Jump to content

போதைப்பொருள் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை வெளிப்படுத்தும் பிரசாரம் ஆரம்பம் - டிரான் அலஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   29 APR, 2024 | 06:24 PM

image

(நா.தனுஜா)

'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182269

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராஜஸ்தான் தோற்றதால் 2-ஆவது இடத்துக்கு போட்டியிடும் 3 அணிகள் பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன். ஆர்சிபி அணி தொடர்ந்து 5 போட்டிகளை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், அந்த அணி 2-ஆவது இடத்தைப்பிடிக்கும் வாய்ப்பை இழந்து 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்துக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளது. குவஹாத்தியில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 65-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எந்தவிதமான ஏற்றமும் கிடைக்கப் போவதில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை அசைத்துப் பார்த்துவிட்டது. பஞ்சாப் 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்றபோதிலும், தன்னுடன் மோதும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் வாய்ப்பை இடைமறிப்பதில் இதன் பங்கு அதிகமாகும். அதுதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கு நடந்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப்பில் எந்த இடம் கிடைக்கும்? ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4-ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 0.273 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் மிகக்கடுமையானதாக, சவாலானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், ராஜஸ்தான் அணியிலிருந்து ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சென்றுவிட்டதால் பெரியபேட்டரை இழந்துவிட்டது பெரிய பின்னடைவு. அதேபோல, கொல்கத்தா அணியிலிருந்து பில் சால்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார். வெளிநாட்டு முக்கிய வீரர்கள் இரு அணியிலிருந்து கிளம்பி இருப்பதால் வெற்றிக்காக கடுமையாக இரு அணிகளும் போராடும். ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானிடம் தோற்றால், முதலிடத்தை தக்கவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ராஜஸ்தான் அணி வென்றால் 18 புள்ளிகள் பெற்றாலும் 2-ஆவது இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணிக்கு 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கின்றன. அந்த இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும். கடைசி இடத்தை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே பிடிக்கலாம். ஒருவேளை சன்ரைசர்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகள் பெறும். ராஜஸ்தான் அணியும் கடைசி லீக்கில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 16 புள்ளிகள் பெற்று கடைசி 3 இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது வலுவான நிகர ரன்ரேட் வைத்திருக்கும் சிஎஸ்கே 2வது இடத்தையும், 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடம் ராஜஸ்தானுக்கும் கிடைக்கலாம். இப்போதுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடிக்கும், தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மற்ற 3 இடங்களில் எந்தெந்த அணி அமரும், யாருடன் யார் ப்ளே ஆஃப் சுற்றில் மோதப் போகிறார்கள் என்பதைக் கணிக்க இன்னும் சில போட்டிகள் காத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணி வென்றது எப்படி? பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறினாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. கடைசிப்போட்டிவரை வெற்றிக்காக போராடுவோம் என்று தங்களின் போராட்டக் குணத்தை நேற்று வெளிப்படுத்தினர். இந்த வெற்றியால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் தங்களின் வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புரிந்திருந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவண் காயத்தால் பல போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட சாம்கரன் அற்புதமாக செயல்பட்டார். இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பா ரொட்டேட் செய்து, ராஜஸ்தான் அணியை 144 ரன்களுக்குள் சுருட்டினார். சாம் கரன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய சாம் கரன் 63 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பிய சாம்கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானை சுருட்ட உதவி செய்தார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கவில்லை. நேதன் எல்லீஸ், ஹர்சல் படேல், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிஹ், சாம் கரன் அனைவருமே விக்கெட் வீழ்த்தி தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி 144 ரன்களில் சுருட்ட முடிந்தது. சேஸிங்கின்போது பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும், 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங்(6), பேர்ஸ்டோ(14), ரூஸோ(22), சஷாஹ் சிங்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணியை மீட்ட சாம் கரன்-ஜிதேஷ் ஜோடி பஞ்சாப் அணி தோல்விப் பாதைக்கு செல்லும் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகும் என ஒரு கட்டத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் கேப்டன் சாம் கரன், ஜிதேஷ் சர்மா கூட்டணி உடைத்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு சாம்கரனுடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா 63 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே ஜிதேஷ் சர்மா சேர்த்தாலும், சாம் கரனுக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த உதவியாக இருந்தது. ஜிதேஷ் சர்மா-சாம்கரனைப் பிரிக்க அஸ்வின், சஹல், போல்ட் எனபல பந்துவீச்சாளர்களை சாம்ஸன் பயன்படுத்தியும் பலனில்லை. மாறாக அனைவரின் ஓவரிலும் சாம் கரன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி சாம்ஸன் கணிப்பை பொய்யாக்கினார். கடைசி 6 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜிதேஷ், சாம் கரன் அதிரடிக்கு மாறினர். அஸ்வின் ஓவரில் சாம்கரன் சிக்ஸர் அடிக்க, சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சிக்ஸர் அடிக்கமுயன்று ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஷுதோஷ் சிங்கால் வெற்றி எளிதானது. அஷுதோஷ் சிறிய கேமியோ ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். சாம்கரன் 38 பந்துகளில் அரைசதம் அடித்து, 41 பந்துகளில் 63 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷுதோஷ் சிங் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் அணி ராஜஸ்தான் அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. ராஜஸ்தான் அணியின் பேட்டர், உள்ளூர் ஹீரோ ரியான் பராக் சேர்த்த 48 ரன்களைக் கழித்துப் பார்த்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடக்காது. ஜெய்ஸ்வால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஃபார்மின்றி தவிக்கும் இவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்கரன் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கரீபியன் ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. சாம்ஸன் என்ன சொல்கிறார்? ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த விக்கெட்டை நாங்கள் மிகச்சிறப்பாக எதிர்பார்த்தோம். 140 ரன்களுக்குள் அடிக்க முடியும் ஆடுகளமாக நினைக்கவில்லை, குறைந்தபட்சம் 160ரன்கள் வரை சேர்க்கத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பேட் செய்யஆடுகளம் கடினமாக இருந்தது. எங்கள் தோல்விகளை ஏற்கிறோம்." "எங்கு தோற்றோம் என்பது குறித்து ஆலோசிப்போம். அணியில் எந்த இடத்தில் யார் சரியாகச் செயல்படவில்லை, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை ஆலோசிப்போம். எங்களிடம் தனி ஒருவனாக அணியை வெல்ல வைக்கும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரும் முயற்சித்தால் வெற்றி எளிதாகும். இது குழுவான விளையாட்டு. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c72p2kq08ezo
    • ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 09:00 AM   தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை  (15) 01 கிலோ கிராம்  எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம்  கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/183653
    • பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம் Published By: VISHNU   16 MAY, 2024 | 01:31 AM   வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183650
    • Published By: VISHNU 16 MAY, 2024 | 01:17 AM   இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/183648  
    • மழையுடனான வானிலை தொடருமாம்...... 16 MAY, 2024 | 06:01 AM இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில்  வளிமண்டலவியல் இடையூறு தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆனபடியினால் நிலவுகின்ற  மழையுடனான வானிலை மேலும்  தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.  இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,  நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின்  பல இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேல், தென் மற்றும் கிழக்கு  மாகாண கரையோரப் பிராந்தியங்களில்  காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.   பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். நாட்டை சூழ உள்ள உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.  நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.  ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/183652
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.