Jump to content

குறுங்கதை 19 -- கள்ளப்பந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கள்ளப்பந்து
------------------
கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள்.
 
ஒவ்வொரு துண்டையும் நாங்கள் 'ஓ' என்ற பெயரில் தான் சொல்லுவோம். 'ஓ' பிய்ந்து விட்டது, 'ஓ' மாற்ற வேண்டும், இப்படித் தான் முப்பத்தி இரண்டில் எந்த துண்டும் குறிப்பிடப்படும். ஏன் ஒரு துண்டை 'ஓ' என்று சொல்கின்றார்கள் என்று இன்று வரை தெரியாது. அத்துடன் ஊரில் பயன்பாட்டில் இருக்கும் சில சொற்களுக்கு நான் வேறெங்கும் விளக்கமும் கேட்பதில்லை. 'இது தமிழா....... நீ தமிழனா........' என்ற மாதிரி பார்த்து விடுவார்களோ என்ற பயம்.
 
பின்னர் ஒட்டுப்பந்து வந்தது. கப்பலில் போய் வருவோர் கொண்டு வந்து கொடுத்தனர். அதுவும் பெரிய கழகங்களுக்கு மட்டுமே கொடுத்தனர். எல்லோருக்கும் ஒரு பெரிய கழகமும் இருந்தது. அங்கே போய் அந்த பந்தை விளையாட கொடுங்கள் என்று கேட்டால், இலேசில் கொடுக்கவும் மாட்டார்கள். ஒட்டுப்பந்தில் விளையாட சில மேலதிக விதிகளும் இருந்தன. முதலாவது, கண்டிப்பானது, ஒட்டுப்பந்தை சுவரில் அடிக்கக் கூடாது. ஒட்டுப்பந்தில் தையல் இல்லை. ஒட்டுப் பிரிந்தால் பந்தை தூக்கி எறிய வேண்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது.
 
பின்னர் ஒட்டுப்பந்தை அது பிரிந்தால் எப்படி ஒட்டுவது என்று உள்ளூரிலேயே ஒரு வழி கண்டுபிடித்தனர்.
 
2010ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பை நடந்தது. அடிடாஸ் நிறுவனம் ஒரு பந்தை அந்த உலகக் கோப்பைக்காக தயாரித்திருந்தார்கள். பலருக்கும் அந்தப் பந்து இப்பொழுதும் ஞாபகம் இருக்கும். அந்தப் பந்தை எல்லா உலகக் கோப்பை விளையாட்டு வீரர்களும் திட்டித் தீர்த்தனர். மொத்தமே எட்டுத் துண்டுகளால் தான் அந்தப் பந்து செய்யப்பட்டிருந்தது. அடித்த பந்து வளையாமல் நேரே போனது, வேகத்தை வேறு மாதிரி இழக்கின்றது என்று அந்தப் பந்தில் பல குற்றச்சாட்டுகள். கடைசியில் நாசாவும் அந்தப் பந்தை வைத்து சில பரிசோதனைகள் செய்து ஒரு அறிக்கை வெளியிட்டது.
 
எண்ணற்ற தடவைகள் தைத்தும், ஒட்டியும் விளையாடிக் கொண்டிருந்த எங்களின் பந்து கடைசியில் மோசம் போய்விட்டது. அப்பொழுது பருத்தித்துறையில் இருந்த யுனைடெட் புத்தக சாலையில் பந்து விற்பார்கள். ஒரு பந்திற்கு அவர்கள் சொன்ன மிகக் குறைந்த விலையே எங்களை விற்றாலும் வராது. பக்கத்து ஒழுங்கையில் போய் ஒரு மாட்ச் விளையாடுவோமா என்று கேட்டோம். விளையாடலாம், ஆனால் நாங்கள் பந்து கொண்டு வர வேண்டும் என்றார்கள். ஏன், உங்கள் பந்திற்கு என்ன நடந்தது என்று கேட்டோம். எங்கள் பந்து மோசம் போன கதையை சொல்லாமலேயே. அவர்களுடைய பந்தில் பல இடங்களில் 'ஓ' பிய்ந்து விட்டதால், கடையில் தைக்கக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.
 
