Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வானம் பார்த்த பூமி"
 
காலநிலை அறிக்கையின் படி, இலங்கையின் வட, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் நீரின் அளவு மிக குறைவாக காணப்படுவதாக கூறுகிறது. அதிலும் மன்னார் காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். அங்கு நான் ஒருமுறை விடுதலையில் ஊர் சுற்றிப் பார்க்க போனபொழுது, தற்செயலாக  திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவளைச் சந்தித்தேன். அவள் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் எளிய அடக்கமான தோற்றத்திலும் இருந்தாள். அவளின் பெயர் மகிழ்மதி. அவள் அங்கு பெற்றோருடன் வந்து இருந்தாள்.
 
இது கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற ஒரு தலமாகும். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. அவளின் குடும்பம் ஒரு நடுத்தர விவசாய குடும்பமாகும். அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் அங்கு வாழ்க்கை. என்றாலும் இராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் கட்டுக்கரைக் குளம் அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதல்.  
 
அவளின் பெற்றோரின் வேண்டுதலாலும், மற்றும் அங்கு விவசாயிகளின் வாழ்வை தெரிந்து கொள்ளும் ஆவலாலும், அவளின் வீட்டிற்க்கு அன்று மதியத்துக்கு பின்பு, அவர்களுடன் சென்றேன். வானம் பார்த்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு இனிமையானதும் கூட என்றுதான், அவளை பார்த்தபின் எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றினாலும். பொதுவாக மேகம் கருக்கையில் அதை பார்த்து சந்தோசப்படுதலும், கதிரவன் கொதிக்கையில் வருத்தப் படுவதும் அந்த மண்ணில் இருப்பவர்களின் வாழ்க்கை என்பது எனக்குப் புரிந்தது. அவளின் பெற்றோர் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பொதுவாக கூறியதுடன் எனக்கு வடையும் தேநீரும் தந்தார்கள். அதன் பின் , கொஞ்சம் வெயில் ஆற, அவளுடன் அவர்களின் வயலுக்குப் போனேன். அப்பொழுது தான் அந்த மண்ணின் மக்களின் மழைக்கான ஏக்கம் புரிந்தது. அவர்களின் தாகத்தின் ஆழம் புரிந்தது. 
 
அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் வாழ்க்கை. விவசாயம் செய்ய முடியும். பயிர் பச்சை  வளரும். கிணற்றில் நீர் சுரக்கும். குளத்தில் நீர் தேங்கும். மழை  வரவில்லை என்றால் வாழ்கையே இல்லை? என்பதை உணர்ந்தேன். அவள் மிக கெட்டிக்காரி, என் முகத்தில் இருந்து, என் எண்ணங்களை ஊகித்த அவள்.
 
'இந்த வருடம் ஏனோ மழை இன்னும் வரவில்லை. கோடை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு  இருக்கிறது' என்று கதையை ஆரம்பித்தாள். அவளின் அழகை, அவளின் நடையை, அவளின் முகபாவனைகளை ரசித்துக் கொண்டு இருந்த நான், சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கே செடிகளும் மரங்களும் கூட உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன். அது மட்டும் அல்ல, மேச்சல் நிலத்தில், ஆடு மாடுகளும் கூட நீர் இன்றி தளர்ந்து நடப்பதை கண்டேன். அங்கு வயல்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர்களின் முகத்தைப் பார்த்தேன், எல்லாம் வாடித்தான் இருந்தன. ஒரு சொட்டு மழை விழாதா என்று எல்லோரும் வானம் பார்த்து காத்து இருப்பது போல் எனக்கு தோன்றியது.  
 
இன்னும் சில தினங்களில் மழை வராவிட்டால் நிறைய உயிர்கள் போய் விடுமோ? செடி கொடிகள் பட்டுப் போய் விடுமோ? ஆடு மாடுகள் தாகத்தில் உயிர் விடுமோ? என் மனதில் இப்படி ஒரு ஏக்கம் தோன்றியது ?. அப்ப தான் அவள்
 
'ஒரேயடியாக இப்படியான ஒரு முடிவுக்கு வரவிடாது இருக்கத்தான் எமக்கு நல்லவேளை கட்டுக்கரைக் குளம் ஓரளவு உதவிசெய்கிறது' என்று விளக்கம் கூறினாள். மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில், கிடைத்த தொல்பொருட்சான்றுகள், இது இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தெட்டத் தெளிவாக உணர்த்துகிறது என்று பேராசிரியர் புஸ்பரட்னம் கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால், 1600 ஆண்டுகளாக இந்து வறட்சியை தாண்டித்தான் இன்னும் இங்கு மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இன்னும் வாழ்வார்கள் என்று என் உள்மனம் எனக்குச் சொன்னது.  
 
