Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன்

Published By: RAJEEBAN   27 MAY, 2024 | 04:15 PM

image

தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும்  இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில்  பேராசிரியர் பத்மநாதன்;  ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் அவர்கள் தமிழ்மொழியில் பேசினார்கள் என்பதை பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் இந்த நூலை ஆங்கிலத்திலும் கட்டாயமாக சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டும்.

இந்த நூல் நிச்சயமாக சிங்களத்தில் சென்றடையவேண்டும்.

பேராசிரியர் மணல்திட்டில் இருந்திருந்தால்  அவரையும் தொல்பொருளாக்கி பெயரை மாற்றியிருக்ககூடிய காலம் இது.

இலங்கையில் சைவத்தின் தொன்மை தமிழின் தொன்மை நாகவழிபாட்டின் தொன்மை ஆகியவற்றை இந்த நூல் சான்றுபடுத்துகின்றது.

இந்த நூல் நாகர்கள் பற்றியது  வடபகுதி நாகதீவு நாகநாடு என அழைக்கப்படுவது எங்களிற்கு தெரியும்.

யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள். இது அவர்கள் பற்றிய நூல். 

நாகர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் சான்றுரைக்கின்றது.

நாகர்கள்  தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தவில்லை, ஆனால்  அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள். இதன் மூலம் இந்த தேசத்தின் தமிழ்மொழியின் தொன்மை உறுதி செய்யப்படுகின்றது.

பேராசிரியர் பத்மநாதனின் ஒருமறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் நூல்   நாகர்கள் வடகிழக்கில் குறிப்பாக  யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது பற்றி பேசுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நாகர்கள்  பல இடங்களில் பரந்துவாழ்ந்திருக்கின்றார்கள். வடமராட்சியில் அவர்கள் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன அங்கு நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள்  இதற்கான ஆதாரங்களாக காணப்படுகின்றன.

வடமராட்சியில் கரவெட்டி, அல்வாய், உடுப்பிட்டி போன்ற இடங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளதை பேராசிரியர் தனது நூலில் முன்வைத்துள்ளார்.

தென்மராட்சியில் சாவகச்சேரியில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர் தீவுப்பகுதியிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர்.  எனது ஊரான காரைநகரில் பல இடங்களில் அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

pathmanathan.jpg

வேலணையில் வாழ்ந்துள்ளனர்.

யாழ்ப்பாண பட்டினத்தின் பல பகுதியில்  அவர்கள் வாழ்ந்துள்ளனர்

ஆனைக்கோட்டையில்  அவர்கள் பயன்படுத்திய கற்களால் செய்யப்பட்ட செம்புகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

நவாலியில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பேராசிரியரின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் நாகர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதை சொல்கின்றது.

தென்னிலங்கை வரலாற்றாசிரியர்கள் எழுதும் நூல்கள் பலவற்றில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

தமிழ்மக்களின் வரலாற்றின் தொன்மை சைவசமயத்தின் தொன்மை போன்றவை மறைக்கப்படுவதற்கு பல பேராசிரியர்கள் உதவியுள்ளனர்.

அப்போது இருந்த அரசாங்கம் இதற்கு உதவியது.

தற்போதும் இது தொடர்கின்றது.

தமிழின் தொன்மை பற்றிய இந்த நூல் நாகர்கள் யாழ்ப்பாணத்தின்  எல்லாப்பகுதிகளிலும் வாழ்ந்ததாக கூறுகின்றது.

அவர்கள் தமிழ்மொழியில் பேசியுள்ளனர்.

பிராமி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பற்றியும்  இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஈமத்தாழிகளும் காணப்பட்டமை குறித்து பேராசிரியர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

நாகர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக காணப்பட்டனர் என்கின்றார் பேராசிரியர்.

பிராகிருதமொழிப் பயன்பாடும் அவர்கள் காலத்தில் காணப்பட்டுள்ளது. அன்பளிப்புகளை வழங்குவதற்கு அவர்கள் பிராகிருதமொழியை பயன்படுத்தியுள்ளனர்.

நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாபகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் நிறுவியுள்ளது, அது முக்கியமான விடயம்.

நாகவழிபாடு யாழ்ப்பாணத்திற்கு புதிய விடயமல்ல எனது ஊரில் நாகவழிபாடு முக்கியமான விடயமாக காணப்பட்டது.

நாகவழிபாடு கொழும்பில் இல்லை.

நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல  ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் கோயில்  இதற்கான வலுவான ஆதாரம்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நாகவழிபாடு காணப்பட்டது என்பதை  பேராசிரியர் நெறிப்படுத்துகின்றார்.

யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் நாகர் கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன.

அன்று தமிழ்மொழி பேசப்பட்டுள்ள நாகர் வழிபாடு சைவ வழிபாடு என்பதை பேராசிரியர் ஆதாரத்துடன் நிறுவுகின்றார்.

தென்பகுதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இந்த நாட்டில் போர்த்துக்கீசரின் வருகையின் பின்னரே யாழ்ப்பாண வரலாறு ஆரம்பமானது என என்னிடம் தெரிவித்தார்.

நான்  அவருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டேன்.

எனது சொந்த ஊரில் காணப்பட்ட ஐயனார் கோயிலை இடித்தே போர்த்துக்கீசர் காரைநகர் கடற்கோட்டையை கட்டினார்கள் என  தெரிவித்தேன்.

இன்றும் கொழும்பில் யாழ்ப்பாணத்தமிழர் ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் வந்தவர்கள் என தெரிவிக்கும் கல்விமான்கள் உள்ளனர்.

அவர்கள் வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர்.

பேராசிரியர் இதனை முறியடிக்கும் விதத்தில் தமிழின் தொன்மையை சைநெறியின் தொன்மையை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றார்.

இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள்  என்பதையும் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நிலங்களை அது சார்ந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினார்கள். விவசாயத்தில் ஈடுபட்டார்கள், வயல்களை அமைத்தார்கள்.

எந்த இடத்தில் குளங்களை கிணறுகளை அமைக்கவேண்டும் என நாகர்கள் மிக நுட்பமாக திட்டமிட்டார்கள்.

இது தவிர அவர்கள் மட்கல உபயோகத்தில் ஈடுபட்டார்கள், உலோகங்களை தயாரித்தார்கள் மந்தை மேய்ச்சலில் ஈடுபட்டார்கள்.

வடக்கில் மேய்ச்சல் தரைகள் குறைவு, அவர்கள் விவசாயத்திற்கு தேவையான மந்தைகளை வளர்த்தார்கள்.

நாகர்கள் கடல் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். படகுகள் தோணிகள் போன்றவற்றை உருவாக்கினார்கள் நிலவளங்களை போல கடல்வளங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் முன்வைத்துள்ளார்.

அவர்களின் இந்த கட்டமைபே தற்போதைய யாழ்ப்பாணம் .

நாகர்களின் காலம் தன்னிறைவு பொருளாதாரம் காலம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

30 வருடங்களிற்கு முன்னர் நாங்கள்  யுத்தத்தின் போது கடும் பஞ்சத்திலிருந்து தப்பினோம். வேறுநாடுகள் என்றால் பஞ்சத்தில் சிக்குண்டிருக்கும் ஆனால் எங்கள் மக்கள் பஞ்சத்திலிருந்து தப்பினார்கள் என்றால் இதற்கு நாகர்கள் அறிமுகப்படுத்திய கட்டியெழுப்பிய பொருளாதாரமே காரணம்.

நாகர்களின் உட்கட்டமைப்பு பற்றியும் பேராசிரியரின் நூல் பேசுகின்றது.

நாகர்களின் கட்டிடங்களில் தூண்கற்கல் முக்கியமானவை வட்டக்கல் என்பது மற்றுமொரு முக்கிய அம்சம்.

பௌத்த மதத்தினர் சந்திரவட்டக்கல்லை வைத்து வரலாற்றை திரிபுபடுத்த முயலும்போது நாகர் காலத்து வட்டக்கல் குறித்த விடயங்களை பேராசிரியர் முன்வைத்துள்ளமை  குறிப்பிடத்தக்க விடயம்.

நாகர்கள் ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டனர் என பேராசிரியர் தனது நூலில் தெரிவிக்கின்றார்.

பிதிர் வழிபாடு என்பது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட விடயம்  திருமண சடங்கின் ஆரம்பத்திலும் பிதிர்வழிபாட்டில் ஈடுபட்டனர், இன்று பலருக்கு தங்கள் முன்னோர்களின் பெயர்கள் கூட தெரியாத நிலை காணப்படுகின்றது.

தென்னிலங்கை அரசியல் எங்கள்  இருப்பை கேள்விக்கு உட்படுத்துகின்றது, தமிழின் சைவசமயத்தின் தொன்மையை  அவர்கள்  ஏற்க மறுக்கின்றனர்.

