Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"புத்தாண்டுப் பரிசு"
 
 
ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.
 
இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே [சிங்களத்தில் ஏன் எழுதப்படவில்லை என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம்?] எழுதப்பட்ட கற்றூண் [stone pillar] அல்லது கற்பலகை [Rosetta Stone] ஒன்று எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் காலியில் கண்டெடுத்தார் என்பதும், அதைத்தொடர்ந்து 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் தமிழ் எழுத்துக்களால் பதியப் பட்ட, கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசக கல் ஒன்றும் கண்டு எடுக்கப் பட்டது, அன்று காலியில் குறிப்பிட்ட அளவு தமிழர் அல்லது தமிழ் மொழி வாழ்ந்ததை உறுதிப் படுத்துகிறது.
 
9:30 மணி அளவில், ஹிக்கடுவை பெரலிய என்ற இடத்தில் ஆழிப்பேரலை [சுனாமி] மாத்தறை கடுகதி புகையிரத்தை தாக்கி, அந்த கிராம மக்களையும் சேர்த்து 1700 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்டது. நான் என் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் புத்தாண்டுப் பரிசு அத்தனையையும் அதில் இழந்தேன். அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 திகதி காலை நான் என் பெற்றோர்களின், சகோதரர்களின் நினைவாக மாத்தறை புகையிரத வண்டியில் புத்தாண்டுப் பரிசுகளுடன், ஹிக்கடுவை பெரலியவில் அஞ்சலி செலுத்தி, மாமா விடு போகத் தொடங்கினேன். தொடக்கத்தில் நான் சின்ன பிள்ளை என்பதால், அம்மம்மாவுடன் சென்றாலும், உயர் வகுப்புக்கு பின் நான் தனியாகவே போவது வழமையானது.
 
இன்று டிசம்பர் 26, 2023, காலை நாலு மணிக்கே எழும்பிவிட்டேன். நான் கொட்டாஞ்சேனை, புதுச் செட்டி வீதியில் வாடகைக்கு இருந்து கொண்டு என் முதலாவது உத்தியோகமாக இலங்கை கடற்தொழில் அமைச்சு, காக்கை தீவு, கொழும்பு 15 இல் இந்த ஆண்டுதான், பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்தேன். ஆகவே தான் வரும் புத்தாண்டு ஒரு விசேட நாளாக எனக்கு பலவழிகளில் இருக்கிறது. நான் என் பணத்தில் மாமா வீட்டிற்கு புத்தாண்டு பரிசு வாங்கிக் கொண்டும் மற்றும் மாத்தறை வண்டியில் நினைவு தின அஞ்சலிக்கும் போகிறேன்.
 
மாமாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள், அதில் மூத்தவள் இப்ப முதலாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவி. அவளைத்தான் நான் இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் கட்டப் போகிறேன். அவளின் பெயர் ஜெயக்குமாரி. இது சின்ன வயதிலேயே அம்மம்மாவால் முன்மொழியப் பட்டாலும், உண்மையில் நாம் இருவரும் ஒரு வயதின் பின் விரும்பிய ஒன்றே! மற்றவர்கள் இன்னும் மேல் நிலைப் பள்ளி மாணவிகள்.
 
நான் முதல் நாளே மாமா மாமியுடன் கதைத்து, ஜெயக்குமாரியையும் ஹிக்கடுவை பெரலிய கிராமத்துக்கு அஞ்சலிக்கு வரும் படி கூறி இருந்தேன். என் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும், சுனாமி வந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில், அங்கே அவர்களின் படத்துக்கு, மற்றவர்கள் எல்லோருடனும் மலர்வளையம் சாத்தி மௌன அஞ்சலி செலுத்துவது வழமை. ஆனால் இம்முறை முதல் முதல் ஜெயக்குமாரியுடன் சேர்ந்து அந்த அஞ்சலி செலுத்தப் போகிறேன். அது மட்டும் அல்ல புத்தாண்டு பரிசாக அவளுக்கு மோதிரமும், சங்கிலியும், அங்கே அவர்களின் படத்துக்கு முன் போடப்போகிறேன். ஆனால் அதை நான் எவருக்கும் சொல்லவில்லை. அது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்றாலும் அம்மம்மாவுக்கு நான் ஒன்றும் மறைப்பது இல்லை. அவரின் ஆசியுடன் தான் இதை யோசித்தேன்!
 
