Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01
 
 
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழி வழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.
 
அதே வேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற் கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி.
 
எனவே, வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது ஒரு நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. மரபு, பாரம்பரியம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல்லாக பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப் பட்டாலும், அவை இரண்டும் ஒன்றல்ல, இன்றைய வழக்காறு அல்லது மரபு [custom] நாளைய பாரம்பரியம் [tradition] ஆகும்.
 
ஒரு மரபு அல்லது பாரம்பரியம் என்பது ஒரு சட்டம் அல்லது உரிமை அல்லது வழக்கமான வழி என்றும் கூறலாம் [a law or right or usual way], இது எழுதப் படாத ஆனால் நீண்ட காலமாக பலரிடம், பொதுவாக ஒரே நாட்டில், ஒரே பண்பாட்டில் அல்லது ஒரே மதத்தில் [the same country, culture, or religion] இருப்பவர்களிடம் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். உதாரணமாக ஏதாவது ஒன்று பொதுவாக, வழக்கமாக ஒரே வழியில் அல்லது அதே வழியில் கடைபிடித்தால் அதை நாம் "வழக்கமான வழி" ["customary way"] என்று பொதுவாக கூறுவது உண்டு.
 
மேலும் நாம் விபரமாக மரபு அல்லது பாரம்பரியம் பற்றி அலச முன்பு, இன்னும் ஒரு விடயத்தையும் கூற வேண்டிய அவசியம் உண்டு. அதாவது பண்பாடு என்றால் என்ன என்பதேயாகும். இதன் பொருள் மரபின் பொருளுடன் ஒத்து காணப்பட்டாலும், மரபு என்பது பொதுவாக ஒரு நடைமுறையை அல்லது செயல்பாட்டை குறிக்கிறது, ஆனால் பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப் படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .
 
பொதுவாக நாம் பின்பற்றும் நடைமுறைகள், மரபுகள், பாரம் பரியங்கள் அல்லது சடங்குகள் [practices, customs and traditions or rituals], ஏதாவது அடிப்படையை [basis] அல்லது காரணத்தை கொண்டுள்ளதுடன், அவற்றில் சில உண்மையான அறிவியலாகவும், விஞ்ஞான பூர்வமானவையாகவும் [truly scientific] உள்ளன. எனினும் ஆரம்பத்தில் ஒரு காரணத்தால் ஏற்பட்ட வழக்கம், பின் நாளடைவில், அந்த அடிப்படை காரணம் மறக்கப் பட்டு, அவை ஒரு குழுவின் பொதுவான நடை முறைகளாக இணைக்கப்பட்டதும் அல்லது மாறிவிட்டதும் அல்லாமல், அவை சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றமும் அடைந்து வளர்கின்றன.
 
உதாரணமாக, ஒரு முறை ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு உண்மையான கட்டுரை ஒன்று வெளியானது, அதில் நாலாவது தலைமுறையில் வாழும் குடும்பப் பெண், தாம் ஏன் வான்கோழியை ஈஸ்டர் [Easter] அன்று மூன்று துண்டுகளாக அறுத்து சமைக்கிறோம், ஆனால் மற்ற எல்லா வீடுகளிலும் பொதுவாக வான்கோழியை [turkey] முழுமையாக சமைக்கிறார்கள் என அறிய முற்பட்டார் எனவும். அதனால் தன் தாயிடம் அதை பற்றி கேட்டார் என்றும் அதற்கு தாய் இப்படித்தான் எம் குடும்பத்தில் எப்பொழுதும் சமைப்பதாகவும், அதை தன் தாயிடம் இருந்து கற்றதாகவும் கூறினார் என்றும், அதனால் அந்த பெண் தனது பாட்டியிடம் சென்றார் என்றும், அவரும் அப்படியே விடை கூறியதால், அந்த ஆர்வமிக்க பெண் தனது பூட்டியிடம் சென்றாராம். அங்கு அந்த காலத்தில், தனது வீட்டில் நிலவிய சூழ்நிலையில் அல்லது வசதியில், தம்மிடம் இருந்த சமையல் பாத்திரத்தில் வான்கோழியை முழுமையாக சமைக்க முடியவில்லை என்றும், அதனால் அதை மூன்றாக அறுத்து சமைத்ததாகவும் கூறினார். என்றாலும் அந்த நடைமுறையை பார்த்த அவர்களின் குடும்பம் அதன் பின் அப்படியே மூன்றாக அறுத்து சமைக்க தொடங்கியதாம், அது பின்நாளில் அவர்களின் குடும்ப நடைமுறை ஆகிவிட்டது என்று அந்த கட்டுரை முடிக்கிறது. இப்படித்தான், பெரும்பாலான நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் சில அடிப்படைகளை கொண்டு உள்ளன எனலாம்.
 
உதாரணமாக, கிருமிநாசினி [disinfectant] என்று ஒன்று இல்லாத அந்த காலத்தில், பசுவின் சிறுநீர் பாவித்து உள்ளார்கள், அதே போல மாட்டுச் சாணத்தை வீடு மெழுகுவதற்கு பாவித்து உள்ளார்கள், வெள்ளி குவளையில் நீர், சூடான பானங்கள் கொடுத்து விருந்தினர் கௌரவிக்கப் பட்டார்கள். வெள்ளி ஒரு தொற்றுயிர்க் கொல்லி [germicidal], எனவே அது விருந்தினர் சில வேளை சுமந்து வரும் எந்த தொற்று நோயையும் தடுக்க உதவியது.
 
இப்படியே பல மதங்கள் அல்லது குழுக்கள் மாதவிடாய் தொடர்பான மரபுகளை கொண்டுள்ளன. மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று, எனவே அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, மேலும் அந்த கால சூழ்நிலை வசதிக்கு ஏற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் சில மாதவிடாய் மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது.
 
இவைகளுக்கு பின்னால் சில அடிப்படைகள் இருப்பதை காண்கிறோம், எனினும் அவை இன்றும் பொருந்துமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாக இருப்பினும், வழக்காறுகள் அல்லது மரபுகள் பொதுவாக மாற்றம் பெறுகின்றன. புதிய அல்லது வேறு மரபுகள் வந்து சேருகின்றன.
 
அதாவது, நடை முறையில் இருந்து வந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப விலகிப்போவதனை காணலாம். அப்படியானவற்றை நாம் கட்டி இழுத்து பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை ஆகும். எனவே, பண்டைய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே சமூக வளர்ச்சியின் காரணமாக சில தேவைகள் கருதி சில இல்லாதொழிந்து போவதும் உண்டு.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 02 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
  • நியானி changed the title to "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02
 
 
தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -
 
"யாரும் இல்லை, தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"
 
என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.
 
தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.
 
எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.
 
இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என
 
"..... எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"
 
என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.
 
இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.
 
மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .
 
இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 03
 
 
மனிதனுக்கும் மட்டும் அல்ல, சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்ஞானிகள் நிறுவி உள்ளனர். உதாரணமாக கீரி [mongooses] ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு பாரம்பரியத்தை கடத்துகிறது என கண்டு பிடித்து உள்ளனர். எனவே இது மனிதனதோ அல்லது உயர் அறிவு கொண்ட மிருகங்களான மனித-குரங்கு உள்ளிட்ட உச்ச உயர்பாலூட்டி உயிரினத் தொகுதி மற்றும் டால்பின்கள் [Is not the sole purview of humans and intellectually advanced animals such as primates and dolphins] ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தில் அல்லது வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என்கிறது.
 
இது இன்னும் ஒன்றையும் வலியுறுத்துகிறது, அதாவது எம்மிலும் அறிவு குறைந்த மிருகங்கள் கூட தமது அடையாளத்தை, தமக்கான சிறப்பு இயல்புகளை தக்க வைக்க, தமது பண்பாடடை அடுத்த தலை முறைக்கு கடத்துகிறது என்பது தான்!, அப்படி என்றால் நாம் எம்மட்டு? நாமும், அது எமது ஒரு கட்டாய கடமையாக இல்ல விட்டாலும், அது எமக்கு குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப் பட்டதால், அது ஒரு வாழ்க்கை முறையாக பெற்றோரால் அறிமுகம் செய்யப் பட்டதால், அதை இன்னும் எதோ ஒரு வழியில் பின்பற்றுகிறோம்.
 
என்றாலும் சிலவேளை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளை நாம் தற்போதைய சூழலில் கைவிடுவதும் உண்டு. உதாரணமாக, எண்ணெய் ஆட்டுவதற்கு மரத்திலான செக்கை பயன்படுத்தி, அதன் பெருமையை பாரம்பரியமாக கடைபிடித்த தமிழர், இன்று இயந்திரங்களால் அதிவேகத்தில் பிழிந்தெடுக்கப்படும் நவீன முறைக்கு மாற்றம் அடைந்துள்ளனர். மேலும்,உடற்பயிற்சி அல்லது கடும் உடல் வேலைக்கு பின் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் பழக்கமும் இருந்தது. உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
 
நவீன முறையில் இயந்திரத்தால் எண்ணெய் பிழியும் பொழுது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சூடாகவும் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவும் உள்ளது. மேலும் வர்த்தக ரீதியாக, நீண்ட பாவனைக்கு உகந்ததாக இருப்பதற்காக தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. [“refining degrades nutritional value, and more significantly, introduces harmful trans fats in an attempt to improve shelf life for commercial reasons”]
 
ஆனால், பாரம்பரிய முறையில் மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், குளிராகவும் இருக்கும். [“Cold-pressed oils have all their nutrients intact, retaining the natural properties of the oil-seeds, unlike refined oil,”] மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் அதிகமிருக்கும்.[“It’s a bit like atta and maida; the source is the same, but atta is far superior to maida, nutritionally] இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
 
இப்படி பெருமை வாய்ந்த பாரம்பரிய முறை இன்று பல காரணங்களால் மறைந்து போய் புது நவீன முறை பழக்கத்திற்கு வந்துள்ளது.
எனவே, நாம் எமது ஒவ்வொரு பாரம்பரியத்தின் மூலத்தையும் அது உரைக்கும் காரணத்தையும், அதன் உண்மைத் தன்மையையும் அறிவியல் விளக்கத்தையும் அறிவது மிகவும் சாலச் சிறந்தது, அப்படியாயின் தேவையற்ற, அறிவியலுக்கு ஒவ்வாததை நாம் தவிர்த்து, எமது பாரம்பரியத்தை பெருமையடைய செய்து, எமது அடையாளத்தையும் பெருமை அடையச் செய்யலாம்.
 
இது சாத்தியமான ஒன்று, ஏனென்றால், பாரம்பரியத்திற்கு ஒரு கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் [Since traditions are not strict rules and regulations ] கிடையாது, எனவே சில அம்சங்கள் அங்கு மாற்றக் கூடியவை, உண்மையில், நாம் இன்று பின் பற்றும் பாரம்பரியம் , அதன் அசல் பாரம்பரியத்தின் மாறுபாடுகளே [variations of an original tradition] ஆகும் . உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் மரங்கள் [Christmas trees] சாப்பிடக் கூடிய ஆப்பிள்கள் மற்றும் கொட்டைகள் மூலம் அலங்கரிக்கப் பட்டன, அதுவே கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக அன்று இருந்தது. அதன் பின் [illuminated by candles] மெழுகுவர்த்தியால் வெளிச்சம் கொடுக்கப்பட்டு, இன்று [electric lights and various ornaments] மின் விளக்குகள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக, பாரம்பரியம் நமது கலாச்சாரத்தின் முக்கியமான பகுதி எனலாம். அவை எமது குடும்பம், எமது சமுதாயம் ஆகியவற்றின் அத்திவாரம் மட்டும் இன்றி அதனை கட்டி எழுப்பும் கட்டுமானமாகவும் உள்ளன. அது எமது கடந்த காலத்தை வரையறைக்கும் வரலாற்றின் ஒரு பகுதி நாம் என்பதை, எமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. அது மட்டும் அல்ல, நாம் இன்று யார் என்பதையும், நாளை எப்படி நாம் இருப்போம் என்பதையும் வடிவமைக்கிறது.
 
நாம் பாரம்பரியத்தின் உண்மையான செயலை, கருத்தை புறக்கணித்தால், நாம் எமது அடையாளத்தை தொலைத்து விடுவோம் அல்லது எமது அடையாளத்திற்கு ஆபத்து ஏற்படும்.
 
உதாரணமாக, இல‌ங்கையின் க‌ரையோர‌ங்க‌ளில், குறிப்பாக புத்த‌ள‌ம், சிலாப‌ம், நீர்கொழும்பு, மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ த‌மிழ்ப்பர‌த‌வ‌ர்க‌ள் போத்துக்கேய‌ரின் வ‌ருகையுடன் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்திற்கு மாறி, மெல்ல, மெல்ல தமது பாரம்பரியத்தை இழந்து, அடையாளம் தொலைத்து, நாள‌டைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாயின‌ர் என்பதே வரலாறு உரைக்கும் கசப்பான உண்மையாகும்.
 
பாரம்பரியம் எமக்கு ஒரு ஆறுதலையும் சமுதாயத்தில் ஒரு பங்கையும் பங்களிக்கிறது. இது குடும்பத்தை இணைக்கிறது, நண்பர்களுடன் மீண்டும் இணைக்க துணை புரிகிறது. மேலும் சுதந்திரம், நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மை, நல்ல கல்வி, தனிப்பட்ட பொறுப்பு, ஒரு வலுவான பணி நெறிமுறை, மற்றும் தன்னலமற்ற இருப்பு [freedom, faith, integrity, a good education, personal responsibility, a strong work ethic, and the value of being selfless] போன்றவற்றை வலிவூட்டுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான முக்கிய விடயங்களை கொண்டாட இது இடமளிக்கிறது.
 
உதாரணமாக, இது ஒருவர் பங்களித்த நற்செயலுக்கு நன்றி செலுத்த சந்தர்ப்பம் கொடுக்கிறது, எங்கள் சமுதாயத்தின், குடும்பத்தின் உயர்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தவும், எங்கள் பன்முகத்தன்மையை [diversity] காட்டவும், ஒரு நாடாக, ஒரு இனமாக ஐக்கியப்படவும் வழிவகுக்கிறது. அது மட்டும் அல்ல பாரம்பரியம் எங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஒரு நீடித்த நினைவுகளை உருவாக்குவதுடன், எம்மை மற்றவர்களுக்கு அர்த்தமுடன் பிரதிபலிக்க ஒரு சிறந்த சூழலையையும் வழங்குகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 04 தொடரும்
40778331_10212567716810669_8553040470740041728_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vDHsG7_fSSAQ7kNvgEPjzS0&_nc_oc=AdhVE2d2nF_w7xDyM-m-5mYdlIC4JNPCUY8wwAkl5K3OSi9zbUgSo0KgbN0IXLUPCrc83NwVlsmy4Fatn1DYXI9t&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBamUwWjgUkXP6d60OjJiBVDqyUrk9Op5i2ZgQl8mz4AQ&oe=6657169B 40918794_10212567719530737_8249004078068137984_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GYDi5JY-T0cQ7kNvgGy7_-A&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZhkU0bWe_EV50IKs3V1UxbXgVevQi_DNM3JTs_TI98w&oe=66571037
40803362_10212567720530762_5979134035593527296_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EGXO0gxL9qoQ7kNvgETCCef&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-qThtdmoty8qt6A-3WrUk799db711wQ5cbp8QVqDSRg&oe=665719B2 40678000_10212567722330807_5191043331034972160_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ULkbGlrEg8AQ7kNvgH5Tjb_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAXCnzwpoHq-0TzYbC52BEdQAMXJNHBkE8Zz3y_KIowlQ&oe=66572D2A 40862245_10212567723810844_6710097590601383936_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ueTU2z08y5EQ7kNvgH7WJK5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC1YKV6pWHmkqmj087C44VFN1BGPa2-yuTIcZeUXmbYwg&oe=6657063F 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 04
 
 
நாம் எம் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது, சாட்சியங்களுடன் காட்சி அளிக்கும் மிகப் பண்டைய பாரம்பரியத்தில் ஒன்றாக யோகா [Yoga] இருப்பதை காண்கிறோம். இது இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன் இருந்துள்ளது. இதை அத்தாட்சி படுத்துவதாக மொஹெஞ்சதாரோ தொல்லியல் தளம் அமைகிறது. அங்கு சித்தசானா காட்சியில் [Siddhasana posture] பல முத்திரைகள், கல்வெட்டுகள் [inscriptions] கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. எப்படி என்றாலும் முனி பாரம்பரியத்தில் தோன்றிய யோகா, பிற்காலத்தில் ரிஷி பாரம்பரியத்தில் வேத பண்பாட்டால் பிரபலப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மனித குலம் உருவாக்கிய மிகப் பெரியதொரு சிறப்பு வாய்ந்த பழக்கமாகும், இது உடல் மற்றும் மனப்பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான நல்ல ஒரு பயிற்சியாகும்.
 
நாகரிகம் முன்னேற முன்னேற பாரம்பரியமும் அதனுடன் சேர்ந்து பொதுவாக மாறுகிறது, ஏனென்றால் நாகரிகத்துடன் அறிவு மற்றும் அனுபவத்தின் எல்லைகள் விரிவு படுவதே இதற்கான காரணம் ஆகும். எனவே பாரம்பரியமும் அந்தந்த சூழ்நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது எனலாம். ஒவ்வொரு நாகரிகமும் அந்தந்தக் கால கட்டத்தின் தேவையை பொறுத்து பாரம்பரியத்தை அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எது சிறப்பாகவும் தேவைப் பட்ட தாகவும் இருந்ததோ, அது இன்று அப்படி இல்லாமல் போகலாம். எனவே, குருட்டு மரபுசார்ந்த அல்லது பழமைவாதவாதத்தால் [blind orthodoxy or conservatism ] அப்படியே பாரம்பரிய பாரம்பரியம் தொடர்வதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எம் அனைத்து முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய பின்னடைவு [draw back] ஆகும்.
 
நாம் இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளை இறுக்க பற்றிக்கொண்டு இருக்காமல், சூழ்நிலைக்கு அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க வேண்டும். நாம் எப்படி வாழ்ந்தோம் என பெருமை படுவது மட்டும் போதாது, எங்கள் முன்னோடிகள் தங்கள் விலை மதிப்பற்ற வம்சமாக விட்டு விட்டு சென்ற நாமும், பெருமைக்கு உரியவராக இன்றைய உலகில் இருந்து அவர்களுக்கு பெருமை தேட வேண்டும்.
 
ஒரு உதாரணமாக துடக்கு என்ற மரபை எடுப்போம், ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு ஒரு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாடும் காலம் என்பதால், ஒரு தற்காலிகமாக அளிக்கப்படும் விடுமுறையே, ஆசௌச அல்லது துடக்கு காலம் ஆகும்.
 
