Jump to content

வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில்  ஜுனியர் சுப்பர் சிங்கர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில்  ஜுனியர் சுப்பர் சிங்கர்

- இறுதிப் போட்டிக்கு தென்னிந்திய பாடகர்களும் வருகை

PrashahiniJune 28, 2024
jaffna-super-singer-01.jpg

வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதன் இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியில், வடமாகாணத்தில் மாபெரும் ஜுனியர் சுப்பர் சிங்கர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ் திரைப்பட பாடகரும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவருமான திவாகர், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக பத்து லட்சம் ரூபாவும் இரண்டாம் பரிசாக மூன்று லட்சம் ரூபாவும் மூன்று பரிசாக ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படும்.

இந்தப் போட்டியின் முதலாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், பிரதான வீதியிலுள்ள திருமுறைக்கலாமன்றத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 06ஆம், 07ஆம் திகதிகளில் நடைபெறும்.

இந்தப் போட்டியின் இரண்டாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்திலும் சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திலும் எதிர்வரும் 2024 ஜுலை 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும்.

இந்தப் போட்டியின் மூன்றாவது குரல் தேர்வு மன்னார், நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும்.

இந்தப் போட்டியின் அடுத்த குரல் தேர்வு பருத்தித்துறை, வல்லை, யாழ் பீச் ஹோட்டலில் எதிர்வரும் 2024 ஜுலை 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று கிளிநொச்சி, பரந்தன் ஆர்ஜே மஹாலில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 03 ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெறும்.

 

https://www.thinakaran.lk/2024/06/28/breaking-news/69114/வடமாகாணத்தில்-மாவட்ட-ரீத/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது .....நடக்கட்டும்....... நல்லதே நடக்கட்டும்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்லது .....நடக்கட்டும்....... நல்லதே நடக்கட்டும்.......!   👍

