Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர்.

அவருக்கு வயது 91.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரா.சம்பந்தனின் அரசியல் பயணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைவரான ரா.சம்பந்தன், கிழக்கு திரிகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனைகளுக்காக உறுதியான, இடைவிடாத குரலை எழுப்பியவர்.

"ரா. சம்பந்தன் பல வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளைத் தாண்டிவந்த மனிதர். அந்தந்த சூழ்நிலைகளுக்கு அரசியல்ரீதியான பொறுப்புகளோடு எதிர்வினை ஆற்றியவர். பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தமிழர்களின் நலனை மனதில் வைத்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர். தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு தனது வாழ்நாளிலேயே வரும் என நம்பினார் சம்பந்தன்" என்கிறார் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

திருகோணமலையை மையமாக வைத்து, 1970ஆம் ஆண்டுவாக்கில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார் சம்பந்தன். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில், இரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையின் தமிழர் அரசியல் வேறொரு பாதைக்குத் திரும்பியிருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்தை தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முன்வைத்து செயல்பட ஆரம்பித்திருந்தனர்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோருவதற்கு எதிராக இருப்பதைக் கண்டித்தும் 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாததால், 1983 செப்டம்பரில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் சம்பந்தன்.

இரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,TNA

தமிழர் பகுதியாக விளங்கிய திருகோணமலை தேர்தல் தொகுதியை மையப்படுத்தி, 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரா.சம்பந்தன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் ஊடாக இரா.சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

இவரது அரசியல் பிரவேசம் இடம்பெற்ற காலப் பகுதியானது, உள்நாட்டு போர் ஆரம்பமான காலப் பகுதி என்பதுடன், பெருமளவான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியாகவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, ரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை புறக்கணித்திருந்தனர்.

தனிநாட்டு கோரிக்கைக்கு இடமளிக்க முடியாது என்ற உள்ளடக்கத்துடனான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது எனவும், 1983ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நாடாளுமன்ற அமர்வுகளை தமிழர் விடுதலை கூட்டணி புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து மூன்று மாத காலம் புறக்கணித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி, ரா.சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 1983ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது.

இதையடுத்து, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் பல தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன், திருகோணமலை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

எனினும், அந்த தேர்தலில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.

 
ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ஷேவுடன் ரா.சம்பந்தன்

இதற்குப் பிறகு தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகிய கட்சிகள் கைகோர்த்து 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் தலைவராக ரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டமைப்பிற்கு தேர்தல்கள் செயலகம் அங்கீகாரம் வழங்காத நிலையில், 2001ஆம் ஆண்டு தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டது. இந்தத் தேர்தலின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் சம்பந்தன்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியது. ஆனால், இதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.

இதனால் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த காலகட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் ரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சம்பந்தன் வெற்றிபெற்றார்.

மன்மோகன் சிங்குடன் இரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2012இல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ரா.சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரான ரா.சம்பந்தன்

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுவரை இரண்டு தமிழர்கள் மாத்திரமே எதிர்கட்சித் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான அ. அமிர்தலிங்கம், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதனால், இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி விளங்கியது. இந்தக் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்திருந்தன. ஆகவே 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கையின் தமிழர் தலைவர் ஒருவருக்கு மீண்டும் கிடைத்தது.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட்ட தலைவர்களில் ரா. சம்பந்தனுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

"மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் அவருக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு இந்தியாவுக்கு இலங்கை பற்றிய அணுகுமுறையே இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தியா தற்போது மலையக மக்களுக்கு பல உதவிகளைச் செய்துவரும் நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை என்ற நிலை இருந்தாலும் அதைப் பற்றி அவருக்கு பெரிய புகார்கள் ஏதும் இல்லை. தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தும்படி கோரிவந்தார் அவர்" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

இலங்கைச் சூழல் குறித்து இந்தியாவுக்கு பல தருணங்களில் சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும், அது தொடர்பாக பதில் ஏதும் வராத போதும் தனது முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்றும் கூறுகிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்கிரமசிங்கவுடன் ரா.சம்பந்தன்

தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்

மனித உரிமை மீறல் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றம், காணி பிரசினைகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த முக்கிய தலைவராக சம்பந்தன் இருந்தார்.

