஜ், தீபிகா, டொனால்டு, கி.ராஜ், ஸ்ரீனிவாஸ், சின்னப்பொண்ணு.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

~07/2000

  1. ஓயாத இசை அலை

எஸ்.கண்ணன்.

அமுதநதி சுதர்சன், சிவநாதன், ஷோபா கண்ணன், அனுரா.

எஸ்.கண்ணன், அனுரா, அமுதா, தேவிகா, ஷோபா.

ஜேர்மனி கலை பண்பாட்டுக் கழகம்

  1. கடலிலே காவியம் படைப்போம் 

“இசைவாணர்” கண்ணன்

புதுவை இரத்தினதுரை, பண்டிதர் பரந்தாமன், வாஞ்சிநாதன்

மேஜர் சிட்டு, கப்டன் சௌகான், எஸ். ஜி. சாந்தன்,  ஜெயா. சுகுமார், நிரோஜன், விஜயலக்ஷ்மி, விஜயகுமார்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

01/09/1994

  1. கடலின் மடியில்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.


(இது இவர்களின் 11 வது இறுவெட்டாகும்)

16/11/1994

  1. கடலோரக்காற்று

இசைப்பிரியன்


பாடல் ஒலிப்பதிவு: மலையவன்

'மாமனிதர்' கவிஞர் நாவண்ணன், முல்லைக்கமல், கவிஞர் கு.வீரா.

குமாரசாமி, சாந்தன், வசிகரன், யுவராஜ்,

கடலோரக்காற்று திரைப்படத்தில் வந்த பாடல்கள் இறுவெட்டாக வெளியிடப்பட்டன.

31/12/2002

  1. கடற்கரும்புலிகள் பாகம் 01

இசைவாணர் கண்ணன், யாழ் ரமணன் மற்றும் தமிழீழ இசைக்குழு (குறிப்பு: இரா செங்கதிர் பாடிய பாடல்களுக்கு தமிழீழ இசைக்குழுவினர் மற்றும் யாழ் ரமணன் இசையமைத்தனர்)

வர்ண இராமேஸ்வரன், மேஜர் சிட்டு, குமாரசாமி, புவனா இரத்தினசிங்கம், செங்கதிர் மற்றும் குலசிங்கம்

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்


(இது இவர்களின் 12வது வெளியீடு ஆகும்)

16/11/1994

  1. கடற்கரும்புலிகள் பாகம் 02

தமிழீழ இசைக்குழுவினர், எஸ்.பி.ஈஸ்வரநாதன்.

புதுவை இரத்தினதுரை, தமிழ்மாறன், வேலணையூர் சுரேஸ், இளந்தமிழ்.

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், தியாகராஜா, செங்கதிர், கெளசி, பிறின்சி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

28/12/1997

  1. கடற்கரும்புலிகள் பாகம் 03

‘இசைவாணர்’ கண்ணன், முரளி, குகன், தேவகுமார், இசைத்தென்றல்.

‘மாமனிதர்’ நாவண்ணன், புதுவை இரத்தினதுரை, உதயலட்சிமி, செங்கதிர்.

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், செங்கதிர், யுவராஜ்.


பின்னணிப் பாடகர்: மணிமொழி

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. கடற்கரும்புலிகள் பாகம் 04

‘இசைவாணர்’ கண்ணன், முரளி (உதவி)

‘மாமனிதர்’ நாவண்ணன், புதுவை இரத்தினதுரை, பொன்.கணேசமூர்த்தி, ச.வே.பஞ்சாட்சரம், செம்பருத்தி, பண்டிதர் வீ.பரந்தாமன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், மணிமொழி, கப்டன் சிலம்பரசன்/ குட்டிக்கண்ணன்.


பின்னணிப் பாடகர்கள்: குமாரதாஸ், பிறின்சி, மதுரா

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. கடற்கரும்புலிகள் பாகம் 05

ஜேர்மனி கண்ணன்

பொன் கணேசமூர்த்தி , நாவண்ணன் , செம்பருத்தி , பஞ்சாட்சரம் , திவாக

ஜேர்மனி கண்ணன், குமார் சந்திரன், செல்வலிங்கம், கஜன், அனுரா, கண்ணன் சிவநாதன், கண்ணன் சோபா

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2002

  1. கடற்கரும்புலிகள் பாகம் 06

முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், மோகன் றெமிசியார், எஸ்.வி.வர்மன்,

‘மாமனிதர்’ நாவண்ணன், ச.வே.பஞ்சாட்சரம், பண்டிதர் வீ.பரந்தாமன், யோகரத்தினம் யோகி, அருட்தந்தை யோகன், பிரமிளா, எஸ்.மகிழ்நிலா, ஆதிலட்சுமி சிவகுமார், நா.யோகரத்தினன், கனிமொழி பேரின்பராஜன், பூங்கோதை.

ரவி அச்சுதன், ஜெயராஜ், முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், செந்தூரன் அழகையா, எஸ்.எலிசபெத், நிர்ஜானி கருணாகரன், சாந்தினி வர்மன், சுகலியா ரகுநாதன், சி.ரி.உத்தமசீலன், சிவபாலன் நடராசா, சி.ஆதிரை.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. கடற்கரும்புலிகள் பாகம் 07

செயல்வீரன் 


இசைஉதவி: ஜி.தோமஸ்

‘போராளி’ யோகரத்தினம் யோகி, ‘போராளி’ துளசிச்செல்வன் ‘போராளி’ வெற்றிச்செல்வி, ‘போராளி’ அ.அன்ரனி, ‘போராளி’ க.க.கலைச்செல்வன், வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சாட்சரம், ஆதிலட்சுமி சிவகுமார், செந்திரு, கோகுலன், பொன்.காந்தன்.

எஸ்.ஜி.சாந்தன். திருமலைச் சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், கப்டன் இசையரசன், த.றொபேட், எஸ்.கண்ணன், ஜெயபாரதி, மணிமொழி, பிறின்சி, அநுரா, தேவிகா, அமுதா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.


உருவாக்கம்: சிட்டு கலையகம், புலிகளின்குரல்

  1. கடற்கரும்புலிகள் பாகம் 08

‘இசைவாணர்’ கண்ணன் 


இசைஉதவி: முரளி, இசைத்தென்றல்.

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், கவிஞர் கு.வீரா, மனோன்மணி நடராசா.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், திருமலைச் சந்திரன், திவாகர், மணிமொழி, ஜெயபாரதி, திவ்யா அஞ்சலி, றொபேட் 

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2004

  1. கடற்கரும்புலிகள் பாகம் 09

இசைப்பிரியன்

கலைப்பருதி, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அம்புலி, செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.என்.சுரேந்திரன், நிரோஜன், யுவராஜ், கப்டன் இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சந்திரமோகன்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

19/11/2005


  1. கடற்கரும்புலிகள் பாகம் 10

அதியமான்

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, யுவராஜ், சந்திரமோகன், கப்டன் இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சயிந்தவி (பாடல் பின்னணியில்) சுபாசினி, பாடகி, மணிமொழி, கானகி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. கடற்கரும்புலிகள் பாகம் 11

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை,   வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, அம்புலி, செந்தோழன்.

ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், மாணிக்க விநாயகம், தயாளன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், மணிமொழி கிருபாகரன், ஹேமா, பிறின்சி ரஞ்சித்குமார், கலைவாணி.


பின்னணிப் பாடகர்கள்: சீலன், முகிலரசன், தனேந்திரன், மணிமொழி, பாடகி, கானகி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

19/09/2007 

  1. கடற்கரும்புலிகள் பாகம் 12

ரி.எல்.மகாராஜன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புலவர் புலமைபித்தன், புதுவை இரத்தினதுரை.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், கிருஷ்ணராஜ், புஸ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2008

  1. கடற்கரும்புலிகள் பாகம் 13

இசைப்பிரியன்.

செந்தோழன், அன்ரனி, வேலணையூர் சுரேஸ், தமிழினி, ராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், செளந்தர நிரோஜன், ரெஜிஸ், சர்மிலன், திருமாறன், அபிராமி, வாணி சுகுமார், கப்டன் இசையரசன், கலையரசன், கானகி, மணிமொழி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2008

  1. கரும்புலிகள்

‘இசைவாணர்’ கண்ணன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, த.வே.பஞ்சாட்சரம், ‘பண்டிதர்’ வீ.பரந்தாமன்

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், விஜயலட்சுமி, மாதவன், மோகனதாஸ், மலேசியா வாசுதேவன், யே.ஆர். செளந்தரராஜன், வர்ண இராமேஸ்வரன், பார்வதி சிவபாதம், குமாரசாமி.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

02/07/1993

  1. கரும்புலிகள் II

‘இசைவாணர்’ கண்ணன் 


பின்னணி இசை: முரளி.

புதுவை இரத்தினதுரை, ச.பொட்டு.

‘இசைவாணர்’ கண்ணன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், மணிமொழி, தவமலர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்.



உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்

05/07/2002

  1. கல்லறை தழுவும் கானங்கள்

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, ஊரவன், உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், குமாரசாமி, திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், கப்டன் இசையரசன், மணிமொழி கிருபாகரன், இளந்தீரன், தனேந்திரன்.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

15/11/2002

  1. களத்தில் கேட்கும் கானங்கள்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, தேவேந்திரன் 

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், 

ரி.எல்.மகாராஜன், வாணி ஜெயராம், தினேஸ்

???

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. களத்தில்நின்று வேங்கைகள்/ களத்தில் நிற்கும் வேங்கைகள்

???

????

கப்டன் வீரத்தேவன், ????

யாழ் மாவட்ட தாக்குதல் பிரிவு 

15/03/1992

  1. காயங்களோடு காலை விடியுது

???

???

???

???

???

  1. கார்த்திகை 27

உதயா

பாவலர் அறிவுமதி, மயில், விவேகா, சிநேகன், அன்புநெஞ்சன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோபால்ராவ், அருண், சினிவாஸ், ப்ரியா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

  1. காலம் எடுத்த முடிவு

சதீஸ்

பாவலர் அறிவுமதி, தேவராஜன், காளிதாசன், யுகபாரதி.

????

வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. காலம் எதிர்பார்த்த காலம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

அனைத்துலக செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. காலம் தந்த தலைவர்

இலக்கியன், தரணியாழ், செ.இளங்கோ.

புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்பிரமணியம்.

‘பாசறைபாணர்’ தேனிசை செல்லப்பா, அனந்த நாராயணன், சுனந்தன், பவன், நா,சாந்தி, ஹேமா அம்பிகா.

தாய்மண் வெளியீட்டகம், தமிழீழம்.

  1. காவலரண்

சி.மதுராந்தன், சி.பிரணவன்

தமிழவள், அ.அன்ரனி, கவிஞர் கு.வீரா, லம்போதரன், மட்டுவில் ஞானகுமாரன், தா.சிவநாதன்.

பாபு, எமிலியானோஸ், பிரதட்ஷன், நிவாகினி, கவிப்பிரியா, குமாரச்சந்திரன், ஸ்ரேபான், பைரவி, கார்த்திஜா. உ.தர்சிக்கா.


அறிமுகக்குரல்:

தா.சிவநாதன்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனிக் கிளை.

  1. காற்றில் கேட்கும் குரல்

சதீஸ்

பாவலர் அறிவுமதி

கிருஸ்ணராஜ், முகேஷ், கோவி முரளி, ஆனந்து, மாளவி சிவகணேஸ், சமளி சிவகணேஸ், சோபியா சதீஸ், மார்டின்.

நோர்வே மருத்துவர் சிவகணேஸ் மற்றும் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்வே கிளை.

  1. கிழக்கில் வீழ்ந்த வித்துக்கள்

தமிழீழ கலைஞர்கள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை, மார்சல், நரேஷ், வாமகாந்த்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசிகரன் மற்றும் ஏனைய கலைஞர்கள்.

"தேசக்காற்று" வலைத்தளத்தால் வெளியிடப்பட்டது.

05/2009>

  1. கூவுகுயிலே

ராஜன் இசைக்குழு?

சி. கபிலன், ரமணன், தமிழேந்தி, தமிழவள் , சபரி 

சி. கபிலன், சத்தியசீலன், திவாகர், கௌசி, மேளின், ரமணன்  

08/08/1992

  1. கொடியேறும் காலம்

தமிழீழ மகளிர் இசைக்குழு.

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, துளசிச்செல்வன், செந்தோழன்.

வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், கப்டன் இசையரசன், இசைப்பிரியன், திருமாறன், கானகி, தவமலர், மாங்கனி, சுலக்சன்.


பாடலின் பின்னணியில்: மணிமொழி.


அறிமுகக்குரல்: வெற்றிச்செல்வி.

தமிழீழ மகளீர் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.


உருவாக்கம்: மாங்கனி கலையகம்.

  1. கோபுர வாசலிலே

தமிழீழ இசைக்குழு

????

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், தியாகராஜா, பிறின்சி, விஜயலஷ்மி மற்றும் ஏனையோர்

  1. சத்திய வேள்வி

???

???

???

???

  1. சத்தியம் சாகாது

???

???

???

???

  1. சமர்க்கள நாயகன்

செயல்வீரன், இளங்கோ செல்லப்பா, இசைப்பிரியன்,வர்ண  இராமேஸ்வரன்.

லெப். கேணல் செந்தோழன், மறத்தமிழ்வேந்தன், கவியன்பன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், வன்னிமைந்தன், வர்ண  இராமேஸ்வரன்.

எஸ்.ஜி.சாந்தன், நிரோஜன், சந்திரமோகன், ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, வர்ண  இராமேஸ்வரன்.

அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. சிரிப்பின் சிறகு

சிறீகுகன், செயல்வீரன், இசைப்பிரியன், அதியமான், முகிலரசன், தமிழீழ மகளிர் இசைக்குழுவினர்.

புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, அம்புலி, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், பார்வதி சிவபாதம், வசீகரன், சந்திரமோகன், இசையரசி, கானகி, மணிமொழி, பாடகி.

