Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களரை நடுங்க வைக்கும் புலிகளின் நவீன ஆயுதங்கள் -தென் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களரை நடுங்க வைக்கும் புலிகளின் நவீன ஆயுதங்கள்- சத்திரியன்

இலங்கை இராணுவத்துக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களை புதிது புதிதாக அறிமுகப் படுத்தி வருகின்றனர். அரசபடைகளுக்கு முன்னறிமுகம் இல்லாத ஆயுதங்களைக் கூடப் புலிகள் தற்போது பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு, வெருகல் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலின் போது தெர்மோபெரிக் (Thermobaric) றொக்கட் லோஞ்சர் ஒன்றைக் கைப்பற்றி யிருப்பதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

தெர்மோபெரிக் என்பது ஓர் அபாயகரமான போராயுதமாகும். பதுங்கு குழிகள் அல்லது கவசவாகனங்களின் மீது ஏவப்படுகின்றபோது உயர் அழுத்த வெப்பத்தை ஏற்படுத்துவதுடன் காற்றில் உள்ள உயிர்க்காற்றினை இது உறிஞ்சிக்கொள்ளும். இதனால் குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் சுவாசிக்கமுடியாமலும் அதிக வெப்பத்தின் தாக்கத்தினாலும் உயிரிழக்க நேரிடும்.

இரசாயன ஆயுதங்களின் வகையைச் சேர்ந்ததாகவே இவற்றைப் பல நாடுகள் பட்டியலிட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தெர்மோபெரிக் ஆயுதங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அபாயகரமான இந்தவகைப் போராயுங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வாங்கியுள்ளது. 2001 ஆம் ஆண்டு சுமார் ஆயிரம் தெர்மோபெரிக்றொக்கட் லோஞ்சர்களை இலங்கை அரசு கொள்வனவு செய்தது. இது பலத்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

கடந்த 31 ஆம் திகதி வெருகலில் படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதம் இந்தவகையினது என்றுதான் படை உயரதிகாரிகள் கருதியிருந்தனர். ஆனால் சில நாட்களின் பின்னர் நடத்தப் பட்ட பரிசோதனைகளின் போது அது தெர்மோபெரிக் ஆயுதம் அல்ல என்பது உறுதியானது.

சீனத் தயாரிப்பான பி எவ் - 89 (PF - 89) என்ற பெயரிலான கவசவாகனங்களை யும் பதுங்குகுழிகளையும் தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும் றொக்கட் லோஞ்சர் தான் அதுவெனப் படைத்தரப்பு கண்டறிந்துள்ளது. இதை படைத்தரப்பு முன்னர் பார்க்கக் கூட இல்லை என்பது தான் முக்கியமானது.

1985ஆம் ஆண்டு அச்சுவேலியில் புலிகளின் ஆயுதக்கிடங்கு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டபோதுதான் புலிகளிடம் பல புதிய ஆயுதங்கள் இருக்கின்றன என்ற அரசபடைகளுக்கு தெரியவந்தது. எம்-16, ஆர் பி ஜி போன்றவற்றை மட்டுமன்றி பல்குழல் பீரங்கிகளைக் கூட இலங்கைப் போர்க்களத்தில் முதலில் அறிமுகப்படுத்தி யது புலிகள் தான்.

வெருகலில் கண்டுபிடிக்கப்பட்டபி எவ் - 89 றொக்கட் லோஞ்சர் இரண்டாவது தலைமுறை கவச எதிர்ப்பு ஆயுதங்களில் ஆகப் பிந்தியதும் நவீனமானதுமாகும். இ,லகு கவச எதிர்ப்பு ஆயுதங்களில் (light anti-tank weapon - LAW) சோவியத் தயாரிப்பான ஆர் பி ஜி - 7 உலகில் மிகப் பிரபலமானது. இன்றும் கூட இது பல நாடுகளின் பிரதான இலகு கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறாக 1989 ஆம் ஆண்டில் பி எவ்-89 அறிமுகப்படுத்தப்பட்டது. 1993இல் சீன இராணுவத்தின் பயன்பாட்டுக்கு இந்த ஆயுதம் வந்து விட்டது.