சௌசம் என்றால் சுத்தம் எனப்படும். எனவே, ஆசௌசம் என்றால் சுத்தமற்ற அல்லது 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்று பொருள்படும். மரணம் என்றால் மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும், பிறப்பு என்றால் அந்த மகிழ்வை கொண்டாட, தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக் கொள்ள, பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாக ஒன்றாக கழிக்க, இந்த துடக்கு காலம் வழி செய்கின்றது எனலாம்.
 
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய சமுதாயத்தின் தேவையில் தோன்றிய மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது.
 
எனினும் இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
 
ஏன், அந்த காலத்திலேயே, பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 
அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத் தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர்.
 
"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."
 
இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.
 
"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."
 
அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,
 
“வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”
 
அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 05 தொடரும்
41033394_10212582809867986_2566886555914338304_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LVnATYknwigQ7kNvgGqbdli&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACoBFt2K3JGEX1Fb-DjpKTTr5LJVG_BIkvIuQfbFsfaQ&oe=66588981 41194474_10212582812108042_4146547889268588544_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XFP-6mS1bvAQ7kNvgHEvbHK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAiTDtVGW6zgOurDWi9lzX27huybK5o_ZnH1yFwqDe58Q&oe=66588CC4 41027619_10212582814228095_4479680464872800256_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9g9C1_1yGqsQ7kNvgE70sc-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA0VclzE9aOrJIvSJNpwoWg3ZNY_MwLkou05LstxvhAYA&oe=6658695241046564_10212582815388124_7058909240672387072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ltNCqJCoFG8Q7kNvgFMWyi5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD7_WGQ10oCpW8lRw5MwVnPa0G5ugktG4HoPYF_JWicAA&oe=665869BE41113261_10212582813428075_6010787257370279936_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DZ17o729xAcQ7kNvgGXXDHD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDuVIQBApY6ENWo5pmIU6YtgKRmS3FlrKPtfdZh0ARn_A&oe=665869F8 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 05
 
 
ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வையும் மற்றும் பாரம்பரியங்களையும் பார்க்கவேண்டும். இது அந்த மக்களின் முக்கியத்துவத்தை மட்டும் இன்றி, அவர்கள் எப்படி ஓய்வு எடுத்தார்கள், பொழுது போக்கினார்கள், கொண்டாடினார்கள் என்பதையும் எடுத்துக் காட்டும்.
 
உதாரணமாக இலங்கையின் ஒரு பிரதேசமான புத்தளத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்னும் குடும்பங்களை அறிமுகப் படுத்துவதற்கு “குடும்ப பட்டப்பெயர்” பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இவை அவர்களின் வரலா ற்றை, அவர்களின் முன்னோர்களை மீட்டி பார்க்க, பரம்பரைகளின் அடையாளமாக வழக்கத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
 
இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் அந்த காலத்தில் அவர்கள் செய்த தொழில், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் செயற்பாடுகள், தோற்றங்கள் என இன்னோரன்ன அமசங்களை கொண்டு வந்திருக்கலாம். அங்கு “பாசுமணி” என்ற குடும்ப பட்டப் பெயரை கொண்ட ஒரு குடும்பம் உண்டு. விசாரித்து பார்த்ததில், அவர்களின் முன்னோர்களின் அன்றைய தொழில் பாசுமணி மாலை செய்து கொடுப்பதாக இருந்ததை அறிந்தோம். அன்றைய காலங்களில் தங்கத்தின் பாவனை பெரிதாக இருந்திராத காலமென்பதால் பாசுமணி மாலைக்கான மவுசு அதிகமாம். திருமண நிகழ்வுகள், பெண்பிள்ளைகளின் பூப்படைதல் நிகழ்வுகள், பெண் குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் என இன்னோரன்ன சடங்குகளின் போது இவ்வாறன பாசுமணி மாலைகளை மக்கள் பெரும்பாலும் அணிவதை, அன்பளிப்பாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்களாம்.
 
பெரும் பாலும் இந்தியாவிலிருந்தே இந்த பாசுமணி முத்துக்கள் பெற்றுக் கொள்வார்களாம். காலப் போக்கில் பாசுமணி மாலை செய்து கொடுக்கும் தொழில் அழிவடைந்தாலும் பாசுமணி என்ற அந்த குடும்ப பட்டப் பெயர் நிலைத்து விட்டது என்கிறார் அந்த பாசுமணி குடும்பத்தின் ஒருவர். இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் ஒரு சில கேட்பதற்கு வெவ்வேறு விதமாக இருந்தாலும், அவை தம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதை மறுக்க இயலாது என்றும், தமக்கு பின்னால் வருபவர்கள் தமது முன்னோர்களின் வாழ்க்கையினை, வழிமுறைகளினை இதன் மூலம் அறிய முடிகிறது எனவும் பெருமைப் படுகிறார் அவர்.
 
மேலே எடுத்து காட்டிய ஒரு தனிப்படட தமிழ் முஸ்லீம் குடும்பம் ஒரு பட்டப் பெயருக்கு பின்னாலேயே பெருமை கொண்டு பூரிக்கிறது என்றால், பெருமைக்குரிய பல கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் [culture and traditions] குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் பின்பற்றும் முழு தமிழ் இனம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணி பாருங்கள்.
 
தமிழ் இனம் இன்றைய உலகின் மிகப்பழையன எனலாம். தமிழரைப் பற்றி யாராவது சிந்தித்தால், அவர்கள் பெரும்பாலும் நினைப்பது, தமிழர்கள் பட்டுத் துணியை விரும்புகிறவர்கள் என்றும், சேலை வேட்டி உடுப்பவர்கள் என்றும், மற்றவர்களை வணக்கம் செலுத்தி வரவேற்பவர்கள் என்றும், கொண்டாட்ட காலங்களில் பெரும்பாலும் மரக்கறி உணவை வாழை இலையில் உண்ணும் மரபை உடையவர்கள் என்றும், அவர்களின் முக்கிய கொண்டாட்டம் தை பொங்கல் என்றும், இது பெரும்பான்மையான மக்கள் முன்பு விவசாயிகளாக இருந்தனர் என்பதையும், மற்றும் முக்கனி என்று சொல்லப்படும் மா, பலா, வாழை பழங்களை விரும்பி பொதுவாக உண்பவர்கள் என்பதும் ஆகும்.
 
எனினும் கால ஓட்டத்தில், குறிப்பிடத் தக்க வெளிநாட்டு தாக்கங்களால், இன்று அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கலப்பால், இது தான் அவர்களின் தனித்துவமான மரபு அல்லது பாரம்பரியம் என சுட்டிக் காட்டுவது சிக்கலாகிறது.
 
இன்றைய காலத்துக்கேற்ற புதுத்தினுசானபாணி [ஃபேஷன்கள்], உணவு பழக்கம், வாழ்க்கை முறை, விழுமங்கள் [மதிப்புகள்] [fashions,food habits, life-styles, values] என்பன எமது நீண்ட வரலாற்றின் விளைவுகள் ஆகும். இன்று தமிழர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமது தாயகமாக, குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பண்பாடு பல விதங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பெருமை உடையது. அத்துடன் தமிழ் மிகவும் பண்டைய மொழிகளில் ஒன்றும் ஆகும்.
 
குறைந்தது 2500 ஆண்டுகளாக அதன் அடிப்படை மொழி அமைப்பு மாறாமல் தொடர்ச்சியாக வாழும் மொழி இது ஆகும். அது மட்டும் இல்லை இன்று மேலும் நாற்பது லட்சத்திற்கு [four million] மேற்பட்ட தமிழர்கள் பரந்து பெரும் தொகையாக பல நாடுகளில், குறிப்பாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, கரிபியன் தீவுகள், ரீயூனியன் தீவு, மொரிசியஸ், பிஜி, மற்றும் புலம்பெயர் தமிழர்களாக [Tamil diaspora] அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, சுவிற்சர் லாந்து, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்.
 
பொதுவாக எங்கள் மரபும் பாரம்பரியமும் எமது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்டு, அது எமது குடும்பத்தின் மூத்தவர்களாலும் குருவாலும் [ஆசான்] இளம் வயதிலேயே கல்வியுடன் சேர்த்து புகுத்தப் பட்டு, அது வாழ்வின் ஒரு பகுதியாக இன்றும் தொடர்கிறது.
 
ஆனால் இன்று கல்வி மேலும் அதி முன்னேற்றம் அடைந்து, இன்றைய இளைய தலைமுறை ஏதாவது ஒன்றை பின்பற்ற முன் அல்லது செய்ய முன் அதைப்பற்றி கேள்வி கேட்டு, காரணம் அறிந்து, புரிந்து கொள்ள [question, reason and understand] முனைகிறார்கள். எனவே நாம் கண்மூடித்தனமாக அதை அவர்களுக்கு புகுத்தாமல் அதன் உண்மை நிலையை காரண காரியங்களுடன், எப்படி [தூண்டுதலும் துலங்கலுமுடன்] புத்தளத்து பாசுமணி குடும்பம் விளக்கியதோ, அவ்வாறு நாம் விளக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு துடிப்பையும் மகிழ்வையும் கொடுத்து அந்த பாரம்பரியத்தின் உண்மை நோக்கத்தை மேலும் அறிய அவர்களுக்கு ஒரு ஆவலையும் தூண்டும்.
 
அதை விட்டு விட்டு, இந்த பாரம்பரியம் தானாக தொடரும் என இருந்து விட்டால், அது காலப்போக்கில், நமது வாழ்க்கை முறை நீர்த்துப் போய், தளர்வூட்டு எமக்கே அது ஒரு அந்நியமாக போய்விடும். இது உங்களின் நல்ல ஆரோக்கியம் மாதிரி, அதை நீங்கள் இழக்கும் வரை அது தானாக தொடரும் என பேசாமல் இருப்பது போல ஆகும்.
 
நாங்கள் எங்கள் விழுமியங்களை பாராமுகமாக இருந்தால், அலட்சியம் செய்தால், ஒரு நாள் நாம் எம் கண்களை திறக்கும் பொழுது, விழித்தெழும் போது, நாம் எம்மையே அடையாளம் காணாமல் போய்விடுவோம். இந்த விழுமியங்கள், எமது நாட்டின், எமது குடும்பத்தின் முதுகெலும்பு ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 06 தொடரும்
41554411_10212625667499400_4966016804552966144_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Zbfi-3S1-wYQ7kNvgFyf2WP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAFrF6_KBmjSBD_0sl2rTS4o7VQNWXiELHD2rdsfsrD3A&oe=6659CC5F 41747591_10212625668739431_7714999154795085824_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U9aMgmK8a_gQ7kNvgHBXoM-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAEUPU5_2ct88aFuoaNRUpnRGkoMu2nuA7ohyXY4uqQxw&oe=6659A64D 41769855_10212625669419448_7769483610968555520_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kr3Lcyzp20UQ7kNvgHHASCv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBeBce5DIgGGYHxhqI6xI25mDgbm1O0F_LA2iCr2dd-8A&oe=6659BBC8 41669221_10212625671459499_2836198206717558784_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=G7Chav7AANkQ7kNvgGlUBpV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBD89o0ml7y3OJyM1CZ8C6SbR4oKjDjQf5zPB7V7F4kRg&oe=6659CB0F 41729561_10212625673819558_7275877240275992576_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GRSTj_AhquMQ7kNvgHIbJc7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfArzyPXMXK1yHEW8TCbkbWu8IlwNfJoQl6qC0RL-gseZA&oe=6659A7A6
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 06
 
 
இது வரை பாரம்பரியத்தை பற்றி பொதுவாகவும் மேலோட்டமாகவும் அதன் அறிமுகத்தை, உள்ளடக்கத்தை பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் சில முக்கிய தமிழர்களின் மரபையும் பாரம்பரியத்தையும் நான் சரி என நம்பும் அறிவியல் காரணங்களுடன் தர முயற்சிக் கிறேன்.
 
நான் இவ்வற்றை என்னால் முடிந்த அள வில் கவனமாக கையாண்டாலும், சிலவேளை தவிர்க்க முடியாத சில பிழைகள் மற்றும் குறை பாடுகள் [some errors and omissions] ஏற்படலாம். அதற்கு நான் இப்பவே வருத்தம் தெரிவிக்கிறேன். என்றாலும் விபரமாக நான் அவைகளை அலச முன்பு, இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டி யுள்ளது.
 
அதாவது பாரம்பரியம் எமக்கு எதை தர வல்லது?
 
இது அதன் கருத்தின் படி, நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குடும்பம் அல்லது சமுதாயம் முதலியன எப்படி சிந்தித்தனை, நடந்து கொண்டன அல்லது ஏதாவது செய்தனர் [a way of thinking, behaving, or doing something] என்பதை குறிக்கிறது எனலாம். அது அன்று அங்கு பரம்பரை பரம்பரையாக வேரூண்டி இருந்தது.
 
ஆனால் இன்று புது வழியில், சிறந்த வழியில் நாம் ஒன்றை செய்யக் கூடியதாக இருக்கையில், அந்த பழம் வழியை ஏன் பின்பற்ற வேண்டும்? எப்படி நாம் இன்னும் பாரம் பரிய வழியில் ஒழுகினால், வளர அல்லது முன்னேற அல்லது அபிவிருத்தி அடைய முடியும்?
 
உலகம் மாற்றம் அடைகிறது என்னவோ உண்மைதான், ஆனால், நாம் மனிதர்களாக இருப்பதற்கான சாரமான - எங்கள் போராட்டங்கள், எங்கள் அச்சங்கள், எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் [our struggles, our fears, our needs and desires] - ஆகியவை, பெருபாலும் மனித இயல்பை தீர்மானிக்கும் உள்ளார்ந்த பண்புகளால் [inherent characteristics] அப்படியே மாறாமல் இருக்கின்றன. -பாரம்பரியம் சில பண்புகளை, உதாரணமாக எம் மேலும் மற்றவர்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை, உடன் இருக்கும் உணர்வை, உறுதிப்பாட்டை [heightening our awareness of self and others, cultivating a sense of belonging and stability] எமக்கு ரகசியமாக நினைவூட்டுவதுடன் அது நம் வாழ்விலும் சமுதாயத்திலும் ஒரு வழி காட்டி சக்தியாகவும் இருக்கிறது. எனவே இந்த அர்த்தத்தில் பாரம்பரியம் எப்போதும் மேம்படுகிறது, வளர்கிறது எனலாம்.
 
இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை?
 
ஒருமுறை சீன யாத்ரிகர் ஹியூன்-ஸங் [Hiuen -Tsiang] என்பவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் [Harsha, c. 590–647 CE, also known as Harshavardhana] என்ற ஒருவன் பேரரசனாக இருந்தான். அந்த பேரரசன் தனது செல்வத்தை தனது மக்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கும் அந்த மரபை கண்டு அவன் வியந்தான். அது போலவே தஞ்சாவூர் அரசன் வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்ல சத்திரம் [shelter] அமைக்கும் மரபில் புகழ் பெற்று திகழ்ந்தான். இது வறியவர்களையும் நோயாளிகளையும், தங்கள் கவனிப்பில் இருந்த இறந்தவர்களையும் கவனித் தது. ஆனால் இந்த மரபு பின்நாளில் ,காலனித்துவத்தின் வருகையால் வழக்கொழிந்து போய்விட்டது.
 
தஞ்சை மாமன்னர் சரபோஜி [Raja Sarfoji], 1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அளவில் பிரிட் டிஷ் காலனித்துவ எஜமானர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் தனது அரசுக்கு என்ன நடந்தாலும், இந்த விருந்தோம்பல் பாரம்பரியம் நிறுத்தப் படக் கூடாது என்று அந்த தமிழரின் பாரம்பரியத்தின் பெருமையை சுட்டிக் காட்டினான். ஆனாலும் வளங்கள் வீணாக பயன்படுகிறது எனக் கூறி நிறுத்தி விட்டார்கள். ஒரு சிறந்த பாரம்பரியம் அங்கு இறந்து விட்டது.
 
அப்படியான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்திலும் முன்பு இருந்தது. சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. நடை பயணமாக வரும் வழிப் போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை எனப் காரணப் பெயர் பெற்றிருக்கலாம்? அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு, உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட மேடை, கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப் பட்டு இருக்கும். இப்படி தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான்.
 
ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள், முக்கியமாக 7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின், தூய தமிழ் மரபு மெல்ல மெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றி விட்டது. சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் புரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு இன்றும் எமக்கு தெரிய வருகின்றது.
 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு பாடலின் கருத்து மட்டும் அல்ல, அதைப் பாடிய புலவர் உள்நாட்டு அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தாகவும் நாம் எடுக்கலாம்.
 
மேலும் புறநானுறு 239 இல், நட்டோரை உயர்பு கூறினன் [நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்], வலியர் என வழிமொழியலன் [வலிமை யுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்], மெலியர் என மீக்கூறலன் [தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்], பிறரைத் தான் இரப்பு அறியலன்[பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்], இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் [தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்], பசி தீர்த்தனன் [அவர்கள் பசியைத் தீர்த்தான், மயக்குடைய மொழி விடுத்தனன் [பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்],
 
போன்ற வரிகள் அன்றைய தமிழர்கள் போற்றி புகழ்ந்த பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. அந்த பாடலை முடிக்கும் பொழுது இப்படி அவன் எல்லா பாரம்பரியத்தையும் முழுமையாக செய்ததால், அவனை புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும் என்று முடிக்கிறது.
 
இனி நாம் சில தமிழரின் பாரம்பரியங்களை ஒன்று ஒன்றாக விரிவாக பார்ப்போம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 07 தொடரும்
42200196_10212670700785204_4125915325940105216_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3taqtWgezh0Q7kNvgEJFIK8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCGqCxTAQt8hZ5Abv3EhThcoNSw2Fw_PoHRKMN5MP0WVQ&oe=665A4D71 42197947_10212670702705252_6337722019072704512_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_JjgGaPSE20Q7kNvgGl2tuc&_nc_oc=AdiIjRrslPsCdSJy30nkWJ20dTiGHdJ9cgDYFK-y4B1S1j8tQM0dhFOySzWsOtGP1FvUtiHRtmMmZuY9f-h309rB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD5EaO4_T-4XOgYFrPzWuUy32KzWByoYQ0j6h39NZbTLg&oe=665A3F7C 42242378_10212670704585299_8302297479680884736_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zRjPbBhLCeMQ7kNvgFNDw7b&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAYd0X6hbhyeZxTQ8HQ4MS0PYVmRmMA-GC3GYg1h-h_Zw&oe=665A35E8 42236103_10212670712025485_8056564868620222464_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ey-fF8TwzCkQ7kNvgFiKlRT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCwzZrCIulFTX3Ig38pWAopC1dlBS-GvqlTidDvCQomNw&oe=665A2488 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 07
 
 
ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின், வாழும் சில வழி முறைகளை [way of life] செய் முறையில் எடுத்து கூறுவது, அந்த குடும்பத்தின் அல்லது அந்த சமுதாயத்தின் அல்லது அந்த நாட்டின் பாரம்பரியம் எனலாம். அதே போல அக்காலத்தில் அவரவர் வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மத்தையும் வாழ்வு முறையையும் கொடுக்க ஒருவராலோ, ஒரு சிலராலோ அவரின் அல்லது அவர்களின் சிந்தனையின் படி, அவர் அல்லது அவர்கள் விரும்பும் ஒழுக்கத்தின் படி அல்லது கட்டுப்பாட்டின் படி, ஏற்படுத்தப் பட்டதே மதம் எனலாம். எனவே பெரும் பாலான பாரம்பரியங்களின் மூலத்தை நாம் இன்று மதத்தில் காணலாம். எனவே எம்முடைய பல பாரம்பரியமும், தமிழர் சமயத்தை மூலமாக கொண்டு உள்ளது ஒன்றும் வியப்பில்லை.
 
