Jump to content

"தன்னம்பிக்கை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தன்னம்பிக்கை"
 
 
யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம் தர பாடசாலையாக, 01/01/1952 அன்று, அன்றைய அதிபர் s அம்பிகைபாகனின் விடாமுயற்சியால் தரம் உயர்த்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
நாகமுத்து என் அம்மம்மா திருமதி பார்வதி முருகேசுவின் ஒரு அண்ணா ஆகும், மற்ற அண்ணா சரவணமுத்து இடைக்காடர் ஆகும். எது எப்படியாகினும் இன்று என் அப்பா கணபதிப்பிள்ளை கந்தையா ஒரு சுருட்டு தொழிலாளியாகும். என் அம்மா கனகம்மா தன் எட்டு பிள்ளைகளையும், அந்த வருமானத்துக்குள் எப்படியோ நல்ல படிப்பு கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்த்துக்கொண்டு இருந்தார். நான் என் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகும். நான் ஐந்தாம் வகுப்புவரை யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலத்தில் கல்வி கற்றுவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் என் பெற்றோரால் சேர்க்கப் பட்டேன்.
 
முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" .
 
அது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறியது தான் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த துணிவு, தன்னம்பிக்கை தான் எம் அம்மா எமக்கு தந்தது!
 
இலங்கை தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டால், முதல் நாவல் என்று கருதப்படும் "பிரதாப முதலியார் சரித்திரம்" தொடக்கம் இன்று வரை அறவியல் நோக்கில் எழுதப்பட்டவை அனேகம். அத் தகையோரில் ஒருவரே 'இடைக் காடர்' என்னும் புனைபெயரில் நவீனங்களும் வேறு சில நூல்களும் எழுதிய ஆசிரியர் த. நாகமுத்து [1868 - 1932] அவர்கள் ஆகும். இவர் இடைக்காடு, அச்சுவேலி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையாலும், அவருடைய முன்னேர் ஒருவர் அப் பெயரைக் கொண்டிருந்தமையாலும் நூல்கள் வெளியிட முற்பட்ட வேளையில், இடைக்காடர் என்ற புனைபெயரில் 'நீலகண்டன்", சித்தகுமாரன்", *வினுேதக்கதைகள்" ஆகிய புனை கதைகளையும் அம்பலவாண பிள்ளை என்பவருடன் இணையாசிரியராக "இலகுசாதகம்" என்னும் சோதிட சாஸ்திர நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் இந்நூல்களை வெளியிட்டமையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க 'யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை' நிறுவியமையால் அவர் ஈட்டிய புகழே இன்று வரை நிலைத்திருக்கிறது!
 
இது ஏறத்தாழ அன்று 500 மாணவர்களை கொண்ட முதலாம் வகுப்பில் இருந்து உயர் வகுப்பு மட்டும் உள்ள ஒரு கலவன் பாடசாலை ஆகும். ஆகவே முதல் நாள் நான் அங்கு போகும் பொழுது, பெரும்பாலான மாணவர்கள் அங்கு ஏற்கனவே கற்றுக்கொண்டு இருபவர்களாகவே இருந்தனர். நான் என் குடும்ப நிலையின் காரணமாக, காலில் சப்பாத்து ஒன்றும் இல்லாமல், வெறும் காலுடன் மற்றும் கட்டை காக்கி காற்சட்டையுடன் போய் இருந்தேன். என்னை பார்த்த சில சக மாணவ மாணவிகள் கேலி சிரிப்பு செய்தனர். ஏன் முதல் நாள் என் வகுப்பு ஆசிரியை ஒருவர் கூட என்னைக் கடைசி வாங்கில் இருக்கும் படி பணித்தார். எனக்கு என் அம்மா என்றும் தரும் தைரியம் என் இரத்தத்தில் ஓடுவதால், இதை பார்த்து நான் துவண்டு போகவில்லை. எனக்கு பாரதிதாசன் கவிதைதான் நினைவில் நின்றது.
 
"விழுவது இயல்பு வெட்கப் படாதே
வீறுடன் நின்றிடுவாய்!
அழுபவன் கோழை அச்சத் தியல்பு
தாழ்வை அகற்றிடுவாய்!"
 
ஆனால் நான் அங்கு எல்லோரையும் அப்படி குறிப்பிடவில்லை. இதை கவனித்த இன்னும் ஒரு ஆசிரியை என்னை கூப்பிட்டு, “ கிண்டல் செய்யும் பொழுது, நீ தன்னம்ம்பிக்கையை அதிகமாக இழக்கலாம், எனவே தான் அவர்கள் மீண்டும் சிரிக்க தொடங்குகிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அவர்களுக்கு துணிந்து பதில் சொன்னால், அவர்கள் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள். நீ அவர்களுக்கு “நான் இப்படித்தான் வருவேன், நீ யார் கேட்க ? அது என் இஷ்டம்” என்று சொல்லு என உற்சாகப் படுத்தினார், என்றாலும் எனக்கு கடைசி வாங்குதான் நிரந்தரமாக இருந்தது விட்டது!
 
"ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே"
 
எனக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடல் மனதை தொட்டது. ஒரு சிலர் துன்பம் தந்து என்னைக் கவலை படுத்த, வேறு சிலர் தைரியம் தந்து மகிழ்ச்சி படுத்த, இப்படியான ஒரு வாழ்வை வகுத்துத் தந்த படைப்புக் கடவுள் பண்பு இல்லாதவன் என்றுதான் அப்பொழுது எனக்குத்  தோன்றியது. எனினும் இதன் இப்படியான இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் இறுதி வார்த்தை தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது!
 
இரண்டு மூன்று மாதத்தில் தவணைப் பரீட்சை வந்தது. என் எண்ணம் எல்லாம் இதில் நான் யார் என்று கட்டவேண்டும். ஒருவனின் அறிவுக்கும் உடைக்கு ஒரு தொடர்பும் இல்லை என்பதை அந்த சிலருக்கு தெரியப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தவர்கள் தலை குனிந்து போகவேண்டும். எனக்கு என் அம்மா, அந்த ஆசிரியை, தமிழ் இலக்கியம் தந்த தன்னம்பிக்கை இப்ப நிறைய உண்டு, அதைவிட எனக்கு என்னில் கூடுதலான நம்பிக்கை உண்டு! “இளம்பிறையே! உனது ஏழைமையை நினைத்து வருந்தாதே! ஏனென்றால் உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது! ஆமாம் நான் புது மாணவன் தான் ஆனால் விரைவில் என் முழுமை வெளியே வரும். எனக்குள் ஒரு சிரிப்பும் வந்தது!
 
சோதனை நடந்து ஒரு கிழமையால், பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. சக மாணவ மாணவிகளின் ஆச்சரியத்துக்கு இடையில் பெரும் புள்ளிகளுடன் நான் முதல் இடத்தில் நின்றேன், ஆனால் அது எனக்கு மகிழ்வு தரவில்லை, அது எனக்கு முதலே தெரியும், ஆனால் மகிழ்வு தந்தது அந்த சிலர் வாயடைத்து நின்றதும், என்னுடன் நண்பராக முந்தி வந்ததுமே! இதில் என்ன வேடிக்கை என்றால், என்னை கடைசி வாங்குக்கு அனுப்பிய அந்த ஆசிரியை என்னை முதல் வாங்கில் அமர கூப்பிட்டதுவே! என்றாலும் நான் அதை ஏற்கவில்லை, மிக பணிவாக 'பின் வாங்கில் ஒரு பிரச்சனையும் இல்லை டீச்சர், இரண்டும் ஒரே வாங்குதான், பார்க்கும் பார்வைகள் தான் வித்தியாசம்' என்று கூறி பின் வாங்கிலேயே அமர்ந்து விட்டேன்!
 
அதன் பிறகு தொடர்ந்து முதலாம் இடத்தில் இருந்ததுடன், எல்லோரும் என்னுடன் அன்பாக நட்பாக பழகினார்கள். அதுமட்டும் அல்ல அந்த ஆசிரியை உட்பட அந்த சில சக மாணவர்களும் என்னை மதிக்க தொடங்கினார்கள். இப்ப அவர்களுக்கு உடை பெரிதாக தெரியவில்லை. இன்னும் நான் வெறும் காலுடன் கட்டை காக்கி காற்சட்டையுடன் தான் பாடசாலை போகிறேன், பின் வாங்கில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால் இப்ப நான் வேண்டும் என்றே அப்படி போகிறேன், அப்படி இருக்கிறேன். அது தான் வித்தியாசம்!!
 
அது நான் பல்கலைக்கழகம் போகும் மட்டும் தொடர்ந்தது. ஆனால் நான் யாழ் மத்திய கல்லூரிக்கு போய்விட்டேன். இப்ப நினைத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்! கொஞ்சம் நானும் விட்டுக்கொடுத்து போய் இருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஆனால், மனதில் முதல் நாள் ஏற்பட்ட அந்த கோபம் வைராக்கியம் உண்மையாக மாற பல ஆண்டுகள் எடுத்துவிட்டது!
 
