Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள்

பட மூலாதாரம்,GOV.UK / REUTERS

படக்குறிப்பு, பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், கோர்டன் கொரேரா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 8 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"பனிப்போருக்குப் பின் நாம் இதுவரை கண்டிராத வகையில், சர்வதேச உலக ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

யுக்ரேனில் புதினின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ரஷ்யாவையும் எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒன்று பட்டுள்ளன என்று பிரிட்டனின் உளவு சேவை அமைப்பான எம்ஐ6 மற்றும் அமெரிக்காவின் முக்கிய உளவு முகமையான சிஐஏ-வின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். அதில் சர் ரிச்சர்ட் மூர் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் யுக்ரேனில் போர் வருவதை கண்டறிந்து "சர்வதேச சமூகத்தை எச்சரிக்க முடிந்தது" என்றும் யுக்ரேனுக்கு உதவும் வகையில் ரகசியங்களை வகைப்படுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவின் பொறுப்பற்ற, அழிவை ஏற்படுத்தும் ராணுவ நடவடிக்கைகளை தடுக்கவும், இஸ்ரேல்-காஸா போரின் தீவிரத்தை குறைக்கவும், மீண்டும் எழுச்சி பெறும் ஐஎஸ் (IS) இயக்கத்தை முறியடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறினர்.

அபாயத்தை எதிர்த்து போராட ஒன்றிணைந்த இருநாடுகள்

"சர்வதேச உலக ஒழுங்கு என்பது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்து, உயரும் வாழ்க்கைத் தரம், வாய்ப்புகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்கிய சீரான அமைப்பாகும். இது ஒப்பீட்டளவில் பனிப்போருக்குப் பிறகு நாம் கண்டிராத வகையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை."

"இந்த அதிகரித்து வரும் அபாயத்தை எதிர்த்துப் போராடுவது" தான் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவின் அடித்தளம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கும் யுக்ரேன் மோதல், இரு நாடுகளும் சமாளிக்க வேண்டிய "முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்களில்" ஒன்று.

மேற்கூறியவாறு, பைனான்சியல் டைம்ஸில் op-ed பக்கத்தில், அவர்கள் எழுதியிருந்தனர்.

சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 7) லண்டன் கென்வுட் ஹவுஸில் நடந்த பைனான்சியல் டைம்ஸின் வார இறுதி விழாவில் பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் முதல் கூட்டு உரையை வழங்கினர்.

அவர்கள் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை உரையாற்ற போகிறவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஒன்றாக, நிதானமாக வந்த அவர்கள், தங்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையிலான நெருங்கிய பணி ரீதியான கூட்டுறவை வலியுறுத்தினார்கள்.

"ரஷ்ய அதிபரின் பிடி தளரவில்லை"

யுக்ரேன் சமீபத்தில் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதியைக் கைப்பற்றியது "குறிப்பிடத்தக்க தந்திரோபாய வெற்றி" என்று பர்ன்ஸ் கூறினார். அதே சமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதிகாரத்தின் மீதான பிடி தளர்கிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்றும் கூறினார்.

மேற்கு நாடுகளிடம் யுக்ரேன், அதிக ஆயுதங்களை வழங்கவும், ரஷ்யாவின் உள்பகுதியில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும் வலியுறுத்தி வருகிறது.

யுக்ரேன் கேட்பதை சில சமயங்களில் செய்யத் தவறியதற்கு காரணம் ரஷ்யா எப்படி நடந்துகொள்ளும் என்ற அச்சத்தில் தான், ஆனால் யுக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தக் கூடாது என்று உளவுத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

"அதிகரிக்கும் அபாயங்களை நாம் யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று பர்ன்ஸ் கூறினார்.

2022 இன் பிற்பகுதியில், போர்க்களத்தில் பின்னடைவுகள் ஏற்பட்ட போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் நிலவியது. இதனை "உண்மையான ஆபத்து" இருந்த ஒரு தருணம் என்று அவர் விவரித்தார்.

அப்போது ரஷ்ய அதிகாரிகளிடம் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பர்ன்ஸ் எச்சரித்திருக்கிறார்.