மிகவும் இலகுவான இந்த கவச எதிர்ப்பு ஆயுதம் 80 மி.மீ குழல் வாய் விட்டத்தைக் கொண்டது ரி-69 மற்றும் ஆர் பி ஜி-7 என்பன 40 மி.மீ குழல் விட்டத்தைக் கொண்டவை.

1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை 5 ரகங்களில் வெவ்வேறு நோக்கங் களுக்காக இது அபிவிருத்தி செய்யப் பட்டுள்ளது.

900 மி.மீ நீளமுடைய பி.எவ்-89 ஆகக்கூடியது 200 மீற்றர் தொலைவில் உள்ள 180 மி.மீ கனமுடைய இரும்புக் கவசங்களை தகர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. 1.85 கிலோ கிராம் எடையுள்ள குண்டுத் தலையைக் கொண்ட இந்த ஆயுதத்தின் மொத்த எடை வெறும் 3.7 கிலோ மட்டும் தான்.

மிகவும் இலகுவாகக் கொண்டு செல்லவும் சேமித்து வைக்கக் கூடியதுமான இந்த ஆயுதத்தை புலிகள் ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியுள்ள போதும் அரச படைகள் இப்போது தான் முதல் முறையாகப் பார்த்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. புலிகளுக்கு பெருமளவு நவீன ஆயுதங்கள் வெளிநாட்டு ஆயுதச் சந்தைகளில் இருந்து கிடைத்து வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகப் பிந்திய கவச எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட நவீன ஆயுதங்களைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து தருவித்து வரும் நிலையில். இவை புலிகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்ற குழப்பமும் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சீனத் தயாரிப்பான இந்த ஆயுதம் இலகுவில் கறுப்புச் சந்தைக்கு வர வாய்ப்பில்லை.

குடும்பிமலைக் காட்டில் புலிகளிடம் இருந்து படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படும் 107 மி. மீ பல்குழல் பீரங்கி ஈரானியத் தயாரிப்பென அரசு கூறியிருந் தது. இது புலிகளுக்கு எவ்வாறு கிடைத்த தென்ற ஆய்வில் அதிகம் ஈடுபடவில்லை ஈரான், இலங்கையின் ஒரு நட்பு நாடு. சீனாவும் இலங்கைக்கு பெருமளவு ஆயுத தளவாடங்களை வழங்கி வரும் நட்பு நாடுதான்.

இந்த நிலையில் நட்பு நாடுகளின் ஆயுதங்கள் - அதுவும் தம்மிடம் கூட இல் லாத நவீன ஆயுதங்கள் புலிகளுக்கு கிடைத்து வருவதையிட்டு அரசாங்கம் கவலை கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இதனிடையே குடும்பிமலைக் காட்டில் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணையொன்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளி யிடப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஏவுகணை நஆலி14 ஏதஊஙஒக லி9ஃ34 நற்ழ்ங்ப்ஹலி3 வகையைச் சேர்ந்தது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவும் இலங்கைக்கு நெருக்கமான சோவியத் தயாரிப்புத் தான்.

புலிகளிடம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஏவுகணைகள் இருக்க லாம் என்று கருதப்படுகின்ற போதும் அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை யென்பது உறுதி செய்யப்படவில்லை

புலிகளிடம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஏவுகணைகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதும் அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவையென்பது உறுதி செய்யப்படவில்லை.

தற்போது உண்மையாகவே ஏவுகணை கைப்பற்றப்பட்டிருந்தால் அது தொடர்பாக இராணுவத்துக்கு இருந்து வந்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்ட்டிருக்கும். புலிகளிடம் இருந்து நிலங்களை மீட்டு விட்டதாகவும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வந்த ஆயுதங்களின் விநியோகத் தைத் தடுத்து விட்டதாகவும் சொல்லி வந்த படைத்தரப்பு இப்போது பெருமளவு ஆயுங்களை கைப்பற்றிவிட்டதாக கூறத் தொடங்கியுள்ளது.

இதை புலிகளின் ஒரு பலவீனமாகக் காண்பிக்க முற்பட்டாலும் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருகிறதென்ற உண்மையை மறுக்க முடியாத நிலைதான் நீடிக்கிறது

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.