ஐந்து மணி அளவில் நான் குளித்து வெளிக்கிட்டு விட்டேன். அஞ்சலி செலுத்தும் வரை நான் எதுவுமே சாப்பிடுவதில்லை. தண்ணி உட்பட. ஆகவே எதோ என் மனதில் பட்டவையை ஒரு அஞ்சல் கவிதையாக எழுதி, அவளின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துவிட்டு, புத்தாண்டு பரிசாக அவளுக்கும், மற்றவர்களுக்கும் வாங்கியதை ஒழுங்காக அடுக்கி, என் பெட்டியை எடுத்துக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்துக்கு போனேன். ஆனால் இம்முறை உண்மையான புத்தாண்டு பரிசு இந்த பொருட்கள் அல்ல, என் பெற்றோருக்கு நான் கொடுக்கப் போகும் மருமகள் தான் என என் மனது சொல்லிக்கொண்டு இருந்தது.
 
ஹிக்கடுவை பெரலிய சுனாமி நினைவு மண்டபத்துக்கு நான் நேரத்துடன் போய்விட்டேன். அங்கு பெரும் திரளான மூவின மக்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. நான் என் பெற்றோர்கள், சகோதரங்கள் படத்தை ஒரு ஒதுக்குப் புறமாக வைத்து, ஜெயக்குமாரி வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன். நேரம் மெல்ல மெல்ல ஒன்பது முப்பதை அண்மித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவள் வரவில்லை. என்ன நடந்தது எனக்குப் புரியவில்லை. மாமாவுக்கும் ஜெயக்குமாரிக்கும் மூன்று நான்கு தடவை அழைப்பு எடுத்து பார்த்துவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. என் அம்மா, அப்பாவின் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். நான் ஆச்சரியப் படுத்த நினைத்தது ஒன்று, இப்ப என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவது வேறு ஒன்று!
 
நேரம் நெருங்கிவிட்டது, நான் பெற்றோருக்கான கடமையை முதல் செய்யவேண்டும். எனவே எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து மலர் சாத்தி மௌன அஞ்சலி செய்தேன். முப்பது மீட்டர் உயரம் கொண்ட ஞாபகார்த்த புத்தர் சிலை ஆழ்கடலை பார்த்துக்கொண்டு நின்றது. நான் புறம்பாக பத்திரமாக கொண்டு வந்த மோதிரம், சங்கிலி இரண்டையும் எடுத்து பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஆச்சரியமாக அவ்வற்றை அவளுக்கு போட்டு, என் பெற்றோரின், சகோதரர்களின் அஞ்சலியில் என்னுடன் ஒன்றாக முதல் முதல் ஈடுபடுத்த வேண்டும் என்ற என் கனா சுக்கு நூறாக உடைவது போல் இருந்தது. நான் மீண்டும் புத்தரின் கருணைக் கண்ணை உற்றுப் பார்த்தேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை!
 
நான் மீண்டும் இம்முறை மாமிக்கும் சேர்த்து அழைப்பு எடுத்தேன். அதே நிலை தான். ஒரு பதிலும் இல்லை. அப்படி என்றால் அங்கு போய்த்தான் என்ன பிரயோசனம் ? எனோ எனக்கு கொஞ்சம் கோபமாகவும் இருந்தது, அதே நேரம் எதாவது நினைக்க முடியாதது நடந்து விட்டதா என்ற குழப்பமும் இருந்தது. எதுவாகினும் போய்த்தான் என்ன என்று பார்ப்பமே என தீர்மானித்து, அருகில் இருந்த புகையிரத நிலையம் போனேன். அங்கே நான் சீட்டுப் பெறுமிடத்திற்கு அருகில் செல்லும் பொழுது, யாரோ என் தோளில் கை போடுவதை உணர்ந்தேன்.
 