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு / குறள் 20"
 
நீரின் பெருமையை இவ்வாறு தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகிறார். ஆமாம், நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது என்பதே உண்மை. ஏன் என்றால், உயிர் இனங்களுக்கு தேவையான பூமியில் உள்ள பயிர்கள், செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கின்றன, அப்படித்தான் அவளும் அவளின் பெற்றோரும் வானத்தை பார்த்தபடி காலத்தை ஓட்டுவதை கண்டேன்.
 
ஆமாம் 'வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே' என்ற புறநானுறு 18 இயம்பியவாறு நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம் அவர்களின் முயற்சிக்கு வேண்டுவ உதவாது தான்! அது அவளின் முகத்தில் தெரிந்தது!!
 
நாம் திரும்பி அவளின் வீடு போக, இருட்டாகி விட்டது. அவர்களின் வீடு உண்மையில் சிறு குடிசை, ஆனால் மனமோ பெரும் மாடிவீடு. அவர்கள் நாளை திரும்பி போகலாம் என்று என்னை அங்கே தங்க ஏற்பாடு செய்தார்கள். நான் அவர்களின் விறாந்தையில் வெளியே படுத்தேன். மகிழ்மதியும் பேச்சு துணைக்கு சில மணித்தியாலம் கொஞ்சம் தள்ளி, ஒரு பாயில் படுத்து கதைத்துக் கொண்டு இருந்தார். வானம் பார்த்த பூமியில் இருந்து கொண்டு என் மனம், என் கண்கள் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தது. அது தன்னை அறியாமலே சந்தோச மழையில் நனையத் தொடங்கியது. கொஞ்ச நேரம் எமக்கிடையில் ஒரு பேச்சும் இல்லை. கண்கள் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தன. 
 
திடீரென என் மேல் சில துளிகள் விழுவதை உணர்ந்தேன். அதற்கு இடையில் அவள் பதறி ஓடிவந்து தன் மெல்லிய போர்வையால் என் முகத்தை துடைத்தாள். 'மழை மழை!' சத்தம் போட்டே கத்திவிட்டாள். அவளின் சந்தோசத்தை கண்டு நான் திகைத்தே விட்டேன். அப்படி ஒரு மகிழ்வு!
 
அவள் என்ன நினைத்தாளோ, அதே இரவு உடையுடன் முற்றத்தில் போய், வானத்தை பார்த்து துள்ளி மகிழ்ந்தாள். நான் விறாந்தையில் தூணுடன் சாய்ந்தவாறு அவளை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த இருட்டிலும் இடைஇடையே தோன்றும் மின்னல் வெளிச்சத்தில் அவளின் அந்த நனைத்த உடலின் வனப்பு என் உள்ளத்தை இதுவரை காணாத எதோ ஒரு உணர்ச்சிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தது. மழை வயலுக்கு செழிப்பை தரும், அது தம்மை வாழவைக்கும் என்று அவள் மகிழ்ச்சியில், ஆனால் தன்னை அறியாமலே என் மனதிலும் செழிப்பை தந்து கொண்டு இருந்தாள்.
 
'ஏய் பிள்ளை, என்ன செய்கிறாய் ?, உடல் முழுக்க ஈரம், ஒரு ஆண் பிள்ளை இருப்பது கூட தெரியவில்லையா' தாயின் கடுமையான குரல் கேட்டு நான் திடுக்கிட்டேன். அவளும் பயந்த முகத்துடன், அந்த ஈரத்துடன் அறைக்குள் ஓடிப்  போய்விட்டாள்.
 
