Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01
 
 
ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை!
 
அதே நேரம் எனது கட்டுரை, கதை , கவிதைகளுக்கு, -- அதைச் சரியாக படித்து விளங்காமல், அல்லது அதற்கான தனது கருத்தை அறிவுபூர்வமாக பதியாமல், எதோ தானோ என்று ஏதேதோ அலட்டுவதை நானும் எதிர்கொண்டுள்ளேன். கேட்கப்பட்ட  கேள்விக்கு அல்லது கொடுக்கப்பட்ட பதிலுக்கு விடையை அல்லது தங்கள் கருத்துக்களை பதியாமல், தேவையற்ற, பொருத்தமற்ற வாதங்களை பதிவதை அண்மையில் கூட அனுபவித்தேன். அதனால் தான் என் மனதில் தோன்றுவதை இங்கு பதிவிடுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன்.
 
முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
 
பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம்.
 
அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர்.
 
விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதைச்  சொல்லலாம்.
 
திருக்குறளில், அதிகாரம்: கல்வி குறள் எண்:m391 இல்
 
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
 
என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்று தான், வள்ளுவர் கூறியிருக்கிறார். எனவே எவருக்கும் எதைக் கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மை தான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளு வரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
 
பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப் பாலை 169-171,
 
"பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.]
 
என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவ சமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம்.
 
என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும்.
 
உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம். பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth, he that reapeth].
 
எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish].
 
ஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக,
 
வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும்.
வாதங்களும் அப்படியே . அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும்.
 
 
"வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ"
 
என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது
 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 02 தொடரும்
No photo description available. 448126281_10225321629650519_5883405233702927156_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Zyyo4UXuy-EQ7kNvgF-_mBG&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDzCYbhQeu0FS92BC0ojsjXp5A7sWuqqs4rWWnon9F1Tg&oe=666BDEA0
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02
 
 
நாம் முதலில் கருத்தில் கொண்ட இரு வெவ்வேறு சூழ்நிலைகளில், முதலாவது மாதிரியை கவனத்தில் எடுத்தால், அதில் பொதுவாக எல்லோரும் ஒரே மொழி பேசும் இனத்தவர்கள், ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம், வாழ்க்கை முறை அல்லது பாணி பலதரப்பட்டவை. எனவே இந்த வேறுபாடுகளை எமது ஆய்விற்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
 
இலங்கையில் ஏற்பட்ட போர் சூழலில் இளம் பிராயத்தனர் பலர் தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தி, தமது பாதுகாப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுமட்டும் அல்ல வெளிநாடு வந்த பின்பும் தமது வாழ்வை நிலைநிறுத்தவும், தம்மை அனுப்ப பெற்றோர்கள் செலவழித்த பணத்தை ஈடு செய்யவும் மற்றும் பல காரணங்களால், அவர்கள் உடனடியாக வேலைக்கு போகவேண்டிய நிர்ப்பந்தமும் வந்தது.
 
அதனால் இங்கும் படிப்பை அவர்கள் தொடர முடியவில்லை. இன்று அவர்கள் வசதிகள், பணங்கள், செல்வாக்குகள் போன்றவைகளை பொறுத்தவரையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையின் தாக்கத்தாலும், பெற்றோர்கள் அல்லது பாது காவலர்கள் இல்லாமல் வாழ்ந்த காரணங்களாலும், மற்றும் பிற காரணிகளாலும், செயற்கையாக பிறரினும் விஞ்சி இருக்கும் நிலை ஒன்றில் [an artificial bubble of superiority] தமது வாழ்வை அமைத்து விட்டார்கள். அது மட்டும் அல்ல நிறைய விடயங்களை தமக்கு எட்டியவாறு கோட்பாடு செய்து, அதை நீங்கள் நம்ப வேண்டும் என உங்களுக்கு தமது உரையாடலில் அல்லது விவாதத்தில் புகுத்துகிறார்கள்.
 
