Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   20 AUG, 2024 | 01:18 PM

image
 

விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (17)  ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த  கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.

விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை (18) காலை சுமார் இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பெரும் நெரிசல் மற்றும் வரிசைகள் காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை (18)  கடையில் ஒரு தொழிலாளியால் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொக்கைடோ விமான நிலையம் திங்களன்று அறிவித்தது.

காணாமல் போன கத்தரிக்கோலும் இதுவும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தும் வரை அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கினர். 

ஹொக்கைடோ விமான நிலையத்தை சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/191519

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படி என்ன விசேடம் அந்தக்   கத்தரிக் கோலில்....? கடையில் காணாமல் போனால்  விமான நிலைய கட்டுப்பாடே தாமதிக்குமா ?  பதில் செல்லுங்கோ ப்ளீஸ் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நிலாமதி said:

அப்படி என்ன விசேடம் அந்தக்   கத்தரிக் கோலில்....? கடையில் காணாமல் போனால்  விமான நிலைய கட்டுப்பாடே தாமதிக்குமா ?  பதில் செல்லுங்கோ ப்ளீஸ் ...

அந்த கத்தரிகோலை பயன்படுத்தி யாராவது விமான கடத்தலில் ஈடுபடலாம் என்ற அச்சம்தான்

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.