"அங்கிருக்கும் அரச கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு என்ன செய்ய முடியுமோ, அதை அவர் செய்திருக்கிறார். இலங்கையில் எல்லாமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. புலிகள் முழுமையாகத் தோற்ற பிறகு, தமிழர் நலன் தொடர்பான சிறிய முன்னேற்றத்திற்குக்கூட பெரிதாகப் போராட வேண்டியிருந்தது. தீர்க்கமான முடிவெடுக்க தயங்குவார் என்ற அவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல. சம்பந்தனாக இருந்தால்தான் அவரது நிலை புரியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், மூத்த பத்திரிகையாளரான பகவான் சிங், சம்பந்தன் குறித்த மாறுபட்ட சித்திரத்தை முன்வைக்கிறார்.

"தனது ஆங்கிலப்புலமை, விவாதம் செய்யும் திறம், ஈழம் குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை அவர் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் அரசியலில் ஒரு ஒற்றுமையை, ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். அமிர்தலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், தமிழ் - சிங்கள அரசியலில் உள்ள மோசமான சக்திகளின் ஆதாயத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நபராக சம்பந்தன் தன்னைக் குறுக்கிக் கொண்டார்" என்கிறார் பகவான் சிங்.

 
விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

2004ஐ ஒட்டிய வருடங்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக இவர் மீது விமர்சனம் வைக்கப்படுவதும் இருக்கிறது.

"ஆனால், புலிகள் வலுவாக இருந்த நிலையில், அதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. மற்றொரு பக்கம், புலிகள் இவரைக் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தபோதும் மக்களுக்காக செயல்பட வேண்டுமா அல்லது தனது மான - அவமானம் சார்ந்து செயல்பட வேண்டுமா என்ற நிலையில், மக்களுக்காக செயல்பட்டார் அவர்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தனது மரணத்தின் மூலம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் சம்பந்தன்.

"ஆனால் அந்த வெற்றிடம் முன்பே ஏற்பட்டுவிட்டது. இவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்த மூன்று, நான்கு வருடங்களில் தமிழர் அரசியலே சின்னாபின்னமாகிவிட்டது. தமிழரசுக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்குள் இருந்த போட்டி இதற்கு முக்கியக் காரணம். தற்போது ரா. சம்பந்தன் மரணமடைந்திருக்கும் நிலையில், இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் இருக்க முடியாது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகான தமிழர் அரசியலில் சம்பந்தனுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. ஆனால், அது எந்த அளவுக்கு தமிழர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சம்பந்தனைப் பொறுத்தவரை, இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை ஒன்றிணைக்கக் கூடிய நிலையில் இருந்தார். அவர் இல்லாவிட்டால் தமிழர் அரசியல் சிதறிப் போயிருக்கும். ஆனால், அந்த ஒற்றுமையால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார அபிலாஷைகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதும் ஒரு கேள்வி.” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் - பொருளாதார ஆய்வாளரான அகிலன் கதிர்காமர்.

“அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற முக்கிய தமிழ் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில்தான் சம்பந்தன் தலைமைத்துவத்தைப் பெற்றார். அப்போதிருந்தே தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகத்தான் சொல்லவேண்டும். யுத்தம் முடிந்த பிறகு அந்தப் பின்னடைவு மேலும் அதிகரித்தது. இங்கிருந்த தலைவர்களால் தமிழ் அரசியலை சரியான வகையில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், இதனை சம்பந்தன் என்ற தனி நபர் மீது சொல்லப்படும் குறைபாடாக பார்க்கக்கூடாது. இது தமிழ் அரசியலுக்கே இருக்கும் ஒட்டுமொத்த சவாலாகத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் அகிலன் கதிர்காமர்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2014இல் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரா.சம்பந்தன்

ரா. சம்பந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை

ரா.சம்பந்தன் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராஜவரோதயம் சம்பந்தன், திருகோணமலையில் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார்.