எம் தமிழர் மதம் ஆரியர், இந்தியா வருகைக்கு முன்னையது. அது அன்று இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அந்த தமிழர் சமுதாயம். சமூகச் சமத்துவத்தை [egalitarian] தன்னகத்தை கொண்டு இருந்ததுடன், அதிகார வர்க்கம் மற்றும் அடக்குமுறை சாதி முறையால் முடக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் உண்மையான மூல மாதமாக அன்று சைவ சமயம் [Shaivism] இருந்தது. இது பிராமண இந்து சமயத்திற்கும் [Sanskritic Hinduism ] மிகவும் முற்பட்டது. என்றாலும் மூன்றாம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு சற்று முன், தமிழகம் குடிபெயர்ந்த, வேத, காவிய பாரம்பரியத்தால் [Vedic and epic traditions] ஈர்க்கப் பட்ட பிராமணர்களும் மற்றவர்களும் கூட தமிழ் நிலத்தின், வாழ்வின் ஒரு பகுதியானார்கள். அதே போல, முன்-நவீன கால [Pre-Modern Period] தொடக் கத்தில் இருந்து அல்லது 1500 ஆண்டில் இருந்து, ஐரோப்பிய செல்வாக்கு தமிழர் பண்பாட்டிலும் மதத்திலும் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை எடு என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போக வைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.
 
என்றாலும் இன்னும் பெரும் பாலான தமிழர் சைவ மதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், மத வெறியர்களாக [religious fanatics] இல்லை. அவர்கள் தங்களுக்கு முடிந்த நேரங்களில் ஆலயம் சென்று தொழுகிறார்கள், ஆனால் கட்டாயம் அல்ல [not compulsory]. உதாரணமாக இஸ்லாத்தில், திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்ல விட்டாலும், ஐந்து வேளைத் தொழுகை கடமையாக எல்லா முஸ்லிமும் பின்பற்றுகிறார்கள். மேலும், சைவ சமயத்தில் ஆலயம் வருகைக்கு ஒரு கடுமையான மற்றும் வலுவான விதிகள் [no hard and fast rule] இல்லை. உதாரணமாக சைவ சித்தாந்தம் அருளிய திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். அவர் தனது திருமந்திரம் 1823 பாடலில்:
 
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும்
 
சிவவாக்கியார் எனும் சித்தர், தனது பாடலில்:
 
"கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே" என்றும்,
 
'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்று அகத்தியரும்,
 
மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்த பூசலார் நாயனாரும் எடுத்துக் காட்டுகளாகும்.
 
தமிழர்கள் ஒரு குழந்தையின் முன்னேறுகிற ஒவ்வொரு முக்கியமான படிகளையும் [Every important step in the progressive life of a child] ஒரு பண்டிகை விழாவாக [festive occasion] ஒரு பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறார்கள்.
 
ஒருவரின் தனிப்பட்ட சுகாதாரம் [Personal hygiene], மதம், பண்பாடு, மற்றும் இடம் சார்ந்ததாக, பொதுவாக இல்லது இருந்தாலும், சில குழுக்களில், சில மக்கள்களில், கலாச்சார மற்றும் மத காரணிகள் [cultural and religious factors] ஆழ்ந்த தாக்கத்தை இவைகளில் ஏற்படுத்துகின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் கை சுகாதார நடைமுறைகள் சிலவற்றை காண்கிறோம்.
 
முன்னைய காலங்களில் இடது கை அதிகமாக சுத்தம் செய்ய பாவிப்பதால் [primarily used for personal hygiene purposes], இடது கையால் கொடுப்பதோ வாங்குவதோ ஒரு கௌரவமான செயல் அல்ல என்றும் அது மற்றவரை அவமதிப்பதாகவும் கருதப் பட்டது. ஒரு செத்த வீட்டிற்கு சென்றவர்கள் அல்லது பங்கு பற்றியவர்கள் தம் வீடு சென்றதும், வீட்டிற்குள் புகு முன் முதலில் குளித்து, தம் உடைகளை தோய்த்து தம்மை துப்பரவு செய்து கொள்கிறார்கள். அந்த கால சூழ்நிலையில், எந்த ஒரு தொற்று நோயும் சவ அடக்கத்திலிருந்து பரவாமல் இருக்க, இந்த முறை அன்று பின்பற்ற பட்டது. இவைகள் எல்லாம் ஒரு மரபாக மதம் கலந்து இன்னும் பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப் பட்டு வருகின்றன.
 
ஒரு மனிதன் இறந்ததும், உடல் பாக்டீரியாவிற்கு [bacteria] எதிராக போராடும் ஆற்றலை இழந்து விடுவதுடன். உடல் சிதையத் [அழுகுதல்] தொடங்குகிறது. முன்னைய காலத்தில் இறந்த உடலை பதப்படுத்துவது [embalming /எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு] கிடையாது, எனவே சவ அடக்கத்தில் பங்கு பற்றியவர்கள் ஒரு பாதுகாப்பு அற்ற நிலையில் இறந்த உடலுடன் சடங்கில் ஈடுபடுகிறார்கள். இதனால் தான் அன்று மரண வீட்டிற்கு போனவர்கள் முதலில் குளித்து பின் மற்ற காரியங்கள் ஆற்றும் மரபு ஏற்பட்டது எனலாம். இது அந்த கால சூழ்நிலைக்கு வசதிக்கு ஏற்ப ஏற்பட்டவை ஆகும். இன்று நிலைமை வேறு, அன்று அந்த சகாப்தத்தில், அதில் ஒரு பயன் இருந்தது, ஆனால் இப்பொழுது அது பொருந்துமா என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனென்றால் இப்ப சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப் படுத்தும் நடைமுறைகள் [sanitation and cleanliness practices] முன்னேற்றம் அடைந்து விட்டன.
 
அத்துடன் யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் தீட்டு / துடக்கு [unclean] ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் சில நாட்களுக்கு சமையல் கிடையாது. பொதுவாக உறவினர்கள், அயலவர்கள் உணவு அவர்களுக்கு வழங்குகிறார் கள்.
 
இந்த ஆழ்ந்த துக்க காலத்தில், அவர்களுக்கு ஒரு ஓய்வு கொடுத்து ஒரு ஆறுதல் அளிக்க இந்த மரபு அந்த கால கூட்டு குடும்ப சூழலில் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த துடக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட [quarantine] நிலை போல் எனக்கு தோன்றுகிறது? ஏனென்றால், அந்த முன்னைய காலத்தில் இறப்பிற்க்கான காரணம் சரியாக அவர்களுக்குத் தெரியாது, அன்றைய சூழ் நிலையில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, காசநோய், மற்றும் சளிக்காய்ச்சல் [Meningitis, Chicken pox .Tuberculosis (TB), Influenza] இவை போன்ற காற்றால், நீரால், உணவால் பரவக் கூடிய நோயாலும் இறந்து இருக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்களை தனிமை படுத்த இந்த துடக்கு என்ற நம்பிக்கை மரபு ஏற்பட்டு இருக்கலாம்? தானாக நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற [to let the place become sterile itself] ஒரு காலம் தேவை, அதையே துடக்கு காலம் என அன்று வரையறுத்து இருக்கலாம் என நம்புகிறேன்?
 
அது போலவே ஒருவர் சின்னம்மை போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப் பட்டு இருந்தால், வேப்பிலை கட்டு ஒன்று [a bundle of Neem or margosa leaves] வீட்டின் படலையில், அதை மற்றவர்களுக்கு எடுத்து கூற தொங்க விடுவார்கள். அந்த காலத்திற்கு ஏற்ற தனிமை படுத்துவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முறை [a brilliant method of isolation] என்று நம்புகிறேன்.
 
அது மட்டும் அல்ல வேப்பிலை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணிய ஓரணு உயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு [anti bacterial, anti parasitic, anti fungal, anti protozoal and anti viral] சத்தியாகவும் தொழிற் படுகிறது. மேலும் சின்னம்மை நோயால் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிப்பதற்கும், விரைவாக சின்னம்மை நோயில் இருந்து குணமாகவும் உதவுகிறது. இதனால் தானோ என்னவோ அகநானுறு 309 இல் வரி 4 "தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்" என்கிறதோ, யார் அறிவார் பராபரமே !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 08 தொடரும்
42673223_10212713936906080_4810991368753119232_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IcPQ5a9T7UsQ7kNvgH4x-Ao&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDvlCurkk2iotiRA2HgrWJuIBiLfXnuXCBMkAqkKt2aHg&oe=665D001D 42681059_10212713939426143_4058131512124506112_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sce2MjzQLcgQ7kNvgER9xmw&_nc_oc=AdjytoYwYPO8Tt3Ivlj4sp0TAEbs6PYqW42dW18ZigbahYyqyVz0V5Agl4fjJYFumVAwUD7eSIx27PaKxt2v26qt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD_8aYzsnIR_tgIocViD16M-piaTztNz2UqpUaOlheqMg&oe=665CEB28 42727192_10212713948586372_6540976239639789568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XQfdqH16SQYQ7kNvgFKFNhm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-FFDIfomhK5mIfhLubA4n7pdtQec-JpOmxw5sADZfpw&oe=665CF82E 42838112_10212713961626698_33842143269224448_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vNxWz6foUkkQ7kNvgGM-EFB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD-BzThZcDMBv50192_awXG02vil84Q4y9RsfBDNo7zKQ&oe=665CE253
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 08
 
 
நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார், அதாவது கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார்.
 
ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக் கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற் றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகி றது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு புராணத்தையும் காண்கி றோம்.
 
ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மை யாகும்.
 
பத்து பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல் அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் "என்று பாடுகிறது.
 
இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம் இது வாகும். அதனால் தான், எம் மனம் துக்கம் அடையும் போது, தலைவலியும் அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது, இதனால் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள்.
 
அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன் படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார்.
 
சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து கொண் டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர்.
 
பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப் பவர்கள் முற்றிலும் அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்" வரியும், அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன் கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனி யில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது மேனிநிற மாற்றம்]. அணிகலன்களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும் மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம், புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது.
 
அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதியதை சோழர் காலத்தைச் சேர்ந்த பெருங்கதை யில்: “பழுதற அழகொடு புனைநலம் புனையாக் குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள் தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.
 
இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரி யான சிறு புள்ளி / Skin Tag] தோன்றுவதால் மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்தார்கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.
 
மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன் படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம். அதில் "றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள் என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக, எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே மெஹந்தி [mehandi] என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது என்பதே சரியாகும்.
 
மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில் மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம்.
 
ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண் ணின் கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப் பதை, "பல் பொழில் தாது உண் வெறுக் கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழை போடு கூடிய பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார்.
 
ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில் அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும் மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 , உன் மனைவி தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வது தான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல், மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப், புது மலர் கஞல இன்று பெயரின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 09 தொடரும்
43220061_10212755543066208_6233096353749139456_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Oza1qkt8-PsQ7kNvgGt5hiR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDlb0FCISl2Idqtvcno5JbATzq5_6liIi2NzrK-w6I5BA&oe=6661F056 43226079_10212755545946280_7471625017650839552_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=c9FtSez4uuUQ7kNvgG_bQ81&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD87ff8cFv4OV4MIFqZ7fZbnZDZIrbhkolkmAq6Gszijw&oe=6661FBFB 43296409_10212755549266363_7255400773238915072_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I-z2cb7o8_0Q7kNvgEZJoMU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA8yJqSSA2uqJFwb1NAhH_ig4krMn06HzQ_-fZg0d1V8g&oe=6661E614 43130978_10212755552186436_2421264014706212864_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4DoskrVCeigQ7kNvgEjuVat&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBbM04KuXirfdWmVtbhQ-CXtGSxjp1BZ2Vym9uwA-qRFg&oe=6661E66E
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09
 
 
ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும்.
 
இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது.
 
மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள்.
 
உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம்.
 
‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை
 
"சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே,
இருந்துகில் தானையின் ஒற்றி"
 
என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது.
 
பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால்,
 
"கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்"
 
என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.
 
பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும்
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]    
 
பகுதி: 10 தொடரும்
43788237_10212808171741892_3281420886057418752_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-WH_LYyjcCcQ7kNvgEbLDCc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA8QtgSHn5nIwV0otC3FBZTq1YBH_GtPdkCMl5c4iQF1A&oe=66673F05 43745397_10212808191902396_8101903028728102912_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TFsPxK3JaP8Q7kNvgH6Q06s&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCFRGui4o9cLr_mGi5irb6Qd13sNP87qvYPPrn5K_okRQ&oe=66673345
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 10
 
 
‘‘உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’
 
என்கிறது ஒரு பழமொழி, உதியம் என்பது ஒரு வகை மரமாகும். பப்பாளி, முருங்கை போன்று எளிதில் ஒடியும் தன்மை கொண்டது. வைரமில்லாதது. அது பெருத்தால் வீட்டிற்குப் போடும் உத்திரத்திற்குக் [beam] கூட ஆகாது. அது போன்று சரீரமாகிய உடல் பெருத்து விட்டால் அதுவும் ஒன்றுக்கும் உதவாது, நோயின் இருப்பிட மாக மாறிவிடும் என்கிறது.
 
அதே போல சித்தமருத்துவத்தில்
 
“ஒருவேளை உண்பான் யோகி, இரு வேளை உண்பான் போகி (உல்லாசி), மூவேளை உண்பான் ரோகி (வியாதியாளர்), நான்குவேளை உண்பான் பாவி”
 
என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம் போலும். எனவே இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் - மேற்கு நாடு உட்பட - அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக BBC யின் "history of breakfast, lunch and dinner."என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது.
 
நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப்படவில்லை. ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை. அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் "கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறு கிறார். பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும். அப்படி பெருமைப்படத்தக்க கல்வி, தடகள கலாச்சாரங்களை [academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக - முதன்மை உணவாக - ஒரு நேரம் - அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள். ஆகவே, அதிகமாக அவர்கள் இரண்டு உணவு உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம். அவர்கள் அதிகமாக, இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம்.
 
"To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten.","காலை ஆறுக்கு துயில் எழுந்து, பத்துக்கு [உணவை] உண்டு, பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு, பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய், பத்து மடங்கு பத்து வாழவைப்போம் "
 
என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. எனவே மூன்று முறை உணவு, சித்தமருத்துவத்தில் நாம் பார்த்தவாறு, மிக அண்மையானதே. ஆகவே முன்னைய எமது முதாதையர்கள் அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும். இந்த ஊகம் அதிகமாக சரியாகவே இருக்கும். ஏனென்றால் இது பகல் இரவுடன் ஒத்து போவதால். இரவு உணவு முறை, அதிகமாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம். நாம்,வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில், எமது நடவடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது. ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது.
 
மேலும் பதினெண் சித்தர்களுள் ஒருவரான திரு மூலர் உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று
 
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’
 
என வலியுறுத் துகிறார், உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர் அப்படி கூறினார். ஆகவே உடம்பை ஆரோக்கிய மாக வளர்க்க, சாப்பிடும் முறையைப் பற்றி, நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள் பற்றி, நாம் சற்று அறிய வேண்டி உள்ளது.
உடலுக்கு தேவையான சத்துக்களையும் கனிமங் களையும் கவனத்தில் கொண்டு, அச்சத்துகள் பொதிந்துள்ள உணவின் சுவையையும் அறிந்து, அதன் அடிப்படையில் உணவினை துவர்ப்பு, உவர்ப்பு (உப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு (காரம்) என அறுசுவைகளாக வகை பிரித்து, நம் முன்னோர்கள் எமக்கு வழிகாட்டி உள்ளார்கள். மேலும் அவர்களின் சமையல் சுவையோடு நில்லாமல் உடல் நலத்தையும் உணவின் மருத்துவ தன்மையையும் முதன்மையாகக் கொண்டு, நீராவியில் வேக வைத்த உணவுகள் [இடியாப்பம், புட்டு, காய்கறி அவியல்], நொதிக்க வைத்த உணவுகள் [கூல், தயிர், இட்லி, பழைய சாதம்] போன்றவை அங்கு காணப்படுகின்றன. அத்துடன் வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையானதை, உணவு உண்ணும் பாத்திரம் போலும், மண்பானை, மர அகப்பை, செம்பு, பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுத்தி உள்ளனர். காலையில் செல்வந்தனாகவும் மதியம் அரசனாகவும் இரவு கஞ்சனாகவும் சாப்பிடு” என்ற பழமொழி எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் அழகுற எடுத்து இயம்புகிறது.
 
தமிழர்களின் நாளாந்த பிரதான உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்றவற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில் - அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப் படுகிறது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறு பாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். அதிலும் ஒரு விழா, சடங்கு என்றால் , பாரம்பரிய முறைப்படி தலை வாழை இலையில் பரிமாறப்படும். இங்கு விருந்தினருக்கு முன்னால் இலையின் நுனி - பொதுவாக வலது கை பாவிப்பவர்கள் பெரும்பாலும் இருப்ப தால் - இடது பக்கம் இருக்கக் கூடியதாக வைக்கப் படுகிறது.
 
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றை யெல்லாம், கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில், இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கறிகள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் உள்ளதாக பொதுவாக பரிமாறப்படும். இவர்கள் இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிர், உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சேர்த்து முடிப்பது ஒரு வழமையாகும்.
 
வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும், ஆகக் குறைந்தது கட் டாயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. ஆகவே இது - வாழையிலையில் பரிமாறல் - ஒரு வரலாற்று ரீதியான காரணத்தையும் கொண்டுள்ளது. வாழை இலையை, அது பெரிய பரப்பளவை கொண்டதாக இருப்பதால், அதில் உணவு பரிமாறல் இலகுவாக இருந்ததாலும், மேலும் தண்ணீரை அதன் மேல் தூவுவது அல்லது தெளிப்பது மூலமே இலகுவாக கழுவக் கூடியதாக இருந்ததாலும், அதனால் சுகாதார மானதாக அமைந்ததாலும், அதே நேரம் இது நீர் உறியாதன்மையை கொண்டிருப்பதாலும் மற்றும் சில நன்மை பயக்கும் காரணங்களாலும் எமது முதாதையர்கள் இதை தெரிந்து எடுத்து இருக்கலாம்.
 