தர்மேந்திரா கலையகம், தமிழீழம்.

  1. சிவந்த மண்

தமிழீழ இசைக்குழு

  1. சிவளைக்காளை

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, புஷ்பவனம் குப்புசாமி.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, புஷ்பவனம் குப்புசாமி.

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. சிறகு விரித்த புலிகள்

ரி.எல்.மகாராஜன்.

“உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், மாணிக்க விநாயகம், மால்குடி சுபா.

தமிழீழ வான்புலிகள் , தமிழீழ விடுதலைப் புலிகள்.

26/09/2007

  1. சுதந்திர தரிசனம்

???

????

???

ஜேர்மன் கலைபண்பாண்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

11/04/1997

  1. சுதந்திரதாகம்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், நோர்வே கிளை.

08/1994 - 09/1994

  1. சுதந்திரத்தமிழ்

சதீஸ்

‘மாமுனை’ மனோ

எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா


அறிமுக உரை: பாவலர் அறிவுமதி

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.


உருவாக்கம்: துயவன் படைப்பகம்.

  1. சுதந்திரவாசல்

???

ரூபன். சிவராஜா

???

???

  1. சுயத்தை வென்றவன்

எஸ்.கண்ணன்.

உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, தா.சிவநாதன், கோசல்யா சொர்ணலிங்கம், இராஜகுமாரன், மட்டுவில் ஞானகுமார், ஷோபா

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், எமிலியானோஸ், குமாரச்சந்திரன், வியயலட்சுமி, ஷோபா, அனுரா, அமுதா, ஜெகதா, பாபு, தேவிகா, ஸ்ரெபான் வலன்ரைன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், ஜேர்மனிக் கிளை.

  1. சுனாமி

ஜே. ஆர். ரஜனிசாந்த்


உயிரவன், ஜே. ஆர். ரஜனிதா, ஏ. எல். திருமால், பவான், ரட்ணபாலன் நளினி, ஆர். ஜே. ரவி

தர்சினி, ஏ. எல். திருமால், பி.ரி. விக்கி, பொன். சிவா வரதராஜன், எஸ். விஜயராஜா, ஜெகன் கோபினாத், என். எம். ராஜா 


தமிழீழ இசைக்குழு, கலை பண்பாட்டுக் கழகம், கியூபெக் உலகத் தமிழர் இயக்கம்

~2005

  1. சூரியதேசம்

சதீஸ்

‘ஆழியவளை’ எஸ்.பாலா.

எம்.எஸ். விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேவா, சபேஷ் முரளி, கிருஷ்ணராஜ், முகேஷ், மார்டின், நித்தியஸ்ரீ, சின்னபொண்ணு, கல்பனா.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.


உருவாக்கம்: தமிழப்பன் படிப்பகம்.

  1. சூரியப் புதல்விகள்

முரளி

புதுவை இரத்தினதுரை, உதயலட்சுமி, மார்சல், தமிழ்க்கவி, வேலணையூர் சுரேஸ், செங்கதிர், தமிழவள், பொன் . கணேசமூர்த்தி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், பிறின்சி, நிரோஜன், சிவரதி, மணிமொழி, செங்கதிர், குமாரதாஸ், தவமலர், திருமலைச் சந்திரன்.

கலை பண்பாட்டுக் கழகம் மகளிர் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

14/10/2000

  1. செஞ்சோலை

க.முரளி

“மாமனிதர்” கவிஞர் நாவண்ணன், ஜெயா, யோகி, காயத்திரி, பொன்.கணேசமூர்த்தி.

மேஜர் சிட்டு, மணிமொழி, விதுஷா, இசையமுதன், காஞ்சனா, யாழினி, செங்கதிர், ஈழச்செல்வி, ஜெயவீரன், தமிழ்ச்செல்வன் மற்றும் செஞ்சோலை சிறுவர்கள்.

செஞ்சோலை சிறுவர் இல்லம், தமிழீழம்

19/11/1992

  1. தமிழர் தாகம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, திருச்சி சுந்தரமணி.

பாடலாசிரியர்கள்: ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன் (1-7), கவிஞர் சிங்காரவேலன் (8-11).

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், அரங்கமணி, கென்னடி.

அனைத்துலக செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

18-19/05/2000

  1. தமிழீழ இளையோர்கள் எழுச்சிப் பாடல்கள்

???

???

???

“தேசக்காற்று” என்ற வலைத்தளம் புலிகளுக்குப் பின்னர் தொகுத்து இறுவட்டாக்கியது.

2009<

  1. தமிழீழ எழுச்சிப் பாடல்கள்/ தமிழீழப் பாடல்கள்/ புயல்கால ராகங்கள்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, தேவேந்திரன்

'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, இன்குலாப்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, வாணி ஜெயராம்

உருவாக்கியவர்: பரதன்

1988


  1. தமிழீழ திரைப்படப் பாடல்கள்

ராஜன்ஸ் இசைக்குழுவினர் (யாழ் ரமணன்), முரளி, தமிழீழ இசைக்குழு மற்றும் ஏனையோர்

புதுவை இரத்தினதுரை, ‘’மாமனிதர்” நாவண்ணன், முல்லைச் செல்வன், மாசல், வேலணையூர் சுரேஷ் மற்றும் ஏனையோர்

திருமலைச் சந்திரன், மேஜர் சிட்டு, வர்ண இராமேஸ்வரன், குமாரசாமி, விஜயலட்சுமி, கௌசி மற்றும் ஏனையோர்

பாடல்கள் யாவும் தமிழீழத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்டு தவிபு இன் சுவிஸ் கிளையினரால் இறுவட்டிற்கு மாற்றப்பட்டு வெளியிட்டனர்.

11-12/1995

  1. தமிழீழ திரைப்படப் பாடல்கள்

???

???

???

???

  1. தமிழீழ பரணி

???

???

???

????

  1. தமிழீழ மொட்டுக்கள் எ அறிவுச்சோலைப் பாடல்கள்

'இசைவாணர்' கண்ணன்

புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், பொன்.கணேசமூர்த்தி, என்.சண்முகலிங்கம், பண்டிதர் பரந்தாமன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், சிட்டு, திருமலைச்  சந்திரன், குமாரதாஸ், குமுதினி, சுபலட்சுமி, விஜயன் மாஸ்ரர். இவர்களுடன் அறிவூச்சோலை பிள்ளைகள்: மேளின், கிரிசாந்தன், சுரேஸ்.

காந்தரூபன் அறிவுச்சோலை, தமிழீழம் .

22/08/1998

  1. தமிழ் சொந்தங்கள்

???

???

???

???

  1. தமிழ் வீரம் 

???

???

???

???

  1. தலைவா ஆணை கொடு

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, 



பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

வேலணையூர் சுரேஸ்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. தாயகத் தலைவன்

இரா. செங்கதிர்

???

???

???

  1. தாயக மண்ணின் காற்று

???

???

???

தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியக் கிளை

11-12/1995

  1. தாயகத்தாய்

தமிழீழ இசைக்குழு,

எஸ்.பி.ஈஸ்வரநாதன்

புதுவை இரத்தினதுரை, செ.குணரத்தினம், அம்பலாந்துறை அரியவன், ராஜகுலேந்திரன், நாகேந்திரன், மதிபாலசிங்கம் , விக்ரதி, போர்வாணன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், சந்திரமோகன், தவமலர், செங்கதிர், சுமேந்திரன், பிறின்சி ரஞ்சித்குமார், கானகி.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

19/04/2002

  1. தாயகவித்து

சந்துரு (லண்டன்), மகேஸ்

பொ.அன்ரன், சங்கையூர் குமார், மண்மகள், நாக. தயாபரன், சிவா.

நரேஷ், சிவாஜி, சிவநாயகி, சிவா, கவிதா, கண்ணன், சாந்தன், கரோலின், வாகீசன், சிவா. காந்தன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்.

09/08/1999

  1. தாய்நிலக் காற்று

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.


பின்னணி இசை : இளங்கோ செல்லப்பா.

கவி அன்பன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, உன்னி கிருஷ்ணன், ஹாரிஸ் ராகவேந்திரா, இறையன்பன், மணிமேகலை இளங்கோ, கங்கா, சாந்தி நாகராஜன்.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.

19/11/2005


  1. தாய்நிலத்து வேலி

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.


பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், நுணாவிலூரான், அ.அன்ரனி.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, கோவை கமலா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. தாய்மடியின் தாலாட்டு

இரா.செங்கதிர்.

இரா.செங்கதிர், கோகிலன், அன்பழகன், பிரபாகரன்.

செங்கதிர், ஜெசிகரன், சுரேஸ், கலைவாணி, லுகிஸ், கணேஸ், ஜெயந்தன்.

விடியல் இசைக்குழு,தமிழீழம்.

24/07/2004

  1. திசைகள் வெளிக்கும்

யாழ் ரமணன்

???

???

கலை பண்பாண்டுக் கழகம், தமிழீழம்.

12/04/1996

  1. திசையெங்கும் இசைவெள்ளம்

வர்ண இராமேஸ்வரன்

புதுவை இரத்தினதுரை

வர்ண இராமேஸ்வரன்

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரித்தானியா.

~1999

  1. திலீபனின் கீதாஞ்சலி 

???

புதுவை இரத்தினதுரை, வீரமணி ஐயர் மற்றும் ???

வர்ண இராமேஸ்வரன், குமாரசாமி, குலசிங்கம், பொன் சுந்தரலிங்கம் மற்றும் ???

???

1993>

  1. தீக்குளித்த நேரம்

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, துளசிச்செல்வன், உதயலட்சுமி, அன்ரனி, முல்லைக்கமல்.

எஸ்.ஜி.சாந்தன், இசை அமுதன், ஜெயபாரதி, யுவராஜ், கப்டன் இசையரசன், குமரன், குமாரசாமி, சாகித்யா, திவாகர்.


பின்னணிப் பாடகர்கள்: நகுலன், சந்திரஜோதி, சாருமதி, தமிழ்க்கவி.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/04/2003

  1. தீயில் எழும் தீரம்

‘இசைவாணர்’ கண்ணன்.

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா.

ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், ஜெகனி.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

15/07/2005

  1. திலீபன் அழைப்பது சாவையா?

???

???

???

???

1987

  1. துளிர்கள்

???

???

???

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், டென்மார்க்

  1. தேசக் காதல்

???

???

???

???

  1. தேசக் காற்று

சந்திரு

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன் , இராசலிங்கம், புலவர் சிவநாதன், மணமகள்.

பொன் சுந்தரலிங்கம், மதினி சிறிகந்தராஜா, பொன் சுபாஸ் சந்திரன்

அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

  1. தேசத்தின் குரல்

வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா.

எஸ்.ஜி.சாந்தன், வர்ண இராமேஸ்வரன், வசீகரன், சதிரமோகன், ரி.எல்.மகாராஜன், பிரசன்னா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. தேசத்தின் புயல்கள் 

யாழ் ரமணன், எஸ்.பி. ஈஸ்வரநாதன், முரளி, சிறீகுகன்!?

அறிவுக்குமரன், மாதவன் மற்றும் ???

எஸ்.ஜி.சாந்தன், செங்கதிர், தனுராஜ், குமரதாஸ், மாதவன், ஜெயா சுகுமார், நிரோஜன், சங்கரி, மணிமொழி, திருமலைச் சந்திரன், முத்துக்குமரன் மற்றும் ???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்


உருவாக்கம்: இம்ரான் பாண்டியன் படையணி 

~11/1997

  1. தேசத்தின் புயல்கள் பாகம் 02

தமிழீழ இசைக்குழு, சிறீகுகன் மற்றும் யாழ் ரமணன்

???

சாரங்கன், செம்பருதி, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமாா், செங்கதிா், மாசல், நிரோஜன், பிறின்சி, தனுராஐ், தியாகராஐா, திருமலைச் சந்திரன், தவமலா்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்


உருவாக்கம்: இம்ரான் பாண்டியன் படையணி

26/02/1999

  1. தேசத்தின் புயல்கள் பாகம் 03

எஸ்.பி.ஈஸ்வரநாதன், செயல்வீரன், இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, பண்டிதர்.பரந்தாமன், உதயலட்சுமி, செம்பருதி, கஜேந்திரன், துளசிச்செல்வன், இளநிலா, வேலணையூர் சுரேஸ்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், இளந்தீரன், யுவராஜ், சந்திரமோகன், தனேந்திரன், தவமலர், பிறின்சி

இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

03/03/2002 

  1. தேசத்தின் புயல்கள் பாகம் 04

யாழ். ரமணன்


புதுவை இரத்தினதுரை, இசையருவி, ஆதிலட்சுமி சிவகுமார், துளசிச்செல்வன், கு. வீரா, கானகன், மாதங்கன், சிறீதரன், கலைச்செல்வன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், ஜெயபாரதி, திவாகர், யாழ்ரமனன், மேரி, நிரோஜன், கப்டன் இசையரசன், ஜெகனி, றொபேட், வரதன்.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

02/10/2005

  1. தேசத்தின் புயல்கள் பாகம் 05

அதியமான்

புதுவை இரத்தினதுரை, இசையருவி, ராணி மைந்தன், துளசிச்செல்வன், கு. வீரா, வேலணையூர் சுரேஸ், செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், யுவராஜ், மணிமொழி, பாடகி, கப்டன் இசையரசன், கானகி, வசீகரன், கார்த்திக், மாணிக்க விநாயகம், கல்பனா, சந்திரமோகன். 


பின்னணிப் பாடகர்கள்: பாடகி, புவீத்திரா, தமிழ்க்கவி, சிவலிங்கம்.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

19/09/2007 

  1. தேசம் நோக்கி

???

???

???

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நோர்வே கிளை

29/10/1998>

  1. தேசம் மறவோம்

சாரு,கனி.

சதா பிரணவன், T.A ரொபேட், சுதன்ராஜ், வேந்தன், சாரு சுபா.