அதன் பின் அவள் வெளியே வரவே இல்லை. நான் கொஞ்சம் சமாளித்துக்கொண்ட, அது தான் நான் மகிழ்மதியை கூப்பிட, எழும்பினேன் என்று கூறினேன். அவளின் தாயும் தந்தையும் மகிழ்வாக காணப்பட்டனர். இம்முறை எமக்கு வேளாண்மை நல்ல விளைச்சலை தரும் போல் உள்ளது. இந்த மழை கொஞ்சம் தொடரவேண்டும், குளங்கள் நிரம்ப வேண்டும் என்று விறாந்தையில் தொங்கிக் கொண்டு இருந்த திருக்கேதீஸ்வர ஆலய படத்திற்கு வணங்கி நன்றி கூறினர். நான் இப்படியான நம்பிக்கையில், நம்பிக்கை இல்லாதவன் என்றாலும், அவர்களின் மகிழ்வை மதித்து, நானும் அவர்களுக்கு நம்பிக்கை வரத் தக்கதாக கதைத்தேன். 'இந்த விளைச்சல், மகிழ்மதிக்கு நல்ல வரன் தரவேண்டும், வானம் பார்த்த பூமி ஒழியவேண்டும்' என்று அவர்கள் என்னிடம் கூறிவிட்டு அறைக்குள் போய்விட்டார்கள்.   
 
"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வா ரளிக்கும் மளி / குறள் 1192"  
 
அந்த தாகத்தை, ஏக்கத்தை காதலனின் / காதலியின்  பிரிவின் ஏக்கத்திற்கு வள்ளுவர் சொல்லுகிறார்.  ஆமாம் விடிந்தால் நான் அங்கிருந்து புறப்படவேண்டும். அப்ப தான் எனக்கு ஞாபகம் வந்தது அவளின் தொலைபேசி இலக்கம் நான் இன்னும் கேட்கவில்லை என்று. அவள் இப்ப உள்ளே போய்விட்டாள். பரவாயில்லை விடியட்டும் என்று காத்திருந்தேன். ஆனால் அவள் விடிந்தும் அவள் என் முன்னால் வரவேயில்லை! நான் அவளின் பெற்றோரிடம் விடை பெற்று வெளிக்கிடும் பொழுது, அவள் அறையின் கதவால் எட்டிப்பார்த்து , கையால் , கண்ணால், கொஞ்சம் வருத்தத்துடன் விடை தந்தாள். அப்ப தான் அவளின் அம்மா என்னிடம் சொன்னார், அவள் மழையில் நனைந்தலால், நல்ல காச்சலும் தலையிடியும் என்று. உடனே அதை சாட்டாக வைத்து, அவள் அருகில் சென்று வருத்தம் விசாரித்தேன். அப்படியே என் தொலை பேசி இலக்கத்தையும் மெல்ல கையில் திணித்தேன். அவள் அதை பெற்றால் என்றாலும், திறந்து பார்க்கவில்லை, ஒருவேளை பெற்றோர் அருகில் இருப்பதால் இருக்கலாம், ஆனால் அவள் கண்கள் தூறல் பெய்தது
 
நானும் வானம் பார்த்த பூமியாக, அவளின் முகத்தை பார்த்தபடி, அது விரைவில் காதல் மழை பொழியவேண்டும் என்ற ஏக்கத்துடனும், நாளை மே முதலாம் திகதி, தொழிலாளர், விவசாயிகளின் நாள். இவளின் குடும்பம் போன்ற பல விவசாயிகளுக்கு சரியான நீர் வசதிகள் மற்றும் பண்ணையாருக்கு பொருத்தமான மேச்சல் நிலங்கள், பாரபட்சம் இன்றி, அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் மே தினத்தில் வைக்கவேண்டும் என்ற சிந்தனையுடனும் நான் அங்கிருந்து புறப்பட்டேன்!! 
     
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
யாழ்ப்பாணம்]   
332876200_740231584348003_8272922287376668596_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=f7K0nITxzkEQ7kNvgHsmCje&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCgidE4VIVN3Ui-sHpBJGev9U3g1Fg5B-nqu8kVpXY3zg&oe=6636CC04 332943094_613335260620584_8655555866809647919_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1ZGHoLxGwcUQ7kNvgFIfA97&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCKdcBImqUEKAA666sv1aZWS3IqnXlS7a3rK9c2OCZIng&oe=6636AFF5 332953749_1399602567539293_110278082171074287_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=mO1U15LVbqkQ7kNvgFBA8BJ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB0eZ-Kg6Ex-qye8-YM0gtLyXqDg5KDU9o_tRlxn8HdgQ&oe=6636D2BD 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.