Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருமதி ரூபவதி நடராஜா, எரிக்கும் பொழுது அங்கு கடமையாற்றிய முன்னைய தலைமை நூலகர், யாழ்ப்பாணம்  பொது நூலகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய  கவிஞர். எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர் - 
 
இருவரும் யாழ் நூலக எரிப்பு பற்றி 
 
தமிழிலும் [யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்]  
 
சிங்களத்திலும் [“தீப்பற்றிய சிறகுகள்", கவிதை தொகுப்பு - இதன் தமிழாக்கம் விரைவில் வரவுள்ளது] 
 
எழுதியுள்ளார்கள். வடக்கினதும் தெற்கினதும் ஆதங்கம் இங்கு தென்படலாம் என்று எண்ணுகிறேன்?, 
 
என்றாலும் நான் சிங்களம் தெரியாததால், ரூபவதி நடராஜாவின் புத்தகம் மட்டுமே வாசித்து உள்ளேன், தமிழாக்கம் வந்த பின்பே சந்தரெசி சுதுதுங்கவின் கவிதையையும் வாசிப்பேன்.
 
திருமதி ரூபவதி நடராஜா வை அவரது மகனின் வீட்டில் சந்தித்து, புத்தகம் வாங்கும் பொழுது எடுத்தப்படம் கீழே இணைத்துள்ளேன் 
 
 
என் எண்ணத்தில்  "யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு" ஒரு கட்டுரையாக கீழே சமர்ப்பிக்கிறேன்.  
................................................................................................................................................................................
 
"யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு" 
 
 
'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 
 
'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'
 
யாழ்ப்பாண பொது நூலகம் 1933 ம் ஆண்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, பல காலங்களை கட்டம் கட்டமாய் கடந்து ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து உள்ளூர் குடிமக்களின் பல உதவிகளுடன் காலப்போக்கில், ஒரு முழுமையான நூலகமாக மாறியது. இந்த நூலகம் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் எழுதப்பட்ட காப்பகப் பொருட்களின் களஞ்சியமாகவும்,  முக்கியமான வரலாற்று ஆவணங்களின் அசல் பிரதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாண தீபகற்பத்தில் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பொக்கிஷமாக மாறியது. இதனால் இது ஈழத்தமிழர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. 
 
பல நாட்டு மக்களின் கண்ணை கவர்ந்த கட்டிடக்கலை அமைப்புடன் ஆசியாவிலேயே பிரமாண்டமாக வளர்ந்து அழகான காட்சி தந்தது. 
தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, விஞ்ஞானம், வைத்தியம், கலை, கலாச்சாரம் என்று மிகப் பெரியதொரு தமிழ் பொக்கிஷமாக, தமிழ் களஞ்சியமாக விளங்கிய தமிழ் பாரம்பரியத்தின் முத்து என்று புகழ்பெற்ற தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. 
 
 
97,000 க்கும் மேற்பட்ட மிக மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தமிழ் பனை ஓலைகள், கையெழுத்துப் பிரதிகள், காகிதத்தோல்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் இன்னும் பல அரிய தமிழனித்தின் தனித்துவமான நூல்கள் எரித்து அழிக்கப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாண வைபாவாமாலை  (யாழ்ப்பாணத்தின் வரலாறு) போன்ற மிக முக்கியமான வரலாற்று நூல்கள் நூலகத்தில் எரியூட்டப்பட்டது.  
 
மே 31 ம் திகதியில் இருந்து ஜூன் 1 ம் திகதி வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்து சாம்பலாகிப் போனது தமிழினத்தின் வரலாற்று சரித்திரம். 
 