ஜெய்கிசன், ஜீவன், ஆசா, நிலானி, வதனன், குகன்.



முன்னுரை : கோபிகா

தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு.

  1. தேனிசைத் தென்றலும் புயலும்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா, சதாசிவ துரைராஜ்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா, அசோகரெட்ணம்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. தொலைதூர விடுதலைச் சுவடுகள்

தமிழீழ இசைக் கலைஞர்கள்

கப்டன் கஜன் அவர்களின் ஐந்து பாடல்களும் மற்றும் தாயகக் கவிஞர்களின் ஏனைய பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழீழ கலைஞர்கள்

பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. தோள் கொடுப்போம்

செல்விசைசித்தர், ரெ.சண்முகம்.

கனிமொழி, காசிதாசன், சுகுமாரன், ரெ.சண்முகம், திருமாவளவன் (மலேசியா).

மலேசிய வாழ் தமிழ்க் கலைஞர்கள்.

உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசியா.

  1. நல்லை முருகன் பாடல்கள்

‘இசைவாணர்’ கண்ணன்

புதுவை இரத்தினதுரை

வர்ண இராமேஸ்வரன்

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்

03/08/1994

  1. நினைவாஞ்சலிக்கீதங்கள்

எஸ்.கண்ணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனி கிளை.

  1. நெய்தல்

‘இசைவாணர்’ கண்ணன்

இது விடுதலைப் புலிகளின் கடற்புலி அமைப்புக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சி இது.

எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு, புவனா இரத்தினசிங்கம், பார்வதி சிவபாதம், கந்தசாமி, பௌசியன் (பவுஸ்ரின் சியோன்), மேளின் வேஜினி

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.


(இது தமிழீழத்திலிருந்து வெளியான ஏழாவது வெளியீடாகும்)

10/07/1992

  1. நெருப்பலைகள்

புஷ்பவனம் குப்புசாமி

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி.

அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. நெருப்பில் நீராடுவோம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.


பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன்.

அனைத்துலகச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. நெருப்பின் சலங்கை

இசைவடிவம்: கலைமாமணி ஏ.கே.காளீஸ்வரன். 


இசை இயக்கம் மற்றும் நட்டுவாங்கம்: தமிழிசைப்பாணர் ஏ.கஜேந்திரன்.

கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன்.

ரி.எல்.மகாராஜன், சீதாலட்சுமி, கஜேந்திரன், நிர்மலா.

உருவாக்கம் – வெளியீடு:

தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண்.

  1. நெருப்பு நிலவுகள்

அமரர் யாழ் ரமணன்

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி (இது இவர்களின் இரண்டாவது வெளியீடாகும்)


உருவாக்கம்:

கலை பண்பாட்டுக் கழக மகளிர் பிரிவு (இது இவர்களின் முதலாவது உருவாக்கமாகும்)

09/1995

  1. பகை வெல்லும் புலிவீரம்

போஸ்கோ

புதுவை இரத்தினதுரை, இணுவை செல்வமணி, ஜேசுதாசன், கந்தசாமி.

மூர்த்தி, செல்வேந்திரன், ஆனந்தன், திருமதி பிரேமா, றீசன், ஜனெந்திரன், திருமதி தேவமனோகரி, ரஜீன், குமர குருபரன், மேத்தா, ஜேசுதாசன், போஸ்கோ.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், இத்தாலிக் கிளை.

31/10/2004

  1. பசுந்தேசம்

ஸ்ரீகுகன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சட்சரம், பொலிகையூர் சிந்துதாசன், தேவ கருணாநிதி, பொன் காந்தன், தமிழ்க்கவி, யாழ்வீரன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சீலன், யுவராஜ், கப்டன் இசையரசன், றொபெர்ட், குமரன், நிமல், ஜெயபாரதி, மேரி, டிலானி, சாகித்தியா, ஜெகனி, விமலினி.

பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

19/10/2005

  1. பரணி பாடுவோம்

‘இசைவாணர்’ கண்ணண்

பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்), யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை, பைப் (பாவரசன்???), சகாதேவன், செல்லக்குட்டி (முல்லைச் செல்வன்)

எஸ்.ஜி.சாந்தன், குலசிங்கம் மற்றும் ??

(இது தமிழீழத்திலிருந்து வெளியான மூன்றாவது வெளியீடாகும்)

01/06/1991

  1. பாசறைப் பாடல்கள்

எஸ். வைத்தியநாதன்

புதுவை இரத்தினதுரை, 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், பங்காரு

வர்ண இராமேஸ்வரன், வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் மற்றும் அவருடைய குழுவினர், தீபன் சக்கரவர்த்தி, ராகவேந்தர்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. புதிதாய்ப் பிறக்கின்றோம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, செந்தோழன்.

ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், சந்திரமோகன், திப்பு, கார்த்திக், யுவராஜ், கப்டன் இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சீலன்.


அறிமுக உரை: கவிஞர் கு.வீரா, சகிலா.

படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி, தமிழீழ விடுதலைப் புலிகள்.



உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

22/06/2006

  1. புதிய காற்று

முகிலரசன்

‘கரும்புலி’ மேஜர் நிலவன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், நிரோஜன், சௌந்தரராஜன், சுரேந்திரன், கப்டன் இசையரசன், வாணி சுகுமார், யுவராஜ், சர்மிலன், செல்வண்ணன்


அறிமுக உரை:

 புதுவை இரத்தினதுரை 

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2008 

  1. புதியதோர் புறம்

அருணா இசைக்குழு

???

எஸ். ஜி. சாந்தன், ஜெயா சுகுமார், மற்றும் ஏனையோர்???

மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினர்


உருவாக்கம்: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

30-12-1990

  1. புதுவேட்டு புலிப்பாட்டு

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா

மறத்தமிழ் வேந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன்.

உலகத் தமிழர் வன்கூவர் கிளை (பிரிட்டிஸ் கொலம்பியா), கனடா.

21.03.2008

(என்று நம்புகிறேன்)

  1. புயல் அடித்த தேசம்

காந்தன்


பின்னணி இசை: சாணக்யன்

புலவர் புலமைப் பித்தன், காளிதாசன், காந்தன் (அலிகான்), அரவிந்தன், அலிகான்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஹரிகரன், உன்னி கிருஷ்ணன், ஜெயச்சந்திரன், கிருஸ்ணராஜ், சித்திரா, பரசுராம், சுனந்தா, சாரதா, சோபனா, கோரஸ், குஞ்சுரம்மா.

சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

07/12/1997

  1. புயலாகும் புது ராகங்கள்

???

???

???

???

  1. புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்

???

???

திருமதி அர்ச்சயா ஆனந்தகரன்

நோர்வே கலை பண்பாட்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப் புலிகள்.

23/07/2003

  1. புலத்தில் தமிழர் எழுட்சிப் போராட்ட பாடல்கள்

???

???

???

புலத்தில் பல்வேறு நாடுகளில் புலிகளின் காலத்தில் பாடப்பட்ட எழுச்சி கானங்கள் ஒன்றாக்கப்பட்டு ஒரு இறுவெட்டில் "தேசக்காற்று" என்ற வலைத்தளத்தால் வெளியிடப்பட்டது.

2009<

  1. புலிகளின் புரட்சி இசை விழா

எஸ்.கண்ணன்.

மேஜர் சுரேந்தி (நித்திலா), முகில்வாணன், அமுதநதி சுதர்சன்,

எஸ்.கண்ணன், புவனேஸ்வரன், முகில்வாணன், யேசுதாஸ், அனுரா, அமுதா புலேந்திரன், கலாநாயகி சூரியகுமார், உதயன், ஜெகதா, ஜெயந்தினி, ஷோபா, செல்வராணி.

கலை பண்பாட்டுக் கழகம் ஜேர்மனி கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

11/11/1989

  1. புலிகள் ஓய்வதில்லை

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா , சாந்தி நாகராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. புலிகள் பாடல்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, தேவேந்திரன்

'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், புலமைப்பித்தன், புதுவை இரத்தினதுரை

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, சொர்ணலதா, மலேசியா வாசுதேவன்

???

  1. புனர்வாழ்வு

எம்.எஸ்.விஸ்வநாதன்.

உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பிறைசூடன், மு.மேத்தா, குகநாதன்.

எம்.எஸ்.விஸ்வநாதன், ஆனந்த நாராயனன், கிருஸ்ணராஜ், கங்கா, ஸ்ரீநிவாஸ், கோவை முரளி.

ஊடகப்பிரிவு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, தமிழீழம்.

24/09/2005

  1. பூகம்பப் பொறிகள்

தமிழீழ மகளிர் இசைக்குழுவினர்.

புதுவை இரத்தினதுரை, ராணிமைந்தன், கவிஞர் கு.வீரா, செந்தோழன், வேலணையூர் சுரேஸ், செல்வி, தமிழினி.

வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், சர்மிலன், பிரபுராஜ், இசைப்ரியன், கானகி, கலைவாணி, இசைவிழி 


அறிமுகக்குரல்:

செம்பியன்

தமிழீழ மகளிர் கலை பண்பாட்டுக் கழகம்.



ஒலிப்பதிவு: அருளினி 


உருவாக்கம்: மாங்கனி கலையகம்

18/03/2008

  1. பூநகரி நாயகன்

???

தமிழீழக் கவிஞர்கள்.

போராளிகள் , தமிழீழப் பாடகர்கள்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. பூபாளம்

அருணா இசைக்குழு

???

???

???

1990/12

  1. பொங்குதமிழே

அரிமா அழகன்

சிலம்பம்.


இது இவர்களின் இரண்டாவது வெளியீடாகும்

16/10/2004

  1. பொங்குதமிழ் 2008

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இசைப்பிரியன், எஸ்.கண்ணன், நிரு, கவி, செந்தூரன் அழகையா, யூட் ஜெயராஜ், கனி, ராஜநீசன், வர்ண இராமேஸ்வரன், சதீஸ்.

அம்புலி, கவிஞர் கு.வீரா, தா.சிவநாதன், ரூபன் சிவராஜா, ஜேர்மனி திருமலைசெல்வன், புலவர் சிவநாதன், சதாபிரவணன், பாவலர் அறிவுமதி, விஜய் ஆனந், நோர்வே கவியன்பன், மனோ

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.கண்ணன், வர்ண. இராமேஸ்வரன், கார்த்திக், சந்திரமோகன், ஹரிசரண், கஜன் டில்சா, வதனன், ஜெய்கீசன், ஷாரு, சதாபிரவணன், கனி, சி.ரி.உத்தமசீலன், திருமாள், ராஜநீசன், கிருஸ்ணராஜ், செந்தூரன் அழகையா.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

2008

  1. போய்வா நண்பனே

???

???

???

???

??

  1. போர் முரசம்/ விடுதலை முரசம்

ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்.

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

  1. போர்ப்பறை

தமிழீழ இசைக்குழு

முல்லைச்செல்வன்

கப்டன் சிலம்பரசன் (குட்டிக்கண்ணன்), தேவா, சங்கர், இராஜேந்திரன், இதன், தவமலர், புவனா, இன்பநாயகி

கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

1999

  1. போரிடும் வல்லமை சேர்ப்போம்

செயல்வீரன்



உதவி: சதா  திருமாறன் .

புதுவை இரத்தினதுரை, ச.வே.பஞ்சாச்சரம், துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், அம்புலி, யாழ்வீரன், கு.வீரா, ஜெயசீலன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், சீலன், பார்வதி சிவபாதம், மேரி, பிறின்சி, மணிமொழி, கப்டன் இசையரசன், இசையருவி.

மருத்துவப்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள்.


உருவாக்கம்: சிட்டு கலையகம், புலிகளின்குரல்

14/06/2004

  1. மண்ணுறங்கும் மாவீரம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, கோ.கோனேஸ், செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசைப்பிரியன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், கானகி (பின்னணிப் பாடகர்கள்) முகிலரசன் , யுவராஜ் , சீலன் , மணிமொழி , பாடகி

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

  1. மண்ணே வணக்கம்

அசோக் ரமணி , கசேந்திரன்.

காசி ஆனந்தன்  (01.02.03.04.05.07), புதுவை இரத்திணதுரை( 06), பண்டிதர் பரந்தாமன் (08.09).

திருமதி குமுதினி, திரு அசோக் ரமணி

???

  1. மண்ணைத் தேடும் இராகங்கள்

தில்லைச்சிவம்

கப்டன் கஜன் மற்றும் தாயக கவிஞர்கள்

???

ஈழமுரசு – பிரான்ஸ்

  1. மாவீரகானம்

கண்ணன் (ஜேர்மனி)

அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன்.

எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா.

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக் கிளை.

  1. மாவீரர் புகழ் பாடுவோம்/ சந்தனப் பேழை

???

??

???

???

  1. மீண்டும் எழுவோம்

முல்லை வேந்தன்

நிலா சந்திரன், ஸ்ரீதர் பிச்சையப்பா, நாகபூசனி கருப்பையா, வேலனையூர் சுரேஸ்,  முல்லையூர் அறிவு, மட்டுநகர் கௌசிகன்

????

???

  1. மீனிசை

2ம் லெப்டினன்ட் ரசிகன் இசைக்குழு போராளிக் கலைஞர்கள்.

அரியம், கவியுகன், புலேந்திரன், சச்சுதானந்தம்.

எஸ்.ஜி.சாந்தன், மனோ, சிவராஜா, குலம், யாழினியன், சந்திரமோகன் , தவமலர், கோகிலா, கலைவாணி.

