Jump to content

இலங்கை அரசை கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2024 | 09:46 AM
image
 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை (24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில்  இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 507 மீன்பிடி விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படையினர்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படகுகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜ் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, நேற்று இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள், மீனவர்கள் மற்றும் விசைப்படகின் உரிமையாளர்கள்  இராமேஸ்வரம் துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட  போவதாக முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில்  இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்ததால்  இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

53c7c570-890b-401c-8236-98992c1c382b.jpg

https://www.virakesari.lk/article/186797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேலை நிறுத்தம் கால வரையறையின்றித் தொடர வேண்டும்…!

எமது மீனவர்களும் வாழ வேண்டும்…!

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.