இவ் வாழை இலையில் சூடான உணவுகளை பரிமாறும் போது, அது நல்ல நறு மணத்தை கொடுத்து ரசம் போன்ற சில உணவுகளின் சுவையையும் கூட்டுகிறது. மேலும் புறநானுறு - 168, வரி11-12, கூட,
 
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"
 
என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டு போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
பகுதி: 11 தொடரும்
44306292_10212843929235807_3676844892773941248_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QjJOEJqDOwIQ7kNvgFM_dqp&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB5pLywU4wjgqOrSkQfun72X0FyquQrjPJXHcPm62jWag&oe=666AED08 44267125_10212843931875873_998085605713772544_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XaSrTAiiSxgQ7kNvgEHbL19&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAqX4j4jlPvX97sRcY2m7i0gJjh-SyWPNp7dLjo-HklGQ&oe=666AD111 44274899_10212843936795996_7925068685302038528_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=17KUDFPEcOAQ7kNvgEYG6gQ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDKu5IgVXI1_FzfXb_hRtodzJoVN8hlJ0vndrCT33rAOQ&oe=666AF40D
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 11
 
 
பல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம்? இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம்?
 
இன்றைய நவீன, அறிவியல் நடை முறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொதுக் காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்?
 
பொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவி யல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.
 
நற்றிணை 377,இல் "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், "அரவுக் குறைபடுத்த" என்றுதான் உள்ளது "அரவு கவ்வ அல்லது விழுங்க " என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே போல, பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், "பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் "அரவு நுங்கு மதியின்",என்று ஒரு வரி உண்டு, இங்கு "நுங்கு" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத் தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும்.
 
ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது.
 
கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல்! ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது.
 
ஆனால் புராணக் கதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.
 
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும்.
 
அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது.
 
ஒரு சுப தின த்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்?
 
மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்-
 
நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான் காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.
 
உதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
 
அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.
 
கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth]
 
அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும்.
 
காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின் போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 12 தொடரும்
43632649_10212882967611742_7619486100108607488_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6XGbbaQ6IrYQ7kNvgGjV4WU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAJmkoiA63TiYNTRHPSZaBn2O5-jMvGcuqtKpblLH8NYA&oe=66701532 44738550_10212882984332160_2918777972414480384_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rW11gN9InvsQ7kNvgE8QkLy&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCB1Fo_n0dTQ0B870yoPazMIbTdRHFLqJc6PoV0RD_mOQ&oe=66703626 
 
44690010_10212882995052428_5464094596977917952_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZfmMXiX9jQkQ7kNvgGb91S7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCjmLgUkqHuLaslkc88dmvDzQgVyi8rgqnY3VAZ03VkIg&oe=667018F9 44816829_10212882998812522_5616293467555627008_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hIRYPythNXMQ7kNvgFK_vS-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBuVJkJv422J8jcvd3zMQE97laUPgv1ZCxIc13KNE9yUQ&oe=6670375C
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 12
 
 
ஒரு மனிதனின் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்று உறக்கமாகும். அவன் வாழ்வில் பொதுவாக இது மூன்றில் ஒரு பங்கு அது வகுக்கிறது. உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், அவனுக்கு தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
 
குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல், நித்திரை] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்கு கின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என
 
"நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்"
 
என்கிறது. மேலும் ‘பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்’ என்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது தூங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது.
 
அதே போல எல்லா உயிர்களும் எதோ ஒரு நேரத்தில் உறங்குகின்றன. உதாரணமாக புறநானூறு, பாடல் 229 , "மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்" என்ற வரி மூலம் வலிமையான யானையும், துதிக்கையை நிலத்தில் போட்டு உறங்குவதையும், அதே போல புறநானூறு 384 "வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை" என்ற வரியில் நாரை மரத்தின் கிளையில் உறங்குவதையும் காண்கிறோம்.
 
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை, தமிழரின் தூங்கும் முறையை கூறும் பொழுது, படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு) பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல் மேல் போர்த்தி உறங்குவது நல்ல நெறி என "கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி" என்று பாடல் 30 ஆல் கூறுகிறார்.
 
'வராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலை வைக்ககூடாது' என்றும் 'விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது' என்றும் சில பழமொழிகளும் உண்டு. அதையே அவர்கள் பாரம்பரியமாக பின்பற்று கிறார்கள் எனினும், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை [இணையம், அலைபேசி,...], இரவு வேலை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், எல்லோரும் அப்படி இன்று ஒழுகுவதில்லை. சிலர் பகலில் உறங்குகின்றனர்.
 
"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்"
 
என ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. அதாவது வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல், இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்கிறது.
 
"வாழ்ந்தாலும் வடக்கே தலைவைக்காதே, கெட்டாலும், கிழக்கே தலைவைக்காதே", என்றும் "வடக்கே தலைவைத்தால் வாடை காத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து" என்றும் சொல்லும் ஒரு வழக்கம் எம் மூதாதையர்களிடம் உண்டு. நம் உடலில் ஒரு காந்த ஆற்றல் இருப்பதாகவும், நமது தலை பகுதி வடதுருவமாக செயல்படுகிறது என்றும், பூமியின் வடதுருவமும் நம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது என்றும் நம்புகிறார்கள். சமீப கால ஆய்வு படுக்கும் திசை, ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் இவைகளுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்டுகிறது [a significant correlation between the direction of sleep, health, and the quality of sleep].
 
மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து உள்ளார்கள். இதற்கு காரணம் பூமியின் காந்தப்புலம் என்கின்றனர். அதை தொடர்ந்து இன்னும் ஒரு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிழக்கு- மேற்கு நிலையில் மனிதன் தூங்கினால், அவன் வடக்கு- தெற்கு நிலையில் தூங்குபவரை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த குறுகிய விரைவு விழி இயக்க [விரைவான கண் இயக்கங்கள்] தூக்க சுழற்சிக்கு உள்ளாவ தாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் [ it was found that the human sleeping in the East-west position has lesser shorter rapid eye movement (REM) sleep cycles when compared to people sleeping in the north-south direction].
 
நாம் தூங்கும் பொழுது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் வருகின்றன. முதல் மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற [Non REM]ஆழ் நிலை தூக்கத்தில் இருக்கும். நான்காவது நிலையை அடையும் பொழுது நம் விழிகளில் அசைவு இருக்கும் [REM]. மொத்த துக்காதில் 25% மேலாக நாம் இந்த ஆர்‌ இ‌ எம் (REM)நிலையில் கழிக்கிறோம். REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும் போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும். எனவே எந்த நிலையில் நீங்கள் படுக்கிறோம் என்பதில், சில நன்மைகளை உங்கள் ஆரோக்கியத்தில் பெறக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, அது விரைவு விழி இயக்கத்தை [REM] கூட்டவும் மற்றும் உங்கள் உடலின் ஆற்றல் ஓட்டத்தை கூட்டவும் துணை புரியும். [The position in which you sleep has some beneficial effect on your health like it increases REM and the energy flow of your body]. இன்னும் இந்த ஆய்வு நடைபெறுகிறது, இது வடக்கு தெற்கு, உறங்குவதற்கு ஒரு சிறந்த நிலையாக காட்டுகிறது. ஆனால் தலை வடக்கா, கிழக்கா என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை.
 
உறங்குவதற்கு தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ஆய்வின் ஒரு பகுதியுடன் ஒத்து போகிறது, ஆனால் மற்றவை முரணாகின்றன, உதாரணமாக, ஆசாரக்கோவை கூறுவது போல, வாஸ்து சாஸ்திரமும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறுகிறது. ஒரு மொழியைப் பேசுவோரின் பண்டைய அல்லது பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் நன்றாகப் புலப்படுத்தும். இதன் அடிப்படையில் நாம் நோக்கினால், உதாரணமாக, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் அங்கு வடக்கிலிருந்தே ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நான்கு திசையில் இருந்தும் வீசும் காற்றுக்கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவை பொதுவாக காரண பெயர்களாக இருக்கவே வாய்ப்பு உண்டு. வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை என்கின்றனர். இது மக்களுக்கும் மற்றும் விலங்கு, பறவைகள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று ஆகும். எனவே ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர் எனலாம். பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட ஒரு வழக்கு வடக்கிருத்தல் எனப் படும்.
 
வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற் கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் ஆகும்.
 
எனவே துக்ககரமான நிகழ்விற்கு, தனக்கு பிடிக்காத வடக்கு திசை நோக்கி இருப்பதை காண்கிறோம். இவை எல்லாம் தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதை காட்டுகிறது, இதை உறுதிப் படுத்துவது போல ‘வாழ்ந்தவன் வடக்குப் போகான்...' என்ற பழமொழியையும் காண்கிறோம், இவைகள் அவன் மனதில் பதித்த தாக்கம் 'மதியார் வாசல் மிதியாதே' என்று ஒளவையார் கூட தெளிவாக கூறியது போல, ஒரு வேளை வடக்கில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அதுவே வடக்கில் தலை வைத்து படுக்காததிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என் நம்புகிறேன். ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை தமக்கு விரும்பாத வடக்கு - தெற்கு நோக்கி வைப்பதும், அவர்களின் அந்த வடக்கு திசையின் வெறுப்பே ஆகும் போல் எனக்குப் புரிகிறது.
 
உதாரணமாக, தமிழரின் முன்னைய நாகரிகமான சிந்து வெளி நகரத்தில் அகழாய்வு செய்கையில் அங்கு இடுகாடு [burial site] மூன்று விதமாக உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது. அதில் முதலாவது வகையில் இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப் பட்டு, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பி வைத்து, புதைத்துள்ளது தெரிய வந்தது. இது அவர்களின் வெறுப்பு குறைந்தது 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை மேலும் எடுத்துக் காட்டுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 13 தொடரும்
44845522_10212888731875845_6412497996696518656_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MC4ZzJoVm0sQ7kNvgFsZK0H&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAdRjyalHcRxHkUaHlC5NJ258mf4YHYD7-UWYI5Ngg-nQ&oe=6673648D 44813396_10212888733715891_6508851177050865664_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6kkb3oaix24Q7kNvgGP-bzo&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCHPvyJvrxIvH-VaDSGiRNT6sUTlUot0l9Jbw2ICJyr8w&oe=66738147 44730761_10212888738636014_4753149240291622912_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VlipbacON1sQ7kNvgEOyd5k&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBbcFZQi3iSV0d4bl0oPmhzAntT_G5o6eIywfAd3BxAOQ&oe=6673689F 44824240_10212888734955922_6541210946717614080_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rYD-OFDzonAQ7kNvgEQXkD2&_nc_oc=AdhKlKRPzE20B1QCEIwSt0cRaE-5KJxHc1Kkd61UesJiwT9anN8lK8RQndoYtDPpt0_4jdW-6Mtq9Xvo5A0XH2_u&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA2QK9EqA3ItlQATMhTjUtgxV4y7gpL8LI0Y-RZI5jVnQ&oe=66738EE3 No photo description available.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரிய மும்" / பகுதி: 13
 
இன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர்.
 
இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லா விட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில் ‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும்.
 
தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளி னைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்த னைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல் வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதைத், தமிழர் மட்டும் அல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள் சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன்.
 
ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என ‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ என்று பாடுகிறது. எனினும் இன்று இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங்’ / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது 'குட் ஈவினிங்' / Good Evening, பின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும் பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும்.
 
எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டத் திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலை தான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று
 
"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"
 
எனக் கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் "தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்" என்ற வரியை காண்கிறோம்.
 
அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்குதல் ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் "சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி," என்ற வரியைக் காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் "கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்" என்ற வரியைக் காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன்.
 
வணக்கம் என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வர வேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும்.
 
உதாரண மாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும்.
 
 
மேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப் படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி ["power" or "rule,"] எனப் பொருள்படும்.
 
பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness].
 
எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்!!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 14 தொடரும்
44859415_10212897621858089_8461689303787896832_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9z5XuoQPlYUQ7kNvgHe0lOt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAhtscWrDV-G7Xf-S1Ygok0cTo1k6gHVlXqxJtYRzkvaQ&oe=667DB1B8 44934536_10212897581097070_7623947733610528768_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Bae0F49n9X4Q7kNvgGnpPEI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDFwgS0APntXIsrbuJVn4Dib4MhA2FYazwt5HBD8McaZQ&oe=667D80A1 44916250_10212897586577207_8075740643466412032_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wpRzPy6U8LcQ7kNvgFM7KP_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDCfRVrgkICoAqel-G70kXSgxu2YkMh-GzHkIstLw0_gA&oe=667D97C0
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 14
 
 
இவ்வுலகம் தோன்றி படிப்படியாக மனித இனம் தோன்றியது போல, மனித இனம் தோன்றி , அது மெல்ல மெல்ல வளர, அவர்களுக்கு இடையில் பல பல பழக்க வழக்கங்களும் அன்றைய சூழ்நிலைக்கும் அவர்களின் அறிவு ஆற்றலுக்கும் ஏற்றவாறு தோன்றின, அவ்வற்றில் சில அவர்களின் சந்ததியினுடாக பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தன. அந்த முன்னையோர்களின் மரபே இன்று பாரம்பரியமாக நிற்கிறது எனலாம்.
 
அவ்வாறு தோன்றிய பழக்க வழக்கங்களில் சில இன்றும் அப்படியே அல்லது தேவைக்கும் அறிவிற்கும் ஏற்ப சற்று மாறுபட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த, தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கங்கள் பல இலக்கியங்களில், காலத்தின் கண்ணாடியாக, அங்கங்கே பிரதி பலிப்பதையும் காண்கிறோம். அவ்வாறு பிரதிபலிக்கும் பழக்கங்களில் கண்ணேறு கழித்தல் ஒரு முக் கிய இடத்தை வகுக்கிறது. அது மட்டும் அல்ல அவர்களுக்கு இடையில் இன்று நிலவும் பழமொழியிலும் காணக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக “கல்லடி பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது” , ‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ என்பதை கூறலாம். கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இந்த மரபை குறைந்தது கி மு 3000 இல் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக சுமேரியா, பாபிலோனிய மற்றும் அசீரியன் கியூனிஃபார்ம் பதிவுகளில் [Sumerian, Babylonian and Assyrian cuneiform texts] இவை காணப் படுகின்றன. தீய கண்ணால் வரும் சாபத்தை அணைக்க பிரார்த்தனைகள் பொறிக்கப்பட்ட கல் வெட்டு களிமண் பலகை [tablet contains a incantation to counter the “evil eye,”] அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, அதே போல ஜிப்சத்தால் செய்யப்பட்ட தீய கண் உருவச் சிலைகளும் அல்லது கண் தாயத்துகளும் [Eye idols carved out of gypsum or eye amulets] தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் 'igi hul' என அழைக்கப்படும் கண்ணேறுக்கான சாபத்தினை எதிர்க்கும் நடவடிக்கையை அல்லது அவர்களின் ஒரு கண்ணேறு கழிக்கும் பழக்கத்தை காட்டுகிறது.
 
அது மட்டும் அல்ல, சுமேரிய இலக்கியத்தில், இந்த தீய கண்ணின் செயல் பாட்டையும் காண்கிறோம். உதாரணமாக , தீய கண் பார்வையால் இரு வெவேறு நிகழ்வுகளில் மரணத்தை ஏற்படுத்துவதையும் [“the eye of death” / "i-bi2 uš2-a"] காண்கிறோம்.
 
முதலாவதில் அணுன்னா தெய்வங்களின் தீய கண்களால், ஈனன்னா பாதிப்பு அடைகிறார் [Inanna is the victim of the evil eye of the Anunna-gods, the seven judges]. இங்கே ஈனன்னா பாதாளத்தின் [under world of the dead / netherworld] ஏழாவது வாசலை அடைந்தபின் இந்த காட்சி நடைபெற்றது. அணுன்னா தெய்வங்கள் என அழைக்கப்படும் ஏழு நீதிபதிகளும் அவளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கி, அவளை பார்த்தனர் -அது மரணத்தின் கண், அவளுடன் கதைத்தனர்- அது நோய் தரும் பேச்சு, அவளுக்கு அவர்கள் கூச்சலிட் டனர், அது நரகத்தின் காலவரம்பிலா தண்டனை சத்தம், பாதிக்கப்பட்ட பெண் [ஈனன்னா] ஒரு பிணமாக மாறியது. சடலம் ஒரு கொக்கி மீது தொங் கியது என்று விபரிக்கப் பட்டுள்ளது. [They looked at her – it was the eye of death,They spoke to her – it was the speech of illness, They shouted at her – it was the shout of damnation, The afflicted woman became a corpse, The corpse was hung on a hook / igi mu-ši-in-bar i-bi2 uš2-a-kam, inim i-ne-ne inim lipiš gig-ga-am3, gu3 i-ne-de2 gu3 nam-tag-tag-ga-am3, munus tur5-ra uzu niĝ2 sag3-ga-še3 ba-an-kur9, uzu niĝ2 sag3-ga ĝiš, gag-ta lu2 ba-da-an-la2].
 
இரண்டாவதில், ஈனன்னாவே தனது தீய கண்ணால் தனது கணவர் துமுழியை கொலை செய்யும் குற்றம் புரிகிறார். [Inanna is the visual perpetrator, killing her husband, Dumuzi, with her eye of death]. சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இன்றைய ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. மேலும் இன்றைய சிரியாவில் உள்ள டெல் பிராக் என்னும் இடத்தில் அல்லது பண்டைய வடக்கு மெசொப்பொத்தேமியாவில் [Tall Birāk, also spelled Tell Brak, ancient site located in present Syria -ancient northern Mesopotamia] ஆயிரக்கணக்கான கண் உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், அந்த இடத்தை கண் ஆலயம் என அழைக்கிறார்கள் [One of the most interesting discoveries at Birāk was the Eye Temple (c. 3000), so named because of the thousands of small stone “eye idols” found there]. இந்த கண் சிலைகள் ஒரு பரிகாரமாக, அங்கு காணிக்கை வழங்கப் பட்டதாக அதிகமாக இருக்கலாம். அது மட்டும் அல்ல, ஸ்பெயின் குகைகளில் 10,000 ஆண்டு பழமைவாய்ந்த தீய கண்ணைத் துடைக்கும் அல்லது கண்ணேறு கழித்தலை சித்தரிக்கும் சுவர் ஓவிய சின்னங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்த மனித பழக்கத்தின் பழமையை மேலும் பறைசாற்றுகிறது [10,000 years old Drawings have been found on cave walls in Spain depicting symbols to ward off the evil eye].
 