"குழந்தை பருவம் சுமாராய் போச்சு
வாலிப பருவம் முரடாய் போச்சு
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு
பழக்க வழக்கம் கரடாய் போச்சு"
என்பதே உண்மையாக போச்சு!!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
334061200_5971760496236229_9100145388021637722_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=KNn7SsYL0FEQ7kNvgGzg1qB&_nc_ht=scontent-lhr6-1.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYAJcX6c1zYU9HXmdavZ-AuXW_0VT5ctc76eni2uB7Ig5A&oe=668D843B  334053114_2378662855648413_7825051933484317043_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Q4TP4kZj-a0Q7kNvgEkT03o&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYBNysrGlPnPaWat5CBZDzHbFLNIF0Jo7nHhlXtsQgZ8yw&oe=668DA1FC  334051074_905186607483629_526304720589994325_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qGcgqvg23GcQ7kNvgHzylHo&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=ACsUImsKfXqDTPnIW2SLR_L&oh=00_AYBmX6FrAAdFU1DKopAjzw06b3H3rjMNoPr9_iOoJ-OvOg&oe=668DB559
 
 
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, kandiah Thillaivinayagalingam said:

முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" .

நல்லதொரு பரம்பரையிலிருந்து வந்திருக்கிறீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் இல்லை. ஆனால் ஒருவிடயம் உலகில் இந்து அல்லது சைவம் பற்றி எவனும் என்னவும் செய்யலாம் ஆனால் மற்ற மதங்களின் ஆதிக்கம் சைவத்திற்கு ஆபத்தாக வரும் நேரங்களில் மட்டும் சைவத்தை பொத்திட்டு இரு என்று சொல்ல மட்டும் எல்லாரும் வருவீர்கள் ..... மத ஆதிக்கம் இல்லாத உலகமா ? இதை சொல்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனையை போன்றவர்கள்.  
    • நானும் இவர் பெயரை கேள்விபட்டுள்ளேன் படித்தது இல்லை படிக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கபட்டு ஈழதமிழர்களிடமும் பரவி இருக்கின்ற இந்த கொடூரமான  சாதி முறை அவர்களிடம் கரைபுரண்டு ஓடும் மதத்தின் பங்கே முக்கியமாக இருக்க வேண்டும்.
    • இல்லை நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை. நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.
    • இப்படியான நம்பிக்கையினை, கோட்பாட்டினைக் கொண்டவரா உங்களின் பெருந்தலைவர்? 
    • 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையினையும், தனிநாட்டையும் வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது. இலங்கையரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையினை வெகுவாக வரவேற்ற கூட்டமைப்பு, புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டது. இன்னொருவகையில் சொல்லப்போனால் புலிகளின் ஆயுதபோராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயப்படுத்தல்களை செய்யும் அமைப்பாகவும் இயங்கியது. இதனாலேயே 2001 மார்கழி மற்றும் 2004 சித்திரை ஆகிய காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான வாக்குகளை அக்கட்சியினால் பெற முடிந்தது. அதாவது புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் ஈடுபட்டமையினால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இக்கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.  சம்பந்தரை ஆறு தடவைகள் தமிழ் மக்கள் தவறாது பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தார்கள் என்று அகமகிழும் அவரின் ஆதரவாளர்கள் அவர் உண்மையிலேயே 8 - 9 தடவைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றியிருந்தார் என்பதையும், அவர் 2-3  தடவைகள் தோல்வியடைந்தார் என்பதனையும் சொல்லப்போவதில்லை. இதுகூட "Cherry Picking" என்று கடந்து சென்றுவிடலாம். அவ்வாறு அவர் தோற்ற மூன்று வருடங்களாவன 1989, 1994 மற்றும் 2000 ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் 1989 தேர்தல் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதமுனையில் அதன் கூலிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத அமைப்புக்களுடன் இணைந்து சம்பந்தரின் கூட்டணியும் போட்டியிட்டிருந்தது. சம்பந்தர் இதுவரையில் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 1977 இல் 15,144 வாக்குகள்(வெற்றி). 1989 இல் 6,048 வாக்குகள்(தோல்வி). 1994 இல் 19,525 வாக்குகள் (தோல்வி). 2000 தேர்தலில்  தெரிவுசெய்யப்படவில்லை. 2001 தேர்தலில் 40,110 வாக்குகள் (வெற்றி). 