"எவ்வாறாயினும், இதனால் நாங்கள் தேவையில்லாமல் மிரட்டலை எதிர்கொள்ளலாம் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. " என்று சிஐஏ இயக்குனர் பர்ன்ஸ் தொடர்ந்தார்.

"புதின் ஓர் ஆதிக்கவாதி. அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்" என்று அவர் கூறினார்.

 
``இதுவரை கண்டிராத அச்சுறுத்தல்!” : முதல்முறையாக கூட்டு செய்தி அறிக்கை வெளியிட்ட பிரிட்டன், அமெரிக்க உளவுத் தலைவர்கள்

பட மூலாதாரம்,FT

படக்குறிப்பு, சர் ரிச்சர்ட் மூர் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் சனிக்கிழமை FT நிகழ்வில் ஒன்றாக அமர்ந்து உரையாடினர்

"ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் கொடூரமானவை"

ஐரோப்பாவில் நாசவேலைகளை மேற்கொள்வதற்கான ரஷ்ய உளவுத்துறையின் விருப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்ட போது, தாக்குதல்களை நடத்த குற்றவாளிகளைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அளவிலான அவநம்பிக்கையைக் குறிக்கிறது என்று சர் ரிச்சர்ட் மூர் பதிலளித்தார்.

"ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் சற்றே காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளன." என்றும் அவர் கூறினார்.

பர்ன்ஸ் மேலும் கூறுகையில், அவர்களின் திட்டங்கள் சில சமயங்களில் திறமையற்றவை என்று தோன்றினாலும், அவை "பொறுப்பற்றதாகவும் ஆபத்தானதாகவும்" மாறி விடும் அபாயம் உள்ளது என்றார்.

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் கட்டுரையில், இருவரும் யுக்ரேனுக்கு ஆதரவாக வரும்போது, "யுக்ரேனுக்கு உதவுவதில் முன்னெப்போதையும் விட தற்போதைய பாதையை பின் தொடர்வது மிகவும் முக்கியமானது." என்று எழுதியுள்ளனர் மேலும் புதின் "வெற்றி பெற மாட்டார்" என்றும் கூறினர்.

மோதலின் முடிவை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றும் என்பதை இந்த போர் நிரூபித்ததாகவும், புதுமை, பரிசோதனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

அவர்களின் கட்டுரையில்: "யுக்ரேனுக்கு அப்பால், ரஷ்ய உளவுத்துறையால் ஐரோப்பா முழுவதும் நடத்தப்படும் பொறுப்பற்ற நாசவேலைகளை தடுக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை இழிந்த முறையில் பயன்படுத்துகின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரு நாடுகளின் உளவுத்துறை முகமைகளும் சீனாவின் எழுச்சியை இந்த நூற்றாண்டின் முக்கிய உளவுத்துறை மற்றும் புவிசார் அரசியல் சவாலாக பார்க்கின்றன.

 

அவர்கள் (சீனா) தங்கள் சேவைகளை "முன்னுரிமையை பிரதிபலிக்கும் வகையில்" மறுசீரமைத்துள்ளனர், என்று இருவரும் எழுதியுள்ளனர்.

மத்திய கிழக்கில் கட்டுப்பாடு மற்றும் தீவிரத்தை குறைக்க தாங்கள் "கடினமாக" அழுத்தம் கொடுத்ததாகவும், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த "இடைவிடாமல்" உழைத்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

போர் நிறுத்த முயற்சிகளுக்கு மையமாக செயல்பட்ட பர்ன்ஸ், பைனான்சியல் டைம்ஸ் நிகழ்வில் வரவிருக்கும் நாட்களில் இன்னும் விரிவான திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டினார்.

"அரசியல் விருப்பமே இறுதியில் இதை தீர்மானிக்கிறது’’ என்று கூறிய அவர், இரு தரப்பிலும் உள்ள தலைவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று தனது உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 11 மாதங்கள் ஆகிறது. சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பேரை பணயக் கைதிகளாக்கினர்.

அன்றிலிருந்து காஸாவில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேலின் தற்போதைய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.