இந்தியாவில் கிடைக்கப் பெற்ற மிகவும் பழைய நூல் ரிக் வேதம் ஆகும், அதில் பத்தாவது மண்டலத்தில், அதிகாரம் (சூக்தம்) 85 இல். பாடல் (சுலோகம்) 44 இல், கண்ணேறு பற்றி "மணமகளே உன் கணவனை ஒரு தீய கண்கொண்டு பார்க்க வேண்டாம், அவனுக்கு என்றுமே விரோதமாக இருக்காதே" ["O Bride ! May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;"] என்ற ஒரு குறிப்பு உண்டு.
 
இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் "யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை.
 
'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில்,
 
"தொண்ணூற்று அறுவ ரையும் சுட்டான் துரிசு அறவே;
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!"
 
என்ற வரியும்,
 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறா யிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு,...."
 
என்று இறைவன் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி பெரியாழ்வார் பாடிய வரியும் அதன் பின் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) திருவருட் பாவில்
 
‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த் தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென் றாற் காட்டுகிலாய் கருணையீதோ.'
 
என்ற வரியும் கண்ணேறு செய்தியை கூறுகின்றன. எனவே இவை பிராமண இந்து மதம் சைவத்துக்குள் அல்லது தமிழர் மதத்துக்குள் ஊடுருவியதால் வந்த பழக்க வழக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது?
 
இந்த கண்ணேறு கழித்தல் இன்றும் தமிழர் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் ஒரு வித ஆராத்தி மூலம் [சுத்தி போடல்] அல்லது பூசணிக்காய்களை, பொம்மைகளை தொங்க விடுவது அல்லது காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒன்றாக சேர்த்து கட்டித் தொங்க விடுவது, அல்லது கறுத்த பொட்டு பெரிதாய் போடுவது அல்லது சிலர் சுத்தி போடலுடன் பாட்டுப் பாடியும் அல்லது வேறு சில வழிகளிலும் இதை கையாளுகிறார்கள். இது அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று காணப்படுகிறது.
 
உதாரணமாக தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கு, மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் எமது பிள்ளைகள் மேல் , எங்கள் வீட்டின் மேல், எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல் ......... பொறாமை, எரிச்சல் கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவை தவிர்ப்பதற்கு ஆகும். ஆனால் இப்படி எண்ணுவதற்கு உண்மையில் முக்கிய காரணம், நாம் எம் பிள்ளை, எமது வீடு, எமது சாதனைகள், எமது சொத்துக்கள் ....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும்!
 
உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது!
 
உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண் களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன்? யாராவது சிந்தித்தது உண்டா?
 
மேலும் எமது கண் ஒரு கதிர்வீச்சலையும் வெளிப்படுத்துவது இல்லை, அது ஒளியை உள்வாங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது ஆகும்.
 
மங்களகரமான அல்லது புனித நாட்களில், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முகமாக மாவிலை, வேப்பிலை போன்றவை கதவில் கட்டும் நம்பிக்கையும் பழக்கமும் இன்னும், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பதையும் காண்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 15 தொடரும்
46495578_10213048721755492_1795477581642858496_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MBYj4Z9vBe0Q7kNvgHNyCB6&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBLys1G3jaJp9WtMFvkW62up-56qYXKPL7fqiGPRWgWxQ&oe=6681460B 46492330_10213048714315306_2955617667848863744_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=__fKbqjiHD4Q7kNvgG4WyAq&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCdRleQvFi0QOz9ybJaLh57BaNByCd2m9CU0XmPh7jZCg&oe=66815E06 
 
No photo description available. No photo description available. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15
 
 
எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.
 
எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.
 
இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
 
"நோயிலே படுப்பதென்ன பெருமானே
நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"
 
என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.
 
உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.
 
சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.
 
பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்
 
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"
 
என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?
 
பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.
 
உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.
 
மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.
 
ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.
 
பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 16 தொடரும்
47096290_10213093973166749_8593445049159647232_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7Afa_EuGopkQ7kNvgG99mhi&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYC-VaferRneozX_FwD_jAPXQtbgDOXFk422Rd3C15tKqA&oe=66867D30 46972263_10213093978286877_8490847334249267200_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gg7YZzhD69cQ7kNvgFqIccI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBptthZIooX0Whni6S4v1crTvI7BMl6mV7c2NHYaU73YQ&oe=668666CB47214233_10213093983287002_5076916266044751872_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EwaX2o9rwCMQ7kNvgEJmyMo&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAGqX3xNlFYMBFCCfVKdi8Chm7IxUCnS1IvqAtoNRvj_w&oe=66865C39 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 16
 
 
முன்னைய, பண்டைய நாட்களில், வீட்டின், சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக இருந்தன. ஆகவே எறும்புகள் இலகுவாக சாப்பாட்டு இலைக்கு ஊர்ந்து வரக்கூடியதாக இருந்தன. எனவே அவையை தடுக்கும் பொருட்டு அன்றைய நாட்களில் இலையை சுற்றி, சாப்பிட தொடங்கும் முன்பு நீர் தூவப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, கண்ணகி கணவனுக்கு, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை,
 
"தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;"
 
என்று குறிக்கிறது. அதாவது, தாழை மரத்தின் வெண்ணிற மடல்களைக் கிழித்துக் கைத்திறன் மிக்க பெண் செய்து தந்த தடுக்கு இருக்கையில் கோவலன் அமர்ந்தான். கண்ணகி சுட்ட மண்ணால் செய்த மண்கலம் ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்து மணக்கும் மலர் போன்ற தன் கைகளால் காதலன் அடிகளைக் கழுவினாள். பின் நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால், நிலத்தை தடவினாள் . வாழைக் கன்றில் அறுத்து வந்த வாழை இலைக் குருத்தை விரித்து உணவு பரிமாறி "அடிகள்! அமுதம் உண்க" என்றாள் என்கிறது.
 
இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled ...", அதாவது உயிர் உள்ள வாலில்லா மீன் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாழை இலையில் படைத்து, மாணிக்கம் போல் பிரகாசிக்கும் நீரை தெளித்து, என்று பாடுகிறது.
 
ஆனால் இந்த பழக்கம் பொதுவாக சாப்பாட்டை மேசையில் வைத்து நாம் கதிரையில் இருந்து சாப்பிட தொடங்கியதும் பொருத்தம் அற்ற ஒன்றாக இருந்தாலும், சிலர், இன்னும் அதன் உண்மைப் பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல், அந்த பாரம்பரியத்தை கண் மூடித்த தனமாக இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது.
 
தமிழரின் மிகவும் பெருமைக்கு உரிய மதம் சாரா பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுடன் மிகவும் நெருக்கிய தொடர்புடைய ஒரு பாரம்பரிய வீரம் செறிந்த, இன்றும் தொடரும் விளையாட்டு ஏறு தழுவலாகும். அவர்கள் வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், மல்லர் விளையாட்டு போன்ற வேறு பல வீர விளையாட்டுகளையும் பாரம்பரியமாக அன்று கொண்டிருந்தனர். இந்த தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மிகவும் தொன்மையானது.
 
 
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கல்முத்திரையில் ஜல்லிக்கட்டிற்க்கான ஆதாரம் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். சிந்துவெளி நாகரிகம், பண்டைய தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
 
அதே போல,கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் திருவிழா சங்க தமிழகத்திலும் தனித்தன்மையுடன் விளங்கியது. இதை தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கலித்தொகை-103:63-64 என்ற அடிகள், "கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என, காளையின் கொம்பு கண்டு பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் அடுத்த பிறவியிலும் கூட தழுவ மாட்டாள் என்று கூறுகிறது.
 
எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. உதாரணமாக, காளையின் கொண்டை(இமில்) முறியும்படி தழுவி, அதன் மேல் ஏறி, முடிவில் தனது இருகைகளாலும் இரு கொம்புகளையும் இறுக பிடித்தவாறு, அவன் தன் முகம் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் முன்னோக்கி பார்த்தவாறு அதன் மேனி தம் மார்பில் பொருந்தும்படி தழுவினான் என்றும், இது அவன் அவளின் இரு மார்பகங்களையும் மென்மையாக தழுவது போல் இருந்தது என்றும் பல சங்க கால பாடல்களில் மீண்டும் மீண்டும் வர்ணிக்கப் படுவது இதை உறுதி படுத்துகிறது.
 
இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு இதுவாகும். இந்த மற்போர் அல்லது எதிரெதிராக மனிதர் விலங்கு போராட்டம் உண்மையில், ஒரு காளை மாட்டை வேட்டையாடுவது அல்ல, இது ஒரு ஏறு தழுவுதல் ஆகும்.
 
இங்கு காளை மாட்டுக்கு எந்த தீங்கும் வரவிடுவதும் இல்லை, அந்த மாடுகளைத் துன்புறுத்துவது இல்லை. இன்றைய பெயரான ஜல்லிக்கட்டு, உண்மையில் பழமையானதும் அல்ல, மூலப் பெயரும் அல்ல, பண்டைய தமிழ் ஆயர் சமுதாயத்தில் திறமையுள்ள, தகுதியுள்ள ஒரு மணமகனை தேர்ந்து எடுக்கும் பலப் பரிட்சையாகவும் இது அன்று இருந்தது.
 
ஆயர் குலப்பெண்கள் தம்மை பின் தொடரும் ஆடவருக்கு தம்மை மணக்க வேண்டின் தமது காளையை பிடித்து அடக்கும்மாறு சவால் விடுவர். அப்படி அதை பிடித்து ஏறு தழுவிய ஆடவனை அவள் இன்முகத்துடன் விரும்பி மணப்பாள். இந்த ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம். இந்த வீர விளையாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம்.
 
ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம். எனினும் அதன் வடிவமும் நோக்கமும் இன்று மாறியுள்ளன. இது இப்ப மணம் சம்பந்தப்பட்டது அல்ல, பணம் சம்பந்தப்பட்டது ஆகும். அது பிந்திய பெயரான சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே தெரிகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 17 தொடரும்
47479761_10213133244988520_7962628904449998848_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PSsLI-H0lJ4Q7kNvgGUfjOB&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAMqDRdSKXXlWocoRkrYwvbyfMS3CkiumFw_S8fV-9amw&oe=668C179B  47680712_10213133255428781_6082785366111158272_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sBHNujNiDQAQ7kNvgHUYWv7&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAJdbNJ0Gfd4yolT6HY9baDmo-4G6FzXggozdsWiiG2Pw&oe=668C46DENo photo description available. 47494723_10213133249868642_1526817743666413568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qJ8bFgkGKgcQ7kNvgEHJJ4D&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC6ueAV0s9IQaSyn1Zd1T7bqVIqDL6ROBPZGigxbWDiCA&oe=668C425C
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 17
 
 
பண்டைய காலத்தில் ஆண்கள் வெளி வேலையும் பெண்கள் வீட்டு வேலையும் செய்தனர், அது மட்டும் அல்ல ஆண்களின் வேலை கடுமையானதாகவும் நிறைய தசை வேலையாகவும் இருந்தன [on field work which involved lots of muscle work], ஆனால் பெண்களின் வேலை அதிக உடல் வேலையற்று இருந்தது, இதனால், குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகளால் பெண்களின் இரத்த அழுத்தம் கூட வாய்ப்பு இருந்தது. அவர்கள் ஒரு பொறுமையின்மை [impatience] நிலையை அடைந்தார்கள். எனவே இதை கட்டுப்படுத்த பெண்களை அவர்களின் மணிகட்டை, வயிறை, கணுக்காலை, மற்றும் கையை சுற்றி ஏதாவது ஒன்றால் கட்ட சொன்னார்கள் [women were asked to bind their wrists, stomach, ankles and arms]. இதனால் வளையல்கள், இடுப்புப்பட்டி அல்லது ஒட்டியாணம், கொலுசு, கையைச் சுற்றி அணியும் சித்தரிக்கப்பட்ட பட்டை போன்ற ஆபரணங்கள் [bangles,waist belt,anklets,armlets etc] நம் கலாச்சாரத்தில் வந்து சேர்ந்தன என ஒரு ஊகம். அதன் பின் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாறு நகைகள் அணிவது பெண்ணின் வாழ்வின் அத்தியாவசிய அல்லது ஒருங்கிணைந்த பண்பாக மாறியது எனலாம்.
 
ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டு பழமைவாய்ந்த உலகின் முதலாவது படைத்தல் கதை கொண்ட சுமேரியன் முத்திரை ஒன்று பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு ஆண் தெய்வங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என பதிந்து உள்ளது. அந்த பழம் முத்திரை: "மனிதனைப் போன்ற கடவுளர்கள் வேலையில் மனச்சலிப்பு அடைந்து உடல் வேதனை அடையும் போது, அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று, வேலை கனமாயிற்று, துன்பம் அதிகரித்தது" [ "When the gods like men bore the work and suffered the toil, the toil of the gods was great, the work was heavy, the distress was much"] என கூறுகிறது.
 
இது சங்க காலத்திற்கு முன்பே ஆண்கள் கடும் வெளி வேலை செய்து கொண்டு பெண்களை வீட்டில் அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வைத்திருந்தனர் என்பதை சுட்டி காட்டுகிறது எனலாம். அந்த அழகை இருபாலாருக்கும் நகைகள், உடைகள் கொடுத்து இருக்கும், எனினும் சுமேரியன் பெண்கள் மிகவும் பரந்த அளவில், உதாரணமாக தங்கத்தினால் சித்தரிக்கப்பட்ட இலைகள் மலர்கள் கொண் ட தலை பாகை, பெரிய பிறை வடிவ மூக்குத்தி, முறைப்பான கழுத்துப்பட்டை, பெரிய கழுத்தணிகள், ஒட்டியாணம், ஆடை முள், மோதிரம் போன்ற [Sumerian women wore a much wider variety of jewelry such as golden head dresses made of sheet gold in the form of foliage and flowers, huge crescent shaped earrings, chokers, large necklaces, belts, dress pins and finger-rings] பல்வேறு நகைகளை அணிந்திருந்தார்கள் என அறிய முடிகிறது.
 
கி. மு. முதல் நூற்றாண்டில் அதிகமாக எழுதப்பட்ட மனு ஸ்மிருதி அல்லது மனு நீதி, தனது மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுளில் மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது என்று அர்த்தத்தில்,"ஒரு மனைவி அழகாக மகிழ்வோடு அலங்கரித்தால், அவளுடைய வீடு முழுவதும் அழகுபடுத்தப்படும், மகிழ்ச்சி அடையும்; ஆனால், அவள் ஆபரணத்தை கைவிட்டால், அனை வரும் அழகை இழப்பர், மகிழ்வை துறப்பர் என்கிறது ["A wife being gaily adorned, her whole house is embellished; but, if she be destitute of ornament, all will be deprived of decoration."- The Laws of Manu ,chapter III, Verse 62].
 
பண்டைய சங்க பாடலும் ஆணின் அறிவையும் பெண்ணின் அழகையுமே முதன்மை படுத்துகிறது. பூவையரின் அங்கங்களில் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ நம் முன்னோர்கள் அந்த அணிகளுக்கு ‘நகை’ என்னும் பொருத்தமான பெயரை சூட்டினர் எனலாம். அந்த அழகு மகிழ்வுதான் மனு நீதி சொன்னமாதிரி குடும்பத்தில் ஒரு மகிழ்வை கொடுத்தது.
 
உதாரணமாக, கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்கிறான்.
'உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்று புறநா னூறு: 189 இல் நக்கீரர் கூறுகிறார். அதாவது இடுப்பை சுற்ற ஒரு துண்டும் மேலே போட ஒரு தூண்டும் என்கிறது. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரை யில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் பொதுவாக வெற்றுடம்பாகத்தான் இருந்தார்கள். அந்த மேலே போடும் துண்டு தோளிலோ அல்லது தலைப் பாகையாக தலையிலோ அதிகமாக இருந்தன. மார்பை மறைக்கும் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது.
 
உதாரணமாக, சிறுபாணாற்றுப்படை, வரி 26 இல் : 'பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என' - அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற, என்று கூறுகிறது. திரு ஞான சம்பந்தர் கூட தனது தேவாரத்தில் 'மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்' - பெரிய கொங்கைகளையுடையவளாய், ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான் மகள் பாட என்கிறார்.
 
எனவே பாரம்பரியமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நகைகள் அணிவது தமிழர் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டிவிடப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கவும் இது உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. வர்மம் அல்லது அழுத்துமிடம் அல்லது உயிர் நிலைகளின் ஓட்டம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். மனித உடலில் 108 வர்மங்கள் உள்ளன என அகத்தியர் கூறுகிறார். சித்தர்கள் அன்று நோய்களை களைய வர்ம புள்ளிகளை அதன் பயன்பாட்டை பொறுத்து கையாண்டனர் என அறிகிறோம். பொதுவாக அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எனவே மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, புறநானுறு 398 இல்: 'வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு' - மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும் என்கிறது. மேலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப் பாடல் ஒன்றில் காதில் ஆண்கள் அணியும் கடுக்கண் பற்றி ஒரு செய்தி உள்ளது. அதில் சில வரியை மட்டும் கீழே தருகிறேன்;
 
“கலகலண்ணு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலை மோத
காரியக்காரராம் நம்பய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’
 
இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களின் தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது), காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
 
ஆயுர்வேதத்தின் படி, வெள்ளி தங்கம் என்பன குளிரூட்டும் பண்புகளை கொண்டு இருப்பதுடன் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மையையும் கொண்டு உள்ளது. [metals like silver and copper have cooling properties which directly affect our nervous system]. வெள்ளி நகைகள் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கிய மாக்குமாம். பொதுவாக தமிழர் உடலின் மேல் பகுதியில் தங்க நகைகளையும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி நகைகளையும் பாரம்பரியமாக அணிகிறார்கள். உதாரணமாக காலில் அணியும் வெள்ளி கொலுசுவையும் கழுத்தில் அணியும் தங்க சங்கிலியையும் சொல்லலாம். மேலும், பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படுகின்றது என்றும், இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம் என்றும், அதனாலே தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 18 தொடரும்
48370998_10213178641283399_6079487531307499520_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HKO90UuPEUgQ7kNvgG2aNlX&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDkq-RpyujsGo1a1cCi4mnmksjyCm-Q0mBa1Ah0yUpbyw&oe=669161B5 48360134_10213178643883464_1723638906382974976_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MC3EO3wy0LcQ7kNvgFTbipH&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCXal8bHdmglU3PoGKV2kRBxttsw3MkdwNyOGh8wgK70A&oe=66914A16 48239734_10213178654003717_1359198145199734784_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DPhKPUOYLmQQ7kNvgFtJViI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYA5UTF3I9gYWFyldSf8oqEFZVnNhBsSDCOyuOv3NNcboA&oe=6691567D No photo description available.
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18 


பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக் கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள்.

 

இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும்.

 

தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக் காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர்.

இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம். 

எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும் காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை.

கிருஸ்துக் குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடை யாளம் காணக்கூடிய அளவிற்கு வளரத் தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை.


இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண் டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக் கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக் கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகி விட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது.


ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெ ய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr. Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"].

மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண் கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester].

காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார்.  


தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங் கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ?   


எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக் கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள்.

 

இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்க வழக்கம் இதுவாகிறது.  

'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை - பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரி யங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை?

எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ?

 

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி: 19 தொடரும்

48389525_10213221572276647_6654916258804269056_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CT2T62xqzMgQ7kNvgEEIWoe&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBtfATOcRwrGdIdtFZPcvvN44MqRQ6G63cTgbnqznPI5Q&oe=66967A2F 48376893_10213221576876762_8233149730280964096_n.jpg?stp=dst-jpg_p261x260&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6MH_ykj3VqMQ7kNvgEHKThF&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDC6VUwqo2vrBrm4Y8ozi-ch5LEZzhqvKBUdTQYHx-QaQ&oe=66965883 48375261_10213221583156919_5869341524612874240_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PkE7gg6uv_EQ7kNvgGtP-rC&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC_dSghDNy9KFRQrUAYRxRiSC5tdlg6PknQ0pBAMlD0zA&oe=6696692E   48428182_10213221584236946_8149868532000096256_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nL62TYfs7KYQ7kNvgHp8Vz6&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDVl0tGnizgGtxWAhsRwQ4mXw5TKr5ehIrjY2xbQi4EAA&oe=66966779

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 19

 

 

ஆடி மாதம் என்பது பொதுவாக இந்து சமயம் கலந்த தமிழர் மரபில் போற்றுதலுக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. எனினும் கல்யாணம் போன்ற மகிழ்வான சடங்குகளுக்கு அதையே அமங்கலமான [an inauspicious month] மாதமாக அவர்கள் கருதுகிறார்கள். தை மாதம் அறுவடைக்கு பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனக் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா மகளிர், ஆடவர் [விடலை / a male child]. திருப்ப திருப்ப சொல்லும் கூற்று: "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். ஆனால் இதற்கு எதிராக இந்து மரபில் ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக சில பல காரணங்களால் அன்று கருதப்பட்டு அது அவர்களின் பாரம் பரியமாக இன்றும் தொடர்கிறது.
 
"ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர் களே!"
 
என்ற ஈழ கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் அந்த ஆனந்த கொண்டாட்டத்தில் கல்யாணம் எனோ விலக்கப் படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்று எனக் கருதப் படுகிறது. ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஆடி பிறப்பில், சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும், கொழுக் கட்டையும், ஆடி கூழும் பகிர்ந்து உண்டு, மகிழ்வாக கொண்டாடும் மரபு இன்னும் தமிழரிடம் தொடர்கிறது. இந்த ஆடி மாதத்தில், மணமாகா இளம் பெண்கள் குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை /சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் /வாழ்க்கை துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுவதும் உண்டு. அப்படி ஒரு பாக்கியம் அம்மன் உடனடியாக அங்கு அருளினாலும், பூசாரியார் அல்லது நம்பிக்கைகள் ஆடி மாதம் முடியும் மட்டும் வழிவிட மாட்டார்கள்? அது மட்டும் அல்ல, வழிபாட்டை தவிர, 'வேறு எந்த நல்ல செயல்களும் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது': ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும் என்ற நம்பிக்கை!
 
'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும் என்றும் ,'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் அதற்கு சொல்லி வைத்து அதற்கு ஏற்றவாறு தமது பாரம்பரியத்தை வளர்த்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.
 
ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேட வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு / ஆடிப்பெருக்கு எனக்கூறுவர். மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான தாகும்.
 
இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெ றும். இதனால் தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறார்கள். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது - அப்படி இப்படின்னு சொல்லி கடத்தி விடுகிறார்கள் !. இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது /குறைக்கிறது .இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட.
 
கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்த்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னார் கள். மற்றும் படி அங்கு ஒரு விசேடம் ஒன்றும் இல்லை. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை, குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. நல்லதை சொன்னால்த்தான் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொன்னார்கள்!
 
அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான்! வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சங்கடமாக [அசௌகரியமாக] இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
 
ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது.
 
அது இன்று ஆடி கூழாக, பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த காலத்தில், நம்மை எந்த அளவிற்கு, குளிராக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும், அந்த அளவுக்கு எமக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கூடி இருக்கின் றன. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது எனக்கு.
 
திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய மக்கள் அதிகமாக சென்று, நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. உதாரணமாக, புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்ற எல்லாம் இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது மட்டும் எனக்கு தெளிவாகப் புரிகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 20 தொடரும்
49206023_10213270488779529_7319842823325351936_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SWylP26MMOIQ7kNvgGESOzA&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDbRCHE3-lxSM0R1lETx2Ae_o96LkQfbnrFtQIIwCbR8g&oe=669D23F6 48919335_10213270491019585_8147568048732110848_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3f5sqJITMFUQ7kNvgHpH7Ko&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCR41I441ZxNY4rAAEKyezbfBjinY6mHef7IdkQFXxGPw&oe=669D2455 
No photo description available. No photo description available. 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 20
 
 
விடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம். ஆங்கில பழமொழி ஒன்று நேரத்துடன் உறங்கி நேரத்துடன் விழித்தெழுவது ஒரு மனிதனை ஆரோக்கியமான, செல்வந்தனாக, ஞானமுள்ளவனாக [Early to bed and Early to rise, makes a man healthy, wealthy, and wise] மாற்றுகிறது என்கிறது. இப்படி அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்து நலமுடன் வாழ்ந்து வந்த நம் மூதாதையர்களின் பழக்கத்தை நாம் இன்று, இந்த மாறிவரும் நவீன உலகில் கைவிட்டு விட்டோம், அது இன்று பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்து விட்டது. அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய்களைப் போக்கி ஆரோக்கியம் தரும் மிகப் பெரிய அறிவியல் புதைந்து இருக்கிறது. ஆங்கில பழ மொழிக்கு பல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதிகாலை விழிப்பின் குணத்தை தேரையர் சித்தர் தனது பாடலில் விளக்கமாக தந்துள்ளார்.
 
"புத்தி யதற்கு பொருந்து தெளிவளிக்கும் சுத்த நரம்பினறல் தூய்மையுறும்; -- பித்தொழியும்
தாலவழி டாதபித்தம் தத்தம் நிலை மன்னும்; அதி
காலை விழிப் பின் குணத்தைக் காண்"
 
என்கிறார் அன்றே, அதாவது, அதிகாலை விழிப்பதினால் புத்தி தெளிவு உண்டாகும். இரத்தம் சுத்தமாகும். அதிக பித்தம் இருந்தால் அது நீங்கும், எனவே நோய்கள் வராது. என விடியற்காலையில் விழிப்ப தன் நன்மைகளை விளக்குகிறார். ஆசாரக்கோவை .தனது வைகறை இலக்கிய பாடல் [41] இல் :
 
"வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை"
 
என மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை நீதி நூலாக கூறுகிறது, இவை எல்லாவற்றையும் ஒரு வரியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் "வைகறைத் துயில் எழு " என ஆத்தி சூடியில் கூறியிருப்பதையும் கவனிக்க. முன்பு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைவின் போது, படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், அவை வேலை நிமித்தம் மற்றும் பல காரணங்களால் தொலைந்து வருகின்றன.
 
நாம் வழி வழியாக கடைபிடித்த நடை முறையும் மாறுகின்றன. இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் இயலப்பாகி விட்டது. அதனால், உடலும் மனமும் புத்துணர்ச்சி யாகவும், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஒரு கட்டுப்பாட்டிலும் [The body and mind will stay fresh, Constipation and indigestion will remain under control and etc ] இருக்கக் கூடிய பல நன்மைகளை நாம் தொலைத்து விட்டோம். வைகறை என்ற விடியற்காலையில் துயில் எழுவது தமிழர்களின் மரபாக இருந்ததை சிலப்பதிகாரம், ஊர் காண் காதையில், "புலரி வைகறைப் பொய்கைத் தாமரை , மலர்பொதி யவிழ்த்த வுலகுதொழு மண் டிலம், வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழி யன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப" என்ற வரி உறுதி படுத்துகிறது.
 
அதாவது புலர்கின்றதாகிய வைகறைப்பொழுதின்கண், குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார் யாவரும் வணங்கும் ஞாயிறு, பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம், வாளினை ஏந்திய பாண்டியனது, வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப என்கிறது. இன்னும் ஒரு காலை நிகழ்வையும், அவை இன்று குறைந்து கொண்டு வந்தாலும், சொல்லுவது அவசியம் என்று எண்கிறேன். பெரும் பாலும் தமிழ் கிராமப் புறங்களில், காலையில் சாப்பாடு செய்ததும், ஒரு கவளம் எடுத்து 'கா கா' என்று கூவி அழைத்து, அந்த உணவை காகத்திற்கு படைக்கும் மரபை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. பழம் பாடல் ஒன்று காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில குணங்களை வரிசையில் கூறும் பொழுது முதலாவதாக 'காலை எழுந்திரு' என வலியுறுத்துவதையும் காண்க.
 
"காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்"
 
பாதணி என்ன கேவலமா? அதை வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா? என்று சிலர் கேட்கலாம், உண்மையில் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் நாம் அழைக்கும் எமது காலணியை நாம் சுத்தம் கருதியே கழட்டி வைத்து விட்டு வீட்டினுள், ஆலயத்தினுள் நுழைகின்றோம். யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலான விவிலியத்தில் [Bible], மோசஸ் [Moses] என்ற சமயத்தலைவர், எரியும் புதர் [“burning bush”] ஒன்றை அணுகும் பொழுது, அந்த எரியும் புதரில் இருந்து ஆண்டவனின் குரல் [“voice of God”], அவரை பாதணியை கழட்டுமாறு கட்டளை பிறப்பித்து, அவருக்கு இது ஒரு புனித நிலம் [“holy ground”] என்று சொன்னது.
 
இன்றும் பெரும்பாலான மதங்களில், புனித தளத்திற்குள் போகும் முன் காலணியை கழட்டி வைத்து விட்டு செல்வது வழமையாக உள்ளது. உதாரணமாக, பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப் பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை முழுக்க முழுக்க சுத்தம் கருதியே கழட்டி விடுகிறோம், மற்றும்படி கடவுள் பாதணியை கழட்டி வந்தால் தான் தனக்கு மரியாதை என்று என்றும் சொல்லவில்லை, ஏன் ஒரு பாரதத்தையே ஆண்ட பாதணியின் காவியம் தெரியாதா ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 21 தொடரும்
49625860_10213317136305688_5910703386818248704_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=SEJDGhHFDSEQ7kNvgFAq5yO&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBBmJHufcrGIAcYRHc7Hw9rmtg71ymuqPUMLRZEUtTCsg&oe=66A36CFE 49937788_10213317138145734_6933554946486829056_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=psVwUQtERFMQ7kNvgHgA2pi&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAduX8ybOLw-Eml8OmhK7R_XldKtPy9XCbPQIc68HfU6g&oe=66A3768D 49599730_10213317139345764_6490689723156135936_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=f-9jKUA65qoQ7kNvgGuU5hk&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCRJ_qkVJcXkHt7FhzrJb3HUk9k-ZBFfqmKKUaERSePIQ&oe=66A379AF 49459837_10213317125905428_1532304697531039744_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=K6YsQOAQkW8Q7kNvgErN-Jo&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCIyXErEgsJFqUhMmt21xoi_9l23rsB_j1QACh7hppA8Q&oe=66A39454
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 21
 
 
நமது பண்பாட்டில் எம்முடைய பல பழக்க வழக்கங்களை, மரபுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் உடல் நலத்தையும் மன நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே தொடங்கப் பட்டதாகவே இருக்கும். அப்படியான வற்றில் ஒன்றுதான் தோரணம் ஆகும். இதை தமிழர்களின் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பு என்றும் கூறலாம். தமிழருக்கிடையில் தோரணம் கட்டி அலங்காரம் செய்யும் மரபு ஆயிரம் ஆண்டு களுக்கும் மேற்பட்டது. ஆயிரம் யானைகள் சூழ்ந்து வரும் நாராயணனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைந்த குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினதை, தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார் களுள் ஒருவரான ஆண்டாள் கனவில் கண்டாள்.
 
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்"
 
மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்து அலங்கார மாகத் தொங்க விடப்படும் தோரணம் வழமை என்றாலும், அங்கும் நடை பெரும் நிகழ்வை பொறுத்து மங்கள தோரணம், அமங்கள தோரணம் என இரு வகை தோரணங்கள் காணப்படுகின்றன.
 
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கும், மகிழ்வில் குருவி ஒன்று மேலே பறந்து போவதை இது அடையாளமாக குறிக்கிறது. மேலும் தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என் பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். அதனால் தானோ என்னவோ இங்கும் நான்கு குருவிகளை கொண்டு தோரணம் அமைக்கப் பட்டுள்ளது எனறு நம்புகிறேன்.
 
அதே போல, மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டப்படுபவை அமங்களத் தோரணம் எனப்படும். இவை மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல் நோக்கியும் இருக்கும்.
 
ஒரு தொன்று தொட்டு வந்த பழக்கமாக, நம் வீட்டு சிறப்பு கொண்டாட்ட நாட்களில், வீட்டு வாசல் கால்களில் தோரணமாக மாவிலை மாத்திரம் கட்டுவதும் உண்டு. வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள் குழுமி இருக்கும் இவ் விசேட நாட்களில், மாவிலை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும் என்பதாலும் நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் என்பதாலும் அப்படி முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. மற்றது இவ்விருமரங்களும் அங்கு பரவலாக காணப்பட்டவையும் ஒரு காரண மாகும்.
 
திருத்தொண்டர் புராணத்தில், 12 திருமுறையில் 2969. பாடலில், மகர தோரணங்களும் வளம் மிக்க குலைக் கமுகுகளும் வாழைகளும், ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும் ஆகிய இவற்றை அழகு பொருந்த வரிசையாய் அமைத்து நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்தச் செய்த அலங்கராங்களினால் குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கியதாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர் என்கிறது. தமிழரின் தோரண அலங்காரத்தின் சிறப்பையும் பெருமையையும் இதில் காண்கிறோம்.
 
"மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம் எனப்பொலி வித்தார்"
 
எல்லா இனமும், தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சில பல விளையாட்டுகளை ஏற்படுத்தி, அதை பாரம் பரியமாக பல நூறு, ஆயிரம் ஆண்டுகளாக விளையாடினார்கள். அன்று வீட்டின் திண்ணையில், தெருக்களில், வளவில், நதியில், மைதானத்தில் நடந்த விளையாட்டுகள் இன்று மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் [smartphone], கணனியில் - பிளேஸ்டேஷன், வீடியோ விளையாட்டுகள் [playstation, video games] என வந்துவிட்டன.
 
"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ...... மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா" என்று பாரதியார் அறிவுறுத்தல் இன்று மறைகிறது.
 
உதாரணமாக சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல், கிளையில் பனை நாரில்[கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் போன்ற பல அன்றைய மகளிரின் பாரம்பரிய விளையாட்டாக இருந்தன என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் மட்டும் இன்று காண்கிறோம்.
 
தமிழர்களின் மூதாதையர் என் நம்பப்படும் சிந்து வெளி மக்களும் கி மு 3000 ஆண்டிலேயே ஒரு வித தாய விளையாட்டு விளையாடினர் என்பதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட மணற் கல்லாலும் மெரு கூட்டாத மண்ணாலும் செய்த தாயக்கட்டைகள் [dice made from cubes of sandstone and terracotta] உறுதிப் படுத்துகின்றன. இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக [later spread westwards to Persia, influencing Persian board games] நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் கூட காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின், ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
"தாயக்கட்டைகளுடன் என்றுமே விளையாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால்நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவி யுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் " [“Play not with dice:no,cultivate thy corn-land. Enjoy the gain, and deem that wealth sufficient.There are thy cattle there thy wife, O gambler. So this good Savitar himself hath told me"]
 
என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது. இது தாயம் பொழுது போக்குக்கு அப்பால், சூது விளையாட்டாக ஆண்கள் விளை யாடியதை காட்டுகிறது. தமிழக அகழ்வுகளில் அழகன்குளம், மாங்குடி, பொருந்தல், பேரூர், ஆண்டிப்பட்டி, கொடுமணல் போன்ற பலவற்றில் தந்தத்தினால், எலும்பினால் ஆன மற்றும் சூடு மண் தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன.
 
உதாரணமாக புறநானூறு - 52, வரி, 12 - 15, அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில் என
 
"கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப், பலி கண் மாறிய பாழ்படு பொதியில், நரை மூதாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம் நிறையப்"
 
என்று பாடுகிறது. இங்கும் சூது ஆட்டத்தை காண்கிறோம்.
 
தற்போது "மியூசிக்கல் சேர்' என சிறுவர், சிறுமிகளால் விளையாடும் விளையாட்டை ஒத்த, "கொல கொலயா முந்திரிக்கா' விளையாட்டு, சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் தட்டாங்கல் அல்லது கழங்கு, நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட் டைகளை 5, 5 ஆகப் போட்டு விளையாடும் பல்லாங் குழி இப்படி பலவற்றை அன்று பெண்கள் விளையாடினார்கள்.
 
உல கெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது. அதே போல கழங்கு, இன்றைய ' five stones ' [or Knucklebones] விளையாட்டிற்கு அடிப்படையும் ஆகும். இதை சொட்டாங்கல் என்றும் கூறுவார்கள். யாழ்ப்பாணத்தில் இதை கொக்கான் என்று அழை ப்பார்கள்.
 
சங்க காலத்தில் கூழாங்கற்களை வைத்து ஆடப்பட்ட இந்த விளையாட்டில் இன்று கோலிக்குண்டுகள் பயன்பட்டு வருகின்றன. செல்வந்தர் வீட்டு பெண்கள் தங்களது பகட்டை வெளிப்படுத்த முத்து, வெள்ளி, தங்கம் ஆகியவற்றாலான உருண்டைகளையும் பயன்படுத்தினர். உதாரணமாக புறநானுறு 36, வரி 4 - 5, சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,
 
“செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்”
 
என்று பாடுகிறது. அதன் வழி வந்ததே அம்மானை விளையாட்டும் ஆகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவமும் பெற்றது ஆகும். என்றாலும் நாகரீகம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால், இந்த தொன்மை விளை யாட்டுகள், இன்று மறைந்து வருவது எமக்கு வேதனையளிக்கிறது
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 22 தொடரும்
49896627_10213357788521968_980604539063238656_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=lKpvchBZ_ngQ7kNvgF3M0rS&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBrtB9WG8esxlV0NPClKZgwmmMKpwRsQ4pRbW8ebGu7xQ&oe=66A716D9 No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
No photo description available.  No photo description available.  No photo description available. 
 
 
No photo description available.
 