வினோதன் படையணி, அன்பரசி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/11/2003

  1. முடிசூடும் தலைவாசல்

இசைப்பிரியன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்திரதுரை, கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், ரி.எல்.மகாராஜன், வசிகரன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், யுவராஜ், சாகித்தியா.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/01/2006

  1. முல்லைப்போர்

முரளி, யாழ் ரமணன், தமிழீழ இசைக்குழு மற்றும் ???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

11/04/1997

  1. முறிகண்டி முதல்வன்

“இசைவாணர்” கண்ணன்


ஒலிப்பதிவுக் கூடம்: சப்தமி 

தை.காமராஜ்

எஸ்.ஜி.சாந்தன், எஸ்.குமாரசாமி, உமாரமணசர்மா, கதிர்.சுந்தரலிங்கம், ஜெயா.சுகுமார், நிரோஜன், வசீகரன், சி.ரவிக்குமார் 


இணைக்குரல்: ஜிகானி, சாந்தி


ஒலிப்பதிவு: முரளி

???

05/03/2004

  1. முன்னேறிப் பாய்வதென்ன அம்மா 

தமிழீழ இசைக்குழு

???

???

கலை பண்பாட்டுக் கழகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

11-12/1995

  1. மேஜர் சுரேந்தியின் பாடல்கள் 

???

???

???

07/1997

  1. யாக ராகங்கள்

'இசைவாணர்' கண்ணன்

முல்லைச்செல்வன், சிவசோதி ("எங்கள் ஈழம்" பாடல்)

புவனா இரத்தினசிங்கம், சிவசோதி, நெடுங்கேணி ராஜேந்திரன், இந்திரா

???

28/10/1991

  1. வங்கத்திலே ஒரு நாள் 

தமிழீழ இசைக்குழு

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. வரலாறு தந்த வல்லமை

‘இசைவாணர்’ கண்ணன்.


இசை உதவி: இசைத்தென்றல்.

புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, புரட்சிகா, தமிழவள்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், றொபேட், மேரி, ஜெயபாரதி கெளசிகன், மணிமொழி கிருபாகரன்


அறிமுகக் குரல்கள்: தமிழ்த்தென்றல், புரட்சிநிலா.

2ம் லெப். மாலதி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.



உருவாக்கம்: ஸப்தமி கலைக்கூடம்.

25/11/2004

  1. வரும் பகை திரும்பும்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், மார்சல், துளசிச்செல்வன், கவிஞர் கு.வீரா, இளம்பருதி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சீலன், கப்டன் இசையரசன், பார்வதி சிவபாதம், புவனா இரத்தினசிங்கம், மணிமொழி, ஜெயபாரதி, மேரி, தமிழ்க்கவி.

கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப். கேணல் குட்டிசிறி மோட்டர் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/02/2004

  1. வாகையின் வேர்கள்

இசைப்பிரியன் 

புதுவை இரத்தினதுரை, அம்புலி, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், யோ.யோகி, கலைப்பருதி, செந்தோழன், ராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன், யுவராஜ், சீலன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், திருமாறன், கல்ப்பனா, ரஞ்சித்குமார், பிரசன்னா, மீனாட்சி, கிறேசி, சங்கீதா, பிறின்சி, மணிமொழி, கல்யாணி, கானகி, அபர்ணா


அறிமுகக் குரல்: தமிழினி.

லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.



உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

~2005

  1. வாத்திய இசையின் ஈழராகங்கள்

???

???

???

???

  1. வானம் தொடும் தூரம்

சிறீகுகன், செயல்வீரன், இசைப்பிரியன்.

புதுவை இரத்தினதுரை, செந்தோழன், துளசிச்செல்வன், கலைப்பருதி, கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, வேலணையூர் சுரேஸ், தமிழவள், ஆதிலட்சுமி சிவகுமார்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், சந்திரமோகன், கப்டன் இசையரசன், புவனா ரத்தினசிங்கம்.


பின்னணிப் பாடகர்கள்: சீலன், கோகுலன், பாடகி, கானகி


தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.


உருவாக்கம்: தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்.

  1. வானுயரும் புலி வீரம்

எ.பொஸ்கோ.

வி.ரி.சிவபாலன் (காந்தி), மு.கரோலின், ஜெ.யூட், கிங்சிலி றெஜீனா, யோசப் ரட்ணகுமார், அ.அந்தோனிப்பிள்ளை (ஜெயிலா), செ.ஜெயச்சந்திரன் (பாபு).

லெஸ்லி, து.மேதா, டே.ஆனந்தராஜ், அ.சுஜீந்தினி, ஜொ.ரங்கன், வே.சிவமூர்த்தி, டே.ஆனந்தராஜ், மு.கரோலின், லே.ராஜன், லெஸ்லி.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், இத்தாலிக் கிளை.

  1. விடியலின் பாடல்கள்

"இசைவாணர்" கண்ணன்

கோ.கோணேஸ், வீரமணி ஐயர், மேஜர் செங்கதிர் மற்றும் …???

மேஜர் சிட்டு, செங்கதிர், பார்வதி சிவபாதம் மற்றும் ...???

நிதர்சனம்

24/05/1992

  1. விடியலைத் தேடும் பறவைகள்

யாழோசை கண்ணன்

ஜெயகௌரி, பிரதீபா, வாசுகி, தர்சி, சலோமை, கொலின்ஸ், சாந்தி

ச. மேளின் வேஜினி, சந்துரு, றொனால்ட், விஜயலட்சுமி, கொலின்ஸ், சி. கௌசி

யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள், தமிழீழம்.



மீள் வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்

28/01/1993

  1. விடியும் திசையில்

தமிழீழ இசைக்குழு

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. விடிவின் ராகங்கள்

தமிழீழ இசைக்குழு (மார்ஷல்)

29/01/1994

  1. விடுதலை நெருப்புக்கள்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஷ், செம்பருதி, அன்பரசன், தூயவன், கஜனி

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, இளந்தீரன், செம்பருதி, தனேந்திரன், கலைமாறன், வித்தகி, சீலன், ஜீவன், மதுரா, ரதன்.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

03/03/2002 

  1. விடுதலைப் போர் முரசு

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா குழு


1994

  1. விடுதலை வரும் நாள்

சி.ஆர்.பாஸ்கரன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், டாக்டர் விமுனா மூர்த்தி, சி.ஆர்.பாஸ்கரன்.

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை.

08/1998

  1. விடுதலை வேள்வி 

(நாட்டிய நடனப் பாடல்)

எஸ்.கண்ணன்

அமுதநதி சுதர்சன்

எஸ்.கண்ணன், அனுரா, தா.சிவநாதன், அமுதா புலேந்திரன், ஷோபா கண்ண்ணன், தேவிகா அனுரா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், ஜேர்மனிக் கிளை

11-12/1995

  1. விடுதலைத்தீ

???

???

???

???

  1. விண்ணேறிய வீரம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்ப்பா, இளங்கோ செல்லப்பா

புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், அறிவுமதி

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்ப்பா, சாந்தி நாகராஜன், இளங்கோ செல்லப்பா

கனடா – ஈழமுரசு.

  1. விழி நிமிர்த்திய வீரம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், தமிழவள், செல்வி, புரட்சிக்கா, மலைமகள்.

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், வசீகரன், யுவராஜ், சீலன், கப்டன் இசையரசன், சந்திரமோகன், றொபேட், ஜெயபாரதி கெளசிகன், மணிமொழி கிருபாகரன், பிறின்சி, மேழின் இமானுவேல், தவமலர்.



அறிமுக உரை: சுபா

மேஜர்.சோதியா படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.



உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/04/2005

  1. விழித்திருப்போம்

இசை: சிறீகுகன், செயல்வீரன், முகிலரசன்

புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், யுவராஜ், திருமலைச் சந்திரன், பிறின்சி, கானகி, வசீகரன், கப்டன் இசையரசன், தயாளன், சந்திரமோகன்.

புலனாய்வுத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

12/03/2008

  1. விழித்தெழுவோம்

“இசைவாணர்” கண்ணன்

மேஜர் பாரதி, தமிழவள், வசந்தமதி, கீர்த்தனா, உதயலட்சுமி, காயத்திரி, ஜெயா,

புவனா ரத்னசிங்கம், எஸ்.ஜி. சாந்தன், மணிமொழி, விதுசா, சுகந்தி, அபிராமி, ராதிகா, வர்ண. இராமேஸ்வரன், மேஜர் சிட்டு

  


மகளிர் அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/01/1993

  1. விளக்கேற்றும் நேரம்

முகிலரசன்

துளசிச்செல்வன், செந்தோழன், அன்ரனி, கவிஞர் கு.வீரா, அம்புலி, இராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், யுவராஜ், கப்டன் இசையரசன், சந்திரமோகன், வாணி சுகுமார், பிறின்சி (பின்னணிப் பாடகர்கள்) மணிமொழி, பாடகி, கானகி, மதுராந்தகி, சீலன், கலையரசன், நிமால்.

தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம்.

8/12/2007

  1. வீரத்தின் விளைநிலம்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. வீரத்தின் வேர்கள்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.


பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

கவி அன்பன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, தி.லோ.மகாராஜன், கல்பனா.


அறிமுக உரை: தமிழீழ உணர்வாளர் பழ,நெடுமாறன்.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. வீரம் விளைந்த பூமி

தி.லோ.மகாராஜன்.

கவி அன்பன், (6வது பாடல்) மறத்தமிழ்வேந்தன்.

தி.லோ.மகாராஜன், கிருஷ்ணராஜ், முகேஷ்.

வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

  1. வீழமாட்டோம்

???

???

???

???

  1. வெஞ்சமரின் வரிகள்

எஸ்.பி.ஈஸ்வரநாதன், தமிழீழ இசைக்குழு.

புதுவை இரத்தினதுரை, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், கப்டன் இசையரசன், அருணா.


பின்னணிப் பாடகர்: பிரியதர்சினி.

2ம் லெப்.மாலதி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.


உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

10/10/2002

  1. வெல்லும் வரை செல்வோம்

இசைப்பிரியன்

நாவண்ணன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி, மார்சல், வீரா, கலைப்பருதி, செந்தோழன்.

ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், கப்டன் இசையரசன், சந்திரமோகன், மேரி, பிறின்சி, கானகி, முகிலரசன், மணிமொழி கிருபாகரன், இசைமதி, புரட்சிக்கா.

கப்டன் ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்

04/05/2005


(ஜெயந்தன் படையணியின் 12ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெளியானது)

  1. வெற்றி நிச்சயம்

எஸ்.கண்ணன்.

அமுதநதி சுதர்சன்.

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் யேர்மனிக் கிளை.

  1. வெற்றி நிச்சயம் - 1

சதீஸ்

அறிவுமதி, தெய்வராஜன், யுகபாரதி, கல்கிதாசன்

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே


உருவாக்கம்:- இரா.சிறிதரன்.



  1. வெற்றி நிச்சயம் - 2

சதீஸ்

புதுவை பொன்.கோணேஸ், இரா.தெய்வராஜன், வதன கோபாலன், ஈழப்பிரியா, தி.உமைபாலன், சோதியா, ந.கிருஷ்ணசிங்கம்.



அறிமுக உரை: ‘உணர்ச்சிக்கவிஞர்’ காசி ஆனந்தன்

கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம், இரா.சிறிதரன், இலக்கியா, யாழினி, அனோஜா, சத்யா, அபிராமி, எஸ்.என்.சுரேந்தர், இரா.தெய்வராஜன்

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே


உருவாக்கம்:- இரா.சிறிதரன்.



ஒலிப்பதிவு - ‘நாதாந்தம்’ ஒலிப்பதிவுக் கூடம் – நோர்வே, ‘எஸ்.எம்.எஸ்’ ஒலிப்பதிவுக் கூடம், சென்னை.

  1. வெற்றிக் காற்று

ரி.எல்.மகாராஜன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

ரி.எல்.மகாராஜன், கோவை கமலா.

வெளியீட்டுபிரிவு,அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. வெற்றிமுரசு

தமிழீழ இசைக்குழு

புதுவை அன்பன், செல்வம்.

கப்டன் சிலம்பரசன் (குட்டிக்கண்ணன்), இரத்தினம், திரவியம், தயாளன், கந்தையா, பீரதிபன், தவபாலன், தவமலர், புதுவை அன்பன், நவம், இன்பநாயகி, தேவன், விஜயன், கெளசிகா.

கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

  1. வேங்கைகளின் விடுதலை வேதங்கள்

(இதற்குள் தான் தமிழீழ தேசியக்கொடிப் பாடல் மற்றும் துயிலுமில்லப் பாடல் என்பன வெளிவந்தன.)

'இசைவாணர்' கண்ணன்

புதுவை இரத்தினதுரை, இரும்பொறை, ரவி, 'மாமனிதர்' நாவண்ணன்

எஸ். ஜி. சாந்தன் மற்றும் அவரது குழுவினர், சியாமளா, மிதிலா, பெளசியன், குணமலர், பொன். சுந்தரலிங்கம்

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்


26/11/1990>



  1. வேரில் துளிர்க்கும் தளிர்கள்

???

???

???

???

  1. வேரில் விழுந்த மழை

இரா. செங்கதிர்.

புதுவை இரத்தினதுரை, செந்தோழன், அன்டனி, ஓவியநாதன், கலைச்செல்வன்.

திருமலைச் சந்திரன், நிரோஜன், செங்கதிர், பார்வதி சிவபாதம், யுவராஜ், கப்டன் இசையரசன், சந்திரமோகன், அரசண்ணா, புகழ்வேந்தன், சுரேஷ், சசீந்திரன், நிமல், பாக்யராஜ், தவமலர், வித்தகி, பாகேஸ்வரி, சஞ்சுதா, சுபா, ஜனனி.

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்.



உருவாக்கம்: தமிழீழ விடியல் இசைக்குழு, தமிழீழம்.

  1. வேர் விடும் வீரம்/ வல்லமை தரும் மாவீரம்

(இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி வெளியீடு ஆகும்.)