யாழ்ப்பாணம் - சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகியவற்றில் படித்த ரா.சம்பந்தன் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சம்பந்தனின் மனைவி லீலாவதி. இந்தத் தம்பதிக்கு சஞ்சீவன், செந்தூரன், கிருஷாங்கிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்திற்குச் செல்வதிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். உடல்நலம் மோசமடைந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ரா.சம்பந்தன், சிகிச்சை பலனின்றி ஜூன் 30ஆம் தேதி இரவில் உயிரிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடைபெற்றார் தமிழினத்தின் தலைமகன்

02 JUL, 2024 | 04:23 PM
image

ஆர்.ராம்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துடையவர்கள். அந்த அடிப்படையில் பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை மீளப்பெறப்படாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்

இந்தக் கூற்றுக்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி மிகமிக உறுதியாக  வெளிப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அந்தக் கூற்றுக்களுக்காக  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை தொடர்ந்தும் அளித்து வந்திருக்கின்றமையையும் கண்கூடாக கணாக்கூடியதாகவும் இருக்கின்றது.

இனமொன்றின் விடுதலைக்காகவுள்ள இறுதியான வாயிற்கதவான இந்தக் கூற்றுக்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல. ஆயதப்போராட்ட மௌனிப்பின் பின்னர் தமிழ் மக்களால் அரசியல் தலைமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தனுடையதுதான். 

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமாகிய விசேட நேர்காணலுக்காக 14ஆம் திகதி மாலை 6 மணியளவில் கொழும்பிலுள்ள  இல்லத்துக்குச் சென்று நேர்காணலை ஆரம்பித்தபோது, ஜனாதிபதி ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் களமிறங்கினால் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தினை, எதனடிப்படையில் எடுப்பீர்கள்? என்று வினாவொன்று எழுப்பப்பட்டது.  

அந்த வினாவுக்கான பதில் மிகத்துல்லியமாக அமைந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக காணப்படுகின்ற ஒரேயொரு வழி இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படுவதுதான் என்பது சம்பந்தனின் தளர்ந்த உடலிலிருந்து வெளியான உறுதியான குரலாக அமைந்திருந்தது. இறுதிவரையில் தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்ற பிரதிபலிப்பும் பட்டவர்த்தனமாகவும் இருந்தது. 

குறித்த நேர்காணல்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையில் வழங்கிய இறுதி நேர்காணலாக இருக்கிறது. ஆனால் அந்த நேர்காணலிலும் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களின் அபிலாஷைகள் உறுதி செய்யப்படுவதற்கான அவசியம் மற்றும் முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாகக்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பிறழ்வடையவில்லை.

தமிழினத்தின் விடுதலைக்காக கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக இருந்தார். எவருடனான பேச்சுவார்த்தை மேசையையும் தவிர்த்துச் செல்லக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார்.

அதற்காக திம்பு பேச்சுவார்த்தை முதல் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அவர் பயன்படுத்தினார். தமிழ்த் தலைவர்கள் பேச்சுக்களுக்காக திறக்கப்பட்ட வாயில்கள் ஊடாக முயற்சித்துப் பார்க்கவில்லை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் இறுதிவரையில் உறுதியாக அவர் இருந்தார். 

அதனை அவர் தனது நேர்காணலிலும் வெளிப்படுத்தினார். “அடுத்த தேர்தலில் ரணிலோ, சஜித்தோ, அநுரவோ யாருடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் “அவர்களின் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுப்போம்” என்றும் இறுதியாகக் கூறினார்.

கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தனது 91ஆவது வயதில் காலடி பதித்திருந்த சம்பந்தன், வயதால் மூப்படைந்திருந்தார். அதனால் உடல்நிலையில் தளர்வுகள் காணப்பட்டன. ஆனால் அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் மாறவில்லை. நினைவாற்றால் குன்றவில்லை. 

அவரது, உரையாடல்களில் சிறுசிறு தெளிவின்மைகள் காணப்பட்டாலும், ஆண்டுகள், திகதிகள் மாறுபடாது வரலாற்று நிகழ்வுகளையும், குறிப்புக்களையும், துன்பங்கள் துயரங்களையும் வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தும் தர்க்க ரீதியான பண்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது, திக்கற்று நின்ற தமிழினத்துக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் நின்று தமிழ்த்தேசிய அரசியலை கட்டுறுதியாக வைத்திருந்ததில் விமர்சனங்களையும் தாண்டி காத்திரமான பங்கு சம்பந்தனின் உடையது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றிணைந்து பேரம் பேசும் தமிழர் கட்டமைப்பை வழிநடத்தியதில் சம்பந்தனுக்கு பெரும் பங்குண்டு. அது பின்னாளில் சிதைவடைவதற்கு பல்வேறு காரணங்களும் இல்லாமலில்லை.

உள்நாட்டு அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களுடன் ஊடாட்டங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்த தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் உள்ளார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமை நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி முதல் அனைத்து நாடுகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மதிப்பளித்து செவிசாய்த்த பெருமைக்குரிய தலைவராகவும் சம்பந்தன் திகழ்கின்றார்.

விசேடமாக, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்திய தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் திகழ்வதோடு அவர்களுடன் தொடர்ச்சியான ஊடாட்டங்களையும் பேணி வந்திருந்தார்.

அதுமட்டுமன்றி, உலகத்தவர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் அவர் நன்மதிப்புக்களைப் பெற்றிருந்ததோடு அவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கான விடியலைப் பெறுவதற்கும் தீவிரமான முயற்சிகளையும் எடுத்திருக்கத் தவறவில்லை.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஜோன் கெரி, ஐ.நா.செயலாளர் பான் கீ மூன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம்பிள்ளை, செயிட் அல் ஹூசைன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான அவரது சந்திப்புக்கள் மிக முக்கியமானவை. 

தமிழ் மக்களின் தலைமகனாக சம்பந்தன் உள்நாட்டு, வெளிநாட்டு  ரீதியாக ஆளுமைமிக்கவராக மிளிர்ந்தார், செயற்பட்டார். அந்த உயரத்தை அவர் அடைவதற்கு கடந்துவந்த பாதை மிகவும் நெடியது, கரடுமுரடானது.

ஆம், 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி திருகோணமலையில் இராஜவரோதயம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியானதோடு லீலாதேவியை திருமணம் முடித்தார். அவரின் இல்லற வாழ்வின் பலனாக சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சட்டத்தரணியாக மிளிர்ந்த சம்பந்தன் இளவயதிலேயே தமிழினத்தின் விடுதலைக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். சட்டரீதியான போராட்டங்களிலும், ஜனநாயக ரீதியான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இதன்பலனாக 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியில் சம்பந்தன் இணைந்துகொண்டார். எனினும் தேர்தல் அரசியலில் பங்கேற்குமாறு 1963இல்  தமிழினத்தின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கேட்டுக்கொண்டார். எனினும் அதனை சம்பந்தன் உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

எனினும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து 1972இல் ஸ்தாபித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 1977இல் தேர்தல் அரசியலுக்குள் சம்பந்தன் பிரவேசித்தார்.

அதன்விளைவாக, 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் இருந்த தமிழினத் தளபதி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களுடன் கூட்டிணைந்து தாக்கம் செலுத்தும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார்.

1977 முதல் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், 1989, 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. பின்னர் 2001ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு என்ற புதிய கூட்டணியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஸ்தாபித்தனர்.

இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாதபடியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார.

எனினும் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். 

