Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த 7 இலங்கை மீனவர்களும் கடந்த 18 ஆம் திகதி இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 7 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஏழு பேரும் சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/306899

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது பற்றி டக்கிளசின் வாலுகள் கப்சிப்.

கடற்புலிகள் இருந்தப்போ வராத சிக்கல்கள் எல்லாம் இப்ப வருகுது என்றால்.. தூண்டி விடுறவையை பற்றி சிந்தித்துப் பார்த்து அப்பாவி மீனவர்கள்... இந்த அதிகார வர்க்கத்தின் அரசியல் ஆதாயத்துக்குள் விலை போகாத வகையில் வளப்பயன்பாட்டை பகிர்ந்து மேன்மை பெறுவது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.