அறியில்லை

கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழத்தில் வாழ்ந்த கவிஞர்கள் பலர்

எஸ்.ஜி. சாந்தன் மற்றும் தமிழீழத்தில் வாழ்ந்த கலைஞர்கள் பலர்

வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  1. வேர்களைத் தேடி

வர்ண. ராமேஸ்வரன்

நீதன் சண்முகராஜா, வர்ண.ராமேஸ்வரன், பரணிகா இடைக்காடு, சுதமதி சதானந்தன்

சாய்பவித்திரன் ராஜகுமார், லக்ஸ்மணன் ராஜகுமார், ரஜீவ் சத்தியசீலன், சுகந்தராஜா நீதிராஜா, ரமணன் மோகனதாஸ், நிரூபன் நாகேந்திரன், சாம் பீலிக்ஸ், ஆருத்திரா பாக்கியநாதன், சிந்து சபாநாதன், ஜனனி சிவமோகன், சாயினி சிவமோகன், மது, கிருத்திகா சிவகுமார், சிந்துசா இந்திரசித்து, 

கனடா தமிழ் இளையோர் அமைப்பு


ஒலிப்பதிவு: சங்கீதா ஒலிப்பதிவுக்கூடம்


  1. ஜீவ கானங்கள்

???

மணி, நாகேஷ், ஜெயா, கே.கஜன்.

செல்வலிங்கம், குமுதா, இந்திரன், ஜெயகுமார், கஜன், தாஸ்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனிக் கிளை.

11/04/1997

  1. ஜீவ ராகங்கள்

பரா

கப்டன் கஜன், ஜெயா, பரா.

எஸ்.கண்ணன், அனுரா, அமுதா, புலேந்திரன், தாஸ்.

கலை பண்பாட்டுக் கழகம், தவிபு, பிரான்ஸ் கிளை

1990-01/1991

  • சிறப்பு நன்றி: இதற்குள் உள்ள அனைத்து வெளியீட்டுத் திகதிகளையும் பல விடுபட்ட தகவல்களையும் தேடியெடுத்துத் தந்துதவிய பெயர் குறிப்பிட விரும்பாத கள உறவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

மேலுள்ள அட்டவணைக்கான உசாத்துணை:

  • பல வலைத்தளங்களில் இருந்து இறுவட்டுகளிற்கான விரிப்புகள் (பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் மற்றும் வெளியிட்டோர்) எடுக்கப்பட்டன.

 

  1. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாகம் 1

  2. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாகம் 4

  3. தரிசனம் பார்வை – 1” 31 mins

  4. விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்: க.வே.பாலகுமாரன்

  5. துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு | திரு.யோகரட்ணம் யோகி (2007 ஆம் ஆண்டு)

  6. நிதர்சனம், புலிகளின்குரல் உருவாக்கத்தின் காரணகர்த்தா பரதன் வாழ்க்கை வரலாறு

  7. தாயகப் பாடகர் இசைக் கலைமணி திரு. குலசிங்கம் அவர்கள் மறைவு!!

  8. காலத்தால் அழியாத ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்கள் தந்த “பூத்தகொடி” மறைந்தது!

  9. தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு - Yarl.com களம் 2 வழியாக

  10. புலிகளின் புலனாய்வுத்துறையினரின் "விழித்திருப்போம்" குறுவட்டு வெளியீடு - Yarl.com களம் 2 வழியாக

  11. மகளிர் இசைக்குழுவின் "பூகம்பப்பொறிகள்" வெளியீடு - Yarl.com களம் 2 வழியாக

  12. புகழ்பூத்த ஈழத்து கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" சின்னஞ்சிறு கதைகள் நூல்வெளியீட்டு விழா: 22.03.2008

  13. தமிழ் அலை 2003.11.09 - page 20

  14. ஈழநாடு-1992.05.25 page 4

  15. ஈழநாதம் 1991.10.29 - பக் 2

  16. ஈழநாதம்-1990.10.23

  17. ஈழநாதம் -1990.12.31

  18. ஈழநாதம் -1990.11.26

  19. ஈழநாதம் -1991.10.02

  20. ஈழநாதம்-1990.12.02 page 1

  21. ஈழநாதம்-1990.12.03 page 1

  22. ஈழநாதம்-1991.10.13 பக் 8

  23. ஈழநாதம்-1991.10.14 பக் 7

  24. ஈழநாதம்-1991.05.31

  25. ஈழநாதம் 1991.06.16 பக். 06

  26. ஈழநாதம்-1991.10.29 - பக் 2

  27. ஈழநாதம்-1991.10.30 பக் 7

  28. ஈழநாதம்-1991.11.03 பக் 2

  29. ஈழநாதம்-1991.11.04 பக் 7

  30. ஈழநாதம்-1991.11.06 பக் 5-6

  31. ஈழநாதம்-1992.03.16

  32. ஈழநாடு-1992.05.25 பக் 4

  33. ஈழநாதம்-1992.07.11

  34. ஈழநாதம்-1992.07.11

  35. ஈழநாதம்-1992.07.10

  36. ஈழநாதம்-1992.08.09

  37. ஈழநாதம்-1992.11.15

  38. ஈழநாதம்-1992.11.19

  39. ஈழநாதம்-1992.05.08

  40. ஈழநாதம்-1993.01.06

  41. ஈழநாதம்-1993.01.05

  42. ஈழநாதம்-1993.01.27

  43. ஈழநாதம்-1993.07.02

  44. ஈழநாதம்-1993.07.01

  45. ஈழநாதம்-1993.01.30

  46. ஈழநாதம்-1993.09.25

  47. ஈழநாதம்-1994.01.29

  48. ஈழநாதம்-1994.01.30

  49. ஈழநாதம்-1994.07.30

  50. ஈழநாதம்-1994.07.31

  51. ஈழநாதம்-1994.11.08

  52. ஈழநாதம்-1994.11.15

  53. ஈழநாதம்-1994-11.16

  54. ஈழநாதம்-1994.11.17

  55. ஈழநாதம்-1994.09.01

  56. ஈழநாதம்-2002.12.27

  57. ஈழநாதம் 2003.01.17 (வெள்ளிநாதம்) பக். 11

  58. ஈழநாதம்-2003.04.28

  59. ஈழநாதம்-2004.10.18

  60. ஈழநாதம்-2004.10.1

  61. ஈழநாதம்-2004.07.05

  62. ஈழநாதம்-2004.03.05

  63. ஈழநாதம் 2004.11.19 (வெள்ளிநாதம்) - page 24

  64. ஈழநாதம் 2004.11.25 - page 1

  65. ஈழநாதம்-2004.02.07

  66. ஈழநாதம்-2004.10.06

  67. ஈழநாதம்-2004.10.07

  68. ஈழநாதம்-2004.10.17

  69. ஈழநாதம்-2004.11.25

  70. ஈழநாதம் 2004.07.25 - பக். 12

  71. ஈழநாதம்-2005.05.06

  72. ஈழநாதம்-2005.04.28

  73. ஈழநாதம்-2005.04.30

  74. ஈழநாதம்-2005.05.28

  75. ஈழநாதம்-2005.10.19

  76. ஈழநாதம்-2005.10.20

  77. ஈழநாதம்-2005.10.03

  78. ஈழநாதம்-2005.09.24 பக் 4

  79. ஈழநாதம்-2005.07.16 பக் 12

  80. ஈழமுரசு-04.2002 பக்:24-30

  81. ஈழநாதம்-2005.12.26 பக் 2

  82. உதயன்-1991.10.13 பக் 4

  83. உதயன் 2002.10.11

  84. உதயன் 2007.09.20 - பக். 8

  85. உதயன் - 1995.08.10 பக் 2

  86. உதயன் - 1995.08.11 பக் 3

  87. உதயன்-1995.05.19 பக். 2

  88. வெளிச்சம் 1995.09 -  பக் 71-73

  89. களத்தில் 074

  90. களத்தில் 079 (1995.04.07) - பக். 2

  91. களத்தில் 082 (1995.05.19) - பக். 10-11

  92. களத்தில் 134

  93. களத்தில் 138

  94. களத்தில் 150

  95. களத்தில் 139

  96. களத்தில் 106 - பக் 2

  97. களத்தில்-1994.09.02

  98. களத்தில்-1999.08.12

  99. களத்தில் (27/12/1995)

  100. களத்தில் 198 (18/11/1999) பக். 7

  101. ஈழமுரசு 1995.04.27

  102. முரசொலி 1991.06.04 பக். 02

  103. விடுதலைப் புலிகள் (06/1991)

  104. விடுதலைப் புலிகள் (11/1997)

  105. எரிமலை (11/1995) - பக் 41

  106. எரிமலை (11-12/2004)

  107. எரிமலை (03/2003)

  108. எரிமலை (01/1991) - பக் 23-25

  109. எரிமலை (06/2000) - பக் 29

  110. எரிமலை (01/2008) - பக். 65

  111. எரிமலை (03/2007) - பக் 38

  112. வெளிச்சம் (09/1994)

  113. வெளிச்சம் (06-07/1992)

  114. ஒளிவீச்சு (04-05/1997)

  115. ஒளிவீச்சு (11/1997)

  116. ஒளிவீச்சு (12/1997)

  117. ஒளிவீச்சு கதிர் 66 (02/1999)

  118. ஒளிவீச்சு கதிர் 67 (03/1999)

  119. ஒளிவீச்சு கதிர் 68 (04/1999)

  120. ஒளிவீச்சு கதிர் 79 (05/2000)

  121. ஒளிவீச்சு கதிர் 81 (07/2000)

  122. ஒளிவீச்சு (10/2000)

  123. ஒளிவீச்சு கதிர் 96 (01/2002)

  124. ஒளிவீச்சு கதிர் 100

  125. ஒளிவீச்சு கதிர் 102 (ஏப்ரல்-ஆகஸ்ட் 2003)

  126. ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004)

  127. ஒளிவீச்சு கதிர் 105 (மார்ச்-ஏப்ரல் 2004)

  128. ஒளிவீச்சு கதிர் 106 (மே-ஜூன் 2004)

  129. ஒளிவீச்சு கதிர் 93 ஜூலை ஆகஸ்டு - 2001

  130. https://on.soundcloud.com/8UqEF2tLj5Bqrp4cA

  131. https://tamilnet.com/art.html?catid=13&artid=13170

  132. https://tamilnet.com/art.html?catid=13&artid=12222

  133. https://www.tamilnet.com/art.html?artid=10382&catid=13

  134. https://www.tamilnet.com/art.html?artid=8054&catid=13

  135. https://tamilnet.com/art.html?catid=13&artid=8079

  136. https://tamilnet.com/art.html?catid=13&artid=36547

  137. https://tamilnet.com/art.html?catid=13&artid=26268

  138. https://tamilnet.com/art.html?catid=13&artid=23385

  139. https://tamilnet.com/art.html?catid=13&artid=12520

  140. https://tamilnet.com/art.html?catid=13&artid=9702

  141. https://tamilnet.com/art.html?catid=13&artid=6865

  142. https://www.discogs.com/release/8277925-Various-தசததன-பயலகள-பகம-02

  143. 1994 ம் ஆண்டு தமிழீழத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய வெளியீடுகள்

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 213 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஊழியால் அழிந்துவிட்ட இறுவட்டுகள்

 

 

 

  1. இசையருவி

  2. சிவந்த மண்

  3. தமிழ் சொந்தங்கள்

  4. தாயகத் தலைவன்

  5. புயலாகும் புது ராகங்கள்

  6. விடுதலைத்தீ

  7. வீழமாட்டோம்

 

 சிலம்பம் அமைப்பினரால் வெளியிடப்பட்ட முதலாவது மற்றும் நான்காவது (வெளியிடப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது) இறுவட்டினைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 213 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அக்கினிச் சுடர்கள்

 

 

இவ்வட்டை தான் மூல அட்டையாகும்.

akkinich chudarkal.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 23/5/2024 at 22:09, ஈழப்பிரியன் said:

நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?

ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை.

வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:

 

கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன. 

https://www.eelammusic.com/popular-tracks

https://tamileelamsongs.com/a-z-eelam-songs/

https://telibrary.com/albums/

https://trfswiss.com/alubm.php

https://songs.tamilmurasam.com/norway-3/

https://eelasongs.com/

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 216 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அடிக்கற்கள்

 

 

adikkarkal.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அண்ணைத்தமிழ்

 

 

 

annaiththamizh.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அணையாத தீபம்

 

 

"தியாக தீபம்" லெப். கேணல் திலீபன் நினைவாக பல்வேறு இறுவட்டுகளில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு இதற்குள் உள்ளது. இத்தொகுப்பு வெளியான காலம் தெரியவில்லை.

 

anaiyatha theepam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அந்நியர் வந்து புகலென்ன நீதி

 

 

இது இரண்டாவது இறுவட்டாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.

 

anniyar vanthu pukalenna niithi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அலாஸ்காவில் ஓடங்கள்

 

 

இதன் மூல அட்டை கிடைக்கப்பெறவில்லை. கீழ்க்கண்ட வணிக அட்டை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. 

 

alaskavil odangkal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அலை பாடும் பரணி

 

 

ஜெனீவா உடன்படிக்கை போர் நிறுத்தக் காலத்தில் (சமாதான காலம்) சிங்களக் கடற்படையால் 10.03.2003 அன்று மூழ்கடிக்கப்பட்ட "எம்.ரி. கொய்" என்ற ஆழிக் கப்பலிலும் 14.06.2003 அன்று மூழ்கடிக்கப்பட்ட "எம்.ரி. சொய்சின்" என்ற ஆழிக் கப்பலிலும் வீரச்சாவடைந்த கடற்புலிகள், கடற்கரும்புலிகள், மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் நினைவைத் தாங்கிய இவ் இசை இறுவட்டானது கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப்.கேணல் நிரோஜன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த கடற்புலி மாவீரர்களினது ஐந்தாம் ஆம் ஆண்டு நினைவு நாளில் வெளியிடப்பட்டதாகும்.