 
 
  
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 22
 
 
சங்க இலக்கியத்தில், வளைந் திருக்கும் வளையலுக்கு அடைமொழியாக வந்த ‘கோல்’ என்ற சொல்லாட்சி, பின் வளைந்து நெளிந்து வட்ட வடிவமாக வரையும் கோலத்திற்கும் ஆகியிருக்கலாம், ஏன் என்றால் பரிபாடல் 11: 99-100 இல் "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஒர் பெண்" என்ற ஒரு வரியை காண்கிறோம், இங்கு கோலம் வடிவத்தை குறிக்கிறது. அதே போல அதே பாட்டில் வரி 97, 98 :" குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள்" என்று கூறுகையில் அங்கு கோலம் அழகை குறிக்கிறது, ஆகவே அழகும் வடிவமும் கொண்டு செய்ததை கோலம் என்றனர்.
 
சிலப்பதிகாரமும் ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக் கருவிக்கும் செய்யப் பட்ட ஒப்பனைகளை கோலம் என்கிறது. எனவே ஒரு வகையில் நாம் தரைக்கு செய்யும் ஒப்பனையும் கோலம் ஆகிறது. ஆகவே கோலங்கள் என்பதை ஒரு அற்புதமான வரி வடிவம் என்று கூறலாம்.
 
அரிசி மாவு, வண்ணப்பொடிகள், சுண்ணாம்புப் பொடிகள், கொண்டு தரையில் போடப்படுவதையே இங்கு கோலம் குறிக்கிறது. கோலம் போட பெரும்பாலும் அாிசி மாவைத்தான் ஆரம்பத்தில் பயன்படுத்தி உள்ளனா். இதற்கு காரணம் எறும்பு பாேன்ற சிற்றுயிாினங்களுக்கு உணவாக வேண்டும் என்ற உதவும் நல்ல எண்ணம் தான்.
 
என்றாலும் பிற்காலத்தில் தான் அது அலங்காரத்திற்காக என்று மாற்றம் கண்டு அரிசிமாவு பயன்பாடு குறைந்து மற்றவைகள் சேர்க்கப் பட்டன. இது கோவிலிலும், வீட்டு வாசலிலும், வீட்டின் உள்ளே வழிபாடு நடத்தும் இடத்தில் சிறிய அளவிலும் போடப்படுகின்றன. இந்த கோலங்களை எம் சான்றோர்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக சொல்லித்தந்தார்கள். தாயிடமிருந்து மகளுக்கும், அவளிடமிருந்து அவளுடைய மகளுக்கும் என்று தலைமுறை தலைமுறையாக இது பயணித்த படி இன்றும் உள்ளது. அப்படிப்பட்ட கோலங்களில் ஏராளமான புதிய புதிய வடிவங்கள் இன்று வந்து சேர்ந்துள்ளன.
 
பலர் வீடுகளில் தினமும் வாசலைப் பெருக்கி, சுத்தம் செய்து, நீரோ, சாணமோ தெளித்து, அதன் மீது அதி காலையில் கோலம் போடுகிறார்கள். சங்க இலக்கியத்தில், கோலம் இடப்பட்ட இடத்தையே 'களம்' என்று கூறப்பட்டு உள்ளதாகவும், வேலனாக உருவகப் படுத்தப்பட்ட முருகப் பூசாரி கோலத்தின் நடுவில் நின்றுதான் ஆடினான் என்றும் நம்பப் படுகிறது. இந்த மரபை 'களமெழுதுதல்' அதாவது தரையில் ஓவியம் வரைதல் என்றும் அழைப்பர்.
 
இன்று புதை பொருள் ஆய்வாளர்களால், பண்டைய மனிதன் வாழ்விடங்களில் தோன்றி எடுக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் முத்திரைகளிலும், கோடுகளும் குறியீடுகளும் இருப்பதை கண்டு பிடித்து உள்ளார்கள். உதாரணமாக, வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட அல்லது கோடுகள் போட்ட கணக்கிடும் அடையாள வில்லைகள் [incised "counting tokens"] பல மெசொப்பொத்தேமியாவில் தோண்டி எடுக்கப் பட்டன. இவையே பின்பு வடிவங்கள் பெற்று களி மண்ணில் பதியப்பட்ட சித்திர வெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக் கள் /pictographs] கி மு 3200 ஆண்டு அளவில் பரிணமித்தது, பல மாற்றங்கள் அடைந்து இறுதி யில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின.
 
எனவே கணக்கில் இருந்து தான் 'எழுத்து' முதல் முதல் சுமேரியாவில் பிறந்தன, அதனாலோ என்னவோ "ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி" --- கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும், எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், .. என்கிறார் திருநாவுக்கரசு நாயனார்.
 
எனவே தமிழ் எழுத்தின் வளர்ச்சியிலும் குறியீடுகளின் பங்களிப்பு ஒரு முக்கியமாகும். இது முழு எழுத்து வடிவம் அடையும் முன்பு ஒரு தகவல் தொடர்புச் சாதன மாக மட்டுமே திகழ்ந்து இருக்கும். எனவே இது வீடு, இது இடம் என தகவல்களை குறிப்பதற்கு அன்று ஏதாவது குறிகளை அங்கு இடப்பட்டு இருக்கலாம், அவ்வாறு வரையப்பட்ட குறியீடுகளே நாளடைவில் வரியாகி, வடிவாகி, அழகாகி இன்று கோலமாகி, வீட்டு வாசல்களில் இடம்பெற்று வருகிறது என்று நம்புகிறேன்.
 
இந்த கண்ணோட்டத்தில் கோலத்தை ஒரு கோட்டு மொழி என்றும் நாம் கூறலாம். அது மட்டும் அல்ல இது ஒரு மகிழ்வான வரவேற்பு அடையாளமும் ஆகும். சுருக்கமாக, நம் கோலங்கள் தமிழினத்தின் பழமையினைப் பகருகின்றன; பண்பாட்டைச் சொல்லுகின்றன; வளமையைத் தெரிவிக்கின்றன; வருத்தத்தைக் குறிக்கின்றன; வாழ்வியலைக் கூறுகின்றன; விழாக்களை உரைக்கின்றன; மகிழ்ச்சியினைப் பரிமாறுகின்றன; மரணத்தை அறிவிக்கின்றன; உடற்பயிற்சியினை நல்குகின்றன; கோலம் மாவினால் போடப் படுவதால், உயிரினங்களுக்கு கூட உணவளிக்கும் பெருமையையும் சிறப்பையும் கூட கொடுக்கின்றன.
 
அதிகாலை கோலம் போடுவதால், நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப் படுவதுடன், இது நம் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சி யாகவும் உள்ளது. மேலும் கோலம் போடுவதால் நம்மையும் அறியாமல் நல்லதொரு உடற் பயிற்சியை, ஒரு யோகசனத்தை பெறுகிறோம். நாம் குனிந்து, நிமிர்ந்து, வளைவது இடுப்பிற்கும், கால்களை நேராக்குவது, கைகளால் கோலம் போடுவது கை, கால்களுக்கு அசைவுகளையும், கண்களால் கூர்ந்து கவனிப்பதால் கண்களுக்கு ஒரு பயிற்சியையும் இது கொடுக்கிறது. இவைகள் எல்லாவற்றாலும், நம் உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைக்கவும் இது உதவுகிறது.
 
இந்தியாவின் பல பகுதிகளிலும் ,உதாரணமாக, இராஜஸ்தான், வட இந்தியா, வங்காளம், பீகார், மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இதற்கு நெருங்கிய ரங்கோலி எனப்படும் நிறக் கோலம் அல்லது வண்ணக்கோலம் காணப்படுகிறது. இது ரங், ஆவலி என்னும் இரு சமஸ்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது.
 
இங்கே ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருகிறது. எனினும் தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. இவை கோட்டுருக்களாகவே வரையப்பட்டு வருவதுடன் வரைதல் நுட்பங்களிலும் சில வேறுபாடுகள் உண்டு.
 
புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படும் பாரதிதாசன், தனது "குடும்ப விளக்கு" என்ற பாடலில், வீட்டிலுள்ள பெண்களின் தினசரி வழக்கமான காலை பழக்கங்களை ஒவ்வொன்றாக கூறுகிறார், அதில், விடியற் காலத்தில், கதிரவன் தோன்றுவதற்கு முன்னரே, தலைவி எழுந்து, முத்துப் போன்ற முல்லை அரும்பாய் பூக்கும் கொல்லப்புறத்துக்குச் சென்று புது நீரை மொண்டு முகத்தைக் கழுவி, வாயில் இட்ட நீரை முத்தை வீசுவது போல துப்பிவிட்டு, பின்பு கிணற்றில் நீர் இரைத்து தன் கையில் ஏந்தி வந்து வீட்டின் முன் கதவு தாழ் திறந்து வாசலை அடைந்து, தகடு போல பளபளவென்று தன் வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து, சானம் இட்டு மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாவால் அழகான கோலம் போட்டாள். அப்பொழுது தோன்றிய கதிரவன், அவள் செயலைப் பாராட்டும் வகையில், பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் அவளுக்கு கொடுத்தானாம் என்று
 
"முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!"
 
என கூறுகிறார். ஆனால் ஒரே ஒரு குறைதான் எப்படி தமிழரின் மூதாதையர் என கருதப்படும் சுமேரியன் கண்டு பிடித்த எழுத்தை “எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்” என்றும் ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என்றும், அதே போல, பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ, எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என்று சில புராணக்கதையும் அதற்கு இணைத்து விட்டனர். அவ்வாறே தற்போது கோலங்கள் குறித்த நம்முடைய பார்வைகளும் மாறத் தொடங்கியுள்ளன. கோலத்தைத் தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லுகின்ற மரபும் நிலவுகிறது. வீட்டு வாசலில் மகாலட்சுமி உறைவதாகவும; அதற்காகவே கோலமிடுவது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றங்கள் காலத்தின் மாற்றங்களே என்று கருத வேண்டியுள்ளது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 23 தொடரும்
50584708_10213402323035303_5010547317535670272_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=sy5FoMFaEbUQ7kNvgEGX3lX&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBCfohCiKOx6OsuW7x6LLEeNsiUe-EHGdGeQJcwgbIxLg&oe=66AA6C0F 50709927_10213402324155331_930379406252179456_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=QzSbJAUc8TYQ7kNvgGskdAt&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYChike_bXqdECybakR1awYMibgCmoDcdiL0YxB9HCcTWw&oe=66AA8729 No photo description available.
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 23
 
 
ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. சூரியன் மற்றும் மழையின் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் ஒரு தேவையின் நிமித்தமே முதல் முதல் ஆடை உருவானது எனலாம். எனினும் நாளடைவில் அந்த ஆடைகள் வளர்ச்சி அடைந்து ஒரு முழுமை அடைந்து அந்த மனிதனின் வாழ்க்கையில் அது ஆழமாக பதியப் பட்டு, அதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட இனக் குழுவுக்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது நாட்டுக்கு என சிறப்பு ஆடை பழக்க வழக்கமாகி, அது ஒரு தனி மரபாக பின்னாளில் மாறியது எனலாம்.
 
உதாரணமாக, தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று. அதாவது, ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்றாக விளங்குகிறது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும்.
 
தமிழர் மற்றும் இந்தியர் உடைகளின் வரலாறு, கிமு 2500 முன்னர் சிந்துவெளி நாகரிகத்தில் பருத்தியை சுழற்றல், நெய்தல் மற்றும் சாயமிடல் [spun, woven and dyed] ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட சிறு உருவச்சிலைகளில் (figurines), உதாரணமாக ஒரு மத குரு அரசன் ["Priest King"], ஒரு சேலையால் உடம்பை சுற்றி போர்த்து (wrapped around the body) இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இது தமிழரின் மூதாதையரான சிந்து சம வெளி மக்கள் எப்படியான உடை அணிந்தார்கள் என்பதை காட்டுகிறது.
 
எனினும் நாம் இன்றைய தமிழகத்தில், இலங்கையில், எமது பார்வையை திருப்பும் பொழுது, முதலில் சங்க காலத்தில், எதை அணிந்தார்கள் என்று பார்த்தால், எமக்கு உதாரணமாக வரும் முதல் சங்க பட்டு, புறநானுறு 189 ஆகும். இதில் சிந்து வெளி தொடர்ச்சியை அப்படியே காண்கிறோம். கடல் சூழ்ந்த உலகம் தனது பொறுப்பின் கீழ் வரவேன்டும் என்று துடிக்கிற வேந்தருக்கும், இரவு பகல் தூங்காமல் காட்டில் வேட்டையாடித் திரிகிற கல்வி அறிவில்லா முரட்டு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவைகள் இரண்டே. பசியைப் போக்க ஒரு நாழித் [கால் படி] தானியம் மற்றும் மேலும் கீழும் உடுக்க இரண்டு உடை என்று
 
"தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான், கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி; உடுப்பவை இரண்டே";
 
என அறிகிறோம். அதாவது சங்க தமிழரின் உடை இரண்டு துண்டுகளையே கொண்டிருந்தன. ஒன்று வேட்டி மாதிரி ஒரு கீழாடை, மற்றது சால்வை மாதிரி, அதிகமாக தலைப்பாகை போல, ஆண்கள் உடுத்தனர். ஆனால் பெண்கள் இடுப்பிற்கு கிழே மட்டுமே பொதுவாக மறைத்தனர் அல்லது தமது உடலின் கூடுதலான பகுதிகளை மறைக்கக் கூடியதாக அணிந்தார்கள். மார்பை மாலைகளாலும் சந்தனம் பூசியும் அலங்கரித்துக் கொண்டனர்.
மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியம் பேசுவதுடன் சங்க காலத்திலேயே, காலப்போக்கில் நூல் இழைகள் உருவான பிறகு, பருத்தியில் இருந்தும் ஆடைகள் செய்தனர் என அறிகிறோம்.
 
அதிகமாக,செல்வர்களும் அரசர்களும் அழகிய வேலைப்பாடு மிக்க நுண்ணிய பட்டாடைகளை உடுத்தனர். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் இரண்டு துண்டு துணியுடன் தம்மை திருப்தி படுத்திக் கொண்டனர். அன்று வேட்டி போல் இடையில் கட்டும் ஆடையை காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. காழகம் என்பதற்கு அரையில் கட்டப்பெறும் ஆடை என்பது பொருள்.
 
பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் எமக்கு தோன்றுகின்றது. பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே ஆகும். கண்ணியமாக உடையணிவது என்பது காலத்துக்கு ஏற்பவும், இடத்துக்கேற்பவும், சமூகத்துக்கு ஏற்பவும் மாறுபட்டு வந்துள்ளது என்பதே உண்மை.
 
இன்றைய வழக்கம் போல், வேட்டி, சேலை அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின், சிலப்பதிகார காலத்தில் அது பொது வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். எனவே இவை நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் அல்லது மரபு ஆகும். உதாரணமாக, சிலப்பதிகாரம் 4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதையில் ,
 
“அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய, மென் துகில் அல்குல் மேகலை நீங்கக், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்“
 
என்ற வரி அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை (waist ornament for women- ஒட்டியாணம்) நீங்கவும், கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், என்று உரைக்கிறது .இதன் பின் வந்த, ஆண்டாள்,
 
“இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து, மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை, அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்“
 
என்று நாச்சியார் திருமொழியில், துர்க்கை என்கிற நாத்தனார் கல்யாண புடைவை சாத்தி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்திருந்து, தன்னை நாராயணனுக்கு மணமுடிக்கப் பேசுவதாய் பாடுகிறார். இப்பொதும் பெண்கள் தாலி கட்டும் நேரத்தில், பொதுவாக சிவப்பு நிற கூரைப் புடவை அணிந்தே திருமண மேடைக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றது, சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையின்
 
"துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... "
 
என்ற வரி அந்த காலத்திலேயே இரவி உடை [nightie] அணியும் மரபு இருந்ததை, மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் எனவும் எடுத்து காட்டுகிறது.
 
இன்று சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவதும் ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாகவே விளங்குகின்றது. தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழும் நாம் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிவது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் பலர் இன்று இந்த பாரம்பரிய உடை , 'வசதி குறைவானது' என்று ஐயம் அடைகிறார்கள்.
 
ஆனால் ஊர்ப்புறத்தில் நாற்று நடுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை ஒரு வசதிக் குறைவு என்று ஒரு போதும் கருதுவது இல்லை. அவர்கள் ஓடினால் கூட அது அவர்களுக்கு இடையூறாய் இராது. நன்கு ஆராய்ந்து கண்டறிந்த உடுத்தல் முறை போலும். இன்று பலபேருக்கு அதுபோன்ற உடுத்தல் முறைகள் தெரியாமையே இதற்க்கு முக்கிய காரணம் ஆகும். எனவே சரியான சேலை, வேட்டி காட்டும் பழக்கமே தேவையானது.
 
தொடக்கத்தில், சேலைக்கும் வேட்டிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவை உடலை சுற்றி அணியப்பட்டன, அவர்களுக்கு தையல் கலை தெரிந்து இருந்தும், நெகிழ்வுத்தன்மை மற்றும் வெவ்வேறு விதமாக ஒரு துணியாலேயே அணியும் படைப்பாற்றல் ஆகியவையை அது கொண்டு இருந்ததே (flexibility and creativity that draped clothing allowed), இந்த உடைகள், தைக்கப் படாமலே இன்றுவரை நிலைத்து இருந்தமைக்கு காரணமாகும்.
 
பண்டைய தமிழர் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதற்கு சேலை ஒரு பொருத்தமான ஆடையாக, ஒரு பெண்ணின் இடுப்பை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப்படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடுப்பு மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டுகிறது.
 
இது ஒரு தைக்காத துணியாக (unstitched drape), உடுப்பவரின் உடல் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், பகுதியாக மட்டும் வயிற்றுப் பகுதியை மறைக்கிறது (partially covering the midriff), அப்படியே வேட்டியுடன் சால்வையை கம்பீரமாக ஆண்கள் அணிகிறார்கள். இந்த இரு உடைகளுமே மிக இலகுவாக வேலை ஆடையாகவோ அல்லது கொண்டாட்ட ஆடையாகவோ மாற்றக் கூடியவை (easily turned into working dress or party-wear). இன்று உலகத்தில் கிடைக்கும் ஆடைகளில் முழுநிறைவாக எல்லோருக்கும், எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் இருந்தாலும் பொருந்தக் கூடியது (one dress that is universal) எமது பாரம்பரிய உடையான வேட்டியும் சேலையும் தான் !. சரியாக இந்த உடைகளை கையாண்டால், அவை வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், போன்றவற்றிற்கும் அணியலாம், ஏன் வேலு நாச்சியார், பெலவாடி மல்லம்மா, கிட்டூர் ராணி சென்னம்மா போன்றோர் குதிரையின் முதுகில் எதிரிகளுடன் போரிட்டது சேலை உடுத்துக் கொண்டு தான் !
 