பேராசிரியரின் இந்த நூல் அவர்கள் உண்மையை புரிந்துகொள்ள உதவும்.

இனப்பிரச்சினை தீர்வினை கோரும் நாங்கள் கேட்பது எல்லாம் நியாயமானது என ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும்.

இந்த நூல் தென்பகுதிக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எங்களின் நியாயபாட்டினை முன்வைக்கின்றது.

இந்த நூலை வாசித்து முடித்தபோது எங்கள் ஊரில்  எனது வீட்டிற்கு அருகில்  உள்ள நாகர்கோயில் நினைவிற்கு வந்தது.  கோயிலை சுற்றி குளம் வயல்கள் காணப்படுகின்றன.

இந்த நூலை வாசிக்கும் அனைவரும் தற்போதை சூழ்நிலையில் இந்த நூலை எழுதியமைக்காக பேராசிரியர் பத்மநாதனிற்கு நன்றி தெரிவிப்பார்கள்.

https://www.virakesari.lk/article/184618

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்களுடன் சேர்ந்து எங்கள் இருப்புகளை, குடித்தொகையை மாற்றியமைக்க முயல்கின்றனர் - பேராசிரியர் பத்மநாதன்

Published By: RAJEEBAN   27 MAY, 2024 | 06:02 PM

image

நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்கள், செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து அவர்கள் எங்கள் இருப்புகளை குடித்தொகையை மாற்றியமைப்பதற்கும் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பேராசிரியர் பத்மநாதன் மீண்டும் எங்களின் தேசிய உரிமையை எழுச்சியை வளர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அத்தோடு அவர்,

"நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது. மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையின்போது மேலும் கூறுகையில்,

pathmanathan.jpg

"தமிழ் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமான மொழிவழக்கும் இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது.

இலங்கை தமிழர்களினதும் சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறை சந்ததியினரே.

19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்கள தலைவர்கள், படித்தவர்கள், ஸ்டேட் கவுன்சிலில் இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், தமிழர்கள் ஒரு தேசிய இனம் நாட்டில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள்.

நாங்கள் என்ன செய்தோம் எட்டியும் பார்க்கவில்லை.

இப்போது என்ன சொல்கின்றோம்... ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளது என்கின்றோம்.

இதனை நான் அவருக்கு பிரச்சாரமாக சொல்லவில்லை... உண்மையை சொல்லவேண்டும்.

எங்கள் பிரதிநிதிகள் பௌத்த விகாராதிபதியொருவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டவேளை அவர் அந்த திணைக்கள தலைவருக்கு சொன்னார், எனக்கு நீர் இந்த வரலாறு படிப்பிக்க தேவையில்லை, புராதன காலத்தில் வடகிழக்கில் உள்ள பௌத்த நிறுவனங்களின் நிலங்கள் எல்லாம் தமிழருக்கு சொந்தமானவை. அந்தளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இனவாதிகளை பற்றி நான் சொல்லவில்லை. இவர் இனவாதம் பேசாதவர். ஆனால், சில விடயங்களை செய்வதற்கு துணிச்சல் அற்றவர்; ஆற்றல் அற்றவர்.

எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய இலங்கை உடன்படிக்கையில் சொல்லப்பட்டவற்றை மீறிவிட்டனர், ஜனாதிபதியை கேளாமல் நீதிமன்றத்தை நிராகரித்தும் அவர்கள் பல விடயங்களை செய்கின்றார்கள்.

எங்கட ஆட்கள் 15 இலட்சம் பேர்தான் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது 17 கட்சி மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சி. 

எங்கே போகப்போகின்றோம்!

நாங்கள் தற்போது என்ன செய்யவேண்டும் என்றால், இவற்றை பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும்.

அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடி பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்கவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும், இவ்வாறான நூல்களை எல்லாம் மக்களுக்கு வழங்கி விளங்கப்படுத்தி மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும்.

தேசிய உணர்ச்சி எனும்போது நான் அரசியல் பேசுகின்றேன் என எவரும் சொல்லக்கூடாது.

சர்வதேச ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும் தமிழ் மக்கள் அவர்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம்.

இது பற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதை சொல்வதற்கு பயப்படக்கூடாது.

நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும்.

ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

எந்த ஒரு நாடும் ஆதரிக்காது.

இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது.

மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம். ஏனென்றால், நிலைமை ஒன்றும் நடக்காவிட்டால் 22ஆம் ஆண்டை பற்றித்தான் சிந்திக்கவேண்டும்" என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/184634

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.