இந்த இசை இறுவட்டானது 07/10/2004 அன்று முல்லைத்தீவில் வெளியிடப்பட்டது, அயினும் 17/10/2004 அன்று நெல்லியடி முருகன் கோயிலிலும் மீள வெளியிடப்பட்டது.

 

alaipaadum parani.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அலையின் கரங்கள்

 

 

முன் பக்கம்:

alaiyin karangkal.jpg

 

பின் பக்கம்:

alaiyin karangkal back side.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அலையின் வரிகள்

 

 

 

alaiyin varikal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அழியாத சுவடுகள்

 

 

 

azhiyatha suvadukal.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அனுராதபுரத்து அதிரடி

 

 

 

 

anurathapuraththu athiradi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

அனுராதபுரம் தேடி

 

 

 

2009இற்கு முன்னர் வெளியான இவ்விறுவட்டிலுள்ள மூன்று பாடல்களும் 2009இற்குப் பின்னர் ஒன்றாக்கப்பட்டு ஒரு இறுவட்டாக வெளியிடப்பட்டது. இந்த அட்டையும் 2009இற்கு பின்னர் தான் வெளியிடப்பட்டது.

 

anurathapuam thedi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஆதிக்க அலை

 

 

 

aathikka alai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஆழிப்பேரலை

 

 

 

azhipperalai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவெட்டு அட்டைகள்

ஆனையிறவு

 

 

 

aanayiravu.jpg

 

 

"ஆனையிறவு" இசைத்தட்டு - மதிப்பீட்டுரை

 

  • திறனாய்வு: -
  • மூலம்களத்தில் (14.12.2000)
  • பக்கம்: 7

 

"ஆனந்தப் பூங்காற்று காதினிலே,
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா!
ஆனையிறவிலே ஏறிடும் போதிலே..
ஆகாயம் கைகளில் ஆடுதம்மா!"

ஆகாயம் மட்டுமா ஆடியது? அன்று இம்மண்ணில் பிறந்த எல்லாமுமே ஆடின. கால் நடக்க இயலாப் பூட்டன்கூட அன்று தான் நாலு காலிற் பாய்ந்து துள்ளிக் குதித்தார். ஒவ்வொரு தமிழனும் அந்நேரம் இறக்கை கட்டிப் பறந்து விண்ணில் மிதந்தான். யானையைக் காலால் தட்டி விழுத்திய புளுகம் எமக்கு. ஆனையிறவை நாங்களே அடித்துப் பிடித்த நினைப்பு. உச்சரிக்கவே பயந்த ஆனையிறவை பெயர்த்தெறிந்து எம் பிள்ளைகள் வென்றார்கள் என்ற செய்தி அனைவரையுமே உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. எங்களாலும் எதுவும் முடியும் என்ற அகங்காரம் தலைக்கேற ஆனையிறவில் ஏறி நடந்தோம்.

பல நூற்றாண்டுகளாக ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து எமது வீரர்களால் உயிரும் உதிரமும் அர்ச்சித்துப் பெற்ற பூர்வீகப் பூமியை பார்த்தபோது எமக்கேற்பட்ட ஆனந்தக் களிப்பு எங்களையே மீறி எமக்குள் பீறிட்டெழுந்த சந்தோச அலைகள், ஈடிணையற்ற இந்த வெற்றியை என்னென்று சொல்லி எப்படி மகிழ்வதென்று அறியாது நின்று நாம் பட்ட தத்தளிப்பு, ஒவ்வொரு உயிர்களையும் உப்புத் தரையில் விலை கொடுத்தபோது எமக்கிருந்த உளக் குமுறல், இந்தக் கோட்டையை விழுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் ஆனையிறவிலும் புலிக்கொடி பறக்காமலா போகும் என்று நீண்டகாலமாய் எமக்குள்ளிருந்த ஆதங்கம்... அத்தனைக்கும் தீர்ப்பெழுதி ஆனையிறவின் கன்னத்தில் முத்தமிடுகிறது எம் மூச்சுக்காற்று.

இவற்றையே அடிநாதமாய் ஆதார சுருதியாய்த் தாங்கி வெளிவந்திருக்கின்றது ஆனையிறவுப் பாடல் இசைத்தட்டு. இசைப் பாடல்களை கேட்கும்போது நாம் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைகின்றோம். எங்களுடைய புலன்களை கூர்மையடையச் செய்து நாம் நேரில் காணாதவற்றையும் கற்பனையின் மூலம் காணுகின்றோம். இவற்றுக்கும் மேலாக இசைப்பாடல்கள் கேட்பவர் மனங்களை ஆட்கொண்டு அவர்களைச் சிந்திக்கவும் உணரவும் செய்கின்றன.

வெறுமடனே ஆகா! ஓகோ! என்று வந்து சன்னதமாடி, கேட்பவர் மனங்களில் பெரும் போதையையே தூவிவிட்டு நிகழ்காலத்திலேயே நிழலற்றுப் போகும் இன்றைய தென்னிந்தியச் சினிமாப் பாடல்களுக்குச் சவாலாக ஈழமண்ணில் பிறப்பெடுக்கும் தாயகப் பாடல்கள் கேட்பவர் மனங்களை மட்டுமன்றி காலத்தையும் வென்று நிலைத்து விடுகின்றன.

குறிப்பாக, 80களிலேயே தாயகப் பாடல்களின் வருகை ஆரம்பமாகியது. இற்றைவரை பல நூற்றுக்கணக்கான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. விடுதலைக்கு மக்கள் மனங்களில் உயிர்ப்பூட்டுவனவாக சுதந்திரப்போரின் உந்துசக்தியாக, காலப்பதிவாக, மன உணர்வுகளின் வெளிப்பாடாக இசைப்பாடல்களின் வருகை காலத்திற்குக் காலம் உச்சத்தைத் தொட்டே வந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுப் பதிவான நிகழ்வுகளைக் கலைப்பதிவாக்குவதில் இசைப்பாடல்களும் இடம்பிடித்துள்ளன. இசைப்பாடல்களின் பிரசவம் என்பது புத்துணர்வுடன்கூடிய ஒரு கூட்டுமுயற்சியாகும். பாடலாசிரியன் சொல்ல வந்த கருத்தை, அதன் உணர்வைச் சிதைக்காத மெட்டுக்களும், பாடகரின் உச்சரிப்பும் மிகவும் கச்சிதமாக பாடல்களை மெருகேற்றி விடுகின்றன. பாடல் அடிகளில் இசையின் செழுமையுடன் கவித்திறமும் ஈடுசோடாக ஓசை வீசுவதைக் காண்கிறோம். ஆனையிறவு இசைத்தட்டிலே வரும் ஒன்பது பாடல்களின் கவிதை வரிகளுக்கும் சொந்தக்காரர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களே. ஓசை பிறழாது சொல்லைக் கையாளும் விதம் ஒவ்வொரு பாடல்களிலும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. கேட்பவர் மனங்களைச் சுண்டியிழுக்கும் வார்த்தைகளால் இனிய இசையில் குழைந்து அதற்கு இசைந்த குரல்களில் வெளிவந்துள்ள இப்பாடல்கள் கேட்கும்போது எம்நெஞ்சைத் தொடுகின்றன. தமிழீழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்கள் இந்த ஆனையிறவு ஒலிப்பேழைக்கு இசைக்கலவை வழங்கி கனிவூட்டியுள்ளார். இயல்பாகவே தன் நுணுக்கமான மெட்டுக்களால் பாடல்களைக் கேட்பவர் மனங்களில் இலாவகமாகத் தொற்ற வைத்துவிடும் திறமை கைவரப் பெற்ற இசைவாணர் கண்ணன் அவர்கள் ஆனையிறவிலும் தன் கைவண்ணத்தைக் காட்டத் தவறவில்லை. ஆற்றின் ஓட்டம் போல் எந்தத் தடங்கலும் இன்றி இப்பாடல்கள் வந்து குவிகின்றன.

இந்த ஒலிப்பேழையில் உள்ள பாடல்களைப் பாடிய பாடகர்களும் தத்தம் குரல் இனிமையை, திறமையை நிலைநிறுத்தியே உள்ளனர். இவர்களுடன் இளைய ஒலிப்பதிவாளர் மலையவனும் திறம்படச் செயற்பட்டுள்ளார்.

எல்லாப் பாடல்களும் என்று மிகைப்படுத்திக் கூறமுடியாவிட்டாலும், ஓரிரு பாடல்களைத் தவிர ஏனையபாடல்கள் உச்சத்தைத் தொட்டே நிற்கின்றன. இவ்வொலிப் பேழையில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய பாடலாக மாவீரர் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் தன்னுடன் எம்மையும் தென்னை மரத்தோப்பிற்குள் அழைத்துச் செல்கிறது. பாடலில் பொதிந்துள்ள கவிதை வரிகள், பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள இசை, பாடலைப் பாடியுள்ள விதம் எல்லாமே ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. மாவீரர்களின் முகங்களை நெஞ்சக் கண்முன் நிழலாட வைக்கும் அளவிற்கு உணர்வுப் பிழிவாக அமைந்துள்ள அப்பாடல் மனதின் அடிவேர் வரை சென்று, அது சொல்ல வந்த கருத்தை, உணர்வை மற்றவர்களிடத்தில் தொற்ற வைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

"தென்னை மரத்தோப்பு உம்மை எதிர்பார்த்து ஒரு கண்ணழுதவாறு காத்திருக்கும்" என்ற பாடல் நிச்சயமாக கேட்பவர்கள் மனங்களை இளக வைக்கும்.

இவ்வாறே பாடகர் சாந்தனின் வெண்கலக் குரலில் அமைந்த பாடல். "இனி வரும் இனி வரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்" என்ற பாடல் மற்றும் பாடகர் சுகுமாரின் கம்பீரமான குரலில் அமைந்த, "நித்திரையா தமிழா" என்ற பாடல், திருமலைச்சந்திரன், நிரோஜன் ஆகியோர் பாடிய

"சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில்
செந்தூரப் பூ மழை தூவியது
சென்றார்கள் வென்றார்கள் என்றார்கள்
அந்நேரம் தேகமெல்லாம் மின்னல் ஓடியது."

போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஒரு வித்தியாசமான,

"ஈடு வைத்து ஈடு வைத்து
நந்தலாலா-தமிழ்
ஈழம் தரப் போகிறாவே நந்தலாலா!"

என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே பலரது மனங்களையும் ஈர்த்துவிட்டது. இந்தப்பாடலைப் பலரின் வாய்கள் முணுமுணுக்கக் காணலாம்.

பாடல்கள் ஒவ்வொன்றுமே உணர்வுப் பிழிவாக அமைந்திருக்கின்றன. பாடகர்கள் அனைவரும் பாடல்களின் வரிகள் சுட்டி நிற்கும் கருத்தை, அதன் உணர்வை ஆழமாக உள்வாங்கி நன்றாகப் பாடியிருக்கின்றார்கள். தமிழீழத்தில் பல வெற்றிப் பாடல்களைப் பரிசளித்த மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தன் அயராத உழைப்பால் ஆனையிறவை கானச்சரங்களாக்கிக் கையளித்துள்ளார். பாடல்கள் யாவும் போராளிகளின் வீர உணர்வையும் போரிடத்துடிக்கும் குன்றாத ஆர்வத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. மனங்களில் மறப்பண்பை ஊட்டுகின்றன.

குறித்த இலக்கு மீது பாய்வதற்கு சந்தர்ப்பமளித்து விழித்திருக்கும் நிலப்புலி போன்ற செயல் புரிந்த வீரரின் வியத்தகு திறமைகளை இப்பாடல்கள் சாற்றுகின்றன.

ஞாயிறு எழுமாயின் ஓடாது நிற்கும் இருளும் உளதோ? புலி உறுமினால் எதிரே நிற்கும் வேறு விலங்கினம் உளதோ? இல்லையே! அவைபோல, ஆள்பலமும், தேசபக்தியும், விடுதலை உணர்வும் வீரமும் உடை வீரருக்குத் தலைவனே! நீ களம் புகுந்தால் எவர்தான் நின்னை எதிர்க்க வல்லார்? புறநானூறை விஞ்சிப் புது நானூறு படைத்து நிற்கும் நின்பலத்திற்கு ஆனையிறவே சான்று பகரும்.

"தாயின் கொடி வானில் பறந்தது ஆனையிறவினிலே..
வாசல் திறந்திடக் கால்கள் நடந்தன மான உணர்வினிலே..
உப்பு விளைந்திடும் பூமியெடா
இப் பிறப்பாயினும்- எப்
பிறப்பாயினும் அது
எங்களின் பூமியெடா"

உலகில் ஒலி உள்ளவரை, காற்று அற்றுப்போகும் வரை இப்பாடல்களும் வாழும்.

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள "ஆனையிறவு" இசைத்தட்டினை மீள்வெளியீடாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகம் வெளியிட்டுள்ளது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

இசைபாடும் திரிகோணம்

 

 

 

இசைபாடும் திருகோணம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

இசையருவி

 

 

  1. பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே,

  2. தீயினில் எரியாத தீபங்களே,

  3. என்னினமே என் சனமே,

  4. தூக்கமா கண்மணி பள்ளியெழு,

  5. கரும்புலிகள் என நாங்கள்

  6. பாடும் பறவைகள் வாருங்கள்

உட்பட்ட 10 எழுச்சிப் பாடல்கள் வாத்திய இசை வடிவத்தில் இருந்தன. 

இன்று இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்துபட்ட இறுவட்டுகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

  • மூலம்: ஈழதாதம்

  • திகதி: 1991.11.06

  • பக்கம்: 5-6

 

"ஒரு மொழியின் கலை பண்பாட்டு விழுமியங்கள் இனத்தின் பெருமைக்குச் சான்று" - பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளார்

யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற 'இசையருவி' ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வண. பிதா பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளார் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது.

