Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி

26 JUN, 2024 | 04:13 PM
image

(நெவில் அன்தனி)

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லவையைச் சேர்ந்த ஜெயகந்தான் பிரசான் (இராணுவம் 31:52.58) வெள்ளிப் பதக்கத்தையும் நுவரெலயா ஒலிஃபன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (விமானப்படை - 32:01.54) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.  

தியகமவில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியானது சிறப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியாகவும் அமைகிறது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு தினங்களில் சிறப்பு மெய்வல்லுநர்களில் யாரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டவில்லை.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.51 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன 0.49 செக்கன்களால் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை தவறவிட்டார். 

எனினும் அவருக்கு கிடைத்துள்ள தரவரிசை புள்ளிகளின் பிராகாம் அவர் ஒலிம்பிக் வாயிலை அண்மித்துள்ளதாகத் தெரிகிறது.

அருண தர்ஷன தங்கப் பதக்கத்தை வென்றதுடன் அவருடன் போட்டியிட்ட காலிங்க குமாரகே (46.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றபோதிலும் ஒலிம்பிக் அடைவுமட்டத்தைவிட வெகுதூரம் பின்னிலையில் இருந்தார்.

டில்ஹானி  லேக்கம்கே   ஈட்டியை 55.77 மீற்றர் தூரத்துக்கு எறிந்தே தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆனால் ஒலிம்பிப் தகுதியைப் பெறுவதற்கு அவர் குறைந்தது 64.00 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்திருக்கவேண்டும்.

இது இவ்வாறிருக்க, இன்று பிற்பகல் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார்.

1_v_vakson.jpg

3_j_prasan__1_.jpg

4_m_sivarajah__1_.jpg

2_mithunraj.JPG

https://www.virakesari.lk/article/187032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மங்கை தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்

27 JUN, 2024 | 02:59 PM
image
 

(நெவில் அன்தனி)

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யாழ். மாவட்ட மெய்வல்லுர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய நேசராசா தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த தேசிய சாதனையையே தக்சிதா இன்று வியாழக்கிழமை (27) முறியடித்தார்.

சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்கிறார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 

2_puvitharan_gold_medal_in_bad_light.jpg

யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கடந்த மார்ச் மாதம் இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை படைத்த புவிதரன், போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் பங்குபற்றியதால் புதிய சாதனைக்கு இலக்கு வைக்க முடியாமல் போனதாக கவலையுடன் தெரிவித்தார்.

ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தக்சிதாவுக்கும் புவிதரனுக்கும் கணாதீபன் பயிற்சி அளித்துவருகிறார்.

இதேவேளை, ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தட்டெறிதலில் 45.08 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட அதிசறிந்த தூரப் பெறுதியாகும்.

3_mithunraj.JPG

https://www.virakesari.lk/article/187101

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம்

30 JUN, 2024 | 01:04 PM
image
 

(யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி)

யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

PHOTO-2024-06-30-11-41-14.jpg

மத்திய மாகாணத்துக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிக இலகுவான 3 வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்ட வட மாகாணம், 19 வயதான கோல் காப்பாளர் ஆர்ணிகன் 3 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

போட்டியின் ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணி ஒரு சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

ஆனால், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை கே.ஜீ.ஏல்.டி. (தில்லின) பிரேமச்சந்த்ர கோலினுள் இலாவகமாக புகுத்தி மத்திய மாகாணத்தை முன்னிலையில் இட்டார்.

PHOTO-2024-06-30-11-42-05.jpg

அதன் பின்னர், கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வட மாகாண அணிக்கு அடுத்தடுத்து 4 கோர்ணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது.

இடைவேளையின்போது மத்திய மாகாண அணி 1 - 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் முழு ஆதிக்கம் செலுத்திய வட மாகாணம் எதிரணியின் கோல் வாயிலுக்கு அருகாமையில் இருந்தவாறு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

வின்சென்ட் கீதன், செபமாலை நாயகம் ஞானரூபன், நிதர்சன், மாற்று வீரர் பிரேமகுமார் ஆகியோர் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர்.

இதனால் வட மாகாணத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற கருத்து நிலவியது.

ஆனால், போட்டியின் உபாதையீடு நேரத்தில் வின்சென்ட் கீதன் கோல் நிலையை சமப்படுத்தி வட மாகாண அணிக்க்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.

PHOTO-2024-06-30-11-43-24.jpg

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இதனையடுத்து, வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் வட மாகாணம் 6 - 5 என வெற்றிபெற்று தங்கப் பதக்கதை மூன்றாவது நேரடித் தடவையாக சுவீகரித்தது.

ஆட்டநாயகனாக எஸ். ஆர்ணிகன் தெரிவானார்.

2019இல் செபமாலைநாயகம் ஞானரூபன் தலைமையிலும் 2023இல் செபமாலை நாயகம் ஜூட் சுபன் தலைமையிலும் இந்த வருடம் எம். என். நிதர்சன் தலைமையிலும் வட மாகாணம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

2020, 2021, 2021 ஆகிய வருடங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்த வருடம் மத்திய மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் தென் மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

வட மாகாண அணி

எம்.என். நிதர்சன் (தலைவர்), எஸ். ஞானரூபன், எஸ். ஜூட் சுபன், வின்சென்ட் கீதன், ஏ. ஜெயராஜ், வி. விக்னேஷ், ரி. கஜகோபன், எஸ். ஆர்ணிகன் (கோல்காப்பாளர்), என். அன்தனி ரமேஷ், ஏ. டிலக்ஷன், கஜமாதன், எம். பிரேமகுமார், ஜே. ஜோன்ராஜ், எம். ஜே. குயின்டன், பி. சுதேசன், ஏ. ரி. தீபன், எம். எஸ். கிரிஷா, ஜே. ஏ. ஜெரிசன், எஸ். மதிவதனன், எஸ். சிந்துஜன்.

பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும் வடமேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் சப்ரகமுவ வெண்கலப் பதக்கதையும் வென்றன.

PHOTO-2024-06-30-11-44-47.jpg

https://www.virakesari.lk/article/187308

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.