எது எப்படியாயினும், ஒவ்வொரு நாட்டுக்கும் இனக்குழுக்கும், மரப்பட்டைகளும் தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் இன்றுவரை, ஆடை என்பது அதன் தனி அடையாளமாகும். நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு துண்டும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் ஆண்கள் முழு வேட்டி ,சால்வை அதனுடன் மேல் சட்டை. பெண்கள் சேலை ரவிக்கை. இன்று நவீன தொழில் நுட்பத்தாலும், நூற்பாலைகள் (பஞ்சாலைகள்) மற்றும் செயற்கை நூல் இழைகளின் வருகையாலும், ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி விட்டன. இச்சூழலில் உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி, சட்டை, சேலை என்ற தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? என்ற ஒரு கேள்வி வரலாம்.
 
பொதுவாக உடைகள் என்பது தேவை, வசதி சார்ந்த ஒரு பார்வையிலும், மற்றும் இன அடையாளம் சார்ந்த ஒரு பார்வையிலும் கருதப் படுகிறது. இவ்விரண்டுமே நாம் வாழும் அந்தந்த சூழலுடன் சம்பந்தப்பட்டவையே ஒழிய நிரந்தரமானவை அல்ல. எனவே இன்றைய தேவைக்காகவும் வசதிக்காகவும் நாம் நம் உடைகளைத் தேர்வுசெய்வது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் இன்னொருபக்கம் உடை என்பது அடையாளம். எனவே திருமணங்கள் மற்றும் இது போன்ற தமிழர் சடங்குகளில் கட்டாயமாகவும், மற்றும் நாம் எம் தாயகத்தில் பல பொருத்தமான வேலை இடங்களிலும் அல்லது பொருத்தமான அன்றாட வாழ்க்கையிலும் நாம் நம் தனியடையாளத்தை பேணக்கூடியதாக உடைகளை அணிவோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 24 தொடரும்
50628642_10213440173861550_5935941679801434112_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=TZ3nwAwgA2EQ7kNvgFeWyym&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC_LR_JCv7IVyNZmYPXm1tWPbw7v_HhmgSiqmq4rI1BDg&oe=66AF25D6 50976811_10213440174701571_9026087322612924416_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Wk69couoRW8Q7kNvgGMygrZ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYB7xuO2lSH407p4miwLEDszWjp1I2CiM6aSQHhZ3Y3a-g&oe=66AF5439 
 
50343466_10213440175421589_463754282106093568_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=eGhlmkUTyXkQ7kNvgGl1PBy&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYB9kpBkwdIXcWgNg4hNs7BnPuxiTy8mzlMkGAlOt359mw&oe=66AF4F11  50491111_10213440176341612_523170151009353728_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=YCALA1pdsYsQ7kNvgHnxMsR&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDWzcVw-fvdYfsRbM94FiIOrFSpINgqJOgVQjwYbHVKBw&oe=66AF36A3
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 24
 
 
பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விடயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals), கருவுறுதல் தொடங்கி இறப்பு வரை உள்ள பல சடங்குகள் ஆகும். இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என்றும் அழைப்பர். இவை அனைத்தும் எமது முன்னோர்கள் பாரம்பரியமாக எமக்கு தந்தவை, சில சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்பவை.
 
பொதுவாக, மனிதன் தோன்றிய பொழுதே சடங்குகளும் தோன்றியது எனலாம். உதாரணமாக அன்று வேட்டைக்கு போகு முன் ஒரு வேட்டை சடங்கு நிகழ்ந்தன என இன்று நாம் கல்வெட்டுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் அறிகிறோம். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன் வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்லும் முன்பு விலங்கு நடனம் ஆடினார்கள் என அறிகிறோம். சடங்குகள் சில நோக்கங்களுக்காக, சில நம்பிக்கை அடிப்படையில் அன்று உருவாகின. மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை, ஏன் அவன் இறந்த பின் கூட, அவனை நினைவு கூற, பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் அந்த மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறுகின்றன.
 
உதாரணமாக - பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு இவைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பூப்பு சடங்கு பெண்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்களில் 12 - 18 வயதுகளில் நிகழலாம். அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும், அதை தாம் வாழும் சமூகத்திற்கு உரைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
 
பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலை அல்லது ஒருவர் தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல் என்று கூறலாம். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. எனினும் பெண்ணே கர்ப்பம் தரிப்பதால், அதற்கே முக்கியம் கொடுத்து சடங்கு கொண்டாட்டத்தை கையாண்டனர் எனலாம் அல்லது ஆணின் பங்கை அல்லது ஆண் பக்குவமடையும் நிலையை அல்லது பெண்களைப் போல வெளிப்படையாக இல்லாததால் அன்று சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறலாம்.
 
மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. மேலும், புறநானுறு 312 இல் பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் கூறுவது போல “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததாலும் ,பெண் அந்த கடமைக்கு தயார் என வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக, எனவே பெண்களுக்கு மட்டுமே பூப்பு சடங்கு கொண்டாடப் பட்டு , அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கிறது என நம்புகிறேன்.
 
இந்த வரிசையில் முதலில் வருவது "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற" என்று குறள் 61 இல் வள்ளுவர் கூறிய மக்கட் செல்வமாகும். கிடைத்தற்கு அரிய இம் மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் ஆகும். இந்த வரிசையில் முதலில் வருவது கருவுறுதல் ஆகும். எனவே அந்த தமது வாரிசின் வருகையை, கருவுற்ற நல்ல செய்தியை, வலை காப்புடன் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். இது பெரும்பாலும் கருவுற்ற 7 அல்லது 9 ஆம் மாதத்தில், செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய கண்ணாடி வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு என்றும் சிலர் சொல்லுவர். மேலும் அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத் தானாம். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும்.
 
அதை தொடர்ந்து பிள்ளை பிறந்ததும் வருவது சேனை தொடுதலும், தொட்டிலிடுதலும், பெயர் இடுதலும் ஆகும். சேய்+நெய்+தொடுதல் என்றால், குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கம் ஆகும். சேனை என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவு’ என்கிறது தமிழ் அகராதி.
 
குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும் என்பதால், பொதுவாக பலராலும் குறிப்பாக நாட்டுப்புற மக்களாலும் இது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளை நாம் தாராளமாக காணலாம்.
 
 
"பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
 
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே."
 
 
அடுத்து, குழந்தைகள் தொடர்பான சடங்குகளில், சிறப்பிடம் பெறுவது சோறு தீத்துதல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மற்றும் ஏடு தொடக்குதல் ஆகும். பிள்ளைக்குச் சோறு தீத்துவதிலே பல்வேறு நடைமுறைகள் இடத்துக்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் காணப்படுகின்றன. தாய்ப்பாலுடன் மட்டும் வளர்ந்த பிள்ளைக்கு மற்றைய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கு முன்னர் முதல் தடவையாக பிள்ளைக்கு சோறு தீற்றுதல் நிகழ்ச்சி பொதுவாக ஏழு மாதமாகையில் நடை பெறுகிறது. சிலர் ஆலயத்திற்கு போயும் சிலர் தமது வீட்டிலேயும் இதை நடத்துவர். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் மாமனோ, தகப்பனோ,பேரனோ சிறிதளவு அமுதினை மசித்து குழந்தைக்குத் தீத்தி விடுவர். சில குடும்பங்களிலே உணவை ஒரு பெரிய தட்டிலே போட்டு பிள்ளையே தனது கையால் எடுத்துச் சாப்பிட விடுவர். இதனை 'அள்ளித் தின்ன விடுதல்' என்று அழைப்பர். சில பிள்ளைகள் சாப்பாட்டை எடுத்து வாயிலே வைக்கும். சாப்பாட்டைப் (சோறு) பிள்ளை வாயிலே வைக்காது விட்டால் தாயார் சிறிதளவு எடுத்துத் 'தீத்தி' விடுவார்.'தீத்துதல்' என்ற சொல் சில இடங்களிலே 'ஊட்டுதல்' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் நாட்டிலே 'ஊட்டுதல்' என்ற சொல் வழக்காற்றில் உண்டு.
 
யாழ்ப்பாணத்து பழக்க முறையில், சோறு 'தீத்தும்' சடங்கிற்குப் பின்னர் பல்லுக் கொழுக் கட்டை சடங்கு நடைபெறும். இது குழந்தைக்குப் பல்லுத் தோன்றியதும் நடைபெறும் சடங்காகும். குழந்தையை பாயில் அல்லது ஏதாவது விரிப்பு ஒன்றில் இருத்தி, குழந்தையின் தலையின் மேல் வெள்ளைத் துணியொன்றை போர்த்து, அவித்த பல்லு கொழுக்கட்டைகளைச் சுளகில் அல்லது வெள்ளித்தட்டு அல்லது 'தாம்பாளம்' போன்ற ஒன்றில் எடுத்து வந்து, பொதுவாக தாய்மாமன் குழந்தையின் தலையிலே கொட்டுவார்.
 
தமிழர் பண்பாட்டில் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் ஏடு தொடக்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. யாழ்ப்பாணச் சமூகம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, கொடுக்கிறது என்பதை இந்த நிகழ்வு இன்று வரை சிறப்பாக தொடர்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களில், பாடசாலையில், பொது இடங்களில் அல்லது வீட்டில் நடைபெறும். இங்கு குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என அரிசியில் எழுதப்பழக்குவர்.
 
அடுத்து வருவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு நடத்துவார்கள். பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. உதாரணமாக, சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக் காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார் என அறிகிறேன்.
 
இப்படி தமிழர் காது குத்தி காதணிகள் அணிவதை உறுதி படுத்துவது போல, தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது என "காதொளிரும் குண்டலமும் கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் " என்று கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் கூறுகிறது. வழிவழி வந்த இந்த பழக்கம் பின்னாளில் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. அதில் தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்" உறவு என்பர். இங்கு இந்த உறவு தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். அப்படியான காது குத்தும் நாட்டுப் பாடல் ஒன்று உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ளது:
 
 
"கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு
கிண்ணியில் சந்தனமும்
கிளிமூக்கு வெத்தலையும்
தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 25 தொடரும்
50234865_10213486326135328_266730925214138368_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=q6iDzM3ZaL8Q7kNvgEdSfst&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDTxP3EhYqaxJXEHk0nVBCwJSTy4XQCQHp8EMnnvV8RKg&oe=66B39E91 50868915_10213486327055351_618515994029064192_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=bTdeyH0P4kwQ7kNvgHsuGHe&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCU-P8_pDOnJZ4D-oi_HeFLhuiyY5Y2nW2q39iKOo26RQ&oe=66B3B56C
 
51231765_10213486333295507_6341703239007731712_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=EXom57ipu8oQ7kNvgHz-x9b&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDf93yjPYzuA7bWgEDs9eLIwayI8dmthnxdz2A2egYc0A&oe=66B39237 50925321_10213486335855571_8036663128336891904_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=t3XYiuZwRscQ7kNvgEncpFF&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDVGGsPrTk9uYqr4c_QP0_ytMpCv7w54KWMdQKEKsqAzg&oe=66B3A4CB
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 25
 
 
மண்ணின் பூப்பை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போல் பெண்ணின் பூப்பையும், அதாவது பெண்ணின் உடல் தாய்மைக்கு உரிய கன்னித் தன்மையை அடையும் நிகழ்வையும் கொண்டாடும் மரபு, பிறப்பு சடங்குகளை அடுத்து வருகிறது. கிராமப் புறங்களில் சடங்கு என்றாலே அது பூப்புச் சடங்கையே பொதுவாகக் குறிக்கும்.
 
10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. எனவே பெரும்பாலும் மங்கை என்ற மகளிர் பருவத்தில் இந்த பருவ மாற்றம் நடை பெறுகிறது எனலாம், எனினும் சிலவேளை முன்பும், அதாவது பெதும்பை பருவத்திலும் அல்லது பின்பும், அதாவது, மடந்தை பருவத்திலும் நடை பெறலாம். சுமங்கலிப் பெண்கள் கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் [வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ மேலும் கீழுமாகவோ அசைத்து மங்கள ஒளி எழுப்பி] புனித நீராட்டுவதும், எதிர்காலத்தில் அவள் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை கொடுப்பதும், பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கும் உலகத்தார்க்கும் தெரிவிப்பதும், பூப்புச் சடங்கில் தாய்மாமன் முதலிடம் அல்லது தலைமை வகிப்பதும் முக்கிய நிகழ்வாகும். பொதுவாக உளுந்தில் செய்த உணவுகளும், எள் கலந்த உணவுகளும் மற்றும் உணவில் அதிகம் நல்லெண்ணெயும் சேர்க்கப் படும்.
பெண்ணின் பூப்பெய்தல், அதை ஒட்டிய நிகழ்வுகளை மறைமுகமாக தெரிவிக்கும் ஒரே ஒரு பண்டைய பாடலாக, சங்கப்பாடல், புறநானுறு 337 இன்று எமக்கு கிடைத்துள்ளது. அதில் வரி:
 
 
"காண்டற்கு அரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல் இனியே
அற்றன்றாகலின் தெற்றெனப் போற்றிக்" [7 - 13]
 
 
முக்கியமானது. அவள் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிறைந்த [பூப்பு எய்திய] பொலிவோடு [அழகுடன்], மனைக்குள் திகழ்ந்தாள். நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் நடுங்கினாள் [அசைந் தாள்]. கூந்தலில் அவள் ஊட்டிய குளுமையான அகில் புகை தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் மறைந்து இருந்தாள் என்கிறது. [She is hiding in her brown mansion filled with delicately moving fragrant smoke of akil wood. She trembles like a fine washed cloth hung to dry].
 
இப்படியான சடங்குகளை ஒருவர் அல்லது ஒரு குழு, ஒரு குடும்ப நிலையில் இருந்து இன்னொரு குடும்ப நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் [Rites of passage) என்றும் கூறலாம். உதாரணமாக பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை [திருமணம்], மகப்பேறு, கைம்மை [widowhood] ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பார். இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப / சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள் எனலாம்.
 
பூப்பு, யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்று பொதுவாக அழைக்கப்படும். தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு என்றும் கூறலாம். “பூப்பு" ஓர் உடல் இயலின் பதிவு, அவ்வளவு தான்! பூப்புனித நீராட்டு விழாக்களைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அப்படியான ' வயதுக்கு வருதல்' [‘Coming of Age’] சடங்குகள் அநேக மான பூர்வீக குடிகளிடம் இன்னும் உண்டு.
 
ஈழத்தில் பூப்புனித நீராட்டு விழா மதங்களுக்கு அப்பாற்பட் டது. இந்துக்கள் மட்டுமன்றி கிறித்தவ ஈழத் தமிழர்களும் தமது பெண் குழந்தைகளுக்கு சாமத்தியச் சடங்கை, இந்துக்கள் போலவே, ஆலாத்துதல் (ஆரத்தி) போன்ற சடங்குகளைச் செய்து கொண் டாடுவார்கள். அது மட்டும் அல்ல இங்கு பெண்கள் பொட்டு வைப்பது, தாலி அணிவது, இப்படியான சடங்குகள் செய்வது எல்லாம் தமிழ்ப் பாரம்பரியமாக மட்டுமே கருதப்படுகின்றன.
 
ஈழத்தமிழர்கள் மத்தியிலும் திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற சடங்குகளில் தாய் மாமனுக்குத் தனி மரியாதை உண்டு. இலங்கையில் வேடர் சமுதாயம், பேய்கள், துர்தேவதைகள், இரத்த மற்றும் சதை போன்றவற்றில் மகிழ்வடைகின்றன என நம்புகிறார்கள் [The Veddas of Sri Lanka believe demons relish blood and flesh]. எனவே பூப்படைத்தலில் இரத்தம் ஒரு முக்கிய இடத்தை பெறுவதால், பேய்களின் கோபத்தை தணிக்க அல்லது குறைக்க சில நடவடிக்கைகளை அவர்கள் கையாண்டார்கள். அதுவே இன்று சிங்கள சமூகத்தினரிடமும் ஒரு சடங்காக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
இது இலங்கை இந்தியா மக்களைத் தவிர, மேலும் ஆப்கானிஸ்தான், ஜப்பான், பொலினேசியா, கொலம்பியா, அந்தமான் தீவுகள், நியூ கினி மற்றும் மத்திய ஆபிரிக்கா [Afghanistan, Japan, Polynesia, Colombia, the Andaman Islands, New Guinea and Central Africa] போன்ற நாடுகளிலும் காணப் படுகின்றன. இலங்கையின் ஒரு புத்த புராணக் கதை, மகா சம்மதவின் மகள், ஒரு வளர்நிலைச் சடங்கில் [Rites of passage] ஈடு படத்தை குறிக்கிறது [Maha Sammata was the first monarch of the world according to Buddhist tradition.].
 
தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "பழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
எனினும் பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு பொறாமை கொண்ட ஆண் சமுதாயமும், ஆரிய இனப்பண் பாட்டின் தாக்கமும், இன்றைய மத நம்பிக்கையும், முதலாளித்துவம் கலந்து பெண்ணை அடிமைப் படுத்த முனைந்த காலத்தில் தான், பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப் பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சடங்காகி விட்டது என்பது தான் உண்மை.
 
அதனால்த் தான் பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது எனலாம். எனவே தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும் என நம்புகிறேன்.
 
வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இனி வருபவை திருமணச் சடங்கும், இறுதியாக மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கிய சடங்குகளின் முடிவாக, அவன் இறந்த பின்பும் தொடரும் இறப்புச் சடங்கும் ஆகும், அவை அடுத்த அடுத்த பகுதிகளில் ஓரளவு விரிவாக தரப் பட உள்ளது
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 26 தொடரும்
51656837_10213538352955966_2462992783082782720_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=HrA3Q1Ud9Y8Q7kNvgEVV_i5&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAop-YJYgskceIMmkBE3U5-7a1nVJlKd4Q_LoKsiEXEIg&oe=66B70C69 51503040_10213538354035993_6516530655885524992_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=mFDQ5BI6VBIQ7kNvgE-lulP&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYABi80osOAf_Ivt1XIALNAUtXsyTGL1N0-hoXs3JRC_Gw&oe=66B7097B  
 
51398328_10213538354836013_2594116446707515392_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=yrc5AaDRJywQ7kNvgExjzLd&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCWnZTBXuTOgS8ms9CIUgEH77L4PWsKjQVj8AAUKfFTmw&oe=66B7155E 51616991_10213538355836038_102835922386550784_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=QNWmL2nL6DcQ7kNvgE7oM2o&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCqGxivgNLdGeemnDXGtbvFZHDyTuDyNMs2TAWUz2-vRQ&oe=66B6FA59 51835792_10213538356476054_7907794606010400768_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=hjZLWakwtjoQ7kNvgFY5pwy&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAaaYElPMCLP46ItmiAjQIlpfM41oqF2qTgnkaxTaJS0Q&oe=66B6F942
 
 
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.