இன்று எமது கலை, பண்பாட்டு வளர்ச்சியிலே ஒரு புது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய 'இசையருவி' நாதஸ்வர இசை ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்ள எனக்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒரு மொழியின் வளர்ச்சியும் அதன் கலை பண்பாட்டு விழுமியங்களும் அம்மொழியைப் மேசும் இனத்தின் பெருமையைப் பறைசாற்ற வல்லன. மானிட வாழ்க்கைப் பாங்குகளின் கூட்டுத்திரட்சியே பண்பாடாகும். மரபுகள், கலைகள், உடைகள் மொழி யாவும் இப்பண்பாட்டின் சில கூறுகள். ஒரு சமூக அமைப்பின் இயல்பினைப் பண்பாடு வெளிப்படுத்த வல்லது. பண்பாட்டு வளர்ச்சியும், மொழி வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தன. ஓர் இனத்தின் பண்பாட்டு வறட்சிக்கு வளர்ச்சியடையாத அதன் மொழியும் கலையுமே காரணம் என மானிடவியலாளர் கூறுவர். எனவே ஒரு நாட்டின் - ஓர் இனத்தின் பண்பாட்டு வளர்ச்சியிலே, மொழியினதும் கலையினதும் செல்வாக்கே அதிகம். வளர்ந்த ஒரு மொழியிலே தான் முதிர்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கண்டுணரலாம். சிறந்த இலக்கியத்தோடும் கலைகளோடும் இணையும் போதுதான் ஒரு மொழி வளர்கின்றது; ஓர் இனம் மிளிர்கின்றது. வளர்ச்சி பெற்ற எந்த இனமும் கலை வளமும் இலக்கிய வளமும் பொருந்தியதாகவே விளங்கும். மொசபத்தேமியா, எகிப்து, கிரேக்கம்,றோம் ஆகிய நாடுகளின் உன்னத பண்பாட்டிற்கு அந்நாடுகளின் சமூகங்களிடையே ஆக்கம் பெற்ற பேரிலக்கியங்களே காரணம் என அறிஞர் கொள்வர். எமது தமிழ்மொழியும் பழைமை வாய்ந்த கலை பண்பாட்டுக்குப் பாரம்பரியங்களை உடையதென்பதை எமது மொழியிலுள்ள பழம்பெரும் இலக்கியங்களாலும் வேறு கலை அம்சங்களாலும் உணர்ந்து கொள்ளலாம்.

எமது வாழ்க்கை முறையிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் அவற்றின் எல்லா நிலைகளிலும் / நுண்கலையில் முதன்மை வாய்ந்ததான இசை இணைந்து வந்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி ஈறாக, எமது வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைந்து எமது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சமாக இசை இருந்து வந்துள்ளது; இருந்து வருகின்றது. இசைக்கு ஓர் அதீத சக்தி உண்டு. இச்சக்தியின் மூலம் எதையும் சாதிக்கலாம். இசைப் பாடல்களால் இறைவனை ஏற்றி வழிபடும் போது அந்த இசையால் இறைவனைப் போற்றி இறையருளைப் பெறலாம், அந்த இறைவனை அணுகலாம் என்ற நம்பிக்கைகள் எம்மிடையே வளர்ந்து வந்துள்ளன. இசைக்குத் தலைவணங்கிய மாமன்னர்களையும் கூட எமக்கு வரவாறு காட்டுகின்றது. நாயன்மார்களும் சமய போதகர்களும் இசையை கருவியாக கொண்டே சமயத்தை வளர்த்தனர். சமய வழிபாடுகளில் இசைப் பாடல்களே அனைவரையும் ஒருமுகப்படுத்தி ஒருவழிப்படுத்தின. எனவே தான் இசையானது தெய்வீக நிலையில் வைத்துப் பூஜிக்கப்படுகின்றது.

எமது இசைமரபு பல்வேறு நாட்டவராலும் வியந்து புகழப்படும் தன்மை வாய்ந்தது. இந்த இசை மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உரியது. இச்சந்தர்ப்பத்தில், உலகம் முழுவதையுமே ஆட்டம் காணச் செய்யும் வகையில், சிறந்த படையெடுப்புக்களை நடாத்தி வெற்றிவாகை சூடிப் புகழ் பெற்ற மாவீரன் நெப்போலியன் ஆட்சியாளரின் பொறுப்புக் குறித்து ஓரிடத்தில் கூறியதை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.

கலைகள் யாவற்றுள்ளும் எமது உள்ளத்து உணர்வுகளை ஈர்ப்பதில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதாக இசைக்கலையே இருக்கின்றது; அதேவேளை ஆட்சியாளர்கள் இந்த இசைக்கலைக்கு அதிக ஊக்குவிப்புக் கொடுக்க வேண்டியவர்களாக விளங்க வேண்டும் என்கிறார். எமது இசை மரபு பேணப்பட வேண்டும், என்று சொல்லும் போது அம்மரபின் அத்திவாரம் தகர்க்கப்படாது பார்த்துக் கொள்வதோடு அம்மரபின் பழைமையின் உண்மைகள் புறக்கணிக்கப்படாதும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த அடிப்படையே ஏற்றுக்கொண்டு காலத்திற்கேற்ற புதுமையை அங்கீகரித்து கலைமரபை வளர்க்கவும் முயற்சிக்க வேண்டும். வளரும் கலை நெகிழ்ச்சிக்கு இடமளித்தே வளர வேண்டும். மாற்றம் இன்றேல், வளர்ச்சி இல்லை. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்பது நன்னூல் சூத்திரம். "கடிசொல் இல்லை காலத்துப்படினே" என்பது தொல்காப்பியர் வாக்கு.

எமது இசை மரபிலே ஏற்படும் மாற்றங்கள் எமது பண்பாட்டைச் சிதைக்காது உலக அரங்கின் கவனத்திற்குரியதாக இருப்பின் அவை சிறப்புக்குரியனவே. இந்த வகையில் இன்றைய இசையருவி நாதஸ்வர இசை ஒலிப்பதிவு நாடாவிலே தவில், மிருதங்கம், தபேலா ஆகிய இசைக்கருவிகளுடன் வயலின் உட்பட மேற்கத்தைய இசைக்கருவிகளையும் இணைத்துள்ளமை விசேட கவனம் பெறுகின்றது. இதன் மூலம் எமது இசைக்கலை வளர்ச்சி நிரூபணமாகின்றது. பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற புதுமைக்கவி பாரதியின் அறைகூவல் இங்கே ஒரு வகையில் நிறைவேற்றப்படுகின்றது. இதனால் எமது கலை மரபை பிறநாட்டவரும் ரசிக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது. இத் துறையில் நாம் மேலும் வளர்ச்சியும் விருத்தியும் எய்த வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கேற்ப இந்த இசையருவி நாடாவை யாவரும் கேட்டு மகிழக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.

இந்த இசைநாடாவின் மற்றுமொரு சிறப்பம்சத்தையும் இங்கே நான் குறிப்பிட வேண்டும். சாஸ்திரிய முறையில் இசைக்கலை பயின்றவர்களிடையே தம் கலைகளே ஏனையவற்றை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கும் ஏனைய மேற்கத்தைய இசைக்கருவிகள் எமது இசைக்கருவிகளுடன் இணைய முடியாதன என்ற கருத்தும் நிலவிவந்த முறைமையை மாற்றி இசைக் கலைஞர்கள் பலரையும் இணைத்து அக்கலைஞர்களிடையே கூட்டுறவை வளர்த்து ஓர் ஒத்திசைவை வழங்க முடியுமென்ற மனப்பாங்கு மாற்றத்தையும் இசையருவி நாடா வெளியீடு சாதித்துள்ளது.

இசையருவி ஒலிப்பதிவு நாடாவிலே தாயக விடுதலைப் பாடல்கள் பத்து இசைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதிரியான பாடல்களை தமது இசைக்கருவிகளில் வாசிப்பது தமக்கு ஓர் இழுக்கென சாஸ்திரிய இசை விற்பன்னர்கள் நினைத்த காலம் போய், இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து இத் தாயகப்பாடல்களை தமது இசைக்கருவிகளில் இசைக்க முன்வந்துள்ளமை நல்லதொரு மாற்றமாகும். எந்தவொரு கலைப்படைப்பும் சமகாலத் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அடிநாதத்துக்கு இசையும் விதிவிலக்கானதல்ல என்பதையே இது காட்டுகின்றது.

பழைமை என்ற வட்டத்துள் எமது கலையை முடக்கினால் கலை வளர வழியில்லாமல் போகும் என்ற தன்மையை உணர்ந்தவர்களாய் விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினர் ஆரம்பித்து வைக்கும் இன்றைய அத்தியாயம் நன்கு வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை இன்று உள்ளது. முதலில் இசைப்பாடல் நாடாவாக வழங்கி, மக்கள் நாவில் அக்கீதங்களை ஒலிக்கச் செய்து மனப்பதிவை ஏற்படுத்தியபின், நாதஸ்வர இசையில் இந்தப் பாடல்களை வழங்கும்போது இவ்விசையைக் கேட்கும் மக்கள் யாவரும் அப்பாடல்களை தம்மனதால் இசைப்பர். இதனால் எமது தாயகம் பற்றிய செய்திகளும் கருத்துக்களும் என்றும் எம் மக்கள் மனங்களில் நிலவும்.

எனவே 'இசையருவி' மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஊடுருவிச் செல்லும் ஓர் உன்னத கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகு பெருமைகளோடு, கலைஞர்களைக் கௌரவித்தல் என்னும் பெருமையையும் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகத்தினர் தமக்குரியதாக்கியுள்ளனர் என்றும் கூறுவதில் மகிழ்ச்சியடைவதோடு கலை, பண்பாட்டு வளர்ச்சி முயற்சிகள் யாவும் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

 

 

*******

 

 

  • மூலம்: வெளிச்சம் 

  • திகதி: கார்த்திகை-மார்கழி 1991

  • திறனாய்வு: கலாபரணி

  • பக்கம்: 30

 

"இசையருவி" பற்றிய மதிப்பீடு

தமிழ் ஈழப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ள ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களாலும், களத்தில் நிற்கும் போராளிகளாலும் இயற்றப்பட்டுத் தேர்ச்சி பெற்ற கலைஞர்களது கைவண்ணத்தில் பொதுமக்கள் மத்தியில் போராட்டத்தை ஜனரஞ்சகப்படுத்திய இசைப்பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) முதல் தடவையாக வாத்தியக் கருவிகளால் ஒலிவடிவில் வார்க்கப்பட்டு ஒலிப்பதிவு நாடாவாக விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இதுவரை காலமும் வார்த்தை வடிவில் நம் செவிகளில் ஒலித்த கானங்களை இப்போது வாத்தியக் கருவிகளூடாக சப்தரூபமாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒலிப்பதிவு நாடாவில் இன்னொரு புதுமை தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வரமும் தவிலும் மேலைத்தேய வாத்தியங்களான ஓகன், வயலின் முதலான இசைக்கருவிகளோடு சங்கமித்து சுவைஞர்களுக்கு ஏக ராக மேள தாளமாக ஒலிப்பதாகும்.

நாதஸ்வரத்திற்கு இணைவாத்தியம் தவில் தான். இரண்டும் இராஜ வாத்தியங்கள். தமிழகத்தில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொனிகூடிய தோல் வாத்தியமான தவிலை ஏனைய மென்மையான வாத்தியங்களுக்கு இணை வாத்தியமாக வாசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இசையறிஞர்கள் சிலர் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக ரி. ஆர். மகாலிங்கத்தின் புல்லாங்குழலுக்கு வலங்கைமான் சண்முகசுந்தரம் தவில் வாசித்தார். குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் கச்சேரிக்கு வலையப்பட்டி சுப்பிரமணியம் தவில் வாசித்தார். இவ்வாறு புல்லாங்குழல் போன்ற மென்மையான காற்று வாத்தியங்களுக்கும் வயலின் போன்ற மென்மையான நரம்பு வாத்தியங்களுக்கும் பக்கவாத்தியமாகத் தவில் பயன்படுத்தப்பட்டது. இவை சாகித்தியங்களுக்கும் கீர்த்தனைகளுக்கும் பொருத்தமாக அமைந்தன. ஆனால் தமிழ் இசை உலகின் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக பாரம்பரிய தமிழ் இசையும் மேலைத்தேய இசையும் எழுச்சிப் பாடல்களுக்கு நாதோதேசம் செய்யப் பயன்படுத்தப்பட்டு அதில் பெரும் வெற்றியும் பெறப்பட்டுள்ளது.

இந்த வகையில் "இசையருவி" ஒலிப்பதிவு நாடாவுக்கு நாதஸ்வரம் வழங்கிய நாதஸ்வர கானவாரிதி வீ. கே. பஞ்சமூர்த்தியும் தவில் வாசித்த தவில் நாதமணி பி. கணேசனும் தமிழிசை வரலாற்றில் புதியதோர் பரிமாணத்தை உருவாக்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகத்தின் இந்தப் பாரிய முயற்சிக்கு வயலின், ஓகன், தபேலா, மிருதங்கம் முதலான வாத்தியக் கருவிகளை இசைத்த கலைஞர்கள் பூரண ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். எல்லா இசைக்கலைஞர்களையும் நெறிப்படுத்திய இசையமைப்பாளர் கண்ணன் அவர்கள் இந்த ஒலிப்பதிவு நாடா உருவாக்கத்தில் ஒரு இசையாகத்தையே நடாத்தியுள்ளார். இவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தோடு பதிவு இசையாக்கியுள்ளார் ஒலிப்பதிவாளர் நித்தி அவர்கள். சுருக்கமாகச் சொன்னால் ஈழத்து இசை வளர்ச்சியில் இந்த முயற்சி ஒரு மைல்கல் எனலாம்.

 

******

  • மூலம்: முரசொலி

  • திகதி: 1991.11.09 பக். 03, 04 & 1991.11.10 பக். 03

  • திறனாய்வு: -

 

'எங்கள் குழலிலிருந்து வீரம்! உங்கள் குழலிலிருந்து நாதம்!'

விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் உருவாக்கிய, நாதஸ்வர கானவாரிதி வீ.கே.பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர 'இசை அருவி' ஒலிப்பதிவு நாடா அண்மையில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு வீழா நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

வெளியீட்டு விழா யாழ். இந்து மகளிர் கல்லூரி அரங்கில் 2-11-91 இல் நிகழ்ந்தபோது போர்க்காலச் சூழ்நிலையில் தாம் அனுபவிக்கும் கஷ்டங்களையெல்லாம் மறந்து மக்கள் திரண்டு வந்து பங்குபற்றியது இசைமேல் அவர்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது.

யாழ். தளபதி செந்தோழன் அவர்களும், விடுதலைப் புலிகள் மக்கள் நிர்வாகச் செயலாளர் மாறன் அவர்களும் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.

விழாவுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத் தலைவர், கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் "கலைஞர்களால் நாடு வளம் பெறும், நாடு சுகம் பெறும். அதனால் இசை நாடாக்கள் தொடர்ந்து வெளிவரும்" என்றார். "முன்னர் மலேசியா முதலிய இடங்களிலிருந்து இங்கு வந்தன. இன்று நாங்களே வெளியிடுகின்றோம். மக்கள் உள்ளங்களில் உணர்ச்சியூட்ட வல்லது இசை. நாட்டை வென்றெடுக்கவும், பின் அந்த நாட்டை வளப்படுத்தவும் வல்ல பல திட்டங்கள் எம்மிடம் உண்டு. நீங்கள் எல்லோரும் அப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்."

"இத்தகைய ஓர் ஆக்கப்பணிக்கு இசைந்து நாதஸ்வர கானமிசைத்த பஞ்சமூர்த்தி அவர்களையும், அவர் அப்பணியில் ஈடுபட அனுமதியளித்த அவருடைய தமையனார் கானமூர்த்தி அவர்களையும் எமது கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்" என்றார்.

விடுதலைப் புலிகள் மூத்த உறுப்பினர் தேவர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமது வெளியீட்டுரையில், 15 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய வீடுதலை முன்னணி லண்டனில் எடுத்த ஒரு இசைவிழா பற்றிக் குறிப்பிட்டார். "அவர்களது போராட்ட விவரணப் படத்தில் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் இசையே சம்பந்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பொறுப்பாளருடன் அது பற்றிக் கேட்டபோது தமது போராட்ட எழுச்சி தீவிரமடைந்ததற்கு அது கலைகளுடன் முக்கியமாக இசையுடன் இணைந்தமையே காரணம் என்று அவர் தெரிவித்தார்" என்றார்.

"விடுதலை என்பது மண்ணை மீட்க, அரசமைக்க மாத்திரமன்று நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து மனித சமூகம் விடுதலைக்காகப் போராடி வருகின்றது. ஆன்மீகத்தின் தேடுதல் முயற்சியும் வீடுதலையே, புரட்சிகர இயக்கம் புகட்டும் விழிப்புணர்வும் விடுதலையே. இயற்கையில் பிரபஞ்சத்தில் ஒரு ஒத்திசைவு இருக்கிறது. அதைப் 'பிரபஞ்ச கானம்' எனலாம். ஆன்மாவின் உள்ளுணர்வும் இசை மயமானது கலை விடுதலையோடு சம்பந்தப்பட்டது. எமது போராட்டம் ஆழமான, காத்திரமான பரிமாணங்களைக் கொண்டது" என்றார்.

அடுத்துப் பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதி தமிழ்ச்செல்வன் (தினேஷ்) பரிசிகளை வழங்கினார்.

விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணிப் பொறுப்பாளர் ஜெயா அவர்கள் தமது உரையில் "இந்த இசையருவி வெளியீடு தேசத்தின் உணர்ச்சிக் குவியலின் வெளியீடாகும். மக்களைத் தட்டி எழுப்ப வல்லது இசை. தொட்டிலில், வயலில், கடலில் எங்கும் இசையே ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கின்றோம். நாடி, நரம்புகளைத் தட்டிக் கொடுத்து நெறிப்படுத்தக் கூடிய ஆற்றல் இசைக்குண்டு. இன்று நோயைக் குணப்படுத்தவும் ஏன் தாவரங்களின் வளர்ச்சிக்குங் கூட இசையைப் பயன்படுத்த முயல்வதைப் பார்க்கின்றோம். இதனாலேயே ஏனைய கலைஞர்களுக்கில்லாத தனிமதிப்பை இசைக் கலைஞர்கள் பெறுகின்றார்கள். நாங்கள் எமது வரலாற்றை எழுதப் புறப்பட்டு விட்டோம். இரத்தத்தால் எழுதுகின்றோம். இது தொடர வேண்டும். அதற்காகவே 'பொங்குங் கடற்கரை' எனத் தொடங்கும் அருவி 'தொட்டிலை விட்டுத் துள்ளியெழு' என்று இசைத்துச் செல்கிறது" என்றார்.

செயலதிபர் யோகரத்தினம் யோகி அவர்கள் தமது வாழ்த்துரையில் "எம்மைச் சுற்றி இராணுவம் நிற்கிறது. மக்கள் கடையைச் சுற்றிக் கியூவில் நிற்கிறார்கள். நாங்கள் பதுக்கி வைத்து இப்பொழுது பொருள்களை வெளியில் விடுவதாகவும் பழி கூறுகிறார்கள். பசியோ, பட்டினியோ எங்களை எதுவும் செய்யாது. கஷ்டங்களை ஏற்கப் பயிலுவது தான் எமது போராட்டத்தின் முதற்கட்டப் பயிற்சி. கஷ்டங்களின் மத்தியிலேதான் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்" என்றார்.

"நாதஸ்வரம் 12 வருடப் பயிற்சி பஞ்சமூர்த்தி அவர்களது தாத்தா பெரிய கலைஞர். அவரே பெரிய குருவாகவும் அமைந்தது பாக்கியம். அவ்வாறு பயிற்சியளிக்கும் நாதஸ்வரக் கலைக் கல்லூரியும், தவில் கலைக் கல்லூரியும் கீரிமலையில் அல்லது மாவிட்டபுரத்தில் நிறுவப்பட வேண்டும். எங்கள் சூழலிலிருந்து வீரமும், உங்கள் குழலிலிருந்து நாதமும் புறப்படட்டும் இரண்டும் விடுதலைப் போரில் ஒன்றாக இணையட்டும்" என்றார்.

நாதஸ்வர மேதை பத்மநாதன் வாழ்த்தும்போது "கலைஞர்களின் உள்ளம் மென்மையானது. இன்றைய சூழ்நிலைகள் அவர்களின் ஆத்மாவையே பாதித்து விடும். சாஸ்திரீய சங்கீதத்தை மெல்லிசையோடு கலந்து பஞ்சமூர்த்தி வாசித்துள்ளார். அது அரிய சாதனை. ஒலிப்பதிவு செய்யும்போது பக்க வாத்தியம், கால அளவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை வென்று பல இடங்களில் உச்சநிலைக்கும் அவர் சென்றுள்ளார். ஆதலின் கலைஞர் மாத்திரமல்ல அவரது இசையை ஒலிப்பதிவு நாடாவிற் கொண்டு வந்த புதுவை அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே" என்றார்.

சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் தமது வாழ்த்துரையில் "போர்க்களத்தில் போராளிகள் படும் கஷ்டத்திற்குச் சமமான கஷ்டத்தை ஒலிப்பதிவுக் களத்தில் கலைஞர்கள் படுகிறார்கள். பாலமுரளிகிருஷ்ணா, இந்தியாவிலும் பார்க்க ஈழத்திலேயே தலைசிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்" என்று பாராட்டினார். "மேற்கத்திய இசைப் பின்னணியைக் கர்நாடக இசையுடன் கலந்து நாதஸ்வர கானமாகத் தந்த ஈழத்து முதற் கலைஞர் பஞ்சமூர்த்தியே" என்று பாராட்டினார்.

நவாலியூர்ச் சச்சிதானந்தன் அவர்கள் "திராவிடர் அளித்த வரப்பிரசாதம் நாதஸ்வரமும், வீணையும். மேற்கத்திய சங்கீதம் கடதாசியில் அச்சிட்டு வைத்து விட்டு வாசிப்பது ஆனால் கீழைத்தேய இசையை மனோதர்ம சங்கீதம் எனலாம். கற்பனா சுரத்தைப் புகுத்திக் கலைஞர்கள் விரும்பியவாறெல்லாம் தமது ஆற்றலைக் காட்ட அது இடமளிப்பது" என்றார்.

"விடுதலைக் கீதங்களைக் கலைஞர்கள் பாடியவாறே குழந்தைகளும் இன்று பாடுகிறார்கள். மூன்று வயதுப் பாலகன் பாடியதைக் கேட்டு வியந்து நின்றேன். குழந்தைகளின் குரலில் அப்பாடல்களை இசைநாடாவில் கொண்டுவரக் கலை பண்பாட்டுக் கழகத்தினர் முயல வேண்டும்" என வேண்டுகோளும் விடுத்தார். "நாதஸ்வரத்தில் 'தூக்கமா கண்மணி' என்ற பாடல் இசைத்தபோது ஜலதரங்கம் வாசித்தது போன்றேயிருந்தது. 'பாடும் பறவைகள்' என்ற பாடலில் ஸ்தாயி ஏற்றம் அருமையாக அமைந்தது. நாதஸ்வரத்தில் வைத்து ஊதும் சீவாளி நறுக்கு இன்றிப் பெரிய கலைஞர்களே கஷ்டமடைகின்றனர். அந்த நறுக்கைப் பெற்றுக் கொடுக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.

வண. பிரான்சில் யோசேப் அடிகள்:

“கலை பண்பாட்டுக் கழகத்தின் புதிய அத்தியாயம் இவ் இசையருவி வெளியீடு. மொழியும், கலையும் வளராவிட்டால் பண்பாடு வளரமாட்டாது. வளர்ந்த மொழியிலேயே சிறந்த பண்பாட்டு விழுமியங்களைக் காணமுடியும். நுண்கலைகளுள் முதன்மையிடம் பெறுவது இசை. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை வாழ்வில் இணைந்து நிற்பது இசை. இறைவனிடமும் உள்ளத்தை இசைய வைப்பது இசை.

"உள்ளத்தை ஈர்த்து எழுச்சியூட்ட வல்லது இசை. ஆதலால் ஆட்சியாளர்கள் இசைக்கு ஆதரவு காட்ட வேண்டும்." என்று கூறுகின்றான் நெப்போலியன். கலையில் புதுமையும் பேணப்பட வேண்டும். நெகிழ்ச்சியும் வேண்டும், 'யாவரும் கேளீர்' என்றான் புறநானூற்றுப் புலவன். சமகாலத் தேவையை நிறைவு செய்யும் இசையருவியை 'யாவரும் கேளீர்'"

என்று வாழ்த்தினார்.

இயல் இசை வாரிதி வீரமணி ஐயர் "தெய்வத்துக்குரிய இசையை மக்களுக்காக்கி உள்ளார் கலைஞர் பஞ்சமூர்த்தி. பாடல்களை அனுபவித்து வாசித்துள்ளார். ஆறடி நிலமும் கேட்கமாட்டோம் எனக் கேட்கும் போராளியோடு ஒன்றிவிட்டார். பாடல்களைத் தொடங்குமுன் அவர் இசைப்பதிலேயே இன்ன பாடல் வரப்போகின்றது என அநுமானிக்க வைத்து விடுகின்றார்" என்றார். "போராளிகள் அநுபவிப்பதிலும் பார்க்கக் கூடிய உடல் வருத்தத்தை ஊதும் போது நாதஸ்வரக் கலைஞர்கள் அநுபவிக்கின்றார்கள்" எனவும் எடுத்துரைத்தார்.

கம்பன் கழக அமைப்பாளர் ஜெயராஜ் வாழ்த்துக் கூறும் போது:

"முதலாவது இசை நாடா வெளியீட்டில் மேடையில் முக்கால் பங்கை விடுதலைப்புலிகள் எடுத்துக் கொண்டார்கள். காற்பங்கிலேயே கலைஞர்கள் இருந்தார்கள். இன்று மேடையில் கலைஞர்கள் முக்கால்பங்கைப் பிடித்து விட்டார்கள். இந்த வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதே. பாரதியார் முயிற்பாட்டில் நான்முகன் படைத்தவை எல்லாவற்றையும் எடுத்துரைத்து 'சால மிகப் பெரிய சாதனை காண் ஈதெல்லாம்' என்று வியந்து,

'ஆனாலும் நின்தன் அதிசயங்கள் யாவினுமே,

கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா' என்றும்,

'ஆசை தருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே

ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ'

என்றும் பாடியவற்றை முழுப்பாடலாகவே கூறி இசையின் ஈடில்லாப் பெருமையை உணர்த்தினார்."

ஈற்றில் சட்டத்தரணி பூலோகசிங்கம் அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது நிறைவேறியது.

இந்த வெளியீட்டு விழா பஞ்சமூர்த்தி அவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா போல அமைந்ததைக் காணமுடிந்தது. ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் வாழ்த்திப் பாராட்டும்போது எல்லோர் மனமும் நிறைவு கொள்கிறது; ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகிறது.

இரு வாரங்களுக்கு முன்புதான் மாபெரும் இசைக் கலைஞனான நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனுக்கு மணிவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த 'இசையருவி' வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஒழுங்கு செய்து இந்த நாடாவை முற்றிலும் புதிய முறையில் உருவாக்கிய விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் போற்றிப் பாராட்டுதற்குரியது.

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

இது நெருப்பின் குரல்

 

 

 

முன் பக்கம்:

ithu neruppin kural.jpeg

 

 

பின் பக்கம்:

Neruppin kural

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

இது பிரபாகரன் காலம்

 

 

 

இது பிரபாகரன் காலம்.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.