Jump to content

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது.

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறும்.

இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர்.

வெபர் மைதானத்தில் இலங்கை, இந்தியா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் கலைஞர்களின் வருகையுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது.

விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றத்தை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் அவர்களுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து கருத்தரங்குகள் இடம்பெற்றது முதல் நாளுக்கான தமிழ் கலை விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190132

👍......

நல்ல முயற்சி. விழா மலரை யாராவது இணையத்தில் போட்டால், எல்லோரும் படிக்க வசதியாக இருக்கும். நூலகம் குழுமம் உடனேயே போட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

பல்கலைக்கழக நிகழ்வு என்றாலே கொஞ்சம் தயக்கம் இருக்கின்றது. அவர்கள் முன்னுக்கு போக வேண்டியவர்கள், ஆனால் பின்னாலேயே, இறுக்கமாக வந்து கொண்டிருப்பார்கள். அதுவும் இலக்கியத்தில் இன்னும் இன்னும் பின்னாலேயே.

போன வருடம் தென்கிழக்கு பல்கலையில் நடந்த சில புத்தகங்கள் பற்றிய நிகழ்வு பற்றி ரியாஸ் குரானா எழுதிய பதிவு இது:

https://www.riyasqurana.com/article.php?category=&post=135

   

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.