சம்பந்தன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளராக, துணைத்தலைவராக, பொருளாளராகவும் பதவி வகித்ததோடு தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

பின்னர் அவர் 2004, 2010, 2015, 2020 எனத் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு திருகோணமலை தமிழ் மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு வந்தார். 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

இந்தப் பதவி நிலையே சம்பந்தன் தனது அரசியல்வாழ்வில் வகித்த அதியுச்சமான பதவிநிலை என்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு, தற்போதும் தமிழ் மக்களின் பெருந்தலைவர் என்ற உயரிய அந்தஸ்து சம்பந்தனுக்கே உரியதாகிறது.

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் அரசியலுக்காகவும், இன விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தலைவராக இருக்கும் சம்பந்தனின் இழப்பு விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்துக்கும் நிரப்ப முடியாத பெருவெற்றிடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

IMG-20240701-WA0001.jpg

IMG-20240701-WA0002.jpg

SAMPANNTHAN.jpg

prabhakaran-sampanthan.jpg

Chandrika-and-Sampanthan.jpg

anton-balasingham-sampanthan.jpg

100_1168.jpg

722px-The_President__Tamil_National_Alli

C_oJlwLVwAMcic2.jpg

Hora.jpg

image_080a0b559e.jpg

image_96ae5c9149.jpg

images.jpg

0154.jpg

C5F_BDpWcAA6qlT.jpg

_1.jpg

https://www.virakesari.lk/article/187499

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் போன்ற அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு; 13 ஆவது திருத்தத்தை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைப்படுத்தவேண்டும் - கரு ஜயசூரிய

Published By: VISHNU   05 JUL, 2024 | 02:30 AM

image
 

(நா.தனுஜா)

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். இவ்வேளையில் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. மாறாக நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை உருவாக்கிய தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான இரா.சம்பந்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் விடைபெறவுள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்மீது அபரிமிதமான அன்புடனும், அனைத்து இனங்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பினார்.

 சம்பந்தனின் அரசியல் செயற்பாடுகளை அவதானிக்கையில் நாட்டின் மிகமுக்கிய பல அத்தியாயங்களில் அவர் பங்களிப்பு வழங்கியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னரான தொடக்க கால தமிழ்த்தேசிய நடவடிக்கைகளிலும், அதன் பின்னரான வட, கிழக்கு மாகாணங்களை மையமாகக்கொண்டு இடம்பெற்ற யுத்தத்துக்கு சூழல் வகுத்த யுகத்திலும், யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலப்பகுதியிலும் அவரது வகிபாகம் மாண்புடையதாக அமைந்திருந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகமுக்கிய அரசியல் ஓட்டத்துக்குத் தலைமை தாங்கியவரும், இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகித்தவருமான சம்பந்தன் தேசத்திடமிருந்து விடைபெறும் இந்நேரத்தில் இலங்கையர்களாகிய நாம் கவனம் செலுத்தவேண்டிய பல முக்கிய விடயங்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

 பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் இந்த நாட்டின் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் சுதந்திரமடைந்த பின்னரான 76 ஆண்டுகளில் நாட்டில் வாழும் இனக்குழுக்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையை முழுமையாக உறுதிசெய்யத் தவறிவிட்டோம்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரை இழந்தது நாட்டுக்குப் பேரிழப்பாகும். ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் காண்பித்த அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஒன்றுபட்ட தேசம் தொடர்பான எமது அபிலாஷைகளைக் கைவிடாமல் முன்நோக்கிச் செல்வதன் ஊடாக நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும்.

 அதன்படி இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் விசேட கவனம்செலுத்தி ஒற்றுமையுடன் இதனை நிறைவேற்றவேண்டும். ஒரு சகாப்தத்தை அடையாளப்படுத்திய இரா.சம்பந்தன் நம்மைவிட்டு விடைபெற்றிருக்கும் இத்தருணத்தில் அதற்காக ஒட்டுமொத்த தேசமும் உறுதிபூணவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/187709



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.