Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,  தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். 
  
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், 

மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
 
தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். R
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரூ-60-கோடி-வாங்கினார்-சாணக்கியன்/150-342273

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் கண்டது..

 

நெஞ்சுக்கு நீதி

பரபரப்பான பேச்சாற்றல் மிக்க பாராளுமன்ற உறுப்பினர் யாரென்று கேட்டால் பலரது நாவிலும் வரக்கூடிய பெயர் மட்டக்களப்பு சாணக்கியன் என்பதேயாகும். அந்தளவு தூரத்துக்கு கடந்த காலங்களில் அவரது பாராளுமனன்ற உரைகள் அமைந்திருந்தன. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் முன்னெடுப்புகள் பற்றிய அவரது உரைகள் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலம்சென்ற அமிர்தலிங்கம் அவர்களை நினைவூட்டின. அதன் காரணமாகவே அவர் ஊடகங்களிலும் முன்னிலை வகித்தார். கூடவே அவருக்கிருந்த பன்மொழித் தேர்ச்சியும் அவரைப்பற்றிய பிம்மங்களை கட்டியமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. 

ஊடகங்கள் அவரை தங்களது பரபரப்புச் செய்திகளுக்காக நன்கே பயன்படுத்திக்கொண்டனவேயன்றி  மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் பாரிய அபிவிருத்திப்பணிகளை அவர் குழப்பியடிக்க முனைகின்றார் என்பதையிட்டு அவை கவனம் கொள்ளவில்லை. அதன் காரணமாக சாணக்கியனுக்கு  கிடைத்த அத்தகைய ஊடக  வெளிச்சங்கள் அவரை வானுக்கும் மண்ணுக்குமாக துள்ளிக்குதிக்க வைத்தன. காலம் செல்லச்செல்ல வெட்டிப் பேச்சுகளில்  வீறாப்பு கொண்டலைபவராக அவர் முழுவதுமாகவே மாறிப்போனார். 

போராட்டப் பாதையில் வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்களை  மாடுமேய்த்தவன்,படிக்காதவன்,கிணற்றுத்தவளைகள்,என்றெல்லாம் நாகரீகமற்ற வகையில் திட்டித்திரிந்தார். தான் வெளிநாடுகளில் கற்றவன்,மொழியறிவு கொண்டவன் என்றெல்லாம் சுய தம்பட்டம்  அடித்துக்கொண்டார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை குழப்பியடிப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலப்பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பிரச்சனைகளைப் பற்றிப்பேசி அவரைத் தீர்ப்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை. அவற்றைப் பேசுவதன் ஊடாக ஊடகங்களில் இடம்பிடிப்பதே ஒன்றே அவரது நோக்கமாக மாறிப்போனது. அவர் செல்லும் இடமெல்லாம் அவரது மாதாந்த கையூட்டுப்பெறும் ஊடகவியலாளர்கள் அவர் பின்னாலே சென்றனர். கச்சேரி கூட்டங்களில் கூட அவர் முகநூலில் லைஃப் போடுவதற்காகவே முன் தயாரிப்புகளோடு சென்று பேசினார். அரச அதிகாரிகளை கண்டபடி திட்டித்தீர்த்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மட்டக்களப்புக்கு வந்தபோது அவர் அமர்ந்திருந்த தலைமை வரிசையிலே தானும் அமர்ந்தால் அபச்சாரம் என்று சொல்லி மக்கள் வரிசையிலே போய் குந்தியிருந்து நாடகமாடினார். 

மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல்த்தரை பிரச்னையை தனது அரசியல் நலனுக்காக  பயன்படுத்தி குழப்பியடித்து அம்பாறை மற்றும் பொலன்னறுவை சிங்கள விவசாயிகளை மட்டக்களப்பு நகருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டம் செய்ய செய்யத் தூண்டுமளவுக்கு அவரது ஆத்திரமுட்டல்கள் வழிவகுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்புக்கு வருகைதரும் போதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி அபிவிருத்திப்பணிகளை புறக்கணித்தார். 

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் ஆயிரக்கணக்கான பெண் தலைமை குடும்பங்களில் ஏழ்மைமிகு வாழ்வு  குறித்தோ காலை உணவு கூட இன்றி பாடசாலை செல்லும் வாகரை மண்ணின் ஏழைக்குழந்தைகள் குறித்தோ தொழிலின்றி அலையும் இளைஞர் கூட்டம் மட்டக்களப்பில் பெருகி வருவது குறித்தோ ஒரு மக்கள் பிரதிநிதியாக அவருக்கு எவ்வித கரிசனையும் இருக்கவில்லை. வீதிகளை அமைப்பதும் குளங்களை தூர்வாருவதும் கால்வாய்களையும் அணைக்கட்டுகளை அமைப்பதையும் அவசியமற்றவையாக அவர் கருதினார். பாடசாலைகளை தரமுயர்த்துவதும் அவற்றிற்கு கணனி மற்றும் நவீன விஞ்ஞான கூடங்கள் அமைத்துத் தருவதும் கேலிக்கூத்தானவை என்பதே அவரது பார்வையாக இருந்தது. இவைதான் நாளும் பொழுதும் அவரும் அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியினர்  உச்சரிக்கும் 'தேசியத்தின் அடிப்படைகள்' என்பதைக்கூட அவர் தெரிந்திருக்கவில்லை.

