Jump to content

தேர்தலுக்குத் தயார், சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை - பஷில் ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

11 MAY, 2024 | 01:02 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்திய  மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார். ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) தேர்தல் கண்காணிப்பு மையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயார் இருப்பினும்  சிறந்த வேட்பாளர் ஒருவர் கிடைக்கவில்லை. எமது தரப்பில் தாமதம் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல விடயங்கள் பேசப்பட்டன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். இந்திய தேர்தலுக்கு பின்னர் அதாவது எதிர்வரும் ஜூன் மாதம்  18 ஆம் திகதிக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். வெகுவிரைவில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல்  நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கட்சியை பலப்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பிட்டார்கள். அதற்கமைய நாமல் ராஜபக்ஷவை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாகவும், பிறிதொரு  தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிடுவது பொய்யானது. கட்சியின் சகல உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அரசியல் ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பொதுஜன பெரமுனவின் நிலையை விளங்கிக் கொள்ளலாம். மக்களாணைக்கு செல்வதற்கு நாங்கள் அச்சமடையவில்லை. நாட்டுக்காக எவருடனும் கைகோர்க்கவும், எத்தரப்பினரையும் விட்டு விலகுவதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/183195

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார்

large.IMG_6466.jpeg.dfa3f40d6a03e29ce8a7

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.