Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் - பாலத்தீனிய போர்: பணயக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அக்டோபர் 7, 2023ம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்பதில் அரசும் பிரதமரும் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல்
  • எழுதியவர், டியர்பைல் ஜோர்டன், ஆலிஸ் கடி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள்.

டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 2ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் டெல் அவிவ் போன்ற பகுதிகளில் காவல்துறையின் தடுப்பையும் மீறி நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான ஹிஸ்தாத்ரட்.

 
 

முன்னதாக சனிக்கிழமையன்று பணயக் கைதிகளின் உடலை தெற்கு காஸாவில் அமைந்திருக்கும் ரஃபா பகுதியில் உள்ள பாதாள சுரங்கத்தில் கண்டெடுத்ததாக இஸ்ரேல் ராணுவப் படை (IDF) அறிவித்தது.

இறந்த பணயக் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர், கார்மெல் காட், ஈடன் யெருஷல்மி, ஹெர்ஷ் கோல்ட்பெர்க் போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோங் சருஷி, மற்றும் மாஸ்டர் ஸ்கிட் ஓரி டானினோ ஆகும்.

சனிக்கிழமை அன்று ராணுவ வீரர்கள் அவர்களை மீட்பதற்கு சில நேரங்களுக்கு முன்புதான் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும் அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதம் இருக்கும் பணயக் கைதிகளை மீட்பதில் நெதன்யாகுவும் அவரின் அரசும் தோல்வியுற்றது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் ஞாயிறு அன்று போராட்டத்தை நடத்தினார்கள்.

இஸ்ரேல் மக்களின் வேண்டுகோள்கள் என்ன?

ஞாயிறு இரவு அன்று, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அயலோன் நெடுஞ்சாலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினார்கள்.

பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் ஏறி நின்று போராட்டத்தை நடத்தினார்கள். அங்கு ஒரு சிலர் நெதன்யாகுவின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்து கொண்டு, "அவர்கள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்," என்று கோஷமிட்டனர்.

"நீங்கள்தான் தலைவர். நீங்கள்தான் இதற்கு பொறுப்பு" என்ற பதாகையை கையில் ஏந்தி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் காவல்துறையினரை சாடும் வகையிலும் கோஷங்களை எழுப்பினார்கள். "யாரை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? வெட்கப்பட வேண்டும்," என்ற தொனியில் அவர்களின் கோஷங்கள் இருந்தன.

சிலர் சாலைகளில் நெருப்பை மூட்டினார்கள். சிலர் மஞ்சள் நிற ரிப்பன்களை அணிந்து கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த கொள்கை வகுப்பாளார் நாமா லஸிமியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த போராட்டம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும் நாளை என்ன நடக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது என்றும் கூறினார். காவல்துறையினர் எறிந்த கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்ட அவர் கீழே விழுந்து காயமடைந்திருந்தார்.

இஸ்ரேல் - பாலத்தீனிய போர்: பணயக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பணயக் கைதிகளை மீட்கக் கோரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்  

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஐடனின் தந்தை எலி ஷ்டிவி, "போர் விவகாரத்தில் முடிவெடுக்கும் மக்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இனிமேல் நம்மிடம் நேரமில்லை," என்று கூறினார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றாக இணைந்து பங்கேற்றனர் என்றும், அவர்கள் அனைவரும் பணயக் கைதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நான் என்னுடைய குழந்தையை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். தற்போது அனைத்து குடும்பத்தினரும் ஒரு வகையில் பணயக் கைதிகளாகதான் இருக்கிறோம்," என்று கூறினார் எலி.

இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது என்று டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நோகா பர்க்மென் பிபிசியிடம் தெரிவித்தார்.

