Jump to content

ஜனாதிபதி ரணில் அரசியலமைப்பை மீறியுள்ளார் - கிளிநொச்சியில் வைத்து நேரடியாகவே குற்றம் சாட்டினார் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

26 MAY, 2024 | 02:59 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்கு காணிகளை கையளித்து அதன் முழு உரித்தையும் அவர்களுக்கு வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர் அரசியலமைப்பை மீறி காணி அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு அந்த காணி உரிமைகளை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது. எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி, உங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை. இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும்.

நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது. அரசியலமைப்பில் இருந்தும் அமுல்படுத்தப்படவில்லை. காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேவேளை மாகாணத்திற்கு உள்ள காணி அதிகாரத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த சுமந்திரன் எம்.பி அங்கு கருத்து வெளியிடும்போது மாகாண சபைகளின் அதிகாரங்களை மீளப் பெறும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதேநேரம், மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை, பாடசாலைகளை தேசிய கருத்திட்டத்துடன் இணைப்பதாக கூறி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது மாகாண சபைகளின் கீழேயே சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒருகையால் வழங்குவது போன்று செயற்பட்டுவிட்டு மறுபக்கத்தில் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க் கூடாது” என்றார்.

https://www.virakesari.lk/article/184505

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நட்பு என்றால்  இதுதான் நட்பு..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
    • இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்; அருட்பணி அருட்செல்வன்! 17 JUN, 2024 | 02:25 PM ( எம்.நியூட்டன்) இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும், தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன இனம் இல்லை என அருட்பணி அருட்செல்வன் தெரிவித்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா வின் 17ஆவது சர்வதேச மாநாடு  அண்மையில்  யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது இந் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,   நான் தமிழன், எங்கள் மொழி தமிழ்மொழி, தமிழ் இனத்தவன் என்கின்ற மாபெரும் சமூகத்திலே நாங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றோம். தமிழ் என்று சொல்லும்போது மொழியின் தொன்மை, பண்பாட்டு சிறப்புகள் நாங்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் தமிழனாக இந்த உலகிலே  பூமி பந்தில் பிறந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் . இங்கு பல மொழியியலாளர்கள், ஆராட்சியாளர்கள் கூட தமிழ் மொழியில் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையிலே எம் இனம் தோற்றும் போன இனமாக பேரினிலே போராட்டத்திலே  அழிவுகளைச் சந்தித்து நாங்கள் ஒடுக்கப்பட்ட தோற்றுப்போன விழிம்பிலே இருக்கிற இனமாக பார்க்கப்பட்டாலும், கருதப்பட்டாலும் நாங்கள் பண்பாடு சார்ந்த வாழ்வியலில் தோற்றுப் போன மக்கள் இனம் இல்லை மொழியினுடைய விசாலமான செழுமை சார்ந்து தோற்றுப்போன இனம் இல்லை அதனால்  எங்களுக்கென்று கடமை பொறுப்பு இன்றும் அதிகமாகவே இருக்கின்றது.   எங்களுக்குள்  தமிழ் அறிஞர்கள் இருக்கின்றோம் , தமிழ் ஆராச்சியாளர்களாக இருக்கின்றோம் பெருமைக்குரிய விடையம் ஆனால் அதனையும் கடந்து எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் உணர்வு அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.  அதுதான் இன்றைய  காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசர அழைப்பாகவும் இருக்கின்றது தமிழன் என்று பேசலாம் ஆனால் தமிழர் உணர்வு  என்கின்ற அந்த உள் உணர்வு தீயாகப் பற்றி எரியவேண்டும் தமிழன் என்று  நாங்கள் பெரியளவில் பேசி தம்பட்டம் அடிக்கக முடியாத நிலைக்கு எங்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆனாலும் ஏங்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்களிடம் இருக்கின்ற அந்த தமிழ் எண்ணங்களை தமிழ் சார்ந்த விழுமியங்களை தமிழ் சார்ந்த பண்பாடுகளை நாகரீகங்களை யாராலும  அழித்து விடமுடியாது ஆகவே இந்த பண்பாடு சிந்திக்க தோன்றுகின்றது.   ஒரு கட்டத்திலே தமிழ் பண்பாடுகளை கட்டிக் காக்கின்ற பாதுகாவலர்களாக இருந்தாலும் எங்களுக்கு என்று  தமிழ் உணர்வாளர்கள்  இருக்கின்ற பண்பாடு இருக்கின்றது என்கின்ற எண்ணங்களில் இருந்து ஒரு போது விலக முடியாது .  எங்களின் பண்பாட்டை எண்ணெய்யும் தண்ணீராயும் கலக்கமுடியாதே அதே போன்று தாமரை இதழிலே விழுகின்ற தண்ணீர் துளி அதனனூடு சேர்ந்து கொள்ளாதோ ஓடும் புளியம் பழமும் போன்று இருப்பது போன்று நாங்கள் தனித்துவமான அதற்காககத்தான் நாங்கள் இந்தப் பண்பாட்டை எங்களின் தமிழ் மொழியின் சிறப்புக்களை நாங்கள் கண்டு பிடிக்க முனைவது போன்று இளைய தலைமுறையினரை    பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்  என்றார். https://www.virakesari.lk/article/186270
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.