இந்த் விடயத்தில் நன்மையுமுண்டு தீமையுமுண்டு, ஆனால் பெரும்பாலும் இந்த சிறார்கள் உளவியலாக மோசமாக பாதிக்கப்படுவாகள், எந்த கவலையுமில்லாமல் சந்தோசமாக விளையாடி திரிந்த எமது காலம் ஒரு பொற்காலம் என கருதுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை.       பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.  அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.  காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.  தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.  படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.  “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.  பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.  மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.   https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
    • ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.   இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.   டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo
    • முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த தெரிந்தவர்களின் தென்னந்தோப்புகளில் குடியேறினர்.அத்தோடு முல்லைத்தீவு ,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,இன்னும் எங்கெங்கெல்லாமோ சென்று வாழ முற்பட்டனர் அகதிகளான மக்கள். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதயபூமியை சிங்களமயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த எண்ணி இராணுவம் கொக்கிளாய்ப்பாடசாலையை இராணுவமுகாமாகமாற்றி முல்லை திருகோணமலை இராணுவப்போக்குவரத்திற்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் பெரும் பலத்தை ஏற்படுத்தியது. கொக்கிளாய் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவிடுதலைப்புலிகள் அதனைத்தாக்கியழிக்க முடிவெடுத்தனர்.இத்தாக்குதலுக்கு மக்களும் பலவழிகளில் புலிகளுக்கு உதவினர். 1985.2.13 அன்று அதிகாலைநேரம் கொக்கிளாய் முகாமின்மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். நேர்த்தியான வேவின் பின் மணலாற்றுக்காட்டின்வழியே சென்ற தாக்குதலணி துணிச்சலுடன் முகாமைப் பலமாகத்தாக்கியது.இத்தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவம் நிலைகுலைந்துபோனது.இத்தாக்குதலே தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம்மீதான முதலாவது தாக்குதலாகும்.இதன்போது 16 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள்.அவர்களிற் பலரின் வித்துடல்களை மீட்கமுடியவில்லை.அக்காலப்பகுதியில் இவ்வீரச்சாவுகள் விடிவுக்கு முந்திய மரணங்களாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டன.இத்தாக்குதலால் இலங்கை இராணுவம் இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரப்பிறப்பு:20.09.1956 லெப்டினன்ட் பழசு முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.10.1963 வீரவேங்கை கெனடி கனகசபை வில்வராசா கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:19.04.1961 வீரவேங்கை காந்தரூபன் பொன்னையா சந்திரகுமார் கல்லடி, மட்டக்கள்ப்பு. வீரப்பிறப்பு:30.07.1964 வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்) சண்முகராசா பிரபாகரன் லிங்கநகர், திருகோணமலை. வீரப்பிறப்பு:26.01.1963 வீரவேங்கை காந்தி கந்தையா பரமேஸ்வரன் தம்பலகாமம், திருகோணமலை வீரப்பிறப்பு:17.08.1956 வீரவேங்கை ரவி நமசிவாயம் தர்மராஜா செம்மலை, அளம்பில், மணலாறு. வீரப்பிறப்பு:02.10.1964 வீரவேங்கை வேதா கனகு இராசநாயகம் சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி வீரப்பிறப்பு:30.10.1959 வீரவேங்கை ரஞ்சன்மாமா பொன்னையா சண்முகநாதன் கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:16.10.1951 வீரவேங்கை காத்தான் துரைச்சாமி சிறீமுருகன் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:05.03.1961 வீரவேங்கை மயூரன் குணசிங்கராசா துவாரகன் மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.02.1967 வீரவேங்கை சொனி சதாசிவம் அன்ரனி நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:03.01.1964 வீரவேங்கை தனபாலன் தியாகராசா வரேந்திரன் காரைநகர், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:30.09.1965 வீரவேங்கை சங்கரி செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:01.06.1962 வீரவேங்கை மகான் கதிரவேலு செல்வராசா கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.05.1962 வீரவேங்கை நிமால் கந்தையா ஜெயந்தன் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.03.1966   http://irruppu.com/2021/02/13/கொக்கிளாய்-இராணுவமுகாம்/
    • 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.1993ம் ஆண்டு பூநகரி முகாம் தகர்ப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படவிருந்த பலாலி விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கும் இவனது பங்களிப்பு முக்கியமானதாக இருந்து. இயக்கத்தில் இருந்த காலத்தில் இராணுவத்திற்க்குள்ளே நீண்டகாலமாக இருந்தான் அதன் பின்னர் பூநகரி முகாம் மீதான வேவு நடவடிக்கையில் 01.03.1994 அன்று வீரச்சாவடைந்தான். கப்டன் கந்தையா (அபிமன்யு) தியாகராசா ஞானவேல் மயிலிட்டி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.10.1973 வீரச்சாவு 01.03.1994   http://irruppu.com/2021/03/01/கப்டன்-கந்தையா-அபிமன்யு/
    • வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம் 30 JUN, 2024 | 01:04 PM   (யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. மத்திய மாகாணத்துக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிக இலகுவான 3 வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்ட வட மாகாணம், 19 வயதான கோல் காப்பாளர் ஆர்ணிகன் 3 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியின் ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணி ஒரு சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. ஆனால், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை கே.ஜீ.ஏல்.டி. (தில்லின) பிரேமச்சந்த்ர கோலினுள் இலாவகமாக புகுத்தி மத்திய மாகாணத்தை முன்னிலையில் இட்டார். அதன் பின்னர், கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வட மாகாண அணிக்கு அடுத்தடுத்து 4 கோர்ணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது. இடைவேளையின்போது மத்திய மாகாண அணி 1 - 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் முழு ஆதிக்கம் செலுத்திய வட மாகாணம் எதிரணியின் கோல் வாயிலுக்கு அருகாமையில் இருந்தவாறு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. வின்சென்ட் கீதன், செபமாலை நாயகம் ஞானரூபன், நிதர்சன், மாற்று வீரர் பிரேமகுமார் ஆகியோர் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதனால் வட மாகாணத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற கருத்து நிலவியது. ஆனால், போட்டியின் உபாதையீடு நேரத்தில் வின்சென்ட் கீதன் கோல் நிலையை சமப்படுத்தி வட மாகாண அணிக்க்கு நம்பிக்கையைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதனையடுத்து, வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் வட மாகாணம் 6 - 5 என வெற்றிபெற்று தங்கப் பதக்கதை மூன்றாவது நேரடித் தடவையாக சுவீகரித்தது. ஆட்டநாயகனாக எஸ். ஆர்ணிகன் தெரிவானார். 2019இல் செபமாலைநாயகம் ஞானரூபன் தலைமையிலும் 2023இல் செபமாலை நாயகம் ஜூட் சுபன் தலைமையிலும் இந்த வருடம் எம். என். நிதர்சன் தலைமையிலும் வட மாகாணம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. 2020, 2021, 2021 ஆகிய வருடங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த வருடம் மத்திய மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் தென் மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. வட மாகாண அணி எம்.என். நிதர்சன் (தலைவர்), எஸ். ஞானரூபன், எஸ். ஜூட் சுபன், வின்சென்ட் கீதன், ஏ. ஜெயராஜ், வி. விக்னேஷ், ரி. கஜகோபன், எஸ். ஆர்ணிகன் (கோல்காப்பாளர்), என். அன்தனி ரமேஷ், ஏ. டிலக்ஷன், கஜமாதன், எம். பிரேமகுமார், ஜே. ஜோன்ராஜ், எம். ஜே. குயின்டன், பி. சுதேசன், ஏ. ரி. தீபன், எம். எஸ். கிரிஷா, ஜே. ஏ. ஜெரிசன், எஸ். மதிவதனன், எஸ். சிந்துஜன். பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும் வடமேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் சப்ரகமுவ வெண்கலப் பதக்கதையும் வென்றன. https://www.virakesari.lk/article/187308
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.