என்றாலும் இவைகளை அவர்கள் பொதுவாக புத்தக வாயிலாகவோ [consult a good book] அல்லது மற்றவர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமாகவோ [constructive feedback] சரிபார்ப்பதில்லை. மற்றது எப்படி ஒரு ஆக்கபூர்வமான உரையாடலில் அல்லது சிந்தனையை தூண்டக்கூடிய விவாதத்தில் [intellectual conversation, nor a thoughtful debate ] ஈடுபடுவது என்பது அவர்களுக்கு தெரியாததும் ஒரு குறையாகும். இவர்களின் நிலையை பார்க்கும் பொழுது கிரேக்கத் தத்துவஞானியான பிளேட்டோ [Plato]  "சொல்லுவதற்கு தங்களிடம் சில இருப்பதால் அறிஞர்கள் சொல்லுகிறார்கள், ஆனால் முட்டாள்கள் தாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதால் சொல்கிறார்கள்" [Wise men speak because they have something to say; Fools because they have to say something] என கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல நிறை குடம் தளும்பாது. குறை குடம் கூத்தாடும் [filled vessels doesn't make sound, empty vessel does] என்ற தமிழ்ப் பழமொழியையும் இங்கு சேர்க்கலாம்.
 
இவை [மேலே கூறியவை] முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் பொது அறிவாளிகள் என்றும் சொல்ல முடியாது.
 
உதாரணமாக சிலர் ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy] உள்ளத்தில் கொண்டுள்ளார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை படித்துள்ளார்கள், அனால் அதில் அறிவியல் மன நிலை [scientific temper] இல்லாமல். உதாரணமாக, வானியலைப் பற்றி படிப்பிக்கும் ஆசிரியர் அதை வகுப்பு அறையோட முழுக்கு போட்டு விட்டு, சூரிய சந்திர கிரகணத்தின் போது குளத்தில் புனித நீராடுகிறார்.
 
எனினும் பொதுவாக அவர்கள் தங்கள் தங்கள் துறையில் அறிவாளிகள், அனுபவசாலிகள். அதை நாம் மறுக்கவில்லை. அத்துடன் சிலவேளை அறிவு அல்லது செல்வம் அல்லது உடல் வலு [தசை சக்தி] ஆகியவற்றுடன் அகம்பாவமும், நியாயமற்ற தன்மையும் சிலரிடம் வருகிறது [Sometimes, arrogance and unreasonableness comes with knowledge, wealth and muscle power].
 
உதாரணமாக ஒருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணும் பொழுது ,அவர் மற்றவர்களின் கருத்துக்களை, அவை நியாயபூர்வமாக இருந்தாலும், அதை ஏற்க மறுக்கிறார். "தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு" [known handful, Unknown global] என்பதை இவர்கள் உணர்வதில்லை.
 
மற்றது ஒரு கருத்து என்றும் உலகளாவிய ரீதியில் பிரபலமாக இருப்பதில்லை [never universally popular]. ஒருவருக்கு முக்கியமாக அல்லது தொடர்புடையதாக இருப்பது மற்றவருக்கு அப்படி இருக்காமல் விடலாம்.
 
உதாரணமாக மகாத்மா காந்தியைப் பற்றிய பெரும்பாலான மக்களின் நம்பிக்கையையும், ஆதாரபூர்வமான அருந்ததி ராயின் [Arundhati Roy] அண்மைய கருத்தையும் ஒப்பிடுக. [Arundhati Roy, the Booker prize winning author, has accused Mahatma Gandhi of discrimination and called for institutions bearing his name to be renamed. Speaking at Kerala University in the southern Indian city of Thiruvananthapuram, Roy, 52, described the generally accepted image of Gandhi as a lie. "It is time to unveil a few truths about a person whose doctrine of nonviolence was based on the acceptance of a most brutal social hierarchy ever known, the caste system … Do we really need to name our universities after him?" Roy said. / Mahatma Gandhi, whose views on caste have been a long-running argument among historians.]
 
மேலும், சிலர் தம் குரல் கேட்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள், அதற்கு கிடைக்கும் பொது வரவேற்பு அவர்களின் தனி மதிப்பை உயர்த்தும் என்று நம்புகிறார்கள். எனவே தம் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக மட்டும் சிலர் கதைக்கிறார்கள். ஆனால் பரந்த விடயங்களில் எல்லாம் கதைக்க முயலும் பொழுது அவையின் தரமும் குறைகிறது [the larger the quantity, the more diluted the quality].
 