விதிகளை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நகரின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். ஜெருசலேம் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதமரின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களைக் காட்டிலும் இது மிகவும் பெரியது என்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அக்டோபர் 7ம் தேதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 21 வயது மதிக்கத்தக்க நபரின் அண்ணன் யோதம் பீர் (24) டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். "6 நபர்களின் நிலை என்ன என்று கேட்ட பின்பு எங்களால் அமைதியாக இருக்க இயலவில்லை. இது மிகவும் முக்கியமான தருணம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தன்னுடைய சகோதரரை இழந்த யோதம் பீர்
படக்குறிப்பு, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தன்னுடைய சகோதரரை இழந்த யோதம் பீர்

அரசு அக்கறை காட்டவில்லை - எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் யைர் லாபிட் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

முன்னாள் பிரதமரும் யேஷ் ஆதித் கட்சியின் தலைவருமான அவர், மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட நெதன்யாகுவை கட்டாயப்படுத்த வேண்டும் என முன்பு கோரிக்கை வைத்திருந்தார்.

பொது வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அர்னோன் பார் டேவிட், மற்ற அனைத்தைக் காட்டிலும் அவர்களை விடுவித்தல் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு பதிலாக நாம் இறந்து போன நபர்களின் உடல்களைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

நெதன்யாகு அரசுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக தேசிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் பணயக் கைதிகளின் குடும்பத்தினர்.

பணயக் கைதிகளின் குடும்பத்தினர்கள் இணைந்து செயல்படும் பணயக் கைதி குடும்பங்களின் மன்றம் "ஹமாஸின் பிடியில் சிக்கி 11 மாத சித்தரவதைகள், பசி மற்றும் கொடுமையை அனுபவித்த அந்த ஆறு நபர்களும் கடந்த சில நாட்களில்தான் கொல்லப்பட்டுள்ளனர்," என்று கூறியுள்ளது.

ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டால் மீதம் இருக்கும் பணயக் கைதிகளும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

நாட்டை பாதுகாக்கவும், மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு. ஆனால், "பணயக் கைதிகளை கொலை செய்தவர்களுக்கு இந்த ஒப்பந்தம் தேவை இல்லை," என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

தீவிர வலதுசாரி சிந்தனையை கொண்ட அந்த நாட்டின் நிதி அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிக் இந்த போராட்டத்தை கண்டித்ததோடு இது ஹமாஸின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் போராட்டம் என்று தெரிவித்தார்.

காஸாவில் இன்னும் எவ்வளவு பணயக் கைதிகள் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 251 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 1200 நபர்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவில் உள்ள ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40,530 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸுன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் 6 பணயக் கைதிகள் கொலை எதிரொலி - எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம்

02 SEP, 2024 | 05:11 PM
image
 

டெல் அவிவ்: காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார், 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

israel_pro_sep.jpg

இந்நிலையில், பணயக்கைதிகளில் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றனர். அவர்களின் உடல்களை இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் நேற்றும், இன்றும் (ஞாயிறு, திங்கள் கிழமைகள்) பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பணயக் கைதிகள் உயிரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு என்றும் கூறி லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருசலேமில், போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பிணைக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று (செப்.2) அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும், இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றும் எஞ்சிய பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான அமைப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக கண்டித்துள்ளது. “பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் கடந்த 11 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக 40,738 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இல்லாததாலும், உணவு போதிய அளவில் கிடைக்காததாலும் அவர்கள் கடும் நெருக்கடியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/192662

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸின் புதிய எச்சரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கோரியது ஏன்?

தொடரும் போராட்டம் : பிணைக் கைதிகள் கொலை தொடர்பாக மன்னிப்பு கோரும் நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜாக் பர்கெஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

''போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பலர் பிணங்களாகதான் நாடு திரும்புவார்கள்’’ என ஹமாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமான மீட்கப்பட்ட ஆறு பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி நாடெங்கும் போராட்டங்கள் இரண்டாம் நாளாக தொடர்ந்த நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்

இந்தநிலையில் உபகரணங்கள் பயன்பாட்டில் சர்வதேச சட்டத்தை மீறும் ஆபத்து இருப்பதாக காரணம் காட்டி, இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.

 

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார். இஸ்ரேல் துருப்புக்கள் காஸாவின் பிலடெல்பி பாதையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிலடெல்பி பாதை எகிப்துடனான காஸாவின் எல்லையில் உள்ளது. உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி பாதை, ஹமாஸ் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாத அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

ஏறக்குறைய 11 மாதங்கள் ஆகியும் தங்கள் அன்புக்குரியவர்களை சொந்த நாட்டிற்கு மீட்டு வர தவறிய நெதன்யாகு மீது கோபத்தை வெளிப்படுத்த பணயக் கைதிகளின் குடும்பங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இந்த போராட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கலந்து கொண்டனர்.