2004 தேர்தலில் 47,735 வாக்குகள் (வெற்றி). 2010 தேர்தலில் 24,488 வாக்குகள் (வெற்றி). 2015 தேர்தலில் 33,834 வாக்குகள் (வெற்றி). 2020 தேர்தலில் 21,422 வாக்குகள் (வெற்றி).  இவற்றுள் குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் புலிகளுக்கு அனுசரணை வழங்கியும், அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டும் சம்பந்தர் அரசியல் நடத்திய 2001 (40,110) மற்றும் 2004(47,735) ஆகிய வருடங்களிலேயே அவரது அரசியல் சரித்திரத்தில் அதிகமான வாக்குகளைத் தமிழர்கள் அளித்தார்கள் என்பது. ஆக, பெருந்தலைவர் சம்பந்தனுக்கு புலிகளின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த அதிகரித்த வாக்குகள் கிடைத்தன. இதனை இல்லையென்றும், சம்பந்தனின் மேல் தமிழ் மக்கள் கொண்ட ஒப்பற்ற அன்பினாலேயே அவ்வருடங்களில் அவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவரது புகழ்பாடிகள் சொல்லக்கூடும். அவர்களைத் தவறென்று நிறுவுவதில் எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் புகழ்பாடி இன்புறுவது அவர்களின் விருப்பம்.  புலிகளின் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்த சம்பந்தன், போர் முடிவுற்று பல வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய அறிக்கையொன்றில் "புலிகளை அழித்துவிட்டு தீர்வு தருவோம் என்று எமக்கு வாக்குறுதியளித்தார்கள். அதனாலேயே அது நடக்கும்வரை பேசாதிருந்தோம்" என்று கூறியிருந்தார். புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு , அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயத்தன்மையினை அதுவரை வழங்கிவந்த சம்பந்தன் இறுதிப்போரின்போது பேசாமல் இருந்தது ஏன்? தமிழ் அரசியல்த் தலைவர்களில் மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் வாய்ந்தவராக அன்று காணப்பட்ட அவர், மக்களை இணைத்துக்கொண்டு யுத்தத்தினை நிறுத்து என்று இலங்கையரசையும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் நோக்கிக் கூக்குரல் இட்டிருக்க வேண்டுமா இல்லையா? அவரும் அவரது கட்சியும் செய்யும் அரசியல் மக்களுக்கானதென்றால் 2009 இல் மக்களை இலங்கையரசு பலியிட்டு வருகையில் அதுகுறித்துப் பேசவேண்டியது அம்மக்களின் அரசியல்த் தலைவரின் கடமையல்லவா?  தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய மூத்த அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தமிழரின் ஆரம்ப கால அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவரான சம்பந்தனுக்கு இலங்கையரசும், இந்திய அரசும் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருந்தன என்பது தெரியாமல் இருந்திருக்கும் என்பது நம்பக்கூடியதா? அப்படியானால், புலிகளை முற்றாக அழித்துவிட்டு அரசியல்த் தீர்வினை தங்கத் தட்டில் வைத்துத் தருவோம் என்று அவர்கள் கூறியபோது எப்படி நம்பினார்? இறுதிநாட்களில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அம்மக்களினதும், போராளிகளினதும் அரசியல் முகமாக இருந்த கூட்டமைப்பு செய்தது என்ன? தொலைபேசிகளை அணைத்துவைத்துவிட்டு தமிழ்நாட்டில் சென்று தஞ்சம் புகவேண்டிய தேவையென்ன சம்பந்தனுக்கு? 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நரவேட்டையாடிக்கொண்டிருந்தவேளை அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை ஆதரித்தமையினை விடவும் சம்பந்தனும் அவரது கட்சியினரும் செய்தது கோழைத்தனமானதா இல்லையா? தனது மக்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, சாகட்டும், புலிகள் அழிந்தால்ச் சரி, மீதமிருப்போருக்குத் தீர்வை வாங்கிக் கொடுக்கலாம் என்று சம்பந்தர் இருந்தமை சரியானதா? 2001 இல் சுயநிர்ணய உரிமை, தனிநாடு, ஏகபிரதிநிதித்துவம் என்று கர்ஜித்த சம்பந்தன் 2009 களில் புலிகள் அழியட்டும், மீதியைப் பின்னர் பார்க்கலாம் என்றும், 2009 இற்குப் பின்னர் ஒன்றுபட்ட இலங்கை, பிரிக்கப்பட முடியாத இலங்கை, இலங்கையர்களாக அடையாளம் காணுவோம், எமக்குள் தமிழர் சிங்களவர் என்று பிரிவு வேண்டாம் என்றும் கூறத் தலைப்பட்டது எங்கணம்? ஆக, தமிழரின் நலன்கள் தொடர்பான சம்பந்தரின் அக்கறையென்பது தன்னெழுச்சியானால் வந்தது அல்லவென்பதும், புலிகளின் இருப்பினாலேயே அவர் செயற்கையாக அதனை வரிந்துகொண்டிருந்தார் என்பதும் நிரூபணமாகிறது அல்லவா? சமத்துவம், சம பங்கு, ஐம்பதிற்கு ஐம்பது என்று ஆரம்பித்து பின்னர் சமரச அரசியலாகவும், இறுதியில் சரணாகதி அரசியலாகவும் சம்பந்தனின் அரசியல் ஆனதேன்?  இவர்தான் தமிழர்களின் பெருந்தலைவரா???  நம்பீட்டம்!!! நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.