பண்டைய மநு நீதி நூல் அல்லது தர்ம சாஸ்திரம், இரண்டாம் அத்தியாயத்தில், 110 ஆவது வசனத்தில் "ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்க மாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விடயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன்) போல இரு" [Unless one be asked, one must not explain (anything) to anybody, nor (must one answer) a person who asks improperly; let a wise man, though he knows (the answer), behave among men as (if he were) an idiot.] என்கிறது.
 
அதே போல பைபிளும் நீதிமொ ழிகள் 4:24 இல் "வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து" [ Put Away Perversity From Your Mouth; Keep Corrupt Talk Far From Your Lips] என்கிறது.
 
வீண் வாதம் வீண் விளைவைத் தரும். எனவே மேலே கூறியவாறு புத்திசாலித்தனமாக விலத்துவதே ஒரே வழி என்று எண்ணுகிறேன். எவ்வளவு விளக்கினாலும் விடாமல் விதண்டா வாதம் செய்பவர்கள். அவர்கள் கேள்விக்கு ஒரு முறை பதிலளிப்பதையே நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட்டதை போல கொக்கரிப்பவர்கள். இவர்களுக்கு தேவை உண்மையோ விளக்கமோ அல்ல. அவர்களின் கருத்துக்கு வெளிச்சம் மட்டுமே ஆகும்.
 
இனி நாம் இரண்டாவது மாதிரியை பார்ப்போம், இங்கு பலதரப் பட்ட இனத்தவர்கள் இருந்தாலும், அவர் பங்குபற்றிய உரையாடல் கூட்டம் அதிகமாக சக ஊழியர்களாகத்தான் இருந்திருப்பார்கள். எனவே அவர்களின் அறிவு அனுபவத்தில் ஓரளாவது ஒற்றுமை கட்டாயம் இருந்து இருக்கும், எனவே அங்கு உரையாடல் அல்லது விவாதம் அறிவு பூர்வமாக அமைய வாய்ப்புகள் அதிகம் என நாம் இலகுவாக ஊகிக்கலாம்.
 
நாம் இதுவரை அலசியத்தில் இருந்து, நாம் கற்றுக் கொண்டது பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். பேச்சினை வைத்தே ஒருவர் எப்படிப் பட்டவர் என்று கணித்துவிட இயலும். பேச்சே ஒருவரின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகிறது பணம் அல்ல என்பது ஆகும்.
 
சுருக்கமாக வாயிலிருந்து வெளிப்படாத வார்த்தைகள் விலைமதிப்பு மிக்கவை. அதனால் பேசும்போது கவனமுடன் பேசுவோம்.
 
பேச்சினை எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்த கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். உதாரணமாக எதிலும், எதற்கும் பொருந்தாததாகவே, எதிலும் புரிந்து கொள்ளாமலேயே, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்து கொண்டே இருப்பவர்களை ‘‘வச்சாக் குடுமி, செரச்சா மொட்டை’’ என்பதைப் போலப் பேசுகிறான் என்பர். முடிவெட்டினால் சிலர் குடுமிவைப்பதைப் போல் வெட்டி வைத்துக் கொள்வர். இல்லை எனில் முடி முழுவதையும் எடுத்து மொட்டையடித்துக் கொள்வர்.
 
இதுபோன்றே சிலர் பேசும்போது சரி என்றால், தவறைக் கூடச் சரி என்று ஒப்புக் கொள்வர். தவறு என்று கூற நினைத்தால் தவறு என்றே கூறிச் சாதிப்பர். இவர்களின் பண்பாடற்ற பேச்சினையே மேற்குறிப்பிட்ட பழ மொழி எடுத்துரைக்கின்றது. இதை சரியாக புரிந்து அதற்கு ஏற்றவாறு அவர்களை விலத்தியோ அல்லது நாம் விலகியோ இருக்க பழகவேண்டும் என்பதே என் அறிவிற்கு எட்டிய முடிவாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.
 
  • நியானி changed the title to விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.