Jump to content

இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக நான்கு இலங்கையர்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள்.

குறுகிய காலத்தில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின்  தலைவர்  சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (22) இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் புலனாய்வு  பிரிவினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் சகல தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில்  அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத செயற்பாடுகளிலும்,குண்டுத்தாக்குதல் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒத்திகையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகாக்களை பார்வையிடுவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கும் சென்றிருந்தார்கள்.

இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன் ,மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர்.இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள்.

 இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல்  இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றார்.

இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தாங்கள் இலங்கை வாழ் இந்துக்களை இனக்கலவரங்கள் மூலமும் சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பு.. போர் மூலமும் கொன்று குவித்ததும்.. அதனை ஹிந்தியா விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்ததும்.. கூட உதவி நின்றதும்.. எந்த வகைக்குள் அடங்கும்...?! அப்ப ஏன் சொந்த நாட்டில் வாழும்.. இந்துக்கள் குறித்து இவருக்கு அக்கறை வரவில்லையாம்..?!

இவரிடம் கேள்வி கேட்க உருப்படியான தமிழர்கள் சொறிலங்கா பாராளுமன்றத்தில் இல்லை.. அல்லது தூக்கமோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.