Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"நிலவே முகம் காட்டு .. "
 
 
ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர்.
 
எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியில் இருந்து அந்த நிலாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவரின் இளம் மகள் மட்டும் தன் மாடி அறையில் இருந்த சாளரத்தினூடாக நிலாவைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அன்று தான் அவள் முகத்தை முழுமையாக பார்த்தேன்!
 
பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள் என அளவான முக அங்கங்கள் கொண்ட பொலிவான வெள்ளை முகம் என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது. இவள் முகத்தில் தோன்றிய வெண்ணிலவின் ஒளி வெள்ளம் என் நெஞ்சம் எல்லாம் பரவி நின்றது. பாபா முகம் எனக்கு முக்கியம் இல்லை. அவளையே பார்த்துக்கொண்டு ஓலைக் குடிசையின் முற்றத்தில் நின்றேன். தங்கள் மனசுக்கு பிடிச்ச உருவத்தை மனதில் நினைத்து கொண்டு பார்த்தால் அதன் முகம் நிலாவில் இருப்பது போல் தோன்றும் என்று யாரோ இதற்கு விளக்கமும் கொடுப்பது காதில் விழுந்தது. நானும் திரும்பி நிலாவை பார்த்தேன், அங்கு பாபா இல்லை, அவள் முகமே இருந்துது! 'நிலவே முகம் காட்டு' என என் வாயும் முணுமுணுத்தது.
 
சோலை பறவைகளும் வண்ணாத்திப் பூச்சியும் அவளின் தலை மேல் படபடத்து, யார் முதலில் அவளின் மூங்கீலென திரண்ட தோளில், மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல தோளில் விழும் கருங் கூந்தலில், அமருவது என போட்டி போடுகின்றன. மாலைப் பொழுது மறையும் கதிரவன் கூட, உடனடியாக ஒரு கணம், மீண்டும் அவளை எட்டிப்பார்த்து மறைகிறது. அப்படி என்றால் நான் எங்கே?
 
அப்படி ஒரு அழகு! நான் திரும்பவும் அவளை அண்ணாந்து பார்த்தேன். அவள் இன்னும் அந்த நிலவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். என்றாலும் நான் மனம் உடைந்து வாடியதை கண்டாலோ என்னவோ, திடீரென எனக்கு கையால் சைகை காட்டினாள். அது சரியாக விளங்கவில்லை என்றாலும், ஒரு நட்பின் அடையாளம் என்று மட்டும் விளங்கியது. அந்தக் கணமே, நாம் யார் யாராக இதுவரை இருந்தாலும், செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, எம் அன்புடை நெஞ்சம் இன்று கலந்தது போல் உணர்ந்தேன்! அந்த நிலாவுக்கு, பாபா என பொய் பரப்பியவனுக்கு, பொய்களிலேயே வாழும் ஏமாறும் கும்பலுக்கு நன்றி சொன்னேன்.
 
 
"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே!"
 
 
இன்னும் ஒரு முக்கிய கேள்வி என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது, அவள் என்னை திருமணம் செய்வாளோ ?, இல்லை இது வாலிப வயதின் பொழுதுபோக்கு உணர்வோ? அது எனக்குப் புரியவில்லை?. என்றாலும், இப்ப தினம் தினம் அவள் கையால் கண்ணால் ஏதேதோ பேசுகிறாள். நானும் 'நிலவே முகம் காட்டு' என்று அதைப் பார்த்து ரசிக்கிறேன்.
 
ஆனால் ஒரு மாதம் கழிய, எங்கள் குடிசையை பார்த்துக்கொண்டு இருந்த அவளின் அந்த சாளரம், அதிகமாக பூட்டியே கிடந்தது. சிலவேளை திறந்தாலும், அதனால் எட்டிப்பார்ப்பது அவள் இல்லை. ஒரு நாள் கல்லில் ஒரு கடிதம் சுருட்டிக் கட்டி எங்கள் முற்றத்தில் விழுந்து இருந்தது. அதை நான் குடிசைக்குள் கொண்டு போய் திறந்து பார்த்தேன். என் கண்களில் மகிழ்வும் கண்ணீரும் வந்தன. யாரோ அவளின் வேலைக்காரி ஒருவள், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் ரசிப்பதை பெற்றோரிடம் சொல்லிவிட்டார்கள், அதனால் அவளுக்கு வேறு அறை கொடுத்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன். அது மட்டும் அல்ல, என்னுடைய முன்னைய சந்தேகத்துக்கு அதில் பதிலும் இருந்தது. அதை அவள் நேரடியாக, 'ஒரு நாள் சந்திப்போம் அப்ப நானே உங்க மணவாட்டி, நினைவில் கொள்ளுங்க!' என்று அந்தக்கடிதம் சுருக்கமாக இருந்தது.
 
‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற பாரதியின் வழியில், ’அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்ற பாரதிதாசனின் கர்ச்சனையை அதில் கண்டேன்!
 
அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை. ஆனால் 'நிலவே முகம் காட்டு' என்று அதில் அவள் அழகு முகத்தை காண்கிறேன். அங்கு பாட்டி வடை சுடவும் இல்லை, சாய்பாபாவை காணவும் இல்லை.
 
நானும், அதன் பிறகு உயர் வகுப்பில் திறமை சித்தி பெற்று, பல்கலைக்கழகம் புகுந்துவிட்டேன். அது முந்நூறுக்கு மேல் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த படியால், ஆக விடுதலைக்கு மட்டும் தான் வந்துபோவேன். அப்படி ஒருமுறை வரும்பொழுது அவள் என்னை ஒரு சில நிமிடம் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்ப அவள் உயர் வகுப்பு மாணவி. தன் உள்ளங்கையில், தன்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தை, முகநூல் தொடர்பை எனக்கு காட்டினாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை, நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை" என்பது உண்மை என்றாலும், உண்மையில் இது ஆறுதலாக இருந்தது.
 
ஒன்று மட்டும் உண்மை, முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? ஆமாம் "பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல், செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவும் உளவோ நீயறியும் பூவே" என்பது போல, இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? என்ற இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை? முகநூல் ஊடாக நறு மணம் வராது? என்பது எனக்குத் தெரியும். என்றாலும், நிலவே முகம் காட்டு என்ற கற்பனையை விட இது எவ்வளவோ மேல்? ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்பதால், இப்ப ' முகநூலே முகம் காட்டு' என்று அவள் முகத்தை மீண்டும் ரசிக்கிறேன்!
 
எப்படியானாலும் நிலவு ஒரு பெண்ணாக, என் காதலியாக, கற்பனையில் எழுதுவதில் கட்டாயம் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நிலவுக்கும் பெண்ணுக்கும் எப்போதும் ஓர் ஈர்ப்பு சக்தி உண்டு. நிலவைப் பெண்ணாக உருவகிப்பது அழகின் ஆராதனை என்பதைவிட 'நிலவே அவள், அவளே நிலவு' என்பதே பொருந்தும். அதுதான் 'நிலவே முகம் காட்டு' என்பதை மட்டும் நான் மறக்கவில்லை. ஏன் நிலவைக்காட்டித் தான் அம்மா எனக்கு உணவூட்டினாள் அன்று. 'வெண்ணிலவே வெண்ணிலவே விளையாட ஜோடி தேவை' என்று நான் 'நிலவே அவள் முகம் காட்டு' என்கிறேன் இன்று!
 
 
"கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க
வண்ண உடையில் துள்ளி வந்தாய்
விண்ணில் உலாவும் மதியும் தோற்று
கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!"
 
"வெண்மை கொண்ட என் உள்ளத்தில்
பூண் போல் உன்னை அணிந்துள்ளேன்
ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன்
எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
342992626_959992818681980_6951262202436341658_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=WWTCLmGMifoQ7kNvgFp9K47&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBJz-TQNns8oghi-BA3I02RZCIwRtG_qP_4ZT0oobO_xw&oe=66AD7A4F 342997750_1195828584410267_7210901620878489062_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=N0-3FKq-8IAQ7kNvgFgX1s3&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYC5dD0HOtoro37VTgTnFPJl-VNQDVqUWSHZ7y8ab8qaBw&oe=66AD58F1 336047018_741090250835468_1867048517593250168_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=pS8jYTapYjMQ7kNvgHiYXVj&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA8RXKwRi3MfuEuUx9rK54QO9Ih3sAVXk1-t0j7ufD7HQ&oe=66AD5979
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.