இலங்கை யு.என்.பி ஆட்சிக்காலத்தில் மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல்கள் நடை பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி அது, முன்னதாக,  மே 31 ம் திகதி, TULF (தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி) நடத்திய பேரணியில் மூன்று சிங்கள காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 
 
அன்றிரவு அரச அதிகாரிகளும் காவல்துறையும் துணைப்படைகளும் மூன்று நாட்கள் நீடித்த ஒரு படுகொலையைத் தொடங்கினர். யாழ்ப்பாண நகரம் முழுவதும் உள்ள வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்டது, TULF கட்சியின் தலைமை அலுவலகம் அழிக்கப்பட்டது, ஈழநாடு பத்திரிகை அலுவலகங்கள் அழித்து ஒழிக்கப்பட்டது, கோயில்கள் அழிக்கப்பட்டது, அதுமட்டும் இல்லாமல் பல தமிழர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டது.  
 
நான்சி முரே, (Nancy Murray) என்னும் ஒரு மேற்கத்திய எழுத்தாளர், தனது கட்டுரையில் 
 
"அந்த நேரத்தில் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துணைப்படைகள்,  குண்டர்கள் என பலர் இந்த அழிவுச் செயல்களைச் செய்தார்கள்”
 
என்று எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி யாழ்ப்பாண நகரில் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குறிப்பாக சிங்கள அமைச்சரவை அமைச்சர்களான சிரில் மேத்யூ மற்றும் காமினி திசானாயக்கே ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
 
அமெரிக்காவின் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் (Amnesty International) 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கான உண்மை கண்டறியும் பணியின் தலைவருமான ஆர்வில் எச். ஷெல் (Orville H. Schell) கருத்துப்படி, அந்த நேரத்தில் யு.என்.பி அரசாங்கம் மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த கொலைகளுக்கு பொறுப்பேற்க ஒரு சுயாதீன விசாரணையை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்றும், மற்றும் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
தமிழ் இனம் கட்டி உருவாக்கிய ஒரு அழகிய ஒரு அறிவு கூட்டை எரியூட்டியது மட்டுமன்றி இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்த நூலகத்தை சிங்கள அரசு கண்டும் காணாமலும் கைவிட்ட தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது தான் மிகவும் வேதனைக்குரிய விடயம்.
 
நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்து போயும், ஆறாத வடுக்களுடனும்  தீராத தீக்காயங்களுடனும்  தமிழனித்தின் சாட்சியமாய் யாழ்ப்பாண பொது நூலகம் இன்றும் நீதிக்காக காத்துக்கிடக்கிறது.
 
இதே போன்ற ஒரு செயல் ஒன்றையே, மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) மாயாக்களுக்கு எதிராக செய்தார். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள்  உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். மதம் போதிக்க மதியிழந்து வெறியனாக ஒரு நாகரீகத்தையே அழித்தவர் இவர் ஆவார். 
 
வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும்  விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பி கு: இந்த நூலகம் தான் ,நான் யாழ் மத்திய கல்லூரியில் - சாதாரணம்,  உயர் வகுப்பு மற்றும் பல்கலைக்கழக விடுதலைக்காலத்தில் பாவித்த நூலகமும் ஆகும்.
 
349085752_966975771163333_3423119674078312244_n.jpg?stp=cp6_dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IPzfpzWJrv0Q7kNvgGsCniI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCqEUxG-5J5EXlW3vV7BT1zudIwiTW48KUTF2q_qsv63w&oe=665E7A2C 349372717_651457563663465_6516441615768289661_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qGWX5k3TP9cQ7kNvgEUoN-9&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC-d7UBN0SmgxCPClCxNnFbn1jV9sW1Bxsb8zdPgJm8Bw&oe=665EA006
 
263116810_10220262592937763_3493674621559616817_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=D5NvAeiCiiIQ7kNvgEQyCTe&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDEL5pGTwR1YHgPKDtBp1nGAdeG9Zvp2YbbfpcU6Bx7RQ&oe=665E8BE1 263422822_10220262597977889_5147825477277054305_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fpw8-NEhOVkQ7kNvgEjj0bx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAJbPvfOMssV1FJrIgSjWDkQFigDRaZvhqS9t7Dg90ExQ&oe=665E8366
 
 
  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.