உடுப்பிட்டி வீதியில் உடுப்பிட்டிச் சந்திக்கு அருகில் செருப்புகள், பந்துகள் போன்றன தைக்கும் கடை இருந்தது. அடுத்த நாள் நாங்கள் சிலர் அங்கே போய், பந்து தைக்க கொடுத்தோமே, முடிந்து விட்டதா என்று கேட்டு, அந்தப் பந்தை வாங்கி வந்துவிட்டோம். பின்னர் பக்கத்து ஒழுக்கைக்காரர்கள் போய் அதே பந்தைக் கேட்டிருப்பார்கள் தான். அவர்கள் சில மாதங்கள் ஒரு பந்தில்லாமல் வெறுமனே சுற்றித் திரிந்தார்கள்.
 
அந்தப் பந்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் பந்தில் 32 துண்டுகள் இருக்கவில்லை. அந்த பந்து தைப்பவர், அடிடாஸ் நிறுவனம் போலவே, தானே ஒரு புது டிசைனில் பந்துத் துண்டுகளை செய்து தைத்திருந்தார். அவை அவரிடம் மிஞ்சி இருந்த துண்டுகளாகவும் இருந்திருக்கும்.
 
அந்த உலக கோப்பை பந்தைப் பற்றி ஒரு வீரர் அன்று சொன்னது: இந்தப் பந்தை செய்தவர் வாழ்நாளில் கால்பந்து விளையாடவில்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
Edited by ரசோதரன்
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அந்த உலக கோப்பை பந்தைப் பற்றி ஒரு வீரர் அன்று சொன்னது: இந்தப் பந்தை செய்தவர் வாழ்நாளில் கால்பந்து விளையாடவில்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உடுப்பிட்டி சந்தியில்  தைத்துத் தந்தவர் கால்பந்து விளையாடாமல் இருந்திருக்கலாம். அடிடாஸ் நிறுவனத்துக்கும் தெரியாமல் இருந்திருக்குமா?

என்னது அடுத்த ஒழுங்கைக்காரன் பந்தா ?

 ‘இட்டார் கெட்டார்’ குறுங்கதையை இன்னுமொருக்கால் போய் வாசித்து விட்டு வருகிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

உடுப்பிட்டி சந்தியில்  தைத்துத் தந்தவர் கால்பந்து விளையாடாமல் இருந்திருக்கலாம். அடிடாஸ் நிறுவனத்துக்கும் தெரியாமல் இருந்திருக்குமா?

🤣................

அடிடாஸ் அந்த வருடம் ஒரு ஆர்வக் கோளாறால் தேவையில்லாத ஒன்றைச் செய்தது. பிறகு இன்னுமொரு பந்து விட்டார்கள். அதில் 12 துண்டுகள் என்று நினைக்கின்றேன். இப்ப உலகம் பழையபடியே, பெரும்பாலும், 32 துண்டுகள் தான் சரி என்ற முடிவிற்கு வந்துவிட்டது.

அதே போலத் தான், ஆர்வக் கோளறுகளால், நாங்களும் வழி வழியே தேவையில்லாத சில வேலைகளைச் செய்திருக்கிறோம் போல...........😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2024 at 11:09, ரசோதரன் said:

கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள்.

7-8 வருடங்களாக எனது வாழ்வும் இந்த கரப்பந்தாட்டத்தில் பெரிய பங்காக இருந்தது.இதே மாதிரி ஆரம்பத்தில் கட்டுப்பந்து.பின்னர் கட்டில்லாத பந்து.

ஊருக்குள்ளும் அயல் ஊர்களிலும் பெயர் சொல்லக் கூடியளவுக்கு விளையாடினோம்.

ஊரிலிருக்கும் போது இரவு மின்வெளிச்சத்தில் பல போட்டிகள் விளையாடினோம்.

அசைபோட வைத்ததற்கு நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

7-8 வருடங்களாக எனது வாழ்வும் இந்த கரப்பந்தாட்டத்தில் பெரிய பங்காக இருந்தது.இதே மாதிரி ஆரம்பத்தில் கட்டுப்பந்து.பின்னர் கட்டில்லாத பந்து.

❤️.....

பந்தடியிலேயே காலம் போயிருக்கின்றது.....👍

அதே கதை தான் இங்கேயும், அண்ணை... இன்னும் சில வருசங்கள் தானே என்று போய்க் கொண்டிருக்கின்றது....😀

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.