ஜெருசலேமில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளி கடுமையாக நடந்து கொண்டனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி கூறுகிறது.

காவல்துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இஸ்ரேல் நிருபரின் கழுத்தை பிடித்து நெருக்கியதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.

இதனைத் தொடர்ந்து புதிய போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்தது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல் அவிவில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையை முடக்கினர்.

பலர் இஸ்ரேலிய கொடிகளை அணிந்து கொண்டு மஞ்சள் நிற ரிப்பன்களை வைத்து கொண்டிருந்தனர். இவை மக்கள் பணயக் கைதிகளின் குடும்பங்களுடன் நிற்பதை பிரதிபலித்தன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் கடத்தப்பட்ட பின்னர் 97 பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் உள்ளது.

 

அச்சுறுத்தும் ஹமாஸ்

இஸ்ரேலின் ராணுவ அழுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் "சவப்பெட்டிகளில்" திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று திங்களன்று கூறிய ஹமாஸ், பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேலிய துருப்புக்கள் அணுகினால் அவர்களை கையாள பாதுகாவலர்களுக்கு "புதிய அறிவுறுத்தல்கள்" வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

"பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக, ராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு வலியுறுத்துவது என்பது அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சடலமான திருப்பி அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதாகும். அவர்கள் இறக்க வேண்டுமா அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா என்பதை அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்ய வேண்டும்," என்று ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். என்ன புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் விவரிக்கவில்லை.

முன்னதாக திங்களன்று, இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கம், காஸா போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸுடன் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அழைக்கப்பட்ட ஒரு பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்ததாகக் கூறியது.

இருந்தபோதிலும் பல இடங்களில் இயல்பு நிலை நீடித்தது. டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் குறைந்த அளவிலான சில தடங்கல் ஏற்பட்டது. மேலும் ஏராளமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல் சேவைகள் வழக்கமாக இயங்கின.

தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேலியர்கள் பலர் வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், அரசியல் தேவைகளுக்கு தாங்கள் இனி அடிமைகள் இல்லை என்பதை நிரூபித்ததாகவும் கூறினார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

''இறுதியானது'' என்று குறிப்பிட்டு ஒரு புதிய ஒப்பந்தம் இஸ்ரேலிய பிரதமருக்கு அனுப்பப்படும் என்று சில செய்திகள் கூறும் நிலையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மற்றொருபுறம் ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால்,  கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.

எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அவர் நிராகரித்தார்.

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேர் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

தொடரும் போராட்டம் : பிணைக் கைதிகள் கொலை தொடர்பாக மன்னிப்பு கோரும் நெதன்யாகு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.

பிரிட்டனின் புதிய நடவடிக்கை

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி திங்களன்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ பிரிட்டன் இடைநிறுத்தி உள்ளது என்று கூறினார். சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டினார்.

இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும்.  தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை பிரிட்டன் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலன்ட் எக்ஸ் தளத்தில், இந்த நடவடிக்கையால் தான் மனமுடைந்து இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

 

பணயக் கைதிகளின் இறுதிச் சடங்கு

இதற்கிடையில், சனிக்கிழமை கொல்லப்பட்ட பணயக்கைதிகள் சிலரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) இஸ்ரேலால் மீட்கப்பட்ட பணயக் கைதிகளில் ஒருவரான ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் தாய், அவரது இறுதிச் சடங்கில் பேசிய போது, பல மாதங்களாக அவரைப் பற்றி நினைத்து பெரும் வேதனையில் இருப்பதாகக் கூறினார்.

ஜெருசலேமின் தெருக்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் அதிபர் ஐசக் ஹெர்சாக் இறுதிச் சடங்கில் உறவினர்களுடன் பேசினார்.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான முன் அறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலின் போது போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிபட்டனர்.

இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸாவில் 40,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.