அதனால்தான் 'தமிழ் தேசியம்' 'தமிழரின் உரிமை' என்று வெற்றுக்கூச்சலிடும்  வாய் சவடால்களிலேயே அவரது  காலம் கழிந்தது. அதனால்தான் எத்தனையோ வருட பட்டறிவுகளைத் தாண்டி அரசுடன் இணைந்து மக்களின் வாழ்வை வளப்படுத்தும் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் ஓணான் குழுக்கள் அரசின் கைக்கூலிகள் என்று வாய்க்கு வந்தபடி திட்டித்திரிந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு சிதைந்து போவதற்கும் அதிலிருந்து டெலோ புளொட் போன்ற அமைப்புக்கள் வெளியேறுவதற்கும் இவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரனும் இவரும் இணைந்து போட்ட காட்டுக்கூச்சல்களே காரணமாய் அமைந்தன. இறுதியாக இவரது மேட்டிமைத்தனங்களும் பரம்பரையாதிக்க மனப்பாங்கும் அவர் அங்கம் வகிக்கும்  தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மூத்த தலைவர்களைக் கூட மனமுடையச் செய்து வருகின்றது.

அனைவரையும் எடுத்தெறிந்து நடக்கும் இவரது  நடவடிக்கைகளினால் இவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று எண்ணும் நிலைக்கு மட்டக்களப்பு மக்கள் வந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களது எவ்வித முன்னேற்றங்களிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாணக்கியனின் பங்குபற்றுதல்கள் இல்லையென்பதை அவர்கள் உணரத்தொடங்கியுள்ளனர்.  மக்களுக்கும் அவருக்குமான இடைவெளிகள் அதிகரித்தவண்ணமுள்ளன. அடுத்த பாராளுமன்றத்தேர்தல் அண்மிக்கின்றது என்கின்றபோதுதான் அவருக்கு தான் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்கின்ற ஞானம் பிறந்துள்ளது. 

அதன்காரணமாகத்தான் எந்த ஜனாதிபதி மட்டக்களப்புக்கு  வரக்கூடாது என்று கறுப்புக்கொடி காட்டி கடந்த காலங்களில் கொக்கரித்துத் திரிந்தாரோ அவரை கொழும்புக்குத் தேடிச்சென்று அவரது  ஜனாதிபதிக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டில் பங்கு கேட்டு காலில் விழுந்திருக்கின்றார். 

சந்தர்ப்பம் பார்த்திருந்த ஜனாதிபதியும் தனது ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு இவரது வாயை அடைக்க  45 கோடி ரூபாய்களை அவருக்காக ஒதுக்கி வேலையை கச்சிதமாக முடித்துள்ளார். தற்போது 'நக்குண்டார் நாவிழந்தார்' என்னும் நிலையில் சாணக்கியன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக ஒரு துரும்பைத்தானும் தூக்கி போட முடியாதுள்ளார். அதுமட்டுமன்றி அவருக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்தாக  வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கவர்னரை அழைத்து ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவான இரகசியப் பிரச்சாரக் கூட்டமொன்றை  நாடாத்தியுள்ளார். விரைவில் தேர்தல் மேடைகளில் ஏறி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளது. 

சுருங்கச்சொன்னால் யார் யாரையெல்லாம் கடந்த காலங்களில் வசை பாடித்திரிந்தாரோ இரவும் பகலும் எடுத்துக்கெல்லாம் எவர்களோடு வம்பிழுத்து திரிந்தாரோ அவர்கள் பாதையில் அவர்களுக்கு பின்னே பயணிக்கும் நிலைக்கு வந்துள்ளார். அதாவது  வெட்டிப் பேச்சும் வீறாப்பும் வேலைக்குதவாது என்பதை மட்டுமல்ல வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிப்பதனாலோ கறுப்புக் கொடிகளாலோ காரியமாற்ற முடியாது என்பதை காலம் கெளரவ சாணக்கியன் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. அதனால்தான் அவர் தடம் புரண்டு நிற்கின்றார்.

அரசியலில் அவரவர்க்கு ஒவ்வொரு வழியுண்டு. அதனால்தான் பல்வேறு சிந்தனைகள்,பல்வேறு கட்சிகள். அதுதான் ஜனநாயகம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயமுண்டு. ஆனால் நாம் பேசுகின்ற பேச்சுக்கும்  நாம் நம்புகின்ற அரசியலுக்கும்  உண்மையாக நடப்பதுதான் அரசியல் நாகரீகம், அரசியல் நேர்மை, அதுதான் நெஞ்சுக்கு நீதி. அதன் வழி நடப்பவர்களே தலைவர்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனுக்கு…. 60 கோடி என்றால்,
சுமந்திரனுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும். 
ப்ளீஸ் ரெல் மீ… 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.