திரும்பி பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. அவளின் மூத்த தங்கை. அழுதுகொண்டு நின்றாள். அக்காவை புகையிரதத்தில் ஏற்றிவிட தாம் எல்லோரும் போனதாகவும், ஒரு சந்தியில் அவர்களின் வண்டி ஒரு பார ஊர்த்தியுடன் மோதுண்டு விட்டதாகவும் அம்மா. அப்பா , அக்கா கடுமையாக அடிபட்டதால் இன்னும் வைத்திய சாலையிலேயே இருப்பதாகவும், கடைசி தங்கையை அங்கேயே விட்டுவிட்டு, தொலை பேசிகள் அந்த மோதலில் உடைந்து விட்டதால், வேறு வழி தெரியவில்லை, எனவே நேரடியாக வந்ததாகவும் சொன்னார்.
 
நான் உடனடியாக வாடகை வண்டி எடுத்துக்கொண்டு, அவளின் மூத்த தங்கையுடன் காலி வைத்திய சாலைக்கு போனேன். அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்கள். கடைசித் தங்கச்சி, வெளியே ஒரு வாங்கில். ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். மாமாவுடன் வேலை செய்யும் சில சக ஊழியர்களும் அங்கு வந்து இருந்தனர். மூவரில் முன்னுக்கு இருந்த இருவரின் நிலைமையும் கவலைக்கு இடம்மென்றும், பின்னல் இருந்த மாமி பரவாயில்லை என்றும் அங்கு இருந்த மூத்த மருத்துவர் ஒருவர் எமக்கு கூறினார். நான் எவ்வளமோ கெஞ்சி கேட்டபின், ஜெயக்குமாரி மற்றும் மாமாவை ஒரு சில நிமிடம் பார்கவிட்டனர். அது தான் நான் கடைசியாக உயிருடன் பார்த்தது.
 
இன்று 2024 ஆம் ஆண்டு முதல் நாள். எல்லோரும் புத்தாண்டு பரவலாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மாமா வீட்டிலும் அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டமே கூடி இருக்கிறது. ஆனால் புத்தாண்டுக்கு அல்ல, புத்தாண்டு பரிசு தேடுவார் அற்று ஒரு மூலையில் இருக்கிறது. வாழை, தோரணம் கட்டப் படுகிறது. ஆனால் இங்கு தோரணம் மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கிறது. நிலத்தில் விழுகின்றன, மடிகின்றன என சொல்லாமல் சொல்கிறது. தந்தையும் மகளும் தமது கடைசி யாத்திரையை ஒன்றாக, அருகருகே பயணிக்கின்றன. என் அம்மாவின் தம்பியும் மருமகளும் அம்மாவிடம் செல்கின்றனர். நான் எதை அம்மா அப்பாவுக்கு புத்தாண்டு பரிசாக கொடுக்க நினைத்தேனோ, அது என் பெற்றோரை தேடித் தானாகவே, என்னை விட்டுவிட்டு போகிறது!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
326388006_1023051711987530_6729086736316671294_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=G6-gDGS7hLwQ7kNvgHTos3H&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAIOu3xVcEWoCJIVKjTYkQIoM95DIOyvCzT27TmtpEcXA&oe=66789E25 326254835_1498503930673810_9018184415173590601_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=lN--SnexuPUQ7kNvgFZza0j&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCSByYWZXhXdL_EfXMSDfVFKmTvZItBL9aZ102pLEgS9g&oe=667879C5 448792294_10225378659316225_4443044943034686893_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NJ0Iwgm3ap0Q7kNvgFSJ2lj&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC2TFl8dnwX_zxjy6qWY2hTX34l_fSfZ7fZGGPz3csv4g&oe=6678A715  No photo description available.
 
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உண்மைச் சம்பவம் என்று நினைக்கிறேன்.
அடிக்கு மேல அடியா? எப்படித்தான் இவ்விழப்புகளில் இருந்து மீழ்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு ஏராளன் னுக்கு 


இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை / நிகழ்வுகளை ஒட்டி, அந்த சூழலில், ஆனால் கற்பனை கதை எழுதுவதே வழமை. அப்படியான ஒன்றே இது . 

என்றாலும் உண்மை கதைகளும் சில எழுதி